பூம்பொழில் என்னும் இந்நூல் யான் ஏற்கெனவே எழுதி வெளியிட்டுள்ள பல சிறு நூல்களாலும், புதிதாகச் சேர்த்துள்ள சில கதைகளாலும் ஆனது. பூம்பொழில் என்ற பெயரை எனது நூலுக்கு முதலில் வழங்கியவர், காலஞ்சென்ற பண்டித M. P. மஸ்கரனாஸ் அவர்களே. நான் எழுதியுள்ள பல்வேறு தரப்பட்ட நூல்களுக்கு பல்வேறு பெரியார்கள் அழகிய பெயர்களை வழங்கியுள்ளன. அவர்களில் முக்கியமானவர்கள் தூத்துக்குடி மறை மாவட்ட முதல் ஆயர் காலஞ்சென்ற மே. த. ரோச் ஆண்டகை, மாத்திரைவிளை, கனம் B. J. R. அலெக்சாண்டர் அடிகளர்ர், வித்வான் ரா. லே, ஆரோக்கியம் பிள்ளை, வித்வான் G. பொனி பாஸ், தஞ்சாவூர் திரு. யா. சின்னசாமி B. A. B. T. ஆகியோரே.
நான் எழுதிய சிறு நூல்களைச் சேர்த்து பெரிய புத்தகமாக வெளியிடுதல் நீடிக்கும் நலன் விளைவிக்கும் என நண்பர் சிலர் பல ஆண்டுகளாக என்னிடம் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இவ்விதம் சொார்து வெளியிட்டதன் பயனாக சில பெரிய நூல்கள் வந்துள்ளன. அவற்றில் சில இப்பொழுது கைவசம் இருக்கின்றன. பல விலையாகி விட்டன.
இப்பொழுது வெளிவரும் பூம்பொழில் என்னும் நூல் எல்லோருக்கும் பெரிதும் பயன்படும் என்பது எனது துணிபு, குருக்கள், ஆசிரியர், ஆகியோருக்கு பயன்படக்கூடிய பொருளடக்கம் தரப்பட்டுள்ளது. இந்நூலை முதலிலிருந்து படிப்பதை விட, பொருளடக்கத் தைப் பார்த்து நமக்குத் தேவையான பகுதியைப் படித்தல் நலம். இந்நூலில் கட்டுரைகள் இருக்கின்றன, சிந்தனையூட்டும் வரலாறுகளும் உண்டு. பரலோக அன்னையின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. திருப்பலி, திவ்விய நன்மை, இவற்றால் நலனடையும் விதத்தை விவரிக்கும் கட்டுரைகளையும் வரலாறுகளையும் காணலாம்.
இந்நூலை மக்கள் வாங்கிப் படித்து மேலும் பல நூல்களைத் தயாரிக்க எனக்கு வாய்ப்பு அளிப்பார்களென்று நம்புகிறேன். குருக்கள், கன்னியர், சந்நியாசிகள், ஆசிரியர் ஆகியோரின் நூல் நிலையங்களுக்கு இந்நூல் இன்றியமையாத ஆபரணமாகும்.
இந்நூலை விரைவில் அச்சிட்டுத் தந்த யேசுவின் திரு இருதய சபை சகோதரர், சங், G. S. ஞானமணி அவர்களுக்கு எனது நன்றி.
J. M. நிக்கோலாஸ்.
புனித சார்லஸ் கோவில்,
தூத்துக்குடி 628003.