இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சி பெரிய அந்தரங்க விடுதலையளிக்கிறது

169. இந்தப் பக்தி முயற்சி அதை உண்மையாகக் கைக் கொள்கிறவர்களுக்குப் பெரிய அந்தரங்க விடுதலை யளிக்கிறது - கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலை (ரோ 8, 21). இதன் காரணம் என்னவென்றால், இதனால் நாம் நம்மை முழுவதும் சேசு கிறீஸ்துவுக்கு அர்ப்பணித்து அவருடைய அடிமைகளாகி அன்பின் அடிமைத்தனத்தை நம்மீது ஏற்றுக் கொண்டதற்காக இந்நல்ல எஜமான்:

(1) நம் ஆன்மாவை ஒடுக்கி சிறையிட்டு கலங்கடிக் கும் சந்தேக குழப்பங்களிலிருந்தும் அடிமைத்தனமுள்ள அச்சத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறார்.

(2) நம்முடைய இருதயத்தைக் கடவுள் மீது கொள் ளும் பரிசுத்த நம்பிக்கையால் விசாலமுடையதாக்கி அவரை நம் தந்தை என்று காணச் செய்கிறார்.

(3) நம் ஆன்மாவில் கனிந்த பிள்ளைக்குரிய அன்பை தென்றலென மூட்டுகிறார்.

170. இந்த உண்மைகளை நான் காரணங்கள் கூறி நிரூபிக்கப் போவதில்லை. ஒரு சம்பவத்தைக் கூறியே நிறுத்திக் கொள்கிறேன். சேசுவின் ஆக்னஸ் என்ற தாயாரு டைய வாழ்க்கை வரலாற்றில் அதை நான் படித்தேன். இத்தாயார் சாமிநாதர் சபையைச் சேர்ந்த கன்னிகை. ஒளவெர்ன் (Auvergne) என்னுமிடத்தில் லாங்கேக் (Langeac) என்ற மடத்தில் இருந்தவர்கள். 1634-ல் புனித மரணம் எய்தினார்கள். இவர்கள் ஏழு வயதா யிருக்கையில் பெரிய ஆன்ம துன்பங்களால் வேதனைப் பட்டார்கள். அப்போது ஒரு குரல் அவர்களுக்குக் கேட்டது : ''நீ இந்தக் கவலைகளிலிருந்தெல்லாம் விடு பட்டு உன் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட விரும்பினால் உடனே உன்னை சேசுவுக்கும் அவர் திரு அன்னைக்கும் அடிமையாக்கு'' என்றது அக்குரல், அச் சிறுமி வீடு திரும்பியதும் தன்னை முழுவதும் சேசுவுக் கும் அவர் தாய்க்கும் அடிமையாக ஒப்புக் கொடுத்தாள். அதுவரையிலும் இந்தப் பக்தியைப் பற்றி சிறுமிக்கு எதுவுமே தெரியாது. மேலும் ஒரு இரும்புச் சங்கிலியைக் கண்டுபிடித்து அதைத் தன் இடுப்பைச் சுற்றிக் கட்டி கொண்டாள் - மரணம் வரை அதை அணிந்திருந்தாள். இவ்வாறு செய்த பின் அவளுடைய எல்லா சந்தேக குழப்பங்களும் நின்று விட்டன பெரும் இருதய அமைதியையும் விடுதலையையும் கண்டாள். இந்நிகழ்ச்சி' வேறு பலருக்கும் இப் பக்தியைக் கற்றுக் கொடுக்க அவளைத் தூண்டியது. அவர்களும் அதிக வளர்ச்சி பெற்றார்கள். அவர்களுள் ஒருவர் அர்ச். சல்பிஸ் சபை ஸ்தாபகரான M. ஆவியர் என்பவர். இன்னும் அநேக குருக்களும் அதே குரு மடத்திலுள்ள பல குருத்துவ நிலையினரும் அதில் உள்ளனர்.

ஒரு நாள் சேசுவின் ஆக்னஸ் தாயாருக்கு தேவ அன்னை தோன்றி அவர்கள் கழுத்தில் ஒரு தங்கச் சங் கிலியை அணிவித்தார்கள். தன் திருக்குமாரனுடையவும் தன்னுடையவும் அடிமையாக அக்கன்னிகை ஆனது பற்றி மகிழ்ச்சியின் அடையாளமாக அவ்வாறு செய்தார்கள். தேவ அன்னையுடன் தோன்றிய அர்ச். செசிலி, ஆக்னஸ் தாயாரைப் பார்த்து “மோட்ச அரசியின் பிரமாணிக்க முள்ள அடிமைகள் மகிழ்ச்சி பெற்றவர்கள்; ஏனென் றால் அவர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப் பார்கள்'' என்று கூறினாள். Tibi Servire libertas - உமக்கு ஊழியம் புரிவது விடுதலையாகும்.