சகோதர அன்பு

நீங்கள் ஒருவர் ஒருவரை நேசித்தால், இதினால் நீங்கள் என் சீஷர் என்று எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். (அருளப். 13; 35.)

சேசுநாதசுவாமி பூலோகத்தில் எழுந்தருளி வந்தபோது பிறர் சினேகம் என்பது மனுஷருக்குள்ளே அறியப்படாத ஒரு புண்ணியமாயிருந்தது. ஒவ்வொருவனும் தன்னையே தேடுதலாகிய துர்க்குணம் ஆதாமின் பாவத்தினால் உலகத்திலே உண்டான கேடுகளுள் எல்லாம் விசேஷித்தது. ஒவ்வொரு மனுஷனும் தன் தன் நயத்திலும் சுகத்திலுமே எப்போதும் கண்ணாய் இருந்தமையால், சகல மனுஷரும் தன் சகோதரர் என்றதை முற்றாக மறந்து போயிருந்தான். ஒவ்வொருவனும் தன் அயலானை வேண்டியபோது வஞ்சகம், சூது, களவு, கொலை முதலிய பாதகங்களாலேயும் கெடுத்துத் தன் நயத்தை நிலை நிறுத்திக் கொண்டுவருவான். ஒருச னம் மற்றச் சனங்களை விரோதித்து ஒடுக்கித் துன்பப்படுத்திக்கொண்டிருக்கும். ஒரு சாதி மற்றச்சாதிகளைத் தனக்குக் கீழ்ப்படுத்திப் போடவும் கீழ்ப்படுத்தியவர், களை மிருகங்களைப்போற் பாவித்து வேலை கொள்ளவும் தலைப்படும். அயலார் தங்கள் அயலானைக் கெடுத்து விட்டும் தாங்களே வாழ்ந்துகொள்ளப் பிரயாசப்படும் வார்கள். இப்படியே, எங்கள் திவ்விய குருவாகிய யேசு நாதசுவாமியின் வருகைக்கு முன் ன. உலகம் முழு தும் பிறர் சினேகமில்லாமல் மெய்யான ஐக்கியமில்லாமல் பழம் பழிச் சர்ப்பமாகிய பிசாசின் ஆணைக்குட் கிடந்து பெருமூச்சு எறிந்து கொண்டிருந்தது.

செகமீட்பரானவர் இப்பூவுலகில் வந்து மனுக்குலத்தைப் பிசாசின் தாசிகத்தில் நின்று மீட்டபோது, ஆதியிலே சருவேசுரன் மனுஷருள் இருக்க வேண்டும் என்று சித்தமான சகோதர பாந்தவத்தை, அந்நியோந்நிய சினேகத்தையே தம்முடைய விசுவாசிகளுக்கு விசேஷ லட்சணம் ஆக்கினார். அன்று தொட்டுப் பொய்யனான சாத்தானின் வழிப்பட்ட உலகமானது சருவேசுரன் சகலருக்கும் பிதாவென்றதையும், சகலரும் சகோதரரென்றதையும் மறந்து தன்னுட் பிரிவுபட்டுக் கிடக்கின்றது. யேசுநாதசுவாமியின் மீட்பை அடைந்தவர்களோ, தாங்கள் ஒரே பிதாவின் மக்களென்றும், ஆதலால் சகோதரரென்றும் அவதானித்துக்கொண்டு, ஒருவரையொருவர் சினேகித்துத் தம்முள் ஒன்றித்திருக்க வேண்டுமென்று கர்த்தர் கற்பித்தார். இது தான் அவர்கள் தம்முடைய சீஷரென்றதற்கு அடையாளமும் என்றார். நீங்கள் ஒருவரையொருவர் சிநேகிப்பீர்களேயாகில் இதனால் நீங்கள் என்னுடைய சீஷ ரென்று எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள். ஆகையால் கிறீஸ்தவர்களுள் அந்நியோந்நியமாகிய பிறர் சிநேகம் இருப்பது இன்றியமையாத ஒரு அவசியம் என்பதற்குச் சந்தேகமே இல்லை. பிறர் சினேகத்தினாலே தானே தம்முடைய சீஷர்கள் அறியப்படவேண்டும் என்று யேசு நாதசுவாமி சித்தமானார்.

பிறர்சினேகம் உள்ளவர்களே கிறீஸ்தவர் கள், இல்லாதவர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் ருக்குப் பாத்திரவான்களல்ல. கிறீஸ்தவன் ஒரு வன் எவ்வளவு தருமங்களைச் செய்தாலும், வேதத் துக்காகச் சீவனை விட்டாலும், இன்னும் எவ்வளவு அரிய புண்ணியக் கிரியைகளை முடித்தாலும் அவனி டத்தில் பிறர் சிநேகம் இல்லா மற்போனால் அவைகள் ஒன்று மல்ல என்றது. அர்ச். சின்னப்பருடைய திரு வாசகமுமாம். (1 கொரி. 13) நமக்கு இவ்வளவு இன்றியமை யாத ஒரு புண்ணியத்தை அனுசரிக்கவேண்டிய விதத் தைக் குறித்து இந்தத் தபசு காலத்திலே தியானிப் பதைப் போல நன்மையான காரியம் வேறென்ன உண்டு? கிறீஸ்தவர்களே, இரட்சணியத்தை அடை வதற்குத் தேவசிநேகம் எவ்வளவு அவசியமோ, பிறர் சினேகமும் அவ்வளவு அவசியமென்று நீங்கள் சகல ரும் அறிவீர்கள். பத்துக்கற்பனை களும் இந்த இரண் டு சினேகத்திலேயும அடங்கும் என்று ஞானோப தேசத் திற் படித்திருக்கிறீர்கள். ஆயினும், பிறர்சினே கத்தை அனுசரிக்கும் விதத்தைப்பற்றிச் சில தப்பா ன எண்ணங்கள் அநேகர் மன திலே வேரூன்றியிருக் கின்றன. இத் தப்பெண்ணங்களை இன்றைக்குக் கழைந் து, உங்கள் மனங்களிலே பிறர் சினேகத்தின் மெய்யான சாயலை ஊன்றிவிடக்கூடுமானால் நான் எவ்வள .வோ பாக்கியசாலியாய் இருப்பேன்.

ஆகையால், தேவ உதவியை நம்பிக்கொண்டு, இப் போது இவ்விஷயத்தை இரண்டு பிரிவாக்கிப் பேசப் போகிறேன். முதலாம் பிரிவிலே, பிறர் சினேகத்தை அனுசரிப்பதற்குப் பல தருணங்களிலே தன து நயஞ் சுகங்களை வெறுத்து விடுவது அவசியம் என்று காண்போம். 2-ம் பிரிவி லே, பிறர் சினேகத்தை அனுசரிப்பதற்கு எப்போதும் பிறருடைய நயஞ் சுகங்களைக் கவனித்து நடப்பது கடமையாகும் என்று காண்போம். நான் சொல்லப் போகிறதெல்லாம் இந்த இரண்டு பிரிவிலுமே அடங் கும். பிரியமான கிறிஸ்தவர்களே! இவ்விஷ யம் மிக வும் முக்கியமான தும் உங்கள் இரட்சணியத்துக்கு அவசிய மான துமாய் இருக்கிறபடியால், உங்களால் இயன்ற சகல கவனத்தோடும் இப்பிரசங்கத்தைக் கேட்க வேணுமென்று உங்களைப் பிரார்த்திக்கிறேன்.