இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா மீது கொள்ளும் பக்தியின் இறுதி நோக்கு சேசு கிறிஸ்துவே

60. இதுவரையிலும் மாதா மீது பக்தி அவசியம் - என்பது பற்றி சுருக்கமாகக் கூறினேன். இனி இப்பக்தி எதில் அடங்கியுள்ளது என்பது பற்றி நான் கூறவேண்டும். நான் இங்கு வெளிப்படுத்த விரும்புகிற, உறுதியுடையதும் மிகப் பெரியதுமான இப்பக்தியின் மீது ஒளி வீசக்கூடிய சில அடிப்படை உண்மைகளை இறைவனருளால் எடுத் துரைத்தபின் அதைச் சொல்வேன்.

முதல் உண்மை :

மாதா மீது கொள்ளும் பக்தியின் இறுதி நோக்கு சேசு கிறிஸ்துவே

61. நம் இரட்சகரும் உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமாயிருக்கும் சேசு கிறிஸ்துவே நம் எல்லாப் பக்தி முயற்சிகளின் கடைசி முடிவாக இருத்தல் வேண்டும். அப்படியில்லாவிடில் அவைகள் தவறானவை யாயும் திசை திருப்பிவிடுவனவாயுமிருக்கும். சேசு சிறீஸ்துவே ஆல்பாவும் ஒமேகாவும் - எல்லாவற்றின் துவக்க மும் முடிவுமாயிருக்கிறார். அப்போஸ்தலர் உரைப்பது போல், எல்லா மானிடரையும் சேசு கிறிஸ்துவில் உத்தம ராக்குவதற்கன்றி வேறு எதற்காகவும் நாம் உழைக்கவில்லை. ஏனென்றால் தெய்வீகத்தின் முழு முழுமையும் மற்றெல்லா வரப்பிரசாதங்கள், புண்ணியங்கள். உத்தமதனங்கள் இவற் றின் நிறைவும் அவரிடம் மட்டுமே குடி கொண்டுள்ளன. ஏனெனில், அவரிலேயே நாம் ஒவ்வொரு ஞான ஆசீர் வாதத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். ந ம க் கு ப் போதனை தரக்கூடிய ஆசிரியர் அவர் ஒருவரே. நாம் ஊன்றி நிற்கும் ஒரே ஆண்டவர் அவரே. நாம் இணைந்திருக்க வேண்டிய ஒரே சிரசு அவரே. நாம் ஒத்திருக்கவேண்டிய ஒரே மாதிரி அவரே, நமக்கு உணவூட்ட வேண்டிய ஒரே ஆயன் அவரே. நம்மை நடத்திச் செல்லவேண்டிய ஒரே வழி அவரே, நாம் விசுவசிக்க வேண்டிய ஒரே உண்மை அவரே. நம்மை உய்விக்க வேண்டிய ஒரே சீவன் அவரே. நம்மைத் திருப்திப்படுத்த வேண்டி நமக்கு எல்லாவற்றிலும் எல்லாமுமானவர் அவரே. நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழ் சேசுவின் நாமத்தைத் தவிர வேறு நாம் மில்லை. மீட்புக்கும் உத்தமதானத்திற்கும் மகிமைக்கும் சேசு கிறீஸ்துவைத் தவிர வேறு அடித்தளத்தை சர்வேசுரன் அமைக்கவில்லை. உறுதியான இப்பாறை மீது கட்டியெழுப் பப்படாத எதுவும் சொரி மணலில் ஊன்றப்படுகிறது. விரைவில் அல்லது சற்றுப் பிந்தி அது நிச்சயமாக விழும், திராட்சைக் கிளை அதன் செடியோடு ஒன்றுபட்டிருப்பது போல் அவருடன் ஒன்றுபட்டிராத ஒவ்வொரு விசுவாசியும் விழுந்து உலர்ந்து நெருப்பில் போடப்படுவதற்கே தகுதி யாயிருப்பான். சேசு கிறீஸ்து இல்லாத எதுவும் வழி தவறு தலும் பொய்யும் தீமையும் பயனற்றதும் மரணமும் தண்ட னைத் தீர்ப்புமேயாகும். நாம் சேசு கிறிஸ்துவிலும் சேசு கிறீஸ்து நம்மிலும் இருந்தால் தண்டனைத் தீர்ப்புக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை. பரலோகத்திலிருந்து சம்மனசுக் களோ , இப்பூமியிலுள்ள மனிதர்களோ, நரகத்திலுள்ள பசாசுக்களோ வேறு எந்த சிருஷ்டியுமோ நமக்குத் தீமை செய்ய முடியாது. ஏனென்றால் அவை, சேசு கிறீஸ்துவினிட்ட மாய் நமக்கிருக்கும் தேவ அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க இயலாது;. சேசு கிறீஸ்துவாலும் சேசு கிறீஸ்துவிலும் நம்மால் எல்லாம் செய்ய முடியும். பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் பிதாவுக்கு எல்லா மகிமையும் புகழும் செலுத்த முடியும். நாம் உத்தமர்களாக முடியும். நம் அயலாருக்கு நித்திய வாழ்வின் நறுமணமாக இருக்க முடியும்.

62. எனவே மாதா மீது உறுதியான பக்தியை ஏற்படுத்துகிறோமென்றால், அது சேசு கிறீஸ்து மீது அதிக உத்தமமான பக்தியை ஏற்படுத்தவும், சேசு கிறிஸ்துவை அடைவதற்கு ஒரு எளிதான நிச்சயமான வழியைக் காட்டு வதற்கு மேயாகும். மரியாயின் பக்தி சேசு கிறிஸ்துவிடமிருந்து நம்மைத் தூர அகற்றுமேயானால் அது பசாசின் ஏமாற்றமென்று நாம் அதை ஒதுக்கிவிட வேண்டியதிருக் கும். ஆனால் உண்மை அப்படியல்ல. மாறாக, நான் முன்பே எடுத்துக்காட்டியபடியும் இன்னும் எடுத்துக்காட் டப்போவதன் படியும், சேசு கிறீஸ்துவை உத்தமமான முறையில் கண்டு, கனிவுடன் நேசித்து உண்மையுடன் அவருக்கு ஊழியம் புரிவதற்காகவே மாதா மீது பக்தி நமக்கு அவசியமாகிறது.

63. ஓ என் இனிய சேசுவே! இவ்விடத்தில் நான் ஒரு, விநாடி உமது தெய்வீக மகத்துவத்திற்கு முன் அன்பின் முறைப்பாடு ஒன்று கூறுவேன்: பெரும்பான்மையான கிறீஸ்தவர்கள், மிகவும் கற்றுணர்ந்தவர்கள் முதலாய், உமக்கும், உம்முடைய பரிசுத்த அன்னைக்குமிடையே நிலவும் இன்றியமையாத ஐக்கியத்தை அறிவதில்லை, ஆண்ட வரே! நீர் எப்போதும் மாதாவுடனும் மாதா எப்போதும் உம்முடனும் இருக்கின்றீர்கள். நீர் இல்லாமல் மாதா இருக்கமுடியாது. நீர் இல்லாவிடில் மாதா இவ்வாறிருப்பது . அற்றுப் போகும். வரப்பிரசாதத்தால் மாதா. எவ்வளவுக்கு உம்மாக மாறியுள்ளார்களென்றால் இப்போது அவர்கள் வாழ்வதில்லை. அவர்களே இல்லை. எல்லா சம்மனசுக்களிலும் புனிதர்களிலும் இருப்பதை விட அதிக உத்தமமாக என் சேசு, நீரே மரியாயில் வாழ்ந்து ஆட்சி செய்கின்றீர். வியக்கத்தக்க இச்சிருஷ்டியிடம் நீர் பெறும் மகிமையையும் அன்பையும் நாங்கள் அறிவோமானால், உம்மிடமும் மரியா யிடமும் எங்கள் உணர்வு இப்போதைவிட எவ்வளவோ , வேறாக இருக்கும்! மாதா உம்முடன் எவ்வளவு அந்நியோன்னியமாக ஐக்கியமாகி யுள்ளார்களென்றால், இத் தேவ மாமரியை உம்மிடமிருந்து பிரிப்பதைவிட சூரியனிலிருந்து, வெளிச்சத்தைப் பிரிப்பதும், நெருப்பிலிருந்து உஷ்ணத் தைப்பிரிப்பதும், ஏன் சம்மனசுக்கள், புனிதர்களை உம்மிடமிருந்து பிரிப்பதும் எளிதாயிருக்கும். ஏனென்றால் எல்லா சிருஷ்டிகளையும் மொத்தமாக எடுத்துக்கொண்டா லும் அவர்கள் அனைவரையும் விட மாதா உம்மை அதிக அன்புடன் நேசிக்கிறார்கள். அதிக உத்தமமாக உம்மை மகிமைப்படுத்துகின்றார்கள்.

64. என் இனிய குரு வே! இவற்றையெல்லாம் பார்க்கையில், இம்மையில் உம் திரு மாதாவைப் பற்றி எல்லா மனிதரிடமும் காணப்படும் அறிவின்மையும் அந்த - காரமும் ஆச்சரியமாகவும் இரங்கத்தக்கதாகவும் அல்லவோ இருக்கின்றது! இங்கு நான் விக்கிரக ஆராதனைக்காரரை யும் வேதமற்றோரையும் அவ்வளவாகக் குறிப்பிடவில்லை. அவர்கள் உம்மை அறியாததால் உம் மாதாவையும் அறியார்கள். பதிதத்தில் உட்பட்டிருப்போரையும் பிரிவினைக்காரரையும் பற்றிக்கூட நான் பேசவில்லை. அவர்கள் உம்மிடமிருந்தும் திருச்சபையிடமிருந்தும் விலகியிருப்பதால் உமது திரு அன்னை மீது பக்தியுள்ளவர்களாயிருக்க முடியாது. ஆனால் நான் கூறுவது கத்தோலிக்கர்களைப் பற்றியே. அதிலும் அவர்களுக்குள் வேத அறிஞர்களாயிருப்பவர்கள் கூட - மற்றவர்களுக்கு உண்மையைப் போதிக்கிறோம் என்று கூறும் இவர்கள் கூட - உம்மையும் உமது பரிசுத்த அன்னை யையும் ஒரு கவலையற்ற முறையில் பலன் தராத, வறண்ட, சிந்தனை நிலையில் மட்டுமே அறிந்துள்ளார்கள். இம் மனி தர்கள் உமது புனித மாதாவைப் பற்றியும் அவர்களிடம் நாம் கொள்ள வேண்டிய பக்தியைப் பற்றியும் மிக அபூர்வ மாகவே ஏதாவது கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் என்ன காரணம் கூறுகிறார்களென்றால், மாதா மீதுள்ள பக்தி தவ றாக உபயோகிக்கப்பட்டு விடுமாம்! அளவு மீறி உமது அன்னைக்குப் பக்தி செலுத்தினால் அது உமக்கு நிந்தையாகி விடுமாம்! மாமரி மீது உருக்கமான பக்தி கொண்ட அவ் வன்னையின் ஊழியன் யாராவது இந்நல்ல தாய் மீது அன்பு கொள்வது பற்றி கனிவாயும். திடமாயும், ஒப்புக்கொள்ள வைக்கும் முறையிலும் பேசுவதை இவர்கள் பார்த்தால் அல்லது கேள்விப்பட்டால் - மாமரி மீது கொள்ளும் பக்தி ஏமாற்றமில்லாத நிச்சயமான சாதனம், ஆபத்தில்லாத கிட்டத்து வழி. குற்றங் குறைபாடுகளற்ற புனித பாதை, உம்மைக் கண்டு கொள்ளவும் உம்மை நேசிக்கவும் உதவும் ஆச்சரியமான இரகசியம் என்று மரியாயின் அவ் வூழியன் கூறக்கேட்டால் - இவ்வறிஞர்கள் அவனுக்கெதிரா கக் குரல் எழுப்புகிறார்கள். பரிசுத்த கன்னிமரியைப் பற்றி இவ்வளவு தூரத்துக்குப் பேசக்கூடாது என்பதற்கு ஆயிரம் போலிக்காரணங்களை அவன் முன் வைக்கிறார்கள். மாதா வின் பக்தியில் பல துர்ப் பிரயோகங்கள் உள்ளனவென்றும், அவற்றைக் களைந்தெறிய முயல வேண்டுமென்றும், மாதா வின் பக்தியைக் கைக்கொள்ளும்படி மக்களைத் தூண்டுவதை விட உம்மைப் பற்றிப் பேச வேண்டுமென்றும், மாதா மீது ஏற்கெனவே போதிய பக்தி மக்களிடம் உள்ளது என்றும் கூறுகிறார்கள்!

இவ்வறிஞர்கள் மாதா மீது பக்தி பற்றி சில சமயங்களில் பேசுகிறார்கள். ஆனால் அது அத்தாயின் மீது பக்தியை ஏற் படுத்துகிறதற்காகவோ மக்கள் அதைப் பிடிப்புடன் ஏற்கச் செய்வதற்காகவோ அல்ல. ஆனால் அது தவறாக உபயோ கிக்கப்படுவதைத் தடுப்பதற்காக! இத்தனைக்கும் இம்மனிதர் களிடம் உம்மீது ஒரு உருக்கமான பற்றுதலோ பக்தியோ கிடையாது. இதன் காரணம், இவர்கள் மரியாயின் மீது 'பக்தியற்று இருப்பதே. ஜெபமாலை, உத்தரியம், மந்திர மாலை இவைகளெல்லாம் இவர்களுக்கு கிழவிகளின் பக்தி முயற்சிகள்! அறிவில்லாதவர்களுக்கு உரியவை! இரட்சண்ய மடைய அவசியமற்றவை! ஜெபமாலையை அல்லது வேறு ஏதாவது மாதாவின் பக்தி முயற்சி ஒன்றைச் செய்து வரும் கன்னித்தாயின் பக்தன் ஒருவனை இவர்கள் சந்தித்து விட்டால், வெகுவிரைவில் அவன் மனதையும் உள்ளத் தையும் மாற்றிவிடுகிறார்கள். ஜெபமாலைக்குப் பதிலாக ஏழு தவச் சங்கீதங்களை அவன் சொல்லும்படி ஆலோசனை கொடுக்கிறார்கள். மாதா மீது பக்திக்குப் பதிலாக சேசு கிறீஸ்து மீது பக்தி கொள் என்று யோசனை கூறுகிறார்கள்.

ஓ என் இனிய சேசுவே! இம்மனிதரிடம் உம்முடைய சிந்தை உள்ளதா? இவ்வாறு செய்வதால் இவர்கள் உமக்குப் பிரியப்படுகிறார்களா? உமக்கு விரோதமாகிவிடக் கூடும் 'என்று பயந்து உமது தாய்க்கு மகிழ்ச்சி தர நாங்கள் எந்த முயற்சியும் செய்யக் கூடாது என்பதா உமது விருப்பம்? உமது மாதாவுக்குக் காட்டும் பக்தி உமது பக்திக்கு இடை யூறாகவா இருக்கிறது? நாங்கள் அவ்வன்னைக்குச் செலுத்தும் + மகிமையை அவர்கள் தங்களுக்கென்றா கொள்கிறார்கள்? உமதன்னை உம்மை விட்டுத் தனியாக ஒதுங்கியா நிற்கிறார் கள்? உம்முடன் தொடர்பில்லாத வேற்று ஆளா உமது தாய்? உம் தாய்க்குப் பிரியப்பட விரும்புவது உமக்குப் பிரியமற்றதாகவா உள்ளது? தன்னைத்தான் ஒருவன் அவ்வன்னைக்கு காணிக்கையாகக் கொடுப்பது - அவர்கள் மீது அன்பு கொள்வது - உம்மிடமிருந்து பிரிந்து செல்வதா? உம் அன்பிலிருந்து அகன்று அலைவதா?

65. என் இனிய குருவே, நான் இப்பொழுது கூறிய அனைத்தும் உண்மையாயிருந்தாலும் கூட, இந்த அறிவாள ரான மனிதரில் பெரும்பான்மையோர் தங்கள் ஆங்காரத் திற்காகத் தண்டனை தான் பெற்றுள்ளனர். உமது தாயின் பக்தியை விட்டு அவர்கள் இதற்கு மேல் தூரமாய்ப் போக முடியாது. அவ்வன்னையின் பக்தியை அவர்கள் இதைவிட அதிகம் அலட்சியம் செய்யவும் முடியாது. அவர்களுடைய கருத்துக்களிலிருந்தும் நடத்தையிலிருந்தும் ஆண்டவரே என்னைப் பாதுகாத்துக் கொள்ளும். உமது திரு அன்னை மீது நீர் கொண்டுள்ள நன்றி, மதிப்பு, மரியாதை, அன்பு ஆகிய நல்லுணர்வுகளில் எனக்கும் பங்களித்தருளும். இதனால் நான் உம்மை அதிகமாகக் கண்டு பாவித்து, அதிக நெருக்கமாகப் பின் செல்லக் கூடியவனாயிருப்பேனாக.

66. இதுவரை உமது திரு மாதாவுக்கு மகிமையாக நான் எதுவுமே சொன்ன மாதிரி இல்லை. அவர்களுடைய எல்லா எதிரிகளும் நாண இப்போது உம் தாயைத் தகுந்த படி புகழ் எனக்கு அருள்வீராக. அவர்களுடைய எதிரிகள் உம்முடைய எதிரிகளாகவும் உள்ளார்கள். அவ்வெதிரி களிடம் நான் தைரியமாக அர்ச்சிஷ்டவர்களுடன் சேர்ந்து இவ்வாறு கூறுவேனாக: ''கடவுளின் அன்னையை நோகச் செய்கிற எவனும் கடவுளுடைய இரக்கத்தைத் தேட முயற் சிக்கவே வேண்டாம்'' (பாரிஸ் நகர் அர்ச் வில்லியம் )
67. உம்முடைய பரிசுத்த மாதாவின் மீது உண்மை யான பக்தியை உமது இரக்கத்தினால் நான் அடையவும், அதை உலக முழுவதும் என் சுவாசமாக வெளியிடும்படி யாகவும், நான் உம்மை மிகவும் ஆர்வத்துடன் நேசிக்கச் செய்தருளும். இதற்கென நான் புனித அகுஸ்தீனாருடனும் உம்மை உண்மையாக நேசிக்கும் அனைவருடனும் செய்யும் இப்பற்றுதலுள்ள மன்றாட்டை ஏற்பீராக.

அர்ச். அகுஸ்தீனுடைய இந்த அரிய செபத்தை பத்தினரில் தர நான் விரும்பினேன், லத்தீன் மொழி தொந்தவர்கள் தினமும் அதைச் சொல்லி தேவ அன்னை வழியாக நாம் அடைய விரும்பும் சேசுவின் அன்பை அடையுமாறு மன்றாட வேண்டுமென்பதற்காகத்தான்.

Tu es Christus, Pater Sanctus. Deus meus pius, rex meus magnus. pastor meus bonus, megister meus unus, adjutor meus optimus, dilectus meus pulcherrimus, panis meus vivus, sacerdos meus. in aeternum, dux meus ad Patriam, lux mea vera, dulcedo mea sancta, via mea recta, sapientia mea praeclara, simplicitas mea pura, concordia mea pacifica, custodia mea tota, portio mea bona, salus mea sempiterna...

Christe Jesu, amabilis Domine, curamavi, quare concupivi in omni vita mea quidquam praeter to Jesum Deum meum? Ubi eram quando tecum mente non erarn? jam ex hoc nunc, omnia desideria mea, incalescite et effluite in Dominum Jesum: Currite, satis hactenus tardastis; properate quo cergitis; quaerite quem quaeritis. Jesu. qui non amat te anathema sit; qui non te amat amaritudinibus repleatur...... O ducis Jesu. te amet, in te delectetur te admiretur omnis sensus bonus tua conveniens laudi. Deus cordis mei et pars mea. Christe Jesu deficiat cor meum spiritu suo, et vivas tu in me, et concalescat in spiritu meo vivus carbo amoris tui; ardeat jugiter in ara cordis mei, ferveat in medullis meis, flagret in abscondite animae meae; in die consummationis meas inveniar apud te --- Amen.

அர்ச். அகுஸ்தீனுடைய செபத்தின் தமிழாக்கம் :

ஓ கேசு கிறிஸ்துவே! என் புனித தந்தாய்! என் இனிய கடவுளே! என் பேரரச ரே ! என் நல்ல ஆயனே! என் ஏக போதகரே! என் தலைசிறந்த துணைவரே! அழகிற் சிறந்த என் அன்பரே! என் உ யி ரு ள் ள அப்பமே! என் நித்திய குருவே! தாயகத்திற்கு என்னை நடத்திச் செல்லும் தலைவனே! என் உண்மை ஒளியே! என் புனிதமான இனிமையே! என் நேரிய பாதையே! துலங்கிடும் என் ஞானமே! பரிசுத்தம் கமழும் எளிமையே! சாந்தம் திகழும் ஒருமைப்பாடே! என் முழு பாதுகாப்பே! என் நல்லுரிமைப் பாகமே! என் நித்திய இரட்சண்யமே!

கிறீஸ்து சேசுவே! அன்புக்குரிய ஆண்டவரே! என் வாழ்நாளிலெல்லாம் என் இறைவனான சேசுவைத் தவிர வேறு யாரையும் நான் ஏன் தான் நேசித்தேனோ. ஏன் தான் விரும்பினேனோ. என் மனதால் நான் உம்மோடு இராத நேரமெல்லாம் நான் எங்குதானிருந்தேன்? என் எல்லா விருப்பங்களே! நீங்கள், பற்றி எரிந்து ஆண்டவரான சேசு வின் மீது பாயுங்கள். நீங்கள் போதிய மட்டும் அசமந்தமா யிருந்தீர்கள். இப்போது வேகமாய்ச் செல்லுங்கள். எங்கு செல்கிறீர்களோ அங்கு விரையுங்கள். யாரைத் தேடுகிறீர் களோ அவரைக் கண்டுபிடியுங்கள். ஓ சேசுவே! உம்மை நேசியாதவன் சபிக்கப்படுவானாக. உம்மீது அன்பு கொள் ளாதவன் கசப்பால் நிரம்புவானாக.

இனிய சேசுவே! உம்மை வாழ்த்துவதற்கு ஏற்ற எல்லா நல்லுணர்வும் உம்மை நேசிப்பதாக! உம்மில் மகிழ்வதாக! உம்மை வியந்து பாராட்டுவதாக ! என் இருதய தேவனே! என் உரிமைப் பாகமே! கிறீஸ்து சேசுவே என் இருதயம் என்னுட் சோர்ந்து போக, நீரே என்னில் வாழ்வீராக! உம்முடைய அன்பினால் எரியும் தணல் என் ஆன்மாவை எரிப்பதாக. என் இருதய பீடத்தில் அந் நெருப்பு தகுந்தபடி எரியக்கடவது. என் உள்ளரங்கங்களில் அது மூண்டு எரியட்டும். என் ஆன்மாவின் அந்தரங்கங் களில் அது கொழுந்துவிட்டெரியட்டும். என் வாழ்வின் முடிவில் நான் உம்மோடு எரிந்தவனாகக் காணப்படுவேனாக 

ஆமென்.