இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா என்னும் அச்சில் நம் ஆன்மாக்கள் சேசு கிறீஸ்துவின் சாயலாக மறு உருவாக்கப்படல்

218. இப்பக்தி முயற்சி உண்மையுடன் கடைபிடிக்கப் பட்டு மாதா என்னும் வாழ்வு தரும் மரம் நமதான் மாவில் நன்கு வளர்க்கப் பட்டால், தக்க காலத்தில் அது கனி தரும். அந்தக் கனி வேறு எதுவுமல்ல, மரியாயின் (உதரக்) கனியான சேசு கிறீஸ்துவே. ஒரு வழியிலோ' - அல்லது இன்னொரு வழியி லோ சேசு கிறீஸ்துவைத் தேடிச் செல்லும் பக்தியுள்ள பல ஆன்மாக்களைக் காண் - கிறேன். இவர்கள் இரவு முழுவதும் அதிகம் உழைத்த பின்: 'இரவெல்லாம் பாடுபட்டும் ஒன்றும் அகப்பட வில்லை'' (லூக். 5, 5) என்றுதான் சொல்லக் கூடியவர்களா, யிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் இவ்வாறு கூற, முடியும்: “நீங்கள் அதிகம் உழைத்தீர்கள். ஒன்றும் பயனில்லை'' என்று. உங்களுள் சேசு கிறீஸ்து இன்னமும் பலவீனராகவே இருக்கிறார். ஆனால், மரியாயின் மாசற்ற வழியில்- நான் கூறும் இத் தெய்வீகப் பயிற்சியில் நாம் ஒரு புனிதமான இடத்தில் வேலை செய்கிறோம். நாம் மிகக் கொஞ்சமாகவே உழைக்கிறோம். மரியாயிடம் இரவு என்பதே இல்லை. ஏனென்றால் அவர்களிடம் பாவம் எதுவுமே இல்லை-அதன் ஒரு சிறு நிழல் கூட கிடையாது. மாதா ஓர் புனித ஸ்தலம். பரிசுத்தத்திலும் பரிசுத்தமான அர்ச்சிஷ்டவர்கள் உருவாகி அச்சில் வார்க்கப்படும் இடம் மாமரி அன்னை!

219. அர்ச்சிஷ்டவர்கள் மாதா என்னும் அச்சில் வார்க்கப்படுகிறார்கள் என்று நான் கூறுவதைத் தயவு செய்து கவனியுங்கள். ஒரு சுரூபத்தை உளி சுத்தியல் கொண்டு அடித்து உருவாக்குவதற்கும் அதை ஒரு அச் சில் வார்த்து எடுப்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. முதல் முறைப்படி சிற்பிகளும் சுரூபம் செய்கிறவர்களும் அதிகம் உழைக்கிறார்கள். அதிகமான நேரமும் அவர் களுக்குத் தேவைப்படுகிறது ஆனால் இரண்டாம் முறைப் படி அவர்களின் உழைப்பு கொஞ்சம். சீக்கிரமாகவும் அவற்றை அவர்கள் செய்து விடுகிறார்கள். மரியாயை “கடவுளின் அச்சு'' என்று அழைக்கிறார் அர்ச். அகுஸ்தீன் “கடவுளின் அச்சு என்று உம்மை நான் அழைக்க நீர் தகுதி பெற்ற வர்" (Inter opp. St. Augustini, Ser. 208, என்கிறார். கடவுள்களை உருவாக்கும் அச்சு மாதா. இந்தத் தெய்வ அச்சினுள் வார்க்கப்படுகிறவன் வெகு விரைவில் சேசு கிறீஸ்துவில் உருவாக்கப் பெற்று அவரின் உருவ மடைகிறான்; சேசு கிறீஸ்து அவனில் உருவாகிறார் குறைந்த நேரத்தில் அவன் கடவுளைப் போலாகிறான். ஏனென்றால் கடவுளை உருவாக்கிய அதே அச்சில் வார்க் கப்படுகிறான்.

220. இந்த முறைப்படி அல்லாமல் மற்றப்படி சேசு கிறீஸ்துவைத் தங்களிடத்திலும் பிறரிடத்திலும் உருவாக்க விரும்பும் ஆன்ம வழிகாட்டிகளையும் பக்தியுள்ளவர்களையும், சிற்பிகளுக்கு நன்றாக ஒப்பிடலாமெனக் கருதுகிறேன் அவர்கள் தங்கள் சொந்த அறிவிலும் திறமையிலும் செயல் முறையிலும் நம்பிக்கை கொண்டு, கடினமான கல்லிலோ அல்லது கரடு முரடான மரத்திலோ சேசு கிறீஸ் துவின் சாயலை உருவாக்கும் முயற்சியில் உளி சுத்தியல் கொண்டு முடிவின்றி செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் சேசு கிறீஸ்துவின் சாயலை உருவாக்குவதில் வெற்றி பெறுவதில்லை இது ஏனென்றால் சேசு கிறீஸ்துவைப் பற்றிய அறிவும் அனுபவமும் அவர் களிடம் இல்லை: அல்லது முழு வேலையையும் கெடுத்து விடக் கூடிய பொருந்தாத ஒரு சுத்தியல் அடியினால் அவ்வாறு ஆகி விடுகிறது. ஆனால் நான் கூறும் இந்த வரப் பிரசாத இரகசியத்தை ஏற்றுக் கொள்கிறவர்களை வார்ப் பட வேலைக்காரர் என்றும், அச்சில் வார்க்கிறவர்கள் என்றும் நன்றாகக் கூறலாம். இவர்கள் இயற்கைப் படி யும் தெய்வீக முறைப்படியும் சேசு கிறீஸ்து உருவாக்கப் பட்ட அழகிய அச்சாகிய மரியாயைக் கண்டு கொண்ட வர்கள். இவர்கள் தங்கள் சொந்த திறமையில் அல்ல ஆனால் இந்த அச்சின் உயர் தரத்தில் நம்பிக்கை கொள் கிறார்கள். சேசு கிறீஸ்துவின் உண்மையான சாயலாகும் படி தங்களை மரியாயிடம் கையளித்து விடுகிறார்கள்.

221. எத்தகைய அழகிய பொருத்தமான உபமானம் இது! ஆனால் யார் இதை அறிந்து உணர்வார்கள்? அன்புள்ள சகோதரா! நீ இதை 1 அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நீ இதை நினைவு படுத்திக் கொள்: உருகிய திரவ நிலையி லுள்ள பொருள்கள் தான் ஒரு அச்சில் ஊற்றப்படுகின் றன. இதன் அர்த்தம் என்ன? உன்னிலுள்ள பழைய ஆதாம் உடைக்கப்பட்டு உருக்கப்பட வேண்டும்: மரியா யிடமாய் நீ புதிய ஆதாம் ஆவதற்கு (எபே 4. 22-24) அவ்வாறு செய்ய வேண்டும்.