இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சி ஒரு பாதுகாப்பான வழி

159. சேசு கிறீஸ்துவிடம் செல்லவும் நம்மை அவ ருடன் ஐக்கியப்படுத்துவதால் உத்தமதனம் அடையவும் மாதா மீது பக்தி கொள்வது ஒரு பாதுகாப்பான வழி யாக இருக்கின்றது, ஏனென்றால்

(1) நான் கூறும் இப்பக்தி முயற்சி புதிதானதல்ல. சிலகாலத்துக்கு முன் புனித மணங்கமழ மரித்த M போல்டொன் (போல்டொன் : எவ்ரூ என்னும் இடத்திலுள்ள தலைமை தியாக்கோன். வேதசாஸ்திர டாக்டர் பட்டம் பெற்றவர். மாதாமீது மிகவும் பக்தி மூண்டெழும் புத்தகங்கள் பல எழுதியவர். அவற்றுள் ஒன்று ''கடவுளின் வியத்தரும் அன்னைக்கு புனித அடிமைத்தனம்'' என்பது.) என்பவர் இப்பக்தி முயற்சியைப் பற்றி தாம் எழுதிய ஒரு நூலில் இதன் ஆரம்பம் இதுதான் என்று நிச்சயித்துக் கூற முடியாது என்று குறிப்பிடும் அளவிற்கு இது பழமை வாய்ந்ததாயிருக்கின்றது! ஆயினும் 700 ஆண்டுகளுக்கும் கூடுதலாக இப்பக்தி முயற்சியின் சான்றுகளை நாம் திருச்சபையில் காண்கிறோம்.

க்ளூனி மடத்தின் தலைவராயிருந்த அர்ச். ஒடி லோன் என்பவர் 1040-ம் ஆண்டில் வாழ்ந்தவர் பிரான்ஸ் தேசத்தில் இப்பக்தி முயற்சியைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டவர்களில் இவர் ஒருவர் என இவரது வர லாற்றில் கூறப்பட்டுள்ளது.
12ம் சிங்கராயர் பாப்புவால் திருச்சபையின் வேத பாரகராக ஏற்படுத்தப்பட்ட கர்தினால் பீற்றர் தமியான் என்பவர், முத மரினோ என்ற தம் சகோதரனைப் பற்றிய பின்வரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். 1016-ம் ஆண் டில் முத். மரினோ தன் ஆன்மகுரு முன்னிலையில் மிகவும் நன்மாதிரிகையான முறையில் மரியாயின் அடிமையானார். அவர் தம் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டார். தம்மையே கசையால் அடித்துக்கொண்டார். மாதாவுக்குத் தன்னை அர்ப்பணம் செய்ததற்கும் அவ்வன்னை மீது தனக்குள்ள பக்தியைக் காட்டும் பொருட்டும் ஒரு பண முடிப்பை அன்னையின் பீடத்தில் வைத்தார். தம் வாழ் நாளெல்லாம் இதில் அவர் எவ்வளவு பிரமாணிக்கமாய் நீடித்து நிலைத்திருந்தாரென்றால் மாதாவால் அடிக்கடி சந்திக்கப்படவும், தன் மரண நேரத்தில் இவ்வன்புள்ள தலைவியால் ஆறுதலளிக்கப்படவும் அவர்கள் வாயாலே இவ்வூழியத்திற்கு வெகுமானமாக மோட்சம் வாக்களிக் கப்படவும் பேறு பெற்றார்.

லூவெய்ன் பிரபுக் குலத்தவருக்கு நெருங்கிய உற வினரான வொதியே பிர்பாக் என்ற வீரன் 1300-ம் ஆண்டில் தன்னை கன்னி மாதாவுக்கு அர்ப்பணம் செய்ததாக செசாரியுஸ் பொல்லாந்துஸ் என்பவர் கூறி யுள்ளார்.

டாகோபர்ட் என்ற பக்தியுள்ள அரசன் (7-ம் நூற் றாண்டு) தன்னை மரியாயின் அடிமையாக அப்பணம் செய்திருந்தார். 7-ம் அருளப்பர் என்ற பாப்பரசரும் (701-707) தம்மை அவ்வாறே மாதாவின் அடிமை என கொடுத் திருந்தார்.

17-ம் நூற்றாண்டு வரை இப்பக்தி முயற்சி பலரால் தனிப்பட்ட முறையில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. 17-ம் நூற்றாண்டில் இது பகிரங்கமாயிற்று.

160. சிறைப்பட்டோரை மீட்பதற்கென ஏற்பட்ட பரிசுத்த தமதிரித்துவ சபையைச் சேர்ந்த சங், சைமன் தெ. ரோஜாஸ் என்ற குரு மூன்றாம் பிலிப் அரசனுடைய அரண்மனைப் போதகராயிருந்தார். இவர் ஸ்பெயின் நாட்டிலெங்கும் இப்பக்தியைப் பிரபல்யப் படுத்தினார் (1611). ஜெர்மனியெங்கும் (சக்கரவர்த்தியான 2-ம் பெர்டினான்ட் தன அரசவையிலுள்ள அனைவர் முன்னிலையிலும் 1640- ஆம் ஆண்டு மரியாயிக்கு அடிமை என தன்னை அர்ப்பணித்தார்.) இப்பக்தி விளங்கச் செய்தார். 3-ம் பிலிப் மன்னனுடைய ஆதரவால் 15-ம் கிரகோரி பாப்புவிடமிருந்து இப்பக்தி முயற்சியை அனுசரித்தவர் களுக்கு பெரிய ஞானப்பலன்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தெ. ரோஜாஸ் சுவாமியுடன் சேர்ந்து அவருடைய நெருங்கிய நண்பராயிருந்த தெலோஸ் ரோஜாஸ் என்ற குரு - இவர் அர்ச். அகுஸ்தின் சபையைச் சேர்ந்தவர்தம் வார்த்தையாலும் எழுத்தாலும் இப்பக்தியை ஸ்பெ யின் ஜெர்மனி ஆகிய நாடெங்கும் பரப்புவதில் ஈடுபட்டி ருந்தார். மரியாயைப் பற்றி அவர் "மரியாயின் ஆளுகை” என்ற அரிய நூல் ஒன்றை (இந்நூல் 1641-இல் ஆன்ட் வெர்ப் நகரில் வெளியிடப்பட்டது.) (Hierarchia Mariana) எழுதினார். அதில் இப்பக்தியின் சிறப்பையும் நுட்பத்தையும் இப் பக்தி முயற்சியின் தொன்மையையும் பற்றி மிகவும் பக்தி ததும்ப ஆழ்ந்த அறிவு விளங்க எழுதியுள்ளார்.

தியற்றின் சபைக்குருக்கள் இப்பக்தி முயற்சியை 17-ம் நூற்றாண்டில் இத்தாலியிலும் சிசிலியிலும் சேவாயிலும் பரப்பினார்கள்.

161. சேசு சபை சங். ஸ்தனிஸ்லாஸ் பாலாசியுஸ் என்ற குரு போலந்து நாட்டில் இப் பக்தியை வியத்தகு முறையில் பரவச் செய்தார். (4- ம் லதிஸ்லாஸ் என்ற போலந்து அரசன் மரியா யின் அடிமை என லூவெய்ன் நகரில் ஏற்றுக்கொள்ளப் பட்டார். தன் நாடு முழுவதிலும் இப்பக்தியைப் பரப் , புமாறு சேசு சபைக் குருக்களைக் கேட்டுக்கொண்டார்.)

மேலே குறிப்பிடப்பட்ட ("மரியாயின் ஆளுகை") என்ற நூலில் சங். தெ லோங் ரோஜாஸ், இப்பக்தி முயற்சியைக் கைக்கொண்ட பல நாட்டு இளவரசர்கள் இளவரசிகள், பிரபுக்கள், கர்தினால்மார்களைப் பெயருடன் குறிப்பிட்டுள்ளார்.

பக்திக்கும் ஆழ்ந்த கல்விக்கும் பெயர் பெற்றவர் கொர்னேலியுஸ்' அலாப்பிதே என்பவர். பல மேற்றி ராணிமாரும், வேதசாஸ்திர வல்லுனர்களும் இவரை இப்பக்தி முயற்சியைப் பரிசீலிக்கும் படி நியமித்தார்கள். இவர் அதை தீர்க்க ஆராய்ந்து பார்த்தபின் தம்முடைய பக்திக்கு மிகச் சிறந்த முறையில் ஏற்றதாக இப்பக்தி முயற்சி உள்ளது என முடிவு தெரிவித்தார். அவரைப் பின்பற்றி இன்னும் பல பெரியவர்கள் இதனை கைக் கொண்டார்கள்.

தேவ அன்னையின் ஊழியத்தில் எப்போதுமே ஊக் கமுடையவர்களான சேசு சபைக் குருக்கள், கோலோங் நகர் மாதா சபையாரின் பெயரால் இப்பக்தி முயற்சி யைப் பற்றி ஒரு புத்தகம் ("கன்னி மரியாயின் அடிமைத்தனம்" Mancjpium Virginis- கோலோங், 1634.) தயாரித்து அப்போது கோலோங்கின் அதி மேற்றிராணியாயிருந்த பவேரிய பெர்டினான்ட் இடம் சமர்ப்பித்தார்கள். அவர் அந் நூலுக்கு உத்தரவளித்து அதை அச்சிட அனுமதி கொடுத் ததோடு தம்முடைய அதி மேற்றிராசனத்திலுள்ள எல்லா குருக்களும் துறவிகளும் திடமான இப்பக்தியைப் பரப்ப தங்களால் முடிந்த மட்டும் முயலுமாறு கேட்டுக் கொண்டார்.

162. பிரஞ்சு நாடெங்கும் நல் நினைவுக்குரியவரான கர்தினால் பெரூல் என்பவர் பிரான்ஸ் தேசத்தில் இப்பக்தி முயற்சியைப் பரப்புவதில் மிகவும் தாகமுடையவராயிருந் தார். அவருடைய எதிரிகளாலும் கட்டுப்பாடற்றவர் களாலும் எவ்வளவோ புறங் கூறலும் இடையூறுகளும் ஏற்பட்ட போதிலும் அவர் அதைப் பரப்பி வந்தார். இது வேண்டாத புதுப் பக்தி என்றும், மூட நம்பிக்கை என்றும் அவர் குற்றஞ் சாட்டப்பட்டார். அவருக்கெதிராக ஒரு குற்றச் சாட்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. அவருடைய எதிரிகள் - இல்லை அவர்களைக் கருவியாக கொண்ட பசாசுஇப்பக்தியை பிரான்ஸ் நாட்டில் பரவ விடாமல் ஆயிரம் தடைகளைச் செய்து வந்தது. ஆனால் சிறந்த குணங்களுள்ள இப்புனித கர்தினால் அவர்களுடைய பொய்க் குற்றங் களுக்குத் தம் பொறுமையால் பதிலளித்தார். அவர்கள் வெளியிட்ட எதிர்வாதங்களை ஒரு சிறு நூல் எழுதி தீவிரமாய் மறுத்தார். அதில், அப்பக்தி முயற்சி சேசு கிறீஸ்துவின் முன்மாதிரிகையில் ஊன்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் கூறினார். சேசுகிறீஸ்துவுக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகளையும் ஞானஸ்நானத்தில் நாம் செய்த வாக்குறுதிகளையும் சுட்டிக் காட்டினார் குறிப்பாக ஞானஸ்நான வார்த்தைப் பாடுகளைப் பற்றி அவர் கூறிய காரணங்களால்தான் எதிரிகள் வாயை அடைத்தார். மாதாவுக்குச் செய்யப்படும் இந்த அர்ப்பணம் அவர்களின் கரங்கள் வழியாக சேசு கிறீஸ்துவுக்குச் செய்யப்படுவது தான்; ஞானஸ்நான வார்த்தைப் பாடுகளை உத்தம வித மாய்ப் புதுப்பித்தலேயன்றி வேறெதுவும் இதில் இல்லை என எடுத்துக் கூறினார். இப்பக்தியைப் பற்றி சிறந்த பல கருத் துககளை இவருடைய நூல்களில் காண முடிகிறது.

163. M, போல்டொன் என்பவர் எழுதியுள்ள நூலில், இப்பக்தி முயற்சியை அங்கீகரித்துள்ள பல பாப்புமார் களைப் பற்றியும், இதைப் பரிசோதனை செய்த வேத வல் லுநரைப் பற்றியும், இப்பக்தி முயற்சிக்கு ஏற்பட்டு பின் நீங்கிய துன்ப உபத்திரவங்களைப் பற்றியும், எந்தப் பாப் புவிடமிருந்தும் கண்டனம் பெறாமல் இப்பக்தியைக் கைக் கொண்ட ஆயிரக் கணக்கான மக்களைப் பற்றியும் வாசிக் கிறோம் இதனைக் கண்டனம் செய்ய வேண்டுமானால் கிறீஸ்தவத்தின் அஸ்திவாரங்களையே பெயர்த்தெறிய வேண்டியதிருக்குமே!

இவற்றிலிருந்து, இப்பக்தியைப் பற்றிய சத்தியம் புதியதல்ல என்பது புலனாகிறது. இப்பக்தி மிக ஆபூர் வமான ஒன்றாக இருப்பது ஏனென்றால், எல்லோராலும் மதிக்கப்படவும் அனுசரிக்கப்படவும் எட்டாதபடி இது மிக உயர்ந்த மதிப்புடையதாயிருப்பதே.

164. (2) இப்பக்தி முயற்சி சேசு கிறீஸ்துவிடம் செல் வதற்கு ஒரு பாதுகாப்பான வழியாயிருப்பது ஏனென் றால், நித்திய பிதாவிடம் நம்மைப் பாதுகாப்பாகக் கூட் டிச் செல்வது எப்படி சேசுவின் குணாதிசயமாக இருக் கிறதோ அப்படியே சேசுவிடம் நம்மைப் பாதுகாப்பாகக் கூட்டிச் செல்வது நம் மாமரி அன்னையின் குணாதிசயமாக இருக்கிறது. தாங்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவதற்கு மாதா இடையூறாக இருப்பதாக ஞானவாழ்வில் பற்றுள் ளவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அது எப்படி முடியும்? எல்லா மக்களுக்கும் பொதுவாக வும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் கடவுளிடம் வரப்பிரசாதத்தைப் பெற்றுள்ள கன்னிமாமரி அன்னை, அவ ருடன் ஒரு ஆன்மா ஐக்கியமாகும் அருளைப் பெறுவதைத் தடை செய்ய எப்படி முடியும்? வரப்பிரசாதங்களால் நிரம்பி வழியும் மாதா கடவுளுடன் எந்த அளவுக்கு ஐக்கியமடைந்திருந்தார்களென்றால், அவர் இம்மாதாவிடமே மாம்ச அவதாரம் எடுக்கும் அவசியம் ஏற்பட்டதே! (எண் 39 பார்க்கவும்)- அப்படிப்பட்ட கன்னிமாதா, ஒரு ஆன்மா உத்தம விதமாய்க் கடவுளுடன் ஐக்கியமா வதைத் தடை செய்ய எப்படி முடியும்?

மற்ற சிருஷ்டிகள் - அவை புனிதமுடையவனவாக இருந் தாலும் கூட, அவற்றுடன் தொடர்பு கொள்வது சில சமயங்களில் கடவுளுடன் ஐக்கியமடைவதை பிந்தச் செய்யக் கூடும் என்பது உண்மையே. ஆனால் நம் அன்னை விஷயத்தில் அது அங்ஙனமல்ல. இதை முன்பு கூறியுள் ளேன். இதை முடிவின்றிக் கூறிக்கொண்டிருக்க நான் சளைக்கமாட்டேன். சேசு கிறீஸ்துவின் வயதின் நிறைவுக்கு மிகக் கொஞ்சமான ஆன்மாக்களே வருகின்றனர் என் பதற்கு ஒரு காரணம், எப்போதும் போல் இப்பொழுதும் சுதனின் தாயாகவும் - பரிசுத்த ஆவியின் வளமுள்ள பத் தினியாகவும் இருக்கிற கன்னிமாமரி, அவர்களுடைய இருதயங்களில் போதிய அளவு இன்னும் உருவாக வில்லை என்பதே. நன்கு உருவாகி நன்றாகக் கனிந்த பழத்தை அடைய விரும்புகிற யாரும் அப்பழத்தைக் கொடுக்கும் மரத்தைக் கொண்டிருக்கவேண்டும். ஜீவியக் கனியான சேசு கிறீஸ்துவை விரும்புகிற யாவரும் ஜீவிய மரமான மரியாயைக் கொண்டிருக்கவேண்டும். பரிசுத்த ஆவி தனக்குள் கிரியை புரிய வேண்டும் என்று விரும்பு கிற யாரும் அவர் யார் வழியாகக் கனி விளைவிக்கிறாரோ, அந்தக் கனி தரும் அவருடைய பிரமாணிக்கமுள்ள பிரிக்க முடியாத பத்தினியாகிய தேவ மரியாயைக் கொண்டி ருத்தல் வேண்டும். இதைப் பிறிதொரு இடத்தில் நான் கூறியுள்ளேன். (எண் 20 - 21 பார்க்கவும்).

165. எனவே, உன்னுடைய செபங்களிலும் தியா னங்களிலும் செயல்களிலும் துன்பங்களிலும் மரியாயை உன் கண் முன் நிறுத்து. தெளிவான துலக்கமான பார் வையில் இல்லாவிட்டாலும் ஒரு பொதுவான துலக்க மற்ற பார்வையிலாவது மரியாயைப் பார். எவ்வளவ நன்றாக இப்படிச் செய்வாயோ அவ்வளவுக்கு நிறைவாக நீ சேசு கிறீஸ்துவைக் காண்பாய். அவரோ எப்போதும் மரியாயுடன் இருக்கிறார். பெரியவராகவும் வலிமையு டையவராகவும் செயலாற்றுகிறவராகவும் நம்மால் கொள்ள முடியாதவராகவும் இருக்கிறார். மோட்சத்தில் இருப்பதை விட அல்லது பிரபஞ்சத்தில் எந்த சிருஷ்டி யிலும் இருப்பதை விட அதிக அளவில் மரியாயிடம் இருக்கிறார். ஆகவே . முழுவதும் இறைவனில் மூழ்கி யிருக்கும் தேவ மாமரி , உத்தம ஆன்மாக்கள் அவருடன் ஐக்கியமடைவதற்கு இடையூறாக இருக்கவே மாட் டார்கள். இது மட்டுமல்ல, இப்பெரும் அலுவலில் கடவுளுடன் நாம் ஐக்கியமாவதற்குரிய வரப் பிரசாதங் களை மாதா நமக்கு அளிப்பதால் அவர்களைப் போல் அதிக ஊக்கமுடன் நமக்கு உதவும் ஒரு சிருஷ்டி இது வரை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் ஒரு அர்ச்சிஷ்டவர் கூறியுள்ளது போல் மரியாயாலல்லாது எவரும் கடவுள் சிந்தனையால் நிறைந்திருக்க இயலாது. (கொன்ஸ்தாந்தி நோபிள் அர்ச்' ஜெர்மானுஸ் : "Nemo Cogitatione Die repleturi nisi per te"' (Sermo 2 a in dormitione).) அதாவது தீயோனின் மாயங்கள் தந்திரங்களிலிருந்தெல்லாம் மாதா நம்மைக் காப்பாற்று வதனால் அவ்வாறு என்க.

166. மாதா எங்குள்ளார்களோ அங்கு தீயோன் இரான். உண்மையிலேயே மாதா மீது பக்தி கொண் டிருப்பதும், அவர்களை அடிக்கடி நினைப்பதும் அவர்களைப் பற்றிப் பேசுவதும் நாம் கடவுளின் . ஆவியால் நடத்தப் படுகிறோம் என்பதற்குத் தப்பாத அடையாளங்களுள் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு அர்ச்சி ஷ்டவரின் கருத்து. (கொன்ஸ்தாந்தி நோபிள் அர்ச். ஜெர்மானுஸ் - (Sermo in Encaenja Venerandae aedis B. V.)) இவர் மேலும் கூறுகிறார் : மூச்சு விடுவது ஒரு உடல் சாகவில்லை என்பதற்கு எப்படி நிச்சயமான அடையாளமாக இருக்கிறதோ அதே போல மரியாயை அடிக்கடி நினைப்பதும் அன்புடன் மன்றாடுவதும் ஒரு ஆன்மா பாவத்தினால் சாகவில்லை என்பதற்கு உறுதி யான அடையாளமாயிருக்கிறது என்று!

167 பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படுகிற திருச் சபை நமக்குக் கூறுகிறபடி, மாதா மட்டுமே எல்லாத் தப்பறைகளையும் உடைத்து அழித்தவர்களாதலால். (Sola cunctas haereses interemisti in universo mundo. WIT5T வின் மந்திர மாலை) அவர்களுடைய ஒரு உண்மையான பக்தன் பதிதத்திலோ ஏமாற்றத்திலோ விழமாட்டான். குறைந்த பட்சம் மனமறிய விழமாட்டான். குறை கூறு கிறவர்கள் இதை எதிர்க்க கூடும். மரியாயின் பக்தன் பொய்களை உண்மையென நம்பி அல்லது தீய அரூபியை தூய ஆவி என்று நினைத்து புறத்தவறில் விழக்கூடும். இதிலும்கூட மற்றவர்களை விட அரிதாகவே அவன் விழுவான். ஆயினும் பிந்தியோ முந்தியோ அதைக் கண்டு பிடித்து விடுவான். தான் நம்பியதுதான் உண்மை என்று பிடிவாதமாய் அதில் நிலை நிற்கமாட்டான்.

168. ஆகவே ஜெபத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு எவ் வளவோ சாதாரணமாக ஏற்படக் கூடிய ஏமாற்றங்களைப் பற்றிய பயமில்லாமல் உத்தம தனத்தின் பாதையில் முன்னேறவும். சேசு கிறீஸ்துவை நிறைவாய்க் கண்ட டையவும் விரும்புகிற எவரும் "விசால இருதயத்துடனும் - விருப்பமுள்ள மனத்துடனும்'' (1 மக்க. 1, 3) மரியாயின் இப்பக்தி முயற்சியைக் கைக்கொள்வார்களாக. ஒரு வேளை இதுபற்றி இதுவரை அவர்கள் அறியாதிருந்திருக்கலாம். இதுவரை தாம் அறியாத இந்த வழியை அவர்களுக்கு இப்பொழுது காட்டுகிறேன் - அவ்வழியில் செல்வார்களாக. “அதிக சிறந்த பாதையைக் காட்டுகிறேன்'' (1 கொ. 12,31) - இந்தப் பாதை நம் ஒரே சிரசும் மனிதாவதார ஞானமு மாகிய சேசு கிறீஸ்துவால் திறந்து வைக்கப்பட்டது. அவ ருடைய அங்கங்கள் இவ்வழி செல்வதில் ஏ மாற்றம் - அடைய முடியாது

இவ்வழி இலகுவானது ஏனென்றால் இதில் வரப் பிரசாதத்தின் நிறைவு உள்ளது. பரிசுத்த ஆவியின் முத் திரையும் இதை நிரப்புகிறது, இதைப் பின் செல்கையில் நாம் களைப்படைவதில்லை, திரும்பிச் செல்வதில்லை.

இவ்வழி கிட்டத்து வழி. குறுகிய காலத்தில் நம்மை சேசு கிறீஸ்துவிடம் அழைத்துச் செல்கிறது.

இவ்வழி உத்தமமானது. சகதியும் தூசியும் பாவத் தின் ஓரு சிறு ஈனமும் இல்லை.

இவ்வழி பாதுகாப்பானது. வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பாமல் நேராக பாதுகாப்பாக நம்மை நித்திய வாழ்வான சேசுவிடம் இட்டுச் செல்கிறது.

எனவே நாம் இவ்வழியைக் கைக்கொள்வோம் இரவும் பகலும் இவ்வழியே செல்வோம். சேசு கிறீஸ்து வின் வயதின் நிறைவை அடையுமட்டும் செல்வோம்.