இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிந்திய காலங்களில் மாதா வகிக்கும் தனிச்சிறந்த பாகம்

49, மாதா வழியாகவே உலகத்தின் மீட்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் வழியாகவே அது முற்றுப்பெறவும் வேண்டும். கிறிஸ்துவின் முதல் வருகையின்போது மாதா மிகக் கொஞ்சமாகவே வெளியில் காணப்பட்டார்கள். இது ஏனென்றால், மரியாயின் குமாரனின் (தேவ) ஆள் தன்மை பற்றி குறைவான விளக்கமும் குறைந்த அளவு அறிவுமே பெற்ற மனிதர்கள், மட்டு மிஞ்சிய, செப்பனிடப்படாத முறையில் தங்களை மரியாவுடன் இணைத்துக் கொண்டு உண்மை வழியை விட்டு விலகிவிடக் கூடாது என்பதற்காகவே.

மாதா அறியப்பட்டிருந்தால் இவ்வாறு நடை பெற்றிருக்கக் கூடும். ஏனென்றால் உந்ந்த சர்வேசுரன் மரியாயின் புறத்தோற்றத்தில் கூட வியக்கத்தக்க வசீகரத்தைக் கொடுத்திருந்தார். இது எவ்வளவு உண்மை! அர்ச். டெனிஸ் (St. Denis the Areopagite) என்பவர் கூறுகிறார், மரியாயைத் தாம் கண்ட போது, தன்னுடைய உறுதியான விசுவாசம் மாதா கடவுளல்ல என்று கூறியிராவிட்டால் அத்தாயின் மறைந்த வசீகரத்தாலும் ஒப்பற்ற அழகாலும் அவர்களை ஒரு தெய்வம் என்றே தாம் எண்ணியிருக்கக் கூடும் என்று ஆனால் சேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது மாதா பரிசுத்த ஆவியால் அறிவிக்கப் பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இது ஏனென்றால் மரியாயின் வழியாக சேசு கிறீஸ்து அறியவும் நேசிக்கவும் சேவிக்கவும் பட வேண்டுமென்றே. பரிசுத்த ஆவியானவர் தம் பத்தினியை வாழ்நாளின் போது மறைத்து, சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்ட நாள் முதல் அவ்வன்னையை சிறிது மட்டுமே வெளிப்படுத்தியதற்கு ஏதுவாயிருந்த காரணங்கள் இப்பொழுது இல்லையல்லவா?

50. எனவே சர்வேசுரன் தமது கைவேலையின் சிகர மான மரியாயை இப்பிந்திய காலங்களில் வெளிப்படுத்தி அறிவிக்க விருப்பம் கொண்டுள்ளார். ஏனென்றால்:

(1) தான் வெளியே தெரியப்படாதபடி சர்வேசுரனிடமிருந்தும் அவருடைய அப்போஸ்தலர்கள். சுவிசேஷகர்களிடமிருந்தும் மாதா சலுகை பெற்று, இவ்வுலகில் தன்னையே மறைத்து வாழ்ந்தார்கள். தனது ஆழ்ந்த தாழ்ச்சியின் காரணமாக தூசியிலும் கீழாக தன்னை மதித்தார்கள்.

(2) பூவுலகில் வரப்பிரசாதத்தாலும், பரலோகத்தில் மகிமையாலும் மாதா கடவுளின் கைவேலைகளின் சிகரமாக இருக்கிறார்கள். எனவே அதே மரியாயின் நிமித்தம் இப் பூவுலகில் சர்வேசுரன் மகிமைப்படவும் வாழ்த்தப்படவும் விரும்புகிறார்.

(3) நீதியின் சூரியனான சேசு கிறிஸ்துவை அறிவித்து அவருக்கு முன் செல்லும் உதய காலையாக மாதா இருக்கிறார்கள். எனவே சேசு கிறிஸ்து மனிதரால் கண்டு அறியப்படும்படியாக மாதா காணப்படவும் அறியப்படவும் வேண்டும்.

(4) மாதா வழியாகவே சேசு கிறீஸ்து முதல் முறை நம்மிடம் வந்தார். அதுபோலவே, அவர் இரண்டாம் முறையும் மாதா வழியாகவே நம்மிடம் வருவார். ஆனால் அதே விதத்திலல்ல,

(5) சேசுவிடம் நாம் செல்லும் நேரான பழுதற்ற பாதை - நிச்சயமான வழி - அவரை உத்தமமாய் அடையும் மார்க்கம் - மாமரியாயே. அது போலவே புனிதத் தன்மை யில் மலரும் ஆன்மாக்கள் மரியாயின் வழியாகவே சேசு வைக் கண்டடைவார்கள். யார் யார் மரியாயைக் கண்டடை கிறார்களோ அவர்கள் ஜீவியத்தைக் கண்டடைவார்கள். அதாவது வழியும் சத்தியமும் ஜீவனுமான சேசுவைக் கண்டடைவார்கள். ஆனால், தேடினாலல்லது மரியாயைக் காண முடியாது. நீ அறியாத ஒன்றை உன்னால் தேடமுடியாது. ஏனென்றால் அறியாத பொருளை யாரும் தேடவோ ஆசிக்கவோ மாட்டார்கள். ஆதலால் மகா பரிசுத்த தம் திரித்துவத்தின் மகிமைக்காக, முன் எப்போதை யும் விட இப்போது மாதா அதிகம் அறியப்பட வேண்டும்.

(6) மற்றெல்லாக் காலங்களையும் விட இப்பிந்திய காலங்களில் மாதா இரங்குவதிலும், வல்லமையிலும், அருள் வழங்குவதிலும் அதிகமாக விளங்கித் துலங்க வேண்டும். மனந்திருந்தி மீண்டும் திருச்சபைக்குத் திரும்பி வரவிருக்கும் பரிதாபத்துக்குரிய பாவிகளையும், அலைந்து திரிகிறவர்களையும் அன்புடன் ஏற்று திரும்பவும் அவர் களைக் கொண்டு வருவதற்காக மாதா இரக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும். தங்களை மறுத்துரைக்கும் எல்லோரை யும் வாக்குறுதி கொடுத்தோ அல்லது பயமுறுத்தியோ ஏமாற்றி மட்டந்தட்டுவதற்கென பயங்கரப் புரட்சி செய்யும் முகமதியர், பதிதர் கடினப்பட்ட பக்தியற்ற மனிதருக்கெதிராகவும் விக்கிரக ஆராதனைக்காரர் பிரிவினைக் காரர் முதலான கடவுளின் பகைவர்களுக்கெதிராகவும் மாதா வல்லமையில் சிறந்து விளங்க வேண் டும். இறுதியாக சேசு கிறிஸ்துவுக்காகப் போராடும் அவருடைய வீர போர்ச் சேவகரையும். உண்மையுள்ள ஊழியர்களையும் ஊக்குவித்து ஆதரிப்பதற்கென மாதா அருள் வழங்குவதில் சிறந்து விளங்க வேண்டும்.

(7) குறிப்பாக பிந்திய காலங்களில் மாதா சாத்தா னுக்கும் அவனைப் பின் செல்கிறவர்களுக்கும், போரில் அணி வகுத்து நிற்கும் சேனையைப் போல் பயங் கரமாயிருக்க வேண்டும். ஏனெனில் ஆன்மாக்களைக் கெடுக்க தனக்கு இனி நேரமில்லை - மிகக் கொஞ்சமே உள்ளது - என சாத்தான் அறிந்து ஒவ்வொரு நாளும் தன் முயற்சிகளையும் தாக்குதல்களையும் இரட்டிப்பாக்கு கிறான். சாத்தான் சீக்கிரமே குரூர கலாபனைகளை எழுப்பி விடுவான், மரியாயின் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களுக்கும் உண்மையான பிள்ளைகளுக்கும் மிகக் கொடிய கண்ணிகளை அவன் விரிப்பான். மற்றவர்களை விட இவர்களை மேற்கொள்வது சாத்தானுக்கு அதிக கடினமாயிருக்கும்.

51. அந்திக் கிறீஸ்துவின் ஆட்சி வரும் வரையிலும் சாத்தானுடைய கடைசி குரூர கலாபனைகள் தினமும் அதிகரித்து வரும். இதை மனதில் கொண்டுதான் சிங்கார வனத்தில் சர்வேசுரன் சாத்தானுக்கெதிராக உரைத்த முதலும் முதன்மையுமான தீர்க்கதரிசன வசனத்தையும் சாபத்தையும் நாம் நோக்க வேண்டும். அதை இங்கு விளக்கிக் கூறுவது பொருத்தமுடையது. கன்னி மரியாயின் மகிமைக்காகவும் அவர்களுடைய பிள்ளைகளின் இரட்சிப் புக்காகவும் சாத்தான் வெட்கித் தலைகுனியும்படியாகவும் அதை இங்கு கூறுவோம்:

''உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள். நீயோ அவள் குதிங்காலைத் தீண்ட முயல்வாய்' (ஆதி. 3:15)

52. சர்வேசுரன் ஒரே ஒரு பகையைத்தான் ஏற்படுத் தினார். இந்தப் பகை சமாதானத்துக்கு வரமுடியாதது. கடைசி முடிவு வரையிலும் இப்பகை நீடித்து வளர்ந்து கொண்டேயிருக்கும். சர்வேசுரனின் தகுதி பெற்ற தாயான மாதாவுக்கும் சாத்தானுக்குமிடையே - மரியாயின் பிள்ளை கள் ஊழியர்களுக்கும் லூஸிபரின் சந்ததியார், அவனைப் பின் செல்வோருக்குமிடையே ஏற்பட்டுள்ளது இந்தப் பகை. சாத்தானுக்கெதிராக சர்வேசுரன் ஏற்படுத்தியுள்ள மிகவும் அஞ்சத்தக்க எதிரி அவருடைய அன்னையான மரியாயே. சிங்காரத் தோப்பின் காலத்திலிருந்தே - அப் போது கன்னிமரி கடவுளின் சிந்தனையில் மட்டுமே இருந் தாலும் - பசாசின் எதிரியாக ஏற்படுத்தக்பட்டார்கள். சபிக் கப்பட்ட இச் சாத்தான் மீது சர்வேசுரன் மரியாயிக்கு எத்துணை பகையைக் கொடுத்துள்ளாரென்றால் - இப் பழைய பாம்பின் வஞ்சனைத் தந்திரங்களை வெளிப் படுத்த மாதாவுக்கு எத்துணை ஆற்றலை அளித்துள்ளா ரென்றால் - இந்த ஆங்கார புரட்சிக்காரனை மேற்கொள்ள வும், கீழே வீழ்த்தவும், நசுக்கவும் எத்துணை வலிமையைக் கொடுத்துள்ளாரென்றால் - இச் சாத்தான், எல்லா சம்ம னசுக்கள். மனிதர்களையும் விட மரியாயிக்கே அதிகமாக பயப்படுகிறான். இது மட்டுமல்ல, ஒரு வகையில் சர்வேசுரனை விடவும் அதிகமாய் அவர் அன்னைக்குப் பசாசு பயப்படுகிறது. இதனால் கடவுளின் கோபமும் பகையும் வல்லமையும் மரியாயினுடையதை விட அளவற்ற முறையில் உயர்ந்தவை என்ற உண்மை மாறிவிடவில்லை மரியன்னையின் சிறப்புக்கள் அளவுள்ளவையே. ஆனால் சர்வேசுரனைவிட மாதாவுக்கு சாத்தான் பயப்படுவது ஏனென்றால், முதலாவது, கடவுளின் ஒரு சிறிய எளிய ஊழியப் பெண்ணால், தான் வெற்றிகொள்ளப்பட்டு தண்டனையடைவது, அவனுடைய ஆங்காரத்தினிமித்தம், அளவற்ற வகையில் சாத்தானுக்கு அதிக துன்பமாகின்றது. மரியாயின் தாழ்ச்சி சர்வேசுரனின் வல்லமையைவிட சாத்தானை அதிகம் தாழ்ந்து தலைகுனிய வைக்கிறது. இரண்டாவது, கெட்ட அரூபிகள் மீது சர்வேசுரன் மாதா வுக்கு எவ்வளவு அதிகாரமளித்துள்ளாரெனில், ஒரு ஆன்மாவுக்காக அவர்கள் விடும் ஒரு பெருமூச்சு எல்லா அர்ச்சிஷ்டவர்களின் ஜெபங்களையும் விட மேலானதாயிருப்பதாகவும், மரியாயின் ஒரு கண்டிப்பு, பசாசுக்களின் எல்லா வேதனைகளையும் விட அதிகமானதாக இருப்பதாகவும், பசாசுக்களே தங்கள் விருப்பத்திற்கெதிராக பேய் பிடித்தவர்களின் வாய்மொழி மூலம் ஒப்புக்கொண்டுள்ளன.

53. லூஸிபேர் தன் ஆங்காரத்தால் இழந்ததை மாதா தன் தாழ்ச்சியினால் அடைந்தார்கள். ஏவாள் தன் கீழ்ப் படியாமையினால் இழந்து தொலைத்ததை மாதா தன் கீழ்ப் படிதலால் காப்பாற்றினார்கள், ஏவாள் பாம்பிற்கு கீழ்ப் படிந்ததனால் தன்னையும் தன் மக்களையும் இழந்து அவர்களை அந்தப் பாம் பின் அதிகாரத்துக்கு உட்படுத்தினாள். மாமரியோ இறைவனுக்குத் தன் உத்தம் பிரமாணிக்கத்தால், தன்னையும் தன் எல்லாப் பிள்ளைகளையும் ஊழியரையும் காப்பாற்றி சர்வேசுரனின் மகத்துவத்திற்கு அவர்களை வசீகரம் பண்ணினார்கள்.

54. சர்வேசுரன் ஏற்படுத்திய இந்தப் பகை மரியாயிக் கும் சாத்தானுக்கும் மட்டுமல்ல, மாதாவின் சந்ததியா ருக்கும் சாத்தானின் சந்ததியாருக்குமிடையிலும் மூட்டப் பட்டுள்ளது. அதாவது, மரியாயின் உண்மையான பிள்ளை களுக்கும் ஊழியர்களுக்கும், சாத்தானின் மக்களுக்கும் அவனுடைய அடிமைகளுக்கும் இடையே சர்வேசுரன் பகையையும் எதிர்ப்புக்களையும் வெறுப்பையும் வைத் துள்ளார். இவர்கள் மத்தியில் ஒருவர்க்கொருவர் அன்பு கிடையாது. இவர்களுக்குள் அந்தரங்க ஒற்றுமை கிடையாது. பெலியாவின் ( பசாசின்) மக்கள், சாத்தானின் அடிமைகள் - இவ்வுலகத்தை விரும்புகிறவர்கள் - இவர்கள் எல்லோரும் ஒன்றுதான். இவர்கள் கன்னிமரிக்குச் சொந்தமான எல்லாரையும் எப்போதும் துன்புறுத்தியே வந்திருக்கிறார்கள், இன்னும் முன்பை விட அதிகம் துன்புறுத்தவே செய்வார்கள். எதைப்போலவென்றால் முன்பு காயின் தன் சகோதரனான ஆபேலைத் துன்புறுத்தியது போலவும் . ஏசா தன் தம்பியான யாக்கோபைத் துன்பப் படுத்தியது போலவுமே. காயினும் ஏசாவும் தீர்ப்பிடப் பட்டவர்களின் அடையாளமாயிருக்கிறார்கள். ஆபேலும் யாக்கோபுவும் முன் குறிக்கப்பட்டவர்களின் அடையாளமா யிருக்கிறார்கள். ஆனால் இவ்எளிய கன்னிமாமரி , ஆங்காரப் பாம்பின் மேல் எப்போதும் வெற்றியே அடைவார்கள். எவ்வ ளவு சிறப்பான வெற்றி பெறுவார்களென்றால், இப்பாம்பினு டைய ஆங்காரத்தின் இருப்பிடமாகிய அதன் தலையையே நசுக்கிவிடுவார்கள். இப்பாம்பின் தந்திரங்களை மாமரி எப்போதும் வெளிப்படுத்திவிடுவார்கள். அதன் பாதாள சூழ்ச்சிகளை அம்பலமாக்கிவிடுவார்கள். அதன் பேய்த் தன்மையான ஆலோசனைகள் காற்றில் சிதறிப் போகும்படி செய்வார்கள். தன் உண்மையுள்ள ஊழியரைப் பசாசின் குரூர நகங்களிலிருந்து கால் முடிவு வரையிலும் காப்பாற்று வார்கள்.

ஆயினும் பிந்திய காலங்களில்தான் நரகத்தின் மீது மாதா கொள்ளும் அதிகாரம் அதிக சிறப்புடன் விளங்கும். அப்போது சாத்தான் கன்னிமரியாயின் குதிங்காலைத் தீண்டும்படி பதிவிருப்பான். அதாவது, மாமரியின் தாழ்மையான அடிமைகளையும் எளிய பிள்ளைகளையும் தீண்டும் படி மறைந்திருப்பான். அவர்கள் சாத்தானுக் கெதிராகப் போராடும்படி மாதாவால் தூண்டி எழுப்பப் படுவார்கள். உலகின் கண்களுக்கு அவர்கள் எல்லாரும் சிறியோராகவும் எளியவராகவும் தோன்றுவார்கள். குதிங் கால் உடலின் மற்ற அங்கங்களால் நடத்தப்படுவது போல் அவர்களும் எல்லார் பார்வையிலும் மிதிக்கப்பட்டவர் களும் துன்புறுத்தப்பட்டவர்களுமாயிருப்பார்கள். ஆனால் இதற்கு ஈடாக அவர்கள் மாதாவால் ஏராளமாய்ப் பொழி யப்படும் வரப்பிரசாதங்களால் செல்வந்தர்களாயிருப்பார் கள். சர்வேசுரனின் முன்னிலையில் அவர்கள் தங்கள் அர்ச்சிஷ்டதனத்தால் பெரியவர்களாயும் உயர்த்தப்பட்டவர்களா யுமிருப்பார்கள். அவர்களுடைய அன்பின் வேகத்தால் அவர்கள் எல்லா சிருஷ்டிகளுக்கும் மேம்பட்டிருப்பார்கள். தேவ உதவியால் அவர்கள் எவ்வளவு வலிமையுடன் தாங் கப் ப டு வார்க ளென் றால், ம ரி யா யி ன் ஐக்கியத்தில் அவர்கள் தங்கள் குதிங்காலின் தாழ்மை யினால் சாத்தானின் தலையை நசுக்கி சேசு கிறிஸ்துவுக்கு வெற்றி தேடித் தருவார்கள்.