இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசித்தத்துக்குக் கீழ்ப்பட்ட அன்பு

மக்கள் மேல் முறைகேடாய் அன்பு பாராட்டுகிற பெற்றோர் அவர்களை விக்கிரகங்களாக வணங்கி கடவுளைப்பார்க்கிலும் அவர்களையே அதிகமாய் நேசிக்கிறவர்கள் போலாகிறார்கள்.

இவ்வித தாய் தந்தையரைப் பற்றி உலக இரட்சகர் வசனித்ததென்னவெனில், "மகனையாவது மகளையாவது நம்மிலும் அதிகமாய் நேசிக்கிறவன் நமக்குப் பாத்திரமானவனல்ல'' என்பதாம் (மத். 10.37.) பிள்ளைகள் தேவனுக்கே சொந்தமானவர்களெ என்றும் அவர் சித்தப்படியே பெற்றோர் அவர்களை நேசிக்கவும் நடப்பிக்கவும் வேண்டுமென்றும் அதிபிதாவாகிய ஆபிரகாம் மூலமாய் சருவேசுரன் சகலருக்கும் படிப் பிக்கச் சித்தமாயினார்.

இந்தப் புண்ணிய சீலரைக் கடவுள் தமது பிரசைகளுக்குப் பிதாவாக ஏற்படுத்தச் சித்தமா னபோது அவரை நோக்கி சாராள் என்னும் உன் பத்தினி ஓர் புத்திரனைப் பெறுவாள் அவன் பல சாதிகளுக்குத் தலைவனாவானென் றருளிச்செய்தார். ஆபிரகாமிதைக் கேட்டு முகங்குப்புற விழுந்து புன் சிரிப்புக்கொண்டு நூறுவயசுள்ளவனுக்குப் பிள்ளை பிறக்குமா? தொண்ணூ று வயசுள்ள சாராள் பிள்ளையைப் பிரசவிப்பாளாவென் று ஆச்சரியப்பட்டார்.

அதிக வயசுவரைக்கும் மலடி யாயிருந்த சாராளுக்கும் சம்மனசு இதை அறிவித்த போது அவளுஞ் சிரிப்புற்றாள். அப்படியிருந்தும் இ வர்கள் தேவவாக்குப்படி ஈசாக்கென்னும் புத்திரனைப் பெற்று அவனை அருமையாய் நேசித்து வளர்த்தார்கள். அவன் வாலிபனாயிருக்கையில் சருவேசுரன் ஆபிரகாமின் விசுவாசத்தைப் பரிசோதிக்கும் பொருட்டு ஓர் இரவு அவரை நோக்கி: நீ இவ்வளவாய் நேசிக்கும் உன் ஏகபுத் திரனாகிய ஈசாக்கைக் கூட்டிப்போய் நாம் உனக்குக் கா ட்டும் மலைமேல் அவனை நமக்குத் தகனப்பலியிடுவாயா கவென்று வசனித்தார்.

ஆபிரகாம் இதைக்கேட்டுத் துக்கித்துக் கலங்கினாரா? ஏங்கினாரா? முறுமுறுத் தாரா? முறையிட்டாரா? ஆண்டவரே இதை மாத்திர ம் என்னிடம் கேளாதேயுமென்று கெஞ்சிக் கேட்டாரா? அல்லது தேவகட்டளையை நிறைவேற்றச் சற்றாவது தா மதித்தாரா? இல்லை. உடனுக்குடனே எழுந்து இரவிர வாகத் தம் நேச மகனையும் இரு ஊழியரையும் அழைத்து க்கொண்டு பலிக்கு வேண்டிய விறகு நெருப்பு வாள் இ வைகளோடு புறப்பட்டார்.

மூன்றாம் நாளில் சருவேசுர ன் குறித்த மலைக்குக் கிட்டச்சேர்ந்து அங்கோர் பலிபீ டத்தையியற்றி அதன் மேல் தம்மகனைக் கட்டி வளர்த்தி, உறையிலிருந்த வாளையுருவி அவனை வெட்ட ஓங்கினார். ஓங்கவே ஒரு தேவதூதன் வானத்தினின்று அவரைத் தடுத்து ஆபிரகாமே உன்மகனுக்கு யாதொன்றுஞ் செய்யாதே. நீ தேவபயமுள்ளவனென்று இப்போது அறிந்திருக்கிறோம்.

ஆகையால், ஆண்டவர் வசனிக்கிறதாவது: நம்மைக்கொண்டு நாம் ஆணையிட்டு வாக்குப்பண்ணுகிறதென்னவெனில், நீ இச்செயலைச் செய்ததினாலே, நம்மைப்பற்றி உன் புத்திரனைக் கொல்லத் துணிந்ததினாலே, நாமுன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலும் கடற்கரையின் மணலைப்போலும் பெருகப்பண்ணுவோம். உன் சந்ததி தன் சத்துருக்களுடைய வாசல்களைச் சுதந்தரித்துக் கொ ள்ளும். நீ நமது சொல்லுக்கு அமைந்தபடியாற் பூமியில் லுள்ள சகல பிரசைகளும் உன் சந்ததியினால் ஆசீர்வதி க்கப்படுமென்று அருளிச்செய்தார். (ஆதி 22.)

ஆபிர காமின் சந்ததியாராகிய இசிறவேல் சனங்கள் தேவபிரசைகளாய் நன்னெறி வழுவாதிருந்த காலமெல்லாம் தலைமுறை தலைமுறையாய் இந்த வாக்குத்தத்தத்தின் பலனை , அநுபவித்து வந்தார்களென்று வேதபுத்தகத்தில் வெளிப்படையாய்க் காண்கிறோம்.

பலமுறையும் பிதாமாதாக்க ள் கனபொருள் செலவு செய்து பிள்ளைகளை அருமையாய் வளர்த்துப் படிப்பித்து அவர்களால் நயம்பெறக் காத்தி ருக்கையில் அப்பிள்ளைகள் கடைசியாய் மரணமென்னும் மாற்றானுக்கு இரையாய்ப் போகிறார்கள். அவ்வேளைக ளில் பெற்றோர் தங்களிடம் தேவன் ஒப்படைத்த பிள் ளைகளை அவர் அழைத்துக்கொண்டாரென்றும், அவரே தாங்கள் பட்ட பிரயாசத்துக்குப் பிரதி பலன் அளிப்பா ரென்றும் நம்பி யோபென்னும் மகாத்துமாவைப்போல மன அமரிக்கையாய்த் தேவசித்தத்துக்கு அமைச்சலாயி ருப்பதே தாவிளை .

யோபுவானவர் தம்முடைய அரு மையான ஏழு குமாரரும் மூன்று குமாரத்திகளும் ஒரே நாளில் இறந்த சங்கதியைக் கேள்வியுற்றபோது தரையி ல் விழுந்து சருவேசுரனை வணங்கி, கர்த்தர் தந்தார் கர் த்தரே எடுத்துக்கொண்டார். அவருடைய நாமத்துக் குத் தோத்திரமுண்டாவதாக என்றார். மேலும் வேதா கமஞ் சொல்வதியாதெனில், இவையெல்லாவற்றிலும் யோபு தன் வாயினால் பாவத்தைக் கட்டிக்கொள்ளவுமில் லை தேவனைக்குறித்து மதியீனமாய்ப் பேசவுமில்லை என்கிறது (யோபு 1). இவ்விதமான பொறுமைக்கும் ஆ ச்சரியமான அமைச்சலுக்கும் பிரதிபலனாக சருவேசுரன் திரும்பவும் அவருக்கு ஏழு புத்திரரையும் மிகச் சவுந்தரியமுள்ள மூன்று புத்திரிகளையும் தந்தருளினார். (யோபு42)

மக்கள் நோயுறும்போது வைத்தியஞ்செய்விப்பதும் தேவனை மன்றாடுவதும் நேர்த்தி தபசுபண்ணுவதும் பெற்றோரின் நல்லவழக்கம். ஆனாலிவையாவுக்கும் மிஞ்சித் தேவசித்தப்படி பிள்ளைகள் இறக்க நேரிடும் போது தாய் தந்தையர் தேவனை நிந்தித்து அவரிற் பழிவாங்கப்பாராமல் தாவீதிராசாவைக் கண்டுபாவிப்பார்களாக. இவருக்குப் பெத்சபி என்பவள் பெற்றிருந்த பச்சைக் குழந்தை சாகவே சாகுமென்று நாத்தானென் னுந் தீர் க்கதரிசி அறிவித்தபிரகாரம் பிள்ளை வியாதியில் விழுந் து அவஸ்தையாகிவிட்டது. இதைக்கண்டு தாவீது த மது பாலனுக்காகத் தேவனைப் பிரார்த்தித்துக் கடுந்தபசு செய்துகொண்டு தமது அறைக்குச் சென்று தரையில் ல்விழுந்து கிடந்தார். வீட்டிலுள்ள பெரியோர் வந்து அவரை எழுந்திருக்கச்சொல்லி எவ்வளவு பிரயாசப்பட் டாலும் அவர் சம்மதியாததுமன்றி அவர்களோடு சாப் பிடப் போகவுமில்லை.

ஏழாம் நாள் குழந்தை இறந்தது. இதைக்கண்டு அரசன் ஊ ணுறக்கமற்று ஆகுலித்தாரா? அல்லது வேறு சிலரைப்போல் இனித் தெய்வமென்ன, கோயிலென்ன, பூசையென்ன, செப்மென்னவென்று மாசக்கணக்காய் கடவுளிற் பழிவாங்கிக்கொண்டிருந்தா ரா? அல்லது தேவனை மனநொந்து தூஷித்தாரா? இல் லை. குழந்தை காலஞ்சென்று விட்டதென்று அறிந்தவு டன் தரையினின்றெழுந்து ஸ்நானம் பண்ணி தைலம் பூ சி தமது வஸ்திரங்களை மாற்றிக்கொண்டு தேவாலயஞ் சென்று தொழுது கொண்ட பின் போசனமருந்தினார்.

இதைக்கண்டு ஊழியர் அவரை நோக்கி குழவி உயிரோ டிருக்கையில் உபவாசமாயிருந்தீரே. அது மரித்தபின் நீரெழுந்து அசனம்பண்ணுகிறதென்ன என்றார்கள். அ தற்கு அவர் மாறுத்தரமாக பாலன் இன்னும் உயிரோடிருக்கையில் ஒருவேளை அது பிழைக்கும்படி கர்த்தர் கிருபை செய்வாரென்றெண்ணி உபவாசமாயிருந்தழுதேன். இப்போது அது மரித்திருக்கிறது. இனி நான் உபவாச மாயிருக்கவேண்டியதென்ன! அதைத் திரும்ப வரப்ப ண்ண என்னாற் கூடுமா! அதனிடத்துக்கு நான் போவேனேயன்றி அது என்னிடம் பரிச்சேதம் வரப்போகிறதில்லை என்றார்.

அம்மகராசா தமது அரிய புத்திரனைப் பரமராசாவாகிய தேவன் அழைத்துக் கொண்டதையிட்டு மனங்கருகாமல் பொறுமையோடு அவர் சித்தத்துக்குப் பூரண அமைச்சலாய் இருந்ததற்குச் சம்பாவனையாக கொஞ்சக்காலத்துக்குள் சல்மோனென்னுஞ் சீர்சிறந்த ஞானியைப் பெற்றார். (2. அரசர் 12)