இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா நம் நற்செயல்களை தூய்மைப்படுத்தி அவற்றை அழகுபடுத்தி தன் திருக்குமாரனுக்கு ஏற்பு டையதாகச் செய்கிறார்கள்.

146. இப்பக்தி முயற்சியினால் நம்முடைய எல்லா நற்செயல்களையும் மரியாயின் கரங்கள் வழியாக நம தாண்டவருக்கு நாம் கொடுத்துவிடுவதால் இவ்வன் புத்தலைவி அவற்றைத் தூய்மைப் படுத்தி அழகுபடுத்தி தன் திருக்குமாரனுக்கு அவை ஏற்புடையனவாவகச் செய்கிறார்கள்.

[a] அவற்றை எல்லா சுய நலக் கறைகளிலுமிருந்து சுத்தமாக்குகிறார்கள். நம்முடைய மிக நல்ல செயல் களில் கூட நம்மை அறியாமலே புகுந்து விடுகிற சிருஷ் டிகளின் சார்பிலிருந்தும் தூய்மைப் படுத்துகிறார்கள். மாமரி அன்னையின் கரங்கள் ஒருபோதும் கறைபட்ட தில்லை. அவை ஓருபோதும் ஓய்ந்திருந்ததில்லை. அக் கரங்கள் தொட்ட யாவும் தூய்மைப்படுகின்றன. நம் முடை நற்செயல்கள அவர்களுக்கு காணிக்கையாக்கப் பட்டு அவர்களுடைய மிகப் புனிதமான வளமுள்ள கரங்களில் சேர்ந்த உடனேயே அவற்றிலுள்ள எல்லாக் கறையையும் குறைபாட்டையும் அக்கரங்கள் நீக்கி விடுகின்றன.

147. [b] அவற்றைத் தன்னுடைய பேறு பலன் களாலும் புண்ணியங்களாலும் மாதா அழகுப்படுத்தி அலங்கரிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், பாமரன் ஒருவன் ஒரு அரசனுடைய நட்பையும் நல் லெண்ணத்தையும் பெற விரும்பி, ஒரு ஆப்பிள் கனியை அரசனுக்கு அளிக்குமாறு அரசியிடம் சென்று கொடுக் கிறான். இக்கனிதான் அவனால் கொடுக்க முடிந்த பொருள். அப்பாமரனின் சிறு பரிசை வாங்கிய அரசி அக்கனியை ஒரு பெரிய அழகிய தங்கத் தட்டில் வைத்து, அம்மனிதனின் சார்பில் அரசனுக்கு அளிக் கிறாள். இந்த ஆப்பிள் கனி தன்னிலே அரசனுக்குக் கொடுக்கப்படத் தகுதியற்றதாயினும், அக்கனி வைக் கப்பட்டிருக்கும் தங்கத் தட்டினிமித்தமும் அதைக் கொடுக்கும் ஆளின் நிமித்தமும் அரசனுக்குத் தகுதி யுடைய பரிசாக அது ஆகிறது.

148. [c] மாதா நம் நற்செயல்களை சேசு கிறீஸ்து விடமே சமர்ப்பிக்கிறார்கள். அவர்களிடம் கொடுக்கப் படுகிற அனைத்தையும், தானே இறுதிக்கதி என்றாற் போல் தன்னிடம் வைத்துக் கொள்வதில்லை. யாவற் றையும் மிகப் பிரமாணிக்கத்தோடு சேசுவிடம் சேர்த்து விடுகிறார்கள். மரியாயிடம் நாம் கொடுத்தால் சேசு விடமே கொடுக்கிறோம். நாம் அவர்களை வாழ்த்திப் புகழ்ந்தால் உடனே அவர்கள் சேசுவை வாழ்த்திப் புகழ்கிறார்கள். முன்பு எலிசபெத்தம்மாள் மாதாவை வாழ்த்தியபோது நடந்தது போலவே இப்பொழுது நாம் மரியாயை வாழ்த்தித் துதிக்கும்போது அவர்கள் என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது எனப்பாடுகிறார்கள். (லூக். 1, 46]

149. [d] அர்ச்சிஷ்டவர்களுக்கு மேலான அர்ச் சிஷ்டவரும் அரசர்க்கு அரசருமான சேசுவுக்கு நம் செயல்கள் எவ்வளவு வறிய, உதவாத காணிக்கையாக இருந்த போதிலும் அவர் அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு மாதா அவரைத் தூண்டுகிறார்கள். தம்முடைய பேறு பலன்கள், தகுதிகள் இவற்றை நம்பிக் கொண்டு நாமே நம் மூப்பாக எதையாவது சேசுவுக்குக் கொடுக்கும் போது அவர் அதை சோதித் துப்பார்க்கிறார். யூதர்களின் பலிகள் அவர்களுடைய சுய விருப்பத்தால் நிரம்பியிருந்ததற்காக அவற்றை முன்பு அவர் தள்ளிவிட்டது போல், நம் காணிக்கை யிலும் காணப்படுகிற சுயநலக் கறைகளைக் கண்டு அதை அடிக்கடி ஓதுக்கி விடுகிறார். ஆனால் அவரால் நேசிக்கப்படுகிற மாதாவின் கன்னிக் கரங்கள் வழியாக நாம் சேசுவுக்கு எதையாவது காணிக்கை செய்யும்போது நாம் அவரை வீழ்த்தக்கூடிய இடத்தில் - இவ்வாறு கூறுவது சரியாக இருக்குமானால் - பிடித்துக்கொள்கிறோம். அவர் காணிக்கையை அல்ல, அதை அளிக்கிற இனிய தாயையே அதிகமாகக் கவனிக்கிறார். அது எங்கிருந்து வருகிறது என்பதை விட யார் வழியாக வருகிறது என்றுதான் அவர் பார்க்கிறார். இவ்வாறு மாதா ஒரு போதும் தன் திரு மகனால் மறுக்கப்படுவதில்லை. எப் பொழுதும் தன் குமாரனால் நன்கு ஏற்றுக்கொள்ளப் படுகிறார்கள். தான் அவருக்குக் கொடுக்கும் எதையும் அது பெரிதோ சிறிதோ அவர் நன்றாக ஏற்றுக் கொள்ளும்படி தூண்டுகிறார்கள். சேசு எதையாவது பெற்றுக் கொள்ளவோ ஒப்புக் கொள்ளவோ வேண்டு மானால் அதை மாதா எடுத்து அளித்தால் போதும். அர்ச். பெர்னார்ட் உத்தம தனத்துக்கு வழி நடத்திய வர்களிடம் கூறி வந்த நல்ல ஆலோசனை இது: "நீ கடவுளுக்கு எதையாவது கொடுக்க விரும்பினால் அதை மாதாவின், மிகவிருப்பமும் தகுதியும் பெற்ற கரங்கள் வழியாகக் கொடுக்கக் கவனமாயிரு. அது மறுக்கப்பட வேண்டும் என்று நீ விரும்பினால் (அவ்வாறு கொடுக்க வேண்டாம்)”

150. இவ்வுலகத்தில் சிறியவர்கள் பெரியவர்களு டன் உறவு கொள்வதில் இங்கு கூறப்படும் இம் முறையைப் பின்பற்றும்படியே இயற்கையும் தூண் டுகிறதல்லவா? இதை நாம் முன்பு பார்த்தோம்: (எண் 147). இதையே சர்வேசுரனைப் பொறுத்தவரை யிலும் நாம் கடைபிடிக்குமாறு வரப்பிரசாதம் நம் மைத் தூண்டாமலென்ன? இறைவன் நம்மை விட அளவில்லாத அளவு உயர்ந்தவராயிருக்கிறார்; அவர் 4 முன்னிலையில் நாம் அணுவிலும் சிறியவர்களாயிருக் கிறோம். அதிலும் வல்லமையுள்ள பரிந்து பேசுகிற ப மாமரி அன்னை நமக்கு இருக்கும் போது இம்முறையை கை நாம் செயல்படுத்தலாம். மாதா எவ்வளவு வல்லமை மல் யுள்ளவர்களென்றால் அவர்களுக்கு ஒரு போதும் கடவுள் மறுப்புச் சொல்வதில்லை. மாதா எவ்வளவு கருத் துள்ளவர்களென்றால் கடவுளின் இருதயத்தைக் கைக் கொள்ளத் தேவையான எல்லா இரகசியங்களையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். மாதா எவ்வளவு அன்பு டையவர்களென்றால், யாரையும் - அவர்கள் எவ்வளவு சிறியவராயினும் எவ்வளவு தீயோராயினும் - அவர்களைத் தள்ளி விடுவதில்லை.

இந்த உண்மைகளின் நேரடி உருவங்களை யாக்கோபு ரபெக்காள் சரித்திரத்தைப் பற்றிப் பேசும்போது நான் குறிப்பிடுவேன். (அத்தியாயம் 6.)