பதில்

அவனுக்கு அநேக பிள்ளைகள் இருந்தனர். செல வுக்கு அதிக பணம் தேவை. சில சமயங்களில் என்ன செய்வதென்றறியாது அவன் திகைப்பான். நிலைமை மிக மோசமானது என்றிருக்கையில் ஓர் ஒளி தோன்றுகிறது. கடவுளில் அவன் விசுவாசம் கொண்டவன். கடவுளைப் பார்த்து ஜெபிக்கிறான். கடவுள் மேல் அவனுக்கு இருக்கும் விசுவாசத்துக்கு சன்மானம் கிடைக்கிறது.

ஒரு முறை அவன் வரி கட்ட வேண்டியிருந்தது. நூற்றைம்பது ரூபாய் பெரிதே. இது பெரும் தொகை. பணக்காரர்களுக்குப் பெரிதல்ல, குடியா னவனுக்கு இது பெரிதே. மறு திங்கட்கிழமைக் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணம் வேண்டும். இதைப்பற்றி திரும்பத் திரும்ப அவன் சிந்தித்தான். திங்கட்கிழமைக்குள் நூற்றைம்பது ரூபாய் எங்கிருந்து வரும்? அது முடியாத காரியமா கத் தோன்றியது.

பசுக்களைக் கண்டதும், அவற்றில் ஒன்றை விற் கலாமா என நினைத்தான். ஆனால் அந்த வருடத்தில் அந்தப் பகுதியில் பசுக்களை வாங்குவோர் கிடையாது. பசு வாங்கக்கூடியவர்கள் கடந்த பல மாதங்களாக அவனை எட்டிப் பார்க்கவே இல்லை. வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. கடவுள் என்னை நேசிக்கி றார், அவர் எனக்கு உதவி செய்வார் என அவன் நிச் சயமாய் நம்பி அவரை நோக்கிப் பிரார்த்தித்தான். அவர் எப்படி உதவி செய்வாரோ, எப்பொழுது உதவி செய்வாரோ, அவருக்குத் தெரியும். அவர் பிரி யம்போல் செய்யட்டும் என்றிருந்தான்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்தான்.. வரி செலுத்த இன்னும் ஒரு நாளே இருக்கிறது. வழக்கம் போல் காலையில் மூன்று மணிக்கு எழுந்து பால் கறக்கச் சென்றான். ஆறு மணிக்குச் சற்று முன் திரும்பி, சிறிது நித்திரை செய்யப் போனான். அப்படியானால் பகலில் வேலை செய்யக்கூடிய திடன் 'உண்டாகும்.படுக்கு முன் கடவுளை நோக்கி ஜெபித்துத் தனது தேவையை அவருக்கு நினைவூட் னான்; இன்று நூற்றைம்பது ரூபாய் வேண்டும் என்றான்.

ஆறு மணிக்குத் தலை சாய்த்தான். சில வினாடி களில் நல்ல நித்திரை வந்தது. நெடு நேரம் உறங்க முடியவில்லை. யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஜன்னல் கதவைத் தட்டினார்கள். படுக்கையை விட்டு அவன் குதித்தெழுந்து, என்ன செய்தி என வினவி, நெடு நேரம் உறங்கிவிட்டேனோ, மணி எட்டு இருக்கும் போல் தெரிகிறதே என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் "ஐயா. உறக்கத்தைக் கெடுத்த தற்காக மன்னித்துக்கொள்ளுங்கள். ஒருவர் உங்க ளைப் பார்க்க வந்திருக்கிறார்' என அவனுடைய வேலைக்காரன் கூறினான்.

எதற்காகப் பார்க்க வேண்டுமாம் என்று அவன் கேட்டதும், பசு வாங்க வந்திருக்கிறார் என்னும் பதில் கிடைத்தது. ஒரு வினாடியில் முகத்தைக் கழுவிவிட்டு அவன் வாசலை நோக்கி விரைந்தான். மகிழ்ச்சியுடன் சென்றான் என சொல்லத் தேவை இல்லை .

வாசலில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் அவரை நம் குடியானவன் சமயாசமயங்களில் பார்த் திருக்கிறான். பல மைல் தூரத்தில் அவர் வசித்தார். “இத்தனை அதிகாலையில் வந்து தொந்தரவு செய்த தற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு பசு தேவை. நேற்று முழுதும் தேடியும் பயனில்லை. உங்கள் நினைவு வந்தது. விலைக்குக் கொடுக்கக்கூடிய பசு வைத்திருக்கிறீர்களா?'' என்று அவன் கேட் டான்.

“ஆம் ஒரு பசுவை விற்க நினைத்துக் கொண்டிருக் கிறேன். வந்து பாருங்கள்'' எனக் குடியானவன் கூறியதும் இருவரும் மாட்டுத் தொழுவத்துக்குப் புறப்பட்டார்கள். விற்க இருந்த பசுவைக் கண்டதும், “என்ன விலை வேண்டும்?'' என வந்தவர் கேட் டார்.

குடியானவன் சிறிது தயங்கினான். 'அது எவ்வளவு பெறுமோ, நிச்சயமாய்த் தெரியாது. இரும் தாலும், எனக்கு நூற்றைம்பது ரூபாய் அவயெம்" என்றான்.

வந்தவர் ஒரு வார்த்தையும் சொல்லாமல் நூற்றைம்பது ரூபாயை நீட்டினார் ; பாவை அவிழ்த் துக்கொண்டு புறப்பட்டார். 'சற்று நில்லுங்கள்; என்னை வந்து பார்க்க எப்பொழுது நினைத்தீர்கள்?'' எனக் குடியானவன் வினவியதும், “அவர் இன்று காலை சுமார் ஆறு மணிக்கு உங்கள் நினைவு வந்தது. விலைக்குக் கொடுக்கக் கூடிய பசு உங்களிடம் இருக்க லாம் என்று நினைத்தேன். உடனே உங்களை வந்து பார்க்கத் தீர்மானித்தேன் காரில் ஏறி நேரே உங்களி டம் வந்தேன்" என்றார்.

“இப்பொழுது நேரம் என்ன?' என்று குடியான வன் கேட்டான். ''ஆறு ஆகி இருபது நிமிடம் '' என்ற பதில் வந்தது.'' ஆறு இருபது தானே? ஆச்சரியம்! பெரும் அதிசயம்!" என அவன் கூவினான். தனது மன்றாட்டுக்கு இருபது நிமிட நேரத்தில் பதில் கிடைத்தது என்றறிந்து கடவுளை வாழ்த்தினான்.