பிள்ளைகளுக்குட் பாரபட்சம்

பெண்பிள்ளைகளின் அருமையை அனுபவத்தால் அறியாத அனேக அன்னை பிதாக்கள் ஆண் குழந்தைக ளின் பிறப்பில் அகமகிழ்ந்து பெண்குழந்தைகளின் பிறப் பிற் பிரியவீனப்படுவார்கள். ஆனால் பெரும்பாலும் பெற் றோருக்கு வயோதிகத்திலும், கிடைதலையிலும் விசேஷ மாய்ப் பெண் பிள்ளைகளே அடைக்கலமும் ஆறுதலும் உதவியுமாயிருப்பதை எந்நாளுங் கண்டுகொண்டுவருகி றோம்.

''அஞ்சு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியா வான்'' என்கிறார்கள்; ஆனால் இரண்டொரு ஆண்களைப் பெற்ற அரசர் ஆண்டிகளானதில்லையா? சில அரசர்களைச் சிறை இருத்தினவர்கள் அல்லது, அவர்களுடைய உயி ரைப்பறித்தவர்கள் அவ்வரசர்களின் ஆண்மக்களா அல் லது பெண்மக்களா? ஆண்மக்களென்றே சரித்திரங்கள் கூறுகின்றன. செனக்கெரிப் என்ற இராசாவை அ வன் குமாரர்தாமே கோவிலிற் கொன்றுபோட்டார்கள். (II நாளாகமம் 32; 21. )

ஆபிரிக்காவிலே சோமாலி எனுஞ் சாதியாருள் பெண்களின் பிறப்பிலே பிதாக்கள் ஆனந்தங்கொள்வார்களாம். ஏனெனில் அவர்களால் இவர்களுக்குப் பெரும் ஆதாயமுண்டு. எப்படியெனில் பெண்பிள்ளைகள் வளர்ந்து மணம்புரியப் பிராயம் ஆகும்போது பிதாக்கள் இவர்களைப் பிரசித்த ஏலத்திற் கூறிவிற்றுத் தொகையான பணத்தை அல்லது ஆடுமாடுகளைப் பெற்றுக்கொள்வார்கள். விற்கப்படுவதில் இப்பெண்கள் வெட்கமாவது துக்கமாவது படாமல், தாங்கள் இவ்வளவவ்வளவு பெறுமதியானதைப்பற்றி அகமகிழ்ந்து பெருமை பாராட்டுகிறார் களென்று சில நாட்களுக்குமுன் ஓர் பத்திரிகையில் வாசித்தோம். ( Cath. Missions).

இது ஒரு குழந்தை பிறந்த அந்நிய நாட்களில் தந்தை இறந்தால் தகப்பனைத்தின்னி என்றும், தாய் இறந்தால் தாயைத்தின்னி என்றும், வேறேதும் பொல்லாங்கு நேரிட்டால் அதற்கும் அந்தப்பிள்ளையே காரணமென் றும் விசுவாசமற்ற பெற்றோர் பழிகூறுவார்கள். இவ்விதமான எண்ணமும் பேச்சும் பெற்றோர் பிள்ளை மேற்கொண்டி ருக்கவேண்டிய உருக்கமான நேசத்தைப் போக்கடித்து அவர்கள் மேல் வெறுப்பு வருவிக்க வழியாகின்றன. பிள் ளைகளின் பிறப்பு பெற்றோரின் இறப்புக்கோ வேறு கெடு திக்கோ காரணமென்று எண்ணுவது நியாயத்துக்கொள் வாத பெரிய மூடத்தனம். எப்போதாவது அபூர்வமாய் ஒருபிள்ளையாற் பெற்றோருக்குக் கெடுதி தான் நேரிட்டா லும் அதை ஒரு பொதுவிதியாக எடுத்துக்கூறுவது அற்ப அறிவுக்கு அடையாளமாகும். அன்றியும் தேவசித்தமின்றி யாதொன்றும் ஆவதில்லையென்று இவ்வித பெற்றோர் அறியக்கடவார்கள்.

பெற்றோர், பிள்ளைகளை ஆண்பெண்ணென்றும், சமர் த்தர் சமர்த்தில்லாதவர்களென்றும் பாரபட்சஞ்செய்யா மல் அனைவரையும் இயன்ற அளவு சமனாய் நடத்துவதே நீதியும் நியாயமுமென்று அறிவிற்சிறந்தவர்கள் போதிக் கிறார்கள். உள்ளபடி, பலபிள்ளைகளுள்ள ஒரு குடும்பத் தில் தாய் தந்தையர் ஒரு பிள்ளையை அல்லது சில பிள்ளை களை விசேஷமாய்ச் சினேகித்து மற்றப் பிள்ளைகளைப் பார பட்சமாய் நடத்துவது தேவனுக்கு ஏராத கொடிய செய்கையேயாம். மற்றப்பிள்ளைகளுந் தேவனால் அவர் களுக்குக் கொடுக்கப்பட்டவர்களல்லவா? அதிபிதாவாகிய யாக்கோபு தம் பன்னிருபுத்திரரில் ஒருவரையும் பரா முகம்பண்ணாதிருந்தாலும், யோசேப்பை விசேஷமாய் நேசித்து அவருக்கு ஒரு பலவர்ண அங்கியையுங்கொடுத் ததினாலேயே மறுகுமாரர்கள் பொறாமை கொள்ளவும், குடும்பத்திற் சமாதானமற்று வேற்றுமை உண்டுபட வும், அவர்கள் யோசேப்பை வெறுத்துப் பாழ்ங்கிணற் றிற் தள்ளிவிடவும், திரும்ப அந்நிய தேசத்து வியாபாரிக ளுக்கு அடிமையாய் விற்றுவிடவும், அதனால் தங்கள் அரிய பிதாவை வயோதிகத்தில் நெடுங்காலந் துக்க சாக ரத்தில் அமிழ்த்திவைக்கவும் நேரிட்டது.

பல ஆண்மக்களுள்ள சமுசாரங்களில் சில பெற்றோர், தங்கள் புத்திரருள் ஒருவனை நன்றாகப் படிப்பித்துவிட்டால் இவன் தன் சகோதரர்கள் அனைவரையும் தாபரித் துக் காப்பாற்றுவானென்று நம்பி இவனைத் தங்கள் பணம் பொருளிற் பெரும்பங்கைச் செலவழித்துப் படிப் பிப்பார்கள். இவன் தன் கல்வியில் நிச்சயமாய் அனு கூலப்படுவானென்றும், நெடுங்காலஞ் சீவிப்பானென்றும், சீவித்துழைத்தாலும் தன் சகோதரர்களுக்குத் தப்பாமல் தக்க உதவிபுரிந்து தன்னைப் போல அவர்களையும் நல்நிலை யில் வைப்பானென்றும் நம்பியிருக்க ஆதாரமென்ன ? இவ்வித நம்பிக்கை எத்தனையோமுறை சித்தியாமற்போ கின்றது. போகவே, மறுசகோதரர் எக்காலமும் மனம் நொந்து பெற்றோரைத்திட்டி வைது பகைத்துப் பழி வாங்கவும் நேரிடுகின்றது.

இப்படியே பல பெண்மக்களுள்ள வீடுகளிற் சிலர் தங்களுக்குள்ள ஆஸ்தி பணங்களிற் பெரும்பங்கை மூத் தபிள்ளைகளுக்கும், முக்கியமாய்த் தலைப்பிள்ளைக்கும் கொ டுத்துவிட்டு, இளையவர்களைக் குறைந்த நிலைபரத்தில் இரு க்கவும், அந்தரிக்கவும் அல்லது மரணமட்டும் குமரிருக் கவும் விடுகிறார்கள். எத்தனையோ தாய் தந்தையர் பிற் காலம் உழைத்து இளையபிள்ளைகளுக்குக் கொடுப்போ மென்று போக்குச் சொல்லியபோதிலும், அப்படிச் செய் யுமுன் செத்துப்போகிறார்கள். அல்லது தளர்ந்த வயதில் உழைக்கத் திராணியற்றவர்களாகி - இளையபிள்ளைகளுக் கென்று வைத்திருந்ததையும் தங்களுக்கே செலவழிக்க நேரிடுகின்றது. அன்றியும் பலமுறை, மூத்தவர்களைப் பார்க்க இளையவர்கள் அனேகம் பிள்ளைகள் பெற்றுப் பொறுத்த சமுசாரிகள் அல்லது விதவைகளாகிப் பிள் ளைகளை வளர்க்க வழிவகையற்று அந்தரிக்கிறார்கள். ஒரு தகாத உலகவழக்கத்தைப் பின்பற்றி மூத்த பிள்ளைக்கு மிகக்கூட்டியும் இளையபிள்ளைகளுக்கு மிகக் குறைத்தும் கொடுப்பது நீதியல்ல. அவரவர் தகுதி அவசியங்களுக் கிசைய நீதிப்பிரகாரம் ஆஸ்திபாஸ்தியைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும்..

மூத்த பிள்ளை இளையபிள்ளைக்கு மேலான நிலைபரத்தி லிருக்கவேண்டுமென்பது அவசியமான ஓர் பிரமாணமல்ல. பலசமயங்களிலே தேவன் இளையவர்களை மூத்த வர்களுக்கு மேலாக்கியருளினார் என்று வேதாகமங்களா லறியவருகிறோம். அதிபிதாவாகிய ஈசாக்கின் மனைவியா கிய ரெபெக்காள் கர்ப்பவதியாயிருக்கையிற் சருவேசு ரனே அவளை நோக்கி ''உன் உதரத்தில் இரண்டு சாதிக ளுண்டு; (அவர்களில்) மூத்தவன் இளையவனைச் சேவிப் பான்'' என் றருளிச்செய்தார். அவ்வாறே அவளுடைய இரட்டைப்பிள்ளைகளில் மூத்தவனாகிய ஈசாவு இளையவனா கிய யாக்கோபுக்கு எக்காலமும் பணிந்திருக்க நேரிட்ட தென்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 5)

அன்றியும் யாக்கோபின் கோத்திரத்திலேயே உலக இரட்சகரும் பிறந்தார். யாக்கோபுவும் வயோதிகராகி மரணத்தருவாயிலிருக்கையில் தம் மகனாகிய யோசேப் பின் இருபுத்திரரையும் ஆசீர்வதிக்க முயன்றபோது, யோசேப்பு தன் மக்களில் மூத்தவனாகிய மனாசேயை யாக் கோபின் வலதுபக்கத்திலும், இளையவனாகிய எப்பிராயீ மை இடதுபக்கத்திலும் விட்டார். ஆனால் யாக்கோபு தமது கரங்களை மாறி, வேணுமென்று வலதுகையை இளையவன்மேலும், இடதுகையை மூத்தவன் மேலும் வைத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார். இதைப்பற்றி யோசேப்பு மிகப்பிரியவீனப்பட்டுப் பிதா வின்கைகளைப் பிடித்து, அப்படியல்ல வலதுகையை மூத்தோனாகிய ம னாசேயின் சிரசில் வைக்கவேணுமென்றார். அதிபிதாவோ சமமதியாமல் '' அது எனக்குத்தெரியும், என் மகனே எனக்குத்தெரியும். இவனும் ஒருசனக்கூட்டமாகப் பலு குவான், ஆனால் இவன் தம்பி இவனிலும் பெரியவனா வான்; அவனுடைய சந்ததியார் திரளான சனங்களாகப், பெருகுவார்கள்'' என்றுரைத்து இருவரையும் ஆசீர் வதித்தார். (ஆதி. 48)

சருவேசுரன் ஈசாயின் எட்டுக் குமாரரில் ஒருவனை இசிறவேல் சனங்களுக்கு இராசா வாகத் தெரியச் சித்தமான போது, தகப்பன் தன் தலைச் சன்பிள்ளையையே! முதல் சாமுவேலெனும் தீர்க்கதரிசி யிடம் கூட்டிவந்தான். அப்போது ஆண்டவர் தீர்க்கதரி சியை நோக்கி: " நீ இவனுடைய முகத்தையும் தேக வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நாம் இவனைப் புறக்கணித்தோம். மனுஷன் பார்க்கிறபடி நாம் பாரோம். மனுஷன் முகத்தைப்பார்ப்பான்; கர்த்தரோ இருதயத் தைப்பார்க்கிறார்'' என்று திருவுளம்பற்றினார். மற்றப் பிள்ளைகளையும் அப்படியே நீக்கிவிட்டு எல்லாருக்கும் இளையவனாகிய தாவீதையே இராசாவாகத் தெரிந்து கொண்டார். (1-ம் அரசர் 16)

தாய் தந்தையர் தம் மக்கள் அனைவர் மேலும் கொண் டிருக்கவேண்டிய பட்சம் தராசின் கோலைப்போலச் சமனாயிருக்கவேண்டுமென்று நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.