இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞான யுத்தம் - முகவுரை

ஞான யுத்தம்


சங். ச. சூ. சாந்தப்ப சுவாமிகளால் மொழிபெயர்க்கப்பட்டு, சங். சி. ஞானப்பிரகாச சுவாமி அவர்களால் பார்வையிடப்பட்டது

திருத்தியமைக்கப்பட்ட 5-ம் பதிப்பு
1952
Cath. Mission
Press, Pondicherry
புதுவை, மாதாக்கோயில் அச்சுக்கூடம்

Imprimatur :
† A. S. COLAS,
Archiepiscopus Puducherii
19 Martii 1952


அனுமதி
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட "ஞான யுத்தம்? என்னும் புத்தகத்தைக் கவனமாய்ப் பார்வையிட்டேன். இது சரியான மொழிபெயர்ப்பென்பதிற் சந்தேகமில்லை. இந்த உத்தமப் புத்தகத்தை மூல பாஷையில் அர்ச். பிராஞ் சீஸ்கு சலேசியார் தாமே 2கழ்ந்து பேசின பிறகு, வேறு விதமான புகழ்ச்சி இதற்கு அவசரமில்லை. இதனால் இத் தேசத்திலும் எந்த அந்தஸ்தினரும் அநேகாநேக ஞானம் பிரயோசனங்கள் அடைவார்கள்.

1893 - ஹி ஜனவரி மீ 21-ம் வ.
S. ALOYSIUS

இந்நூல் மறுபடியும் 1952-ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டது.

ஞான யுத்தமென்னும் புத்தகத்தின் கனாகனத்தைக் கண் டறிவதற்கு, அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார் எழுதிய கடிதங்களை வாசிப்பது போதுமானது. இப்புத்தகத்தை, அவர் தமது ஏக புத்தகம், நேச புத்தகமென்பார். ஒரு சமயத்தில், (Le Camus) லேகாமுஸ் என்னும் மேற்றிராணியார், அவரை நோக்கி : உமது ஆத்தும் குரு யாரென்று கேட்டதற்கு, அவர் உடனே ஞான யுத்தமென்னும் இப்புத்தகத்தை எடுத்துக் காட்டி : ''இதே என் ஆத்தும் குரு ; இளம் பிராயத் தொடங்கி எனக்கு ஞான வழி காட்டி என் பக்திக் கிருத்தியங்களில் உபாத்தியாயராயிருப்பது இதுவே. பதுவைப் பட் டணத்தில் நான் படித்து வந்த காலத்தில், தேயாத்தின் சபைக் குருக் களில் ஒருவர் இதை எனக்குக் காட்டித் தந்தார்'' என்றார். பேரோங் கிய அச்சபைக் குருக்களில் ஒருவர் இதை இயற்றினாரென்பதற்கு, அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார் கூறும் சான்று இதுவே.

அந்தக் குருவானவர் (Scu)oli) ஸ்குப் போலி யென்னுஞ் சுவாமியாரே. அவர் 80 பிராயம் வரையில் சீவித்து 1610-ம் ரூ நவம்பர் மீன் 28-ம் உ நெயாப்பொலி பட்டணத்தில் அர்ச்சியசிஷ்ட ராய்க் காலஞ் சென்றார். அப்பட்டணத்து தேயாத்தின் சபை மடத் துக்கு, அர்ச். அவெல்லினோ பெலவேந்திரர் சிரேஷ்டராய் இருந்த காலத்தில், 1571-ம் – ஜனவரி மீ 26 - இவர் சந்நியாச வார்த் தைப்பாடு கொடுத்தார். பிறகு பிளேசாஞ்சு , மிலான், ஜெனோவா, வெ னீஸ், நேப்பிள்ஸ் பட்டணங்களில் வாசஞ் செய்தார். எப்போதும் அந்தரங்க யோகியாய்ச் சீவித்து, மனத் தரித்திரத்தைச் சம்பூரண மாய் அநுசரிப்பார். இவர் ஞான ஒடுக்கப் பிரசங்கஞ் செய்துவந்த காலங்களில், ஒரு ஸ்திரீ இவர்பேரில் சொல்லிய அவதூறை, அமை தியுடன் சகித்ததுமன்றித் தனக்கு இக்குறைவான சொற்களை வர விட்ட தெய்வ சித்தத்திற்கு அமைந்து, அடங்கி , ஆராதனை செய்து வருவார். இதற்குப் பிற்பாடு வெனீஸ் நகரத்திற்குச் சென்று ஞான யுத்தமென்னும் இப்புத்தகத்தை இயற்றினார். இது 1589-u அம் . மாநகரத்தில் முதற் பதிப்பாய்ப் பிரசுரமானது.

இதை அருளிச் செய்தவர் மரணமடைவதற்கு முன்னதாகவே, ஏறக்குறைய 50 பதிப்புகள் பிரசுரமாயின. முதற் பதிப்பில் 24 அதிகாரங்கள் மட்டும் இருந்தன. இதை இயற்றினவரே, நாளாவட் டத்தில் பல அதிகாரங்களைச் சேர்த்துத் தந்தார். முதற் பதிப்பின் பாயிரத்தில் இதை சேசுகிறீஸ்துநாதருக்குப் பாதகாணிக்கையாய் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

ஞான யுந்தமென்னும் இப்புத்தகத்தை, 15 வருஷகாலமாய்த் தமது கைத்துணைப் புத்தமாக வைத்திருந்த அர்ச். பிராஞ்சீஸ்கு சலே சியார் இதை வாசிக்கும்போதெல்லாம் புதிதான புத்திமதிகளைக் கண் டுணர்ந்ததாக எழுதியிருக்கிறார். அவரைப்போல் நாமும் இப்புத்தகத் தை அடிக்கடி வாசிப்பது நலம். அவர் சொல்வது போல், இதில் குறிக் கப்பட்டிருப்பதெல்லாம், அனுசரிக்கத்தக்க ஒழுக்கமாகும். யாவருக் கும் மெய்யான பத்தி, மெய்யான சாங்கோபாங்கத்தைக் கற்பிப்ப தற்கு முதல் அதிகாரம் ஒன்றே போதுமானது. இப்புத்தகத்தி லுள்ள புத்திமதிப் பிரகாரம் நடப்போமானால், மேலான சாங்கோ பாங்கத்தைத் தப்பாமல் அடைவோம்.

இச்சிறு புத்தகத்தைப்பற்றி இன்னும் என்ன சொல்லுவேன் ? சில புத்தகங்களின் பேரே அவைகளின் புகழென்றால், ஞான யுத்த மென்னும் புத்தகம் அவைகளிலொன்றாகும். அந்தரங்க சீவியத்தை அடுத்தவை யாவும் இதில் சுருக்கமாய்க் குறிக்கப்பட்டிருக்கின்றன. சுவிசேஷக ஆலோசனைகள் யாவும் விசேஷமாய்த் தன்னை நிந்தித் துப் பாத்தியாகஞ் செய்யும் முறையும் இதில் அடங்கியிருக்கிறது.

இதை வாசித்துப் பலன் அடையாமற்போவது கூடாத காரியம். தக்க விதமாய் வாசிப்பவனெவனுஞ் சொற்ப காலத்தில் சிருஷ்டியை வெறுத்து, சிருஷ்டிகரோடு ஒன்றித்து மெய்யான புண்ணியவானா வான். இதைக் கவனமாய் வாசித்ததினால் புண்ணியவான்கள் ஆனவர்கள் அநந்தம் பேர். அவர்களில் ஒருவர், மேற்குறித்துக்காட்டிய அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார். ஞான யுத்தமென்னும் இப்புத்தாத தின் மட்டில் அவருக்கு உண்டாயிருந்த எண்ணமுந் தாற்பரியமும் ஏதென்றால் : " இது கிறிஸ்துநாதர் அநுசாரம் என்னும் புத்தகத் திற்குச் சரியொத்தது; பல விஷயங்களில் அதற்கும் மோலா ள ; இவ்விரண்டு புத்தகங்களையும் அருளிச் செய்தவர்கள் உலகத்து வெறுத்துச் சர்வேசுரனை நாடக் கற்பித்தாலும்,

அவர்கள் போதிக் கும் நடை வித்தியாசமானது. கிறீஸ்துநாதர் அநுசாரத்தில் சுவிசே ஷக ஆலோசனைகளிற் பல ஒன்றாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன; பல சமயங்களில் அவைகள் ஒன்றுக்கொன்று ஒத்தவைகளாய்க் காணப்படவில்லை ; ஞான யுத்தமென்னும் புத்தகம், பல ஞானப் போதனைகளையுந் தொடர்ச்சியாய், ஆழ்ந்த கருத்துகளில் எடுத்து உரைக்கின்றது" என்று எழுதியிருக்கிறார். அவர் இப்புத்தகத் தில், சில அதிகாரங்களையாகிலும், சில பக்கங்களை என்கிலும் நாள் தோறும் வாசித்து வருவார். இன்னுஞ் சொல்லவேண்டுமானால், இப்புத்தகத்திலுள்ள ஆழ்ந்த கருத்துக்களைச் சிந்தித்து இவைகளின் புத்திமதிப் பிரகாரம் நடந்தே, அவர் தமது ஆசை ஊக்கங்களின் வேகத்தை அடக்கி வந்தார்.

இப்புத்தகத்தை வாசித்து, இதன் மேன்மையை கண்டுணராத வர்களுமில்லை; இதை ஒரு முறை வாசித்து மறுமுறை வாசிக்கப் பிரியப்படாதவர்களுமில்லை. ஆன தால் ஞான யுத்தமென்னும் புத்த கம் கிறீஸ்துநாதர் அநுசாரமென்னும் புத்தகத்தைப் போல எக் காலத்துக்கும் ஞான வாசகப் புத்தகமாயிருக்கும். இதனால் பாவிகள் மனந்திரும்புவார்கள்; புண்ணியவான்கள் நாளுக்குநாள் புண்ணியத் திலே விருத்தித்துச் சாங்கோபாங்கப் பர்வதத்தின் உச்சியை எட்டிப்பிடிப்பார்களென்பது ஞான யோகிகளுடைய சித்தாந்தம்.

கிறீஸ்துநாதர் அநுசாரமென்னும் புத்தகத்தைப் போல, ஞான யுத்தமென்னும் புத்தகமும் பல பாஷைகளில் பிரசுரமாயிருக்கிறது. பிராஞ்சுப் பாஷையில் பல பேர் பற்பல முறையாய் இதைப் வெளி யிட்டிருக்கிறார்கள். தமிழ்ப் பாஷையில் இதைப் பிரசுரிப்பதற்கு நான் உதவிக்கொண்டது, சேசு சபைக் குருவாகிய (Brignon) பிரிஞ்ஞோன் சுவாமியார் 1688-ம் வருஷத்தில் பிரசுரஞ் செய்த புத்தகம்.

இவர் இதை மூலபாஷையிலிருந்து மொழிபெயர்த்தபோது ஆசிரியருடைய வார்த்தை , வசனங்களைக் கவனியாமல் பொருளை மாத்திரம் பிறப்பித்திருப்பதால், நான் இவருடைய நூலை என்னால் இயன்ற மட்டும் மொழிபெயர்த்துத் தந்திருக்கின்றேன்.

இந்நூலை அருளிச்செய்தவரே, 44, 45, 46, 47, 50, 51, 52-ம் அதிகாரங்களில் தியானஞ் செய்யவேண்டிய முறையையும் விவரித்துத் தந்திருக்கின்றார். என்றாலும், அவர் கற்பித்த உத்தம மான முறையைக் கண்டறிந்து பிரயோசனமடைய ஆசிப்பவர்க ளுக்கு உதவியாக, அர்ச். இஞ்ஞாசியார் அருளிச்செய்த தியான முறையைச் சேர்த்திருக்கின்றேன்.

அன்றியும் நாள்தோறுந் தேவநற்கருணை ஆராதனை செய்து வருகிறவர்களுக்கு உதவியாக , (J.Bergen) போழேஸ் சுவாமியார் இயற்றிய தேவநற்கருணைச் சந்திப்பு முறையையும், இந்த முறைப் படிச் செய்யப்பட்டிருக்கிற சந்திப்பு ஒன்றை து கடைசியில் தந்திருக்கிறேன்.

S. J. C.
4 Juillet 1892.