உழைப்பும் ஒறுப்புமில்லாமையால் விளையும் கேடுகள்

உழைப்பும், செலவொடுக்கமுமில்லாத குடும்பங்கள் ளுக்கெய்தும் நஷ்டம், வறுமை, கடன், நாணயவீனம், கலிபிலி, கவலை, துக்கம், இழிவு முதலியவைகளை வரைய றைவாய் விவரிப்பது அருமை. சுறுசுறுப்பற்ற சில ஆண்பிள்ளைகள் சாட்டுக்கு எட்டிலே பத்திலே மாத்திரம் வேலைசெய்து, மற்றப்படி ஒன்றிகளாயிருக்கையில் பெற் றோரைக் கொண்டும், சமுசாரிகளானபின் பெண்சாதி பி ள்ளைகளைக்கொண்டும் உழைப்பித்து வயிறு வளர்ப்பது எவ்வளவு இழிவும் துரோகமுமென்பதை அவர்கள் உ ணராதிருப்பது பெரும் ஆச்சரியம். இத்தன்மையான வர்களைப்பற்றி அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறதாவது: ''எப்படி எங்களைக் கண்டு பாவித்து நடக்கவேண்டுமென் று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு நடுவிலேஒழுங்கற்றவர்களாயிருந்ததில்லை. ஒருவனிடத்தி . லும் இலவசமாய்ச் சாப்பிடாமலும் உங்களில் ஒருவனுக் கும் பாரமாயிராதபடிக்கும் இரவும் பகலும் பிரயாசத் தோடு வேலை செய்து சாப்பிட்டோம். உங்கள்மேற் பா ரத்தை வைப்பதற்கான அதிகாரமெங்களுக் கில்லையென் பதினா லப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற் றும்படிக்கு உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென் றே அப்படிச் செய்தோம். ஒருவன் வேலை செய்ய மன மில்லாதிருந்தால் அவன் சாப்பிடவுங்கூடாதென்று உங் களிடத்தி லிருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட் டோம். அப்படியிருந்தும் உங்களிற் சிலர் யாதொரு வேலையுஞ் செய்யாமல் ஒழுங்கற்றவர்களாய்த் திரிகிறார் களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் மெளனத்தோடு வேலை செய்து தங்கள் சொந்தப்போச னத்தைச் சாப்பட வேண்டுமென்று நம்முடைய ஆண் டவராகிய யேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்கள் ளுக்குக் கட்டளையிடுகிறோம் ” (தெசலோனிக்கர் 3.7-12) 11 உழைக்கவும் கட்டுமட்டாய்ச் செலவழிக்கவும் ப ழகாத வாலிபர் விவாகம்பண்ணுங் காலம் வரும்போது தேசவழமைப்படி பெண்பிள்ளைக்குக் கொடுக்கவேண் டிய தாலிகூறைக்கும் சடங்குச் செலவுக்கும் ஏதில்லா மல் ஒன்றிற் கடன்படுவார்கள், அல்லது கூடுமானால் பெண்பிள்ளையின் பெற்றோரே இவையாவுக்கும் வழி பண்ணும்படி கேட்பார்கள். அதுவும் வாய்க்காவிடில் இனியாகுதல் உழைத்துத் தாலிகூறை தேடி முடிக்க லாமென்று சடங்கை நெடுகிலும் பின்போடுவார்கள், அல்லது காற்காசுபெறாத ஒரு மோதிரத்தோடு காரியத் தை ஒப்பேற்றுவார்கள். உள்ளபடி யாதொன்றுக்கும் வழியில்லாத ஏழைகள் அல்லது பிரயாசப்பட்டுழைத்து வறிய தாய் தந்தை சகோதரங்களைத் தாபரிக்கிறவர்கள் இப்படிச் செய்வதிற் பழுதில்லை. ஆனால், உழையாமல் ஊதாரித்தனமாய்த் திரிகிறவர்கள் இப்படிச் செய்வது யோக்கியமல்ல. வேறு சிலர் கலியாணம் முடித்தபின் பெண்பிள்ளையின் சீதனத்தில் ஒருபகுதியை விற்று அல் லது ஈடுவைத்துக் கடனைத் தீர்க்குங் கருத்தோடு கலி யாணச் செலவுக்காகக் கடன்படுவார்கள். இது எவ்வ ளவு எளிய செய்கையென்பதை விளக்கவேண்டியதில்லை. இதனால் பிறகு குடும்பத்திற் பெருஞ்சோலிசுறட்டு நே ரிடுவதும் அபூர்வமல்ல. வேறுசிலர் தாங்களொன்றிக ளாயிருக்கும்போது உழைத்துத் தங்கள் சகோதரிகளை வாழ்க்கைப்படுத்துவதற்குப் பதிலாய் முதல் தாங்கள் மணம்புரிந்து பின்பு மனைவியின் சீதனத்தை ஈடுவைத் து அல்லது கொஞ்சங்கொஞ்சமாய்க் கவர்ந்து அவர்களை விவாகம் முடித்துவைக்கப் பார்ப்பார்கள். இது நீதியுமல் லக் கெட்டித்தனமுமல்ல. இதனாற் குடும்பத்திற் பற்பல நெரிசல் உண்டாகவும் "' அவதந்தரம் தனக்கந்தரம்'' என் றவாறாய் முடியவும் நேரிடுகின்றது. இத்தன்மையான வர்களுக்கு முதுசொமாயுள்ளவை எவையெனில் கடன், குடிவெறி, சூது, சோரத்தனம், துர்நடையாலுண்டுபட் ட தீராநோய், சோம்பித்திரிதல், கோள் மூட்டுதல், சண் டைபிடித்தல் முதலிய துர்ப்பழக்கங்களேயாம்.

முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த யூதாஸ்கரியோத் துக் கொப்பான சில கணவர் செய்யும் வேறோர் பெருந் துரோகம் யாதெனில், விவாகஞ்செய்த சில காலத்துக்குப் பின் மனைவிக்கு வருத்தம் அல்லது பிரசவகாலம் வரும் போது அல்லது புத்திரபாக்கியமில்லாமற் போம்போது அவளுக்கு நேசங்காட்டி ஆசைவார்த்தை சொல்லி அ வளை அணாப்பி அல்லது பயமுறுத்தி அவளுடைய சீத னத்தை இரகசியமாகத் தங்கள் பேரில் எழுதுவித்துக் கொள்ளுவார்கள். அதில் முற்றாய் அனுகூலமடையா விடில் அவளைக்கடனுறுதிக்குக் கையெழுத்துவைக்கப் பண்ணி, அல்லது அவள் பிள்ளைகளில்லாமல் மரிக்கநே. ரிட்டால், கள்ளக்கணக்குக்காட்டி அவளுடைய சீதனத் தில் அபகரிக்கக்கூடியளவு அபகரிக்கப் பார்க்கிறார்கள். கே. அதெல்லாம் எவ்வளவு ஈன மான செய்கையென்ப தை அவர்களுடைய மனச்சாட்சிதானே அவர்களுக் குச் சொல்லும். இவ்வித அபகடங்கள் செய்து தேவ துரோகிகளாவதற்குப் பதிலாக இவர்கள் பிரயாசப்பட் டுழைத்துச் சம்பாதிப்பார்களானால் எவ்வளவோ நன் மையாயிருக்குமே.

பெற்றோரானவர்கள் உள்ளதையும் விருத்தியாக்கி இன்னும் உழைத்து மிச்சமும் பிடித்துப் பிள்ளைகளை நன் னிலையில் வைக்கவேண்டியது. ஆயினும், சிலர் மனைவி யின் சீதனத்தைக்கொண்டு தாங்களும் பிள்ளைகளும் நெடுங்காலஞ் சீவித்தபின் மிஞ்சியதை மாத்திரம் நாலு ஆறு பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக்கொடுப்பார்கள். அப் போது பிள்ளைகளின் நிலைவரம் எவ்வளவு குறைந்ததா யிருக்குமென்று விளக்கவேண்டியதில்லை. சற்று நிலை வரமுள்ள சில குடும்பங்களில் பெற்றோரும் பிள்ளைகள் ளும் பிற்காலத்தை நினையாமல் ஒறுப்பனவின்றிச் சம் பிரமமாய்ச் சாப்படுவதிலும் குடிப்பதிலும் விலையுயர்ந்த விதம்விதமான வஸ்திரங்களை அணிவதிலும் நானாவித சந்தோஷங்களிலும் கொண்டாட்டங்களிலும் உள்ளதை யும் உழைப்பதையுஞ் செலவழிப்பதினால் பின்னடியில் பிள்ளைகள் வெறுஞ் சோறு சீலைக்குமுதலாய்த் தட்டுக் கெட்டுத் திரிய நேரிடுகின்றது.

''அகடுறயார்மாட்டும் நில்லாது செல்வஞ்
சகடக்கால் போலவரும் ''

அதாவது, செல்வமானது யாவரிடத்தும் நிலையாமல்" வண்டிச்சில்லுப்போல 'கீழ்மேலாய் மேல்கீழாய்வரும்.

'' குடைநிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் பல
நடைமெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்''

குடைபிடித்து யானை மேலேறிப் பவனிபோகுஞ் செல் வரும் வறுமைப்பட்டு ஊருக்கூர் கால்நடையாய் நடந்து" மெலிந்து உலைய வரினும் வரும்.

சிறப்புஞ் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச்சாலை அடையினும் அடைகுவர்.''

அதாவது சீர்செல்வமும் பெருமையுமுடையவர்கள் த ரித்திரப்பட்டுத் தருமக்கூழ் வார்க்கும் இடங்களில் அ" டைக்கலம் புக நேரிடினும் நேரிடும். எங்கே பார்த்தா லும் முன் முட்டுப்பட்டிருந்த சிலர் பிரயாசப்பட் டுழைத் துக் கட்டுமட்டாய்ச் செலவழித்துப் பணம்பண்டமுடை. யவர்களாய் வர, அவர்கள் சந்ததியார் அதற்கு மாறாக வேலையை வெறுத்து ஆராதூரியாய்ச் செலவழித்துக் குசாலாயும் இடம்பமாயுஞ் சீவிக்கத் தலைப்பட்டதினால் உள்ளதையெல்லாம் வெகு சீக்கிரத்தில் இழந்து வறிஞராகிறார்கள். நெடுங்காலம்மட்டாய்ச்செலவிட்டுச் சீவிக் கிறவர்களைப்பார்க்கிலும் இவர்களே வறுமையை அதிகம் ஆழமாய் உணருவார்கள். இவர்கள் பெருநாட்கள் திருநாட்களில் முன்னே தின்றதையுங் குடித்ததையும் உடுத்ததையும் நினைத்து வாயூறித் துக்கிப்பார்களேயன் றி, முன்னேயாகுதல் வேறனேகருக் கொருபோதுங் கி டையாத செல்வத்தை அனுபவித்தோம், இப்பொழுது எங்கள் பாவங்களுக்காகச் சற்று வறுமையை மனச்சந் தோஷத்தோடு அனுபவிப்போமாகவென்று யோபென் னும் மகாத்துமாவைப்போலச் சொல்லச் சம்மதிப்பார் களா? உலகவழக்கம் அப்படியல்ல. உழைப்பதையெல்" லாஞ் செலவழிப்பதிலுள்ள ஊ தியமென்ன? கிடைத. லை காலத்துக்கு அடைமானமென்ன?