முறையான அன்பு

தாய் தந்தையர் தங்கள் மக்களைச் சுபாவமுறைப்படி மாத்திரம் நேசிப்பதைப்பற்றி ஆச்சரியப்படவும் அவர்களைப் புகழவும் அவசியமில்லையென்றும் அப்படிச் சினேகியாதவர்களைப் படுபாவிகளென்று அழைக்க வேண்டுமென்றும் அர்ச். அகுஸ்தீன் வசனிக்கிறார்.

ஏனெ னில், அறிவற்ற காடி புலி முதலிய துஷ்ட மிருகங் கள் முதலாய்த் தங்கள் தங்கள் குட்டிகசைச் சுபாவமுறை ப்படி அருமையாய்ச் சினேகிக்கின்றன. இயற்கை முறைக்கு மேற்படாததும் தேவ நோக்கமற்றதுமான இந் தச் சுபாவ அன்பு நிலையற்றது. குழந்தைகள் வளர வளர இச்சுபாவ நேசத்தின் வேகமும் உறுதியும் குறைவது வழக்கம்.

பிள்ளைகள் தங்களுக்கு ஏற்கநடந்தால் அவர் களைத் தாய் தந்தையர் நேசிப்பதும், ஏற்க நடவாவிடில் அவர்களைப் பராமுகம்பண்ணுவதும் வெறுப்பதும் நிலை யற்ற சுபாவ நேசத்தின் கூறாம். மக்களின் சாமர்த்தியம் சாங்கம், கீர்த்தி, அழகு, வயது, குணம், நடை ஆதியவைகளையிட்டு எல்லோரையும் சமமாய் நடத்தாமல் ஓரவாரம் பண்ணுவதும் சுபாவ அன்பின் சொந்தக் குணம். கிரமந்தப்பிய சுபாவ அன்பில் குருட்டாட்டமும் உண்டு.

உதாரணமாக பெற்றோர் தம்மக்கள் எவ் வளவு துர்ச்சனராயிருந்தாலும் தங்களுக்கு மாத்திரம் பிரியப்பட நடந்துகொண்டால் அவர்களுடைய துர் ஒழுக்கத்தைப்பற்றிச் சற்றும் பொருட்பண்ணாதிருப்ப தும், அவர்கள் பிறகு என்னென்ன அடாத்து அநியா யங்களைப் பண்ணினாலும் அவர்களுக்குச் சானுவாய்ப் பே சிப் பிறரைக் குற்றவாளிகளாய்த் தீர்ப்பதும், அவர்கள் அட்டாதுட்டித்தனத்தைத் தெளிவாய்க் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிக்கவும் திருத்தவும் எண்ணா திருப்ப தும், தேவன் தமக்குச் சித்தமான நேரத்தில் அவர்களை மறுவுலகத்துக் கழைத்துக்கொண்டால் பிள்ளைகள் அவ ருக்கே சொந்தமானவர்களென்பதை நினையாமல் அவ ருக்கோாத வார்த்தைகளைச் சொல்லி முறைப்படுவதும் இவைபோன்ற மற்றச்சகல தவறுகளும் மேற்சொல்லிய குருட்டாட்டத்தினாலேதான் விளைகின்றன.

தாய் தந்தையர் மக்கள் மேற் கொண்டிருக்கவேண் டிய அன்பு சுபாவமுறைக்கு மேற்பட்டதும் தேவநோக் கமுடையதுமாயிருக்கவேண்டும். ஏனெனில், பிள்ளைகள் தேவனுடையவர்கள்; அவரே அவர்களை ஆதிதொட்டு அருமையாய் நேசித்துக் காலக்கிரமத்திற் படைத்தருளி னவர். ''நித்திய நேசங்கொண்டு உன்னைச் சிநேகித்தி ருந்தேன் ஆதலால் இரக்கங்கொண்டு உன்னை இழுத் தெடுத்தேன்'' (எரேமி. 31; 3)

இன்னின்னவிதமான பிள்ளைகள் தங்களுக்கு வேண்டுமென்று விரும்பி அவ் விருப்பத்திற் கிசையப் பிள்ளை களைச் சென்மிக்கப்பண் ணும் வரம் பெற்றோருக்கில்லை. அன்றியும் அவர்கள் விருப்பப்படியல்ல தேவன் தமது சித்தத்துக்கும் மட்டற் ற ஞானத்துக்கும் ஏற்றபடியே இன்னின்ன விதமான பிள்ளைகளை இன்னின்ன பெற்றோருக்குக் கொடுப்போம் எனக் கொடுத்தருளுகிறார். இதின் நோக்கம் என்ன வெனில், தாய் தந்தையர் தங்கள் மக்களைச் சுபாவமு றைக்கு மேலான தூய நேசத்துடன், தமக்கேற்றவித மாய் நேசித்துக் காப்பாற்றித் தேவ பயபத்தியாய் வளர். க்கவேண்டும் என்பதேயாம்.

ஆகையால் இவர்கள் மக் களைத் தங்களுக்கல்ல தேவனுக்கே சொந்தமானவர்க னென்றதையும், தாங்கள் அவர்களை வளர்த்து பாதுகா த்துக் கொடுக்கவேண்டிய காரியஸ்தர்களே என்பதை யும் ஒருகாலும் மறவாமல், அவருக்காகவும் அவருக்கே ற்றவிதமாயும் அவர்களை நேசிக்கவேண்டும். யேசுநாத சுவாமி ஒருநாள் ஒரு குழந்தையைத் தம்மிடம் அழை த்து அதைச் சீஷர்கள் நடுவில் நிறுத்தி, இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை நமது நாமத்தின் நிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் நம்மையே ஏற்றுக்கொள்ளுகிறானென் றருளிச்செய் தார் (மத். 18; 5)

சருவேசுரன் பிள்ளைகள் மேற்கொண்டிருக்கும் மேலான நேசத்தை அவரது பதி லாட்களாயிருக்கும் பெற்றோரிடத்திலேயே பிள்ளைகள் கண்டடையவேண்டும். ஆகையால், அவர் பிள்ளைகளை நேசிப்பதுபோலவே அவரிடமாயிருக்கும் பிதா மா தாக் களும் அவர்களை நேசிக்கக்கடவார்கள்.

ஒரு இராசா தம் மக்களை ஒரு பிரபுவிடம் வளர்க்கும்படி ஒப்பித்திருந்தால் இப்பிரபு அவர்களை எவ்வண்ணம் நேசித்து வளர்ப்பாரோ, அவ்வண்ணமே இராசாதிராசாவாகிய கடவுள் பெற்றோருக்கு ஒப்புவித்த பிள்ளைகளை அவர்கள் சுபாவத்துக்கு மேலான அன்போடு, தேவனுக்கேற்றவிதமாய் நேசித்து வளர்க்கக் கடமைப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.