இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யேசுவின் பாடுகள்

கிறிஸ்து நாதரது பாடுகளைப்பற்றி நினைக்கையில் புனித அகுஸ்தீன் சொன்னது என் ஞாபகத் துக்கு வருகிறது. சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு தொங்கிய யேசுவைப் பார்த்ததும் அகுஸ் தீனின் இதயத்தில் அன்பு உதித்தது. "ஆண்ட வரே, உமது காயங்களை என் இதயத்தில் பதியச் செய்யும், உமது வேதனைகளையும் நேசத்தையும் நான் அங்கு பார்ப்பேனாக. அப்படியானால் நான் உமக்காக சகல வேதனைகளையும் சகிப்பேன்; உமது நேசத்தைப் பெறும்படி சகல நேசத்தையும் நான் வெறுப்பேன்” என அவர் தம் முழு இருதயத்தோடு ஜெபித்தார். அகுஸ்தீன் ஓர் அர்ச்சியசிஷ்டர், மிகப் பெரிய வேதசாஸ்திரிகளுள் ஒருவர். "ஜெருசலேமுக்கு திருயாத்திரையாகப் போவதை விட, அல்லது அப் பமும் தண்ணீரும் மாத்திரமே சாப்பிட்டு ஒரு வருடம் முழுவதும் உபவாசம் இருப்பதை விட யேசுவின் பாடுகளைப் பற்றி நினைத்துருகி ஒரு துளி கண்ணீர் சிந்துவது அதிக பலனுள்ளது'' என்று இந்தப் பெரிய சாஸ்திரி சொல்கிறார். இவரது சொற்களைப் பற்றி சிந்தித்தல் நமக்கு வெகு நன்மை தரும்.

விக்டோரியா ஆஞ்செலீனி என்னும் கன்னிக்கு நமது இரட்சகர் ஒருமுறை காட்சி கொடுத்தார். கற்றூணில் கட்டப்பட்டு, சாட்டைகளால் குரூரமாய் அடிக்கப்படும் பாவனையாய் அவர் தோன்றினார். தம் உடலை அவர் அவளுக்குக் காண்பித்தார். உடல் முழுவதும் ஒரே காயம்: 'விக்டோரியா, இந்தக் காயங் களில் ஒவ்வொன்றும் உன்னிடம் உன் நேசத்தைக் கேட்கிறது' என்று ஆண்டவர் சொன்னார். ஆம். அவை எனது நேசத்தையும் கெஞ்சிக் கேட்கின்றன.

ஒரு முறை யேசு புனித தெரேசம்மாளுக்கு காட்சி கொடுத்தார். அவர் சிரசில் முள் முடி இருந் தது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் தெரேசம்மாள் அனுதாபப் படாமலிருக்க முடியவில்லை. அப்பொழுது ஆண்டவர், 'தெரேசா, யூதர்கள் என் சிரசின் மீது வைத்து அழுத்திய முட்களால் ஏற்பட்ட காயங்களைப் பற்றி நீ இரக்கம் கொள்ளவேண்டாம். ஆனால் கிறிஸ் தவர்களின் பாவங்கள் எனக்கு வருவிக்கும் காயங் களைப் பற்றி நீ என்மீது அனுதாபம் கொள்வாயாக. பாவிகள் தான் இந்த முட்கள்' என்றார். நானும் பாவியே.

நன்றி நிறை நேசத்துடன் நான் இப்பொழுது யேசுவின் பாடுகளைப் பற்றிச் சிந்திக்கப் போகிறேன். 'கிறிஸ்துவின் பாடுகளே, உங்களது நேசத்தில் என் னைத் திடப்படுத்துங்கள்' என்பதே என் ஜெபமாயிருக் கும். மற்றவர்களைப் பற்றி நான் இப்பொழுது நினைக்க மாட்டேன்; ஆனால் எனக்காகவே எல்லா உபாதை களையும் யேசு அனுபவித்தார் என்பதை மாத்திரமே - நினைப்பேன். அவரது நினைவின் முன் நான் எப்பொழுதும் நின்றேன். எனக்காகவே அவர் பாடுபட்டு உயிர் விட்டார்.

இரட்சகர் பட்ட பாடுகளின் தொடக்கத்தில் அவர் எல்லோராலும் கைவிடப்பட்டார். பெரிய வியாழக்கிழமை இரவில் தம் அப்போஸ்தலர்களோடு ஜெத்செமனித் தோட்டத்துக்குப் போனார். தம்மோடு தங்கி விழித்திருக்கும்படி அப்போஸ்தலர்களிடம் சொல்லி விட்டு அவர் சிறிது தூரம் சென்று, முகம் குப்புற விழுந்து, கூடுமானால் அந்த பயங்கரத்துக் குரிய பாடுகள் தம்மை விட்டு அகலட்டும் என்று பிரார்த்தித்தார். பிதாவால் எல்லாம் கூடும். அந்த பாடுகளின் பாத்திரத்தை கூடுமானால் தம்மிட. மிருந்து அகற்றும்படி மும்முறை யேசு தம் பிதாவைப் பார்த்து மன்றாடினார். ''ஆயினும் என் மன தின்படி யல்ல, உமது சித்தத்தின் படியே ஆகக்கடவது'' என மும்முறையும் சொன்னார்.

யேசு ஜெத்செமனித் தோட்டத்தில் அனுப வித்த அவஸ்தையின் முதற் காரணம் உலகத்தின் பாவங்களே, ஆனால் நான் இப்பொழுது என்னைப் பற்றி நினைக்க வேண்டும். என் பாவங்களே அவரது மரண அவஸ்தையின் காரணம். என் பாவங்கள் எத்தனை, அவை எவ்வளவு அரோசிகமானவை, எத் தனை கொடூரமானவை என்று அவர் நன்கு அறிந் திருந்தார். பாவத்தை அவர் வெறுத்துப் பகைத் தார். என் பாவங்களுக்காக சர்வேசுரன் அவரிட மிருந்து எதிர்பார்த்த பரிகாரத்தை யேசு நோக்கினார். அவரது உடம்பு முழுவதும் நடுங்கிற்று. முகம் பயத் தால் வெளுத்தது. என் பாவங்கள் யாவும் அசுத்தம் நிறை பெரிய பிரவாகம்போல் அவர் மேல் விழுந்தன. மிகவும் இளகிய அவரது இதயத்தை , நாவால் வர் ணிக்க முடியாத வெறுப்பு அரோசிகம் பயத்தால் என் பாவங்கள் நிரப்பின. பாவத்தின் தோஷத்தை அவர் தம்மேல் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அந்த தோஷத்தின் விளைவுகளை அவர் தம்மேல் ஏற் றுக்கொள்ளக்கூடும், ஏற்றுக்கொண்டார். என் அக் கிரமங்களுக்காக சர்வ வல்லப தேவன் அவரை அடித்து வீழ்த்தினார். ஓ! என் இரட்சகரே! என் மேல் நீர் கொண்டுள்ள நேசத்தை நான் நன்கு அறியச் செய்யும்; உமது இதயத்தை நான் அறியும்படி செய் வீராக. சாகும்வரை நான் உம்முடன் ஒன்றித்திருக் கும்படி எனக்கு தைரியமும் நேசமும் தாரும் : என் சுய பற்றும், இந்தப் பூமியிலுள்ள எதுவும், உம்மை என்னிடமிருந்து விலக்கும்படி விட்டுவிடாதேயும்.

அன்று பூங்காவனத்தில் யேசு அனுபவித்த அவஸ்தைக்கு இன்னொரு காரணம் உண்டு. வெகு சீக்கிரம் தாம் பட இருந்த உபாதைகளில் ஒவ்வொன் றும் அவர் கண் முன் நின்றது. அவர் சர்வேசுரன். அவர் அறியாதது ஒன்றுமில்லை. சகல உபாதைகளும் அவருக்கு முன் காட்சியளித்தன. குருத்துரோகியான யூதாசின் முத்தம், அவர் தம் திருக்கன்னத்தில்பட இருந்த அடிகள், அநியாய தீர்வை , அடிகள், உதைகள், எச்சில், கற்றூணில் கட்டப்பட்டு பட இருந்த சாட்டையடிகள், முள்முடி, வெண்போர்வையுடுத்தி பரிகாசம், திட்டு, தேவ தூஷணங்கள், “அவனைச சிலுவையிலறையும், சிலுவையிலறையும்'' என்ற கூக்குரல்கள், அங்கும் இங்கும் இழுக்கப்படுதல், பிலாத்துவின் அநியாயமான தீர்ப்பு, சிலுவையின் பாதை, கல்வாரி, சிலுவையில் அறைபடுதல், அவர் மாதாவின் துயரம்-இவை யாவும் யேசு முன் தோன் றின.

ஜயோ! நானும் சீமோன் இராயப்பரைப்போல் இருக்கிறேன். ஒரு மணி நேரம் முதலாய் யேசுவோடு விழித்திருக்க முடியாதவனாய் நான் இருக்கிறேன். அவர் என் அரசர், என் தலைவர். ஆனால் எவ்விதம் நான் அவரைப் பின் செல்கிறேன்? நான் விழித்திருக் கிறேனா? நான் அவருக்கு பிரமாணிக்கமுள்ளவனா? உண்மையுள்ளவனா? அவர் எங்கு சென்றபோதிலும் அவர் போகும் இடமெல்லாம் செல்ல நான் ஆவலு டன் இருக்கிறேனா? அவரோடு நான் வெற்றி முடி தரிக்க ஆசித்தால் அவரோடு உபாதைப்பட வேண் டும் என்பதை துன்ப வேளைகளில் நான் மறக்கிறதில் லையா? நான் அவருடன் துன்புறுகையில் அவர் என் மீது சர்வ அநுதாபமுள்ளவராயிருக்கிறார் என்பதை நான் மறக்கக்கூடாது. இவ்விதம் அவர் அநுதாபம் கொள்வதாக முத்திப்பேறுபெற்ற பாட்டிஸ்டா வரனி என்னும் புண்ணிய மாதிடம் அவர் தெரிவித்திருக் கிறார்: “என் சீடர்கள் என் நிமித்தம் தங்கள் வாழ் நாளெல்லாம் பலவித துன்பங்களுக்குள்ளாவார்கள்; பலவித பயங்கர உபாதைகளை அநுபவித்து சாவார் கள் என்ற நினைவானது என்னுடைய பாடுகளின் போது எனக்கு மிக வேதனை கொடுத்தது. அவர்கள் குற்றமற்றவர்கள். ஆனால் எனக்காக துன்புறுத்தப் படுவார்கள் என்று ஏற்கனவே அறிந்திருந்த நான் சொல்ல முடியாத வேதனை அனுபவித்தேன்". ஆம், உண்மையாகவே இந்த நினைவு அவருக்கு அதிக வேதனை கொடுத்திருக்கும் பரிசுத்தமான நேசத்து டன் நான் நேசிக்கும் ஒருவர், குற்றமற்றவர், எனக் காக சொல்லொண்ணா வேதனைக்குள்ளானார் என்றால் அது எனக்கு எத்தனை வருத்தம் கொடுக்கும்!

ஜெத்செமெனித் தோட்டத்தில் அவர் மரண அவஸ்தைப் பட்டதற்கு இன்னொரு காரணம் உண்டு. உலகத்தின் நன்றிகெட்ட தனமே அதன் காரணம். இங்கு எனது நன்றியறியாமையைப் பற்றியும் நான் நினைக்க வேண்டும். அவர் செய்த உபகாரங்களை நான் மறந்தேன். அவரது அவஸ்தையின் காரணங்களில் அது ஒன்று நான் துன்புறுகிறேன், ஆனால் இந்தத் துன்பமானது என் நேசர்களுக்கு நன்மை பயக்கும் என்று நான் அறிந்தால் இத் துன்பத்தைச் சகிப்பது அவ்வளவு கடினமாயிராது. கொஞ்சம் எளிதாயிருக் கும், உலகத்திலுள்ள சகலருக்காகவும் தாம் எவ் வளவோ கடின பாடுகள் பட்டும், பெருந்தொகை யினர் சேதமாவார்கள் என்.று யேசு ஜெத்செமெனி யில் பார்த்தார். கிறிஸ்துநாதரைப் பகைப்பவர்கள் பெருஞ் சேனைகள் போல் அணிவகுத்து உலக முடிவு வரை அவரை எதிர்த்து நிற்பார்கள் என்று அவர் அன்று பார்த்தார். கிறிஸ்தவர்களே கிறிஸ்துநாத ருக்கு விரோதமாக எழும்பி அவருடைய சத்து ராதி களாவார்கள் என்பதையும் அவர் அங்கு பார்த்தார்; ஐயோ! நானும் என் பாவங்களால் அவரையும் அவ ரது நித்திய நேசத்தையும் நிந்திப்பேன் என்பதையும் அவர் அன்று அறிந்திருந்தார். பாவியாகிய எனது இடத்தை அவர் எடுத்துக்கொண்டமையால், சிலு வையில் அவரை பிதா எவ்விதம் கைவிடுவார் என் றும், அவரை ஒர் பெரும் பாவியைப்போல் நடத்து வாரென்றும் அவர் அன்று பார்த்தார். இவ்வளவு கொடூர காட்சிகளைப் பார்த்த அவரது இரத்தமா னது வியர்வையாக தரையில் வடிந்தது ஆச்சரிய மல்ல.

ஓ! யேசுவே! எனது எந்தப் பாவம் உமது பாடு களின் கசப்பான பாத்திரம் இவ்விதம் நிரம்பி வழி யும்படி செய்தது? எனது எந்தப் பாவம் உமது இரு தயத்தை இத்தனை பயங்கரமான துயரத்தால் நிரப்பி நீர் இரத்தம் வியர்க்கும்படி செய்தது? எனது எல் லாப் பாவங்களும், என் பாவம் ஒவ்வொன்றும், நீர் இத்தனை துயருறக் காரணமாயிருந்தது. நான் பல மற்றிருக்கையில், துன்பப்படுகையில், சோதனைப் படுகையில் உமது பாடுகளைப்பற்றி நான் சிந்திப் பேன்; அவை என்னைத் திடப்படுத்தும். என் இதயம் உம்மீதுள்ள நேசத்தால் பற்றியெரியச் செய்யும்படி மாமரியைப் பார்த்து நான் மன்றாடுவேன்.

பாடுகளின் போது இரட்சகர் பட்ட அவமானத் தையும் வேதனைகளையும் பற்றி இப்பொழுது நான் சிந்திக்கப் போகிறேன். பல காரியங்கள் என் நினை வுக்கு வருகின்றன. அவை ஒவ்வொன்றைப் பற்றியும் நான் சிந்தித்துப் பார்ப்பேன். யூதாஸ் யேசுவைக் காட்டிக் கொடுத்தது; திருடனைப் போல் யேசு பிடி பட்டது; கைதியாக அன்னாஸிடம் கூட்டிச் செல்லப் பட்டது; விசாரணை; அநியாயத் தீர்வை; கன்னத்தில் அடிக்கப்பட்டு முகத்தில் எச்சில் துப்பப்பட்டது; இராயப்பர் அவரை மறுதலித்தது; பின் மனஸ் தாபப்பட்டது; அசுத்தமான சிறையில் நிந்திக்கப் பட்டு, சேவர்களால் பரிகசிக்கப்ட்டது; காலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு; யூதாஸின் மனஸ் தாபமும் அவநம்பிக்கையும் தற்கொலையும்; பிலாத்து வின் முன் விசாரணை; ஏரோதின் முன்னிலையில் நிந் தைகள்; திரும்பவும் பிலாத்துவின் முன்; கிறிஸ்து நாதரையல்ல, பரபாசையே விடுதலை செய்ய வேண்டு மென்று மக்கள் கூவியது.....

அதன் பின்னர் யேசுவை கற்நூணில் கட்டி அடித்தார்கள். என் ஆண்டவரும் அரசரும், தலை வருமான யேசுவின் வேதனைகளை நான் நன்கு அறி யும் வரத்தை நான் இப்பொழுது கேட்க வேண்டும். வெகு துயரப்பட்ட யேசுவுடன் சேர்ந்து அவரது துயரத்தை அறியும் வரம் கேட்கவேண்டும்.

யூதர்களின் சட்டப்பிரகாரம் அடிபட இருக்கிற வர்கள் தரையில் கிடத்தப்படவேண்டும். நம் இரட்ச கர் அடிக்கப்படும் பொழுது, அவரைத் தரையில் கிடத்தவில்லை; அவரை நிற்க வைத்தார்கள். அவரை ஒரு தூணோடு இறுகக் கட்டினார்கள். அந்தத் தூண் இப்பொழுது ரோமையில் இருக்கிறது. அதன் உய ரம் ஏறக்குறைய இருபத்தேழு அங்குலம். அதன் உச்சியில் ஒரு வளையம். இரட்சகரின் திருக்கரங்கள் அதனுள் சேர்த்துக் கட்டப்பட்டன. தமது முதுகை அந்தக் கொடிய சேவகர்களுக்குக் காண்பிக்கும்படி யேசு தாழ குனிய வேண்டியிருந்தது. என் மேற் கொண்ட நேசத்துக்காக அவர் தம்மை கட்டி அடித் தவர்களுக்கு இவ்விதம் தம் உடம்பைக் கையளித் தார். அவரது உடல் முழுவதும் அடிகள் பட்டு எங் கும் ஒரே காயமாகச் செய்யும் நோக்கத்துடன் அவர் பல முறை தம் நிலையை மாற்றும்படி அந்த நிஷ்டூர சேவகர்கள் செய்தார்கள் என்று சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள். அவரது திருக்கரங்கள் சிறிது நேரம் அவருக்கு முன்னால் தூணோடு சேர்த்துக் கட்டுண் டிருந்தன; பிறகு முதுகுக்குப் பின் அவைகளைக் கட்டி வைத்தனர். கைகள் எப்பக்கம் கட்டப்பட்டிருந்த போதிலும் அவர் திருச்சரீரம் நன்றாக வளைந்து கொடுக்க வேண்டியிருந்தது; இது இரட்சகருக்கு அதிக வேதனை கொடுத்தது'. 'அவரைக் கட்டியிருந்த தூண் உயரமானது; வளையம் அதன் உச்சியில் இருந் தது' என வேறு சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். அப்படியானால் முதலில் அவரது கைகளை அந்த வளை யத்துடன் பிணைத்து, முகம் தூணை நோக்கி இருக்கும் படி கட்டி, சரீரத்தின் பின் பாகத்தில் அடித்தார்கள். அது முடிந்ததும் அவரது முதுகு தூணோடு இருக் கும்படி கட்டி, உடம்பின் முன் பாகத்தில் அடித்தார் கள். இவ்விதம் கிறிஸ்து நாதர் சட்டியடிக்கப்பட்ட தாக டிஸ்ஸோ (Tissot) என்னும் கீர்த்தி பெற்ற சித்திரக்காரர் வரைந்திருக்கிறார்.

இவ்விதம் அடிபடும்படி யேசுவைக் கயிறுகளால் கட்டுகையில் அவர் என்ன துயரம் அனுபவித்திருப் பார். மறுபக்கம் திருப்பப்படும்போது அவருக்கு என்ன வேதனையாயிருந்திருக்கும்! அந்த சமயத்தில் என்னையும் என் பாவங்களையும்பற்றி அவர் நினைத் தார். என் பாவங்களை தம்மேல் ஏற்றுக்கொண்டபடியால் தான் அவர் இவ்வளவு வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது.

கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்படும்படி தண் டனை விதிக்கப்படுவது வெகு கேவலம். மிகத்தாழ்ந்த மனிதர்களுக்கும் கேவலமான மிருகங்களுக்குமே இந் தத் தண்டனை விதிக்கப்பட்டது. உரோமர்களின் ஒழுங்குப்படி கட்டியடிபடுதல் வெகு பயங்கரமானது. இவ்வித தண்டனையே நமது இரட்சகருக்கு விதிக்கப் பட்டது. தோல் பின்னல்களையுடைய சாட்டைகள்நுனியில் எலும்பினால் அல்லது ஈயத்தினால் செய்யப் பட்ட ஆணிகள். இவை எலும்புவரை சென்று, சதை யைத் துண்டு துண்டாய்க் கிழிக்கும். உரோமைச் சட்டப்பிரகாரம் அறுபத்தாறு அடிகள் ஒரு குற்றவா ளிக்குக் கிடைக்கும். அடியின் வேதனை தாங்கமாட் டாமல் அநேகர் இறப்பார்கள்; ஏனையோர் சாகும் வரை வேதனை அனுபவிக்க வேண்டியிருக்கும். அறுபது பேர் இருவர் இருவராய் மாற்றி மாற்றி நம் இரட்சகரை அடித்தனர்; அவரை அடித்தது ஒரு மணி நேரமளவாக. பட்ட அடிகள் மொத்தம் ஏறக் குறைய ஆறாயிரம் என்று பாஸி புனித மரியமதலே னாளுடன் சேர்ந்து சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். அப்படியானால் யேசுவை அடித்த சேவகர்களில் ஒவ் வொருவனும் நூறு முறை அவரை அடித்திருக்கிறான். ஒருமணி நேரத்தில் ஆறாயிரம் அடிகளானால் ஒரு நிமிடத்துக்கு நூறு ஆகிறது. இவை எத்தனையென்று நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. ஆனால் ஒரு காரியம் நிச்சயம்; நம்மேல் தமக்குள்ள நேசத்தைக் காண்பிக்க யேசு எவ்வளவு வேதனைப்பட முடியுமோ அவ்வளவு வேதனைகளையும்பட விரும்பினார். அத்தனை வேதனைப் பட்டும் சாகாதபடி அவைகளைத் தாங்குவதற்கு அவ ரது தேவத்துவம் உதவியாயிருந்தது. உலகத்தில் மனிதர் தங்கள் உடலால் செய்கிற பாவங்களை கணக் கிடமுடியாது. முக்கியமாக இந்தப் பாவங்களுக்காக உத்தரிக்கவே யேசு தம் உடல் இத்தனை உபாதைப் பட சித்தமானார். வேதசாட்சியான புனித இஞ்ஞாசி யாரை சத்திய மறைக்காகக் கொல்லும்படி உரோ மைக்கு கூட்டிச் சென்றார்கள். போகும் வழியில் அவருக்கு அடிகளும் நிந்தைகளும் ஆயிரம் கிடைத் தன. “இப்பொழுது தான் நான் கிறிஸ்துநாதருடைய சீடனாயிருக்கிறேன்'' என்று அந்த மகான் அச்சமயம் சொன்னார்.

எவ்வித குரூரத்துடன் யேசுவை அவர்கள் அடித் தார்கள் என்று நான் இப்பொழுது சிந்திக்கப்போகி றேன். யேசுவின் திரு முகம் கற்றூணைப் பார்க்கும் படி கட்டியிருந்தபொழுது முதுகிலும் தோட்பட்டை களிலும், கழுத்திலும், கால்களிலும் அடிகள் விழுந் தன. அவரை மறுபக்கம் திருப்பிக் கட்டியடித்த போது கைகளிலும், மார்பிலும், வயிற்றிலும், முகத் திலும், கால்களிலும் அடிகள் விழுந்தன. எங்கும் ஒரே காயம், இரத்தம். முதலில் தோல் கிழிந்தது; பின் சதையும் கிழிய ஆரம்பித்தது. ஒ! யேசு அந்த சமயத்தில் எவ்வளவு வேதனை அநுபவித்திருப்பார்! உடலெங்கும் தாங்கமுடியாத நோவு. யேசுவின் தாயா ராகிய மரியம்மாள் இந்த குரூர காட்சியை சர்வேசுர னுடைய விசேட அநுக்கிரகத்தினால் தூரத்திலிருந்து பார்த்ததாகவும், யேசுமீது அடி விழுவதைப் பார்த்த தும் அவள் மயங்கி விழுந்ததாகவும், அடித்து முடிந்த பின்னரே அவள் மயக்கம் தெளிந்ததாகவும், சிலர் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக சொல்கிறார் கள். ஆனால் சுவாரஸ் போன்ற பெரிய சாஸ்திரிகள் யேசுவின் பாடுகளின் போது தேவதாயார் ஒருபோ தும் மயங்கி விழுந்தவளல்ல என்கின்றனர். நம் ஆண் டவர் தமது கொடூர பாடுகளின் சமயத்தில் ஒருபோ தும் ஸ்மரணை இழந்தவரல்ல என்று நாம் அறிவோம். இந்த வேதனைகளை யெல்லாம் என் யேசு எனக்காக சகித்தார். என்னை இரட்சிப்பதற்கு அவரது இரத்தத்தில் ஒரு துளியே போதும். எனினும் அவர் என்னை அணைகடந்த விதமாய் நேசித்தபடியால் தமது இரத்தம் முழுவதையும் எனக்காகச் சிந்தலானார்.

இரட்சகரை கற்றூணில் கட்டி அடித்து முடிந்த தும் அவரது கை கால்களை பிணைத்திருந்த கயிறுகளை அவிழ்த்தபோது அவர் எவ்விதம் பலவீனமாய்த் தரையில் விழுந்தாரென்று நான் சிந்திக்கப்போகி றேன். அவரது இரத்தம் அவரைச் சுற்றிலும் தேங் கிக் கிடந்தது. அந்த இரத்தத்தில் அவர் சுருண்டு விழுந்தார். தமது உடைகள் இருந்த இடத்தை நோக் கியே அவருடைய திருக்கரங்கள் சென்றன. கிறிஸ்து நாதருடைய பாடுகளின் போது எச்சமயத்திலாவது உடைகள் அனைத்தையும் அகற்றியதில்லை என்று பெரிய ஆராய்ச்சியாளர் பலர் கூறுகின்றனர். தன் திருக்குமாரனின் பாடுகளின் சமயத்தில் எப்பொழுதா வது உடைகள் சகலமும் எடுக்கப்பட்டதில்லை என்று தேவதாய் அக்ரேதா மரியம்மாளுக்குப் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறாள். எப்பொழுதும் அவரது திரு இடுப்பைச் சுற்றியாவது துணி இருந்தது. எனி னும் தமது திருமேனி பிறராற் பார்க்கப்பட அவர் விரும்பவில்லையாதலின், கற்றூணிலிருந்து விடுபட்ட தும் முதல் வேலையாகத் தமது உடைகளைத் தேடலா னார். நான் அவரைக் கண்டுபா விக்கிறேனா? பலவீனத் தால் நடுங்கிய கரங்களுடன் தமது உடைகளை அணிந்து கொண்டார். இதற்குள் ஏறக்குறைய ஐந் நூறு சேவகர்கள் அவரைச் சுற்றிலும் கூடிவிட்டார் கள். முட்களால் முடி செய்து அவருக்கு அதைச் சூடி அவரைப் பரிகாசம் செய்ய வேண்டுமென்பதே அவர்களது நோக்கம்.

முள் முடியைச் சூட்டு முன் முதலில் அவரது உடைகளை உரிந்து அவைகளைப் பக்கத்திலிருந்த கற் றூணில் அல்லது கல்லாற் செய்யப்பட்ட பெஞ்சின் மீது வைத்தார்கள். அவரை அரசராகப் பரிகாசம் செய்ய அவர்கள் தீர்மானித்தனர். ஒரு பழைய நீல நிறப் போர்வையை அவர்மேற் போட்டார்கள். அரச ருக்குரிய போர்வையைக் குறிக்கும்படி இவ்விதம் செய்யப்பட்டது. அரச செங்கோலுக்குப் பதிலாக அவரது கையில் ஒரு கோல் கொடுக்கப்பட்டது. அரச கிரீடத்துக்குப் பதிலாக சிரசில் ஒரு முள்முடி வைக்கப்பட்டது. கூரிய முட்கள் நிறையப்பெற்ற அந்த முடியை அவர் சிரசினுள் நன்கு அழுத்தினார் கள். அந்த முள் முடியில் எழுபத்திரண்டு. முட்கள் இருந்தன என்று சொல்லப்படுகிறது. அந்த முள் முடியை ஆண்டவரது பாடுகளின் நேரத்தில் பல முறை திருச் சிரசிலிருந்து எடுப்பதும் திரும்ப வைத்து ஆழ அழுத்துவதுமாயிருந்தபடியால் யேசு வின் திருத் தலையில் ஆயிரம் காயங்கள் வரை எற்பட் டன என்று புனித அன் செல்ம் சொல்லியிருக்கிறார். அந்த முட்களில் சில நான்கு அங்குல நீளமுள்ளவை; ஆதலின் அவை ஆண்டவருடைய கன்னங்களையும் கண்ணிதழ்களையும் துளைத்து கண்களையும் புண் ணாக்கிவிட்டன என்று நான் கேள்விப்பட்டிருக் கிறேன்.

பின்னர் சேவகர்கள் யேசுமுன் போய் அவரைப் பரிகாசம் செய்யும்படி முழந்தாளிட்டு வணங்கினார் கள்; முகத்தில் அடித்தார்கள்; தாடி உரோமத்தை இழுத்தார்கள்; முகத்தில் துப்பினார்கள். இவைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது எவ்வளவு பரிதாபமாயிருக் கிறது! “இவர் தான் கடவுள்; இவர் தான் நித்தியத்திற் கும் என்றென்றைக்குமுள்ள நம்முடைய சர்வே சுரன்". (சங். 47-14)

அவருடைய சிருஷ்டிகளுடைய கரங்களிலிருந்து, என்னிடமிருந்து, இத்தனை நிந்தைகள் அவர் அனு பவிக்கையில் அவர் என்ன பாடுபட்டிருப்பார் ! என் யேசுவே, இரக்கமாயிரும். தேவதாய் இவை யாவற் றையும் பார்த்தாள். "அவர் முகத்திலும் உரோமத்தின் வழியாகவும் அநேக சிறு இரத்த ஓடைகள் சென்று அவரது கண்களையும் தாடி உரோமத்தையும் நிரப்பின. எங்கு பார்த்தாலும் இரத்தந்தான்'' என தேவதாய் புனித விறிச் சித்தம்மாளுக்கு காட்சி கொடுத்து சொல்லியிருக்கிறாள்.

'இதோ, மனிதன்! இதோ நான் அவரைப் பார்க் கிறேன். அவர் என் அரசர், என் தலைவர். பிறர் எனக்கு விரோதமாக அபாண்டங்கள் பேசுகையில், குறைகூறுகையில் என் செய்கைகளுக்குத் தப்பர்த் தம் கொடுக்கும்போது, என்னை வெறுத்துப் பகைக் கையில், நான் இவைகளை அவருக்காக, அவரைக் கண்டு பாவித்து, பொறுமையுடன் சகிக்கிறேனா என்று இப்பொழுது யோசிப்பேனாக. நான் என்னை அடக்கி ஆள்கிறேனா? யேசு என் தலைவர்.

கிறிஸ்துநாதர் சிலுவையில் கொல்லப்படும்படி தீர்ப்பிடப்டட்டதைப்பற்றி நான் சிந்திக்கப் போகி றேன். மிக அநீதியான தீர்ப்பு அது! மாசற்றவர் இறக்கவேண்டுமாம்! அக்கிரமியாகிய எனக்காக மாசற்றவர் கொல்லப்பட வேண்டுமாம்! சிலுவையின் பாதையில் அவர் வெகு சிரமத்துடன் நடந்து செல் கிறார். கல்வாரியின் உச்சியில் சேர்ந்ததும் அவரைச் சிலுவையில் அறைகிறார்கள். எவ்வளவு பரிதாபமான காட்சி! அவர் திருமுகம் வெளுத்திருக்கிறது; முக மெங்கும் இரத்தம்; சுத்தியல் கொண்டு அவருடைய கரங்களிலும் கால்களிலும் ஆணிகளையடிக்கையில் கண்ணீர் பெருமூச்சுகளுடன் பிரலாபிக்கிறார் : கைக ளிலும் கால்களிலும் ஏற்படும் பெரிய காயங்களி லிருந்து இரத்தம் ஏராளமாக வெளிவருகிறது; சிலு வையை அதற்கென்று தோண்டப்பட்டிருக்கும் குழி யில் நாட்டுவதற்காக அதை யேசுவுடன் குரூரமாக இழுத்து வருகிறார்கள். சிலுவையை ‘தொப்' என்று போடுகிறார்கள். உடலின் பாரம் கீழே இழுப்பதால் காயங்கள் பெரிதாகின்றன. திருச்சிரசு முன்னால் விழுகிறது; கண் பார்வை மங்குகிறது; சிலுவையிலி ருந்து யேசு உரைத்த ஏழு வசனங்கள்: “பிதாவே, இவர்களை மன்னியும்: தாங்கள் செய்கிறது இன்ன தென இவர்கள் அறியாதிருக்கிறார்கள்''- “இன்றே நீ என்னுடன் பரகதியிலிருப்பாயென்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்''- “அம்மா, இதோ உன் மகன்"-"இதோ உன் தாய்"-"என் சர்வேசுரா, என் சர்வேசுரா ஏன் என்னைக் கைவிட்டீர்?"-"நான் தாக மாயிருக்கிறேன்"-''எல்லாம் முடிந்தது''- “பிதாவே என் ஆத்துமத்தை உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன்'' - இவ்விதம் சொன்ன பின் அவர் தலை குனிந்து உயிர் விடுகிறார். பேசு எனக்காக சிலுவையில் இறந்தார்.

எனக்காகவும் என் ஆத்தும இரட்சிப்புக்காகவும் இரட்சகர் எவ்வளவு கோர வேதனைகள் அநுபவித் துள்ளார் என்பதை நான் ஒருக்காலும் சரிவரக்கண்டு பிடிக்க முடியாது. புனித ஐந்து காய பிரான்சிசைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தமக்குக் கொடுக் கப்பட்ட காயங்களினால் ஏற்படும் வேதனையை சகிப் பதைவிட, உலகத்திலேயே மிகக் கொடிய மரணத் தைச் சகிப்பது அதிக எளிது என்று அவர் சொல் வார். எனினும் யேசுவைப் போல் பிரான்சிஸ் ஆணி களால் சிலுவையில் அறையப்பட்டதில்லை.

எனக்கு வரும் துன்பங்களைப்பற்றி நான் ஒருக் காலும் முறையிடமாட்டேன். வேத சாட்சியான புனித இராயப்பர் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை வாசத்தினால் ஏற் பட்ட களைப்பையும் தவிப்பையும் சகிக்கமாட்டாமல் அவர் ஒரு நாள் பாடுபட்ட சுரூபத்துக்கு முன் சென்று முறையிட்டார். "ஆண்டவரே, நான் இந்த சிறையில் சதா இருந்து துன்பப்படும்படி உமக்கு என்ன தீமை செய்தேன்?'' என்று அவர் சிலுவையில் அறையப்பட்ட யேசுவைப் பார்த்துக் கேட்டார். ''இராயப்பா, இந்தச் சிலுவையில் தொங்கும்படி நான் என்ன தீமை செய்தேன்?" என்று யேசு பதிலளித் தார். இந்த அதிசயத்துக்குரிய பதிலைக் கேட்டதும் இராயப்பர் முறையிட்டதற்காக தாழ்ச்சி அழுகை யுடன் யேசுவிடம் மன்னிப்புக் கேட்டார்.

சோதனை வரும்போது பாடுபட்ட சுரூபத்தை நான் என் முன் வைத்திருப்பேன். பரிசுத்தவானான ஒரு மனிதர் இருந்தார். ஒரு நாள் இரவு அவருக்கு பொல்லாத சோதனை வந்தது. கெட்ட சிநேகிதன் ஒரு வனுடன் அன்றிரவே பேச ஆசை உண்டாயிற்று உடனே புறப்பட்டார். தமது வீட்டு விராந்தாவில் நடந்து செல்கையில், பாடுபட்ட யேசு விரித்த கரங் களுடன் அவருக்கு எதிராக வந்து அவரைத் தடுத் தார். மறுபக்கத்து விராந்தா வழியாய் அம்மனிதன் வெளியேற முயற்சித்தார். அங்கேயும் யேசு தடுத் தார். இன்னொரு முறையும் வெளியே செல்ல முயற் சிக்கையிலும் யேசு வந்து அவருக்கு எதிராக நின் றார். பாடுபட்ட யேசு விரித்த கரங்களுடன் அவரைக் கெஞ்சினார். அப்படியே அவர் மயங்கி விழுந்துவிட் டார். அந்த நிலையில் விடியற்காலையில் நண்பர்கள் அவரைப் பார்த்தார்கள். அன்றிலிருந்து அந்த துர்ச் சோதனைக்கு அவர் இடம் கொடுத்ததில்லை.

பாடுபட்ட சுரூபத்தை நான் பார்க்கும்பொழு தெல்லாம் நான் மோட்சம் செல்வேன் என்பதற்கான நம்பிக்கையை நான் அங்கு பார்ப்பேன். பெர்நார்து பரிசுத்தவான். அவர் வியாதியாய் விழுந்தார். அப் பொழுது அவர் ஒரு காட்சி கண்டார், சர்வேசுர னுடைய நீதியாசனத்தின் முன் அவர் நின்றார். பசாசு ஒரு பக்கத்தில் நின்று பெர்நார்தின் மீது குற்றம் சாட்டியது. அவர் செய்த பாவங்களை எடுத்துக் கூறி அவர் மோட்ச பாக்கியம் பெற தகுதியுள்ளவரல்ல என்று சொன்னது. “நான் பரகதி செல்ல பாத்திரவானல்ல என்பது உண்மையே. ஆனால் யேசுவுக்கு பர லோக இராச்சியத்தின் மீது இருவித உரிமைகள் உண்டு. முதலாவது, அவர் சர்வேசுரனுடைய சுதன்: இரண்டாவது, தமது மரணத்தால் அதை அவர் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். முதலாவது உரிமையே அவருக்குப் போதும், இரண்டாவது உரிமையை அவர் எனக்குக் கொடுக்கிறார். ஆதலின் பரகதி செல்ல எனக்கு உரிமை உண்டு. அது எனக் குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு " என பெர்நார்து பதிலளித்தார்.

உன் இருதயத்தில் தேவ சிநேகம் அக்கினிபோல் பற்றி எரிய வேண்டுமானால், யேசுக்கிறிஸ்துநாத ருடைய மரணத்தைப்பற்றி நினைப்பது போல் சிறந்த வழி வேறு கிடையாது என்று யேசு ஒரு தபோதன ருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பாடுபட்ட சுரூபத் தை நாம் பக்தியோடு நோக்கும் பொழுதெல்லாம் யேசு நம்மை நேசத்துடன் நோக்குகிறார் என்று அர்ச். ஜெர்த்துருத்தம்மாளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவருடைய திருப்பாடுகளைப் பற்றி சிந்திப்பது அல்லது வாசிப்பது மற்ற பக்தி முயற்சிகளை விட நமக்கு அதிக பலன் கொடுக்கிறது என்று ப்ளோஸி யுஸ் என்ற மகான் சொல்கிறார். “ஓ! நேசிக்கப்பட பாத்திரமான ஆண்டவரின் பாடுகளே, உன்னைப் பற்றிச் சிந்திப்பவர்களை நீ தெய்வீகமாக்குகிறாய்!'' என்று அர்ச் பொன வெந்தூர் கூறுகிறார். சிலுவையில் அறையுண்ட யேசுவின் காயங்களைப்பற்றி பேசுகை யில் "இந்தக் காயங்கள் மிகக் கடின இருதயத்தையும் துளைத்துச் செல்லும். மிகக் குளிர்ந்த ஆத்துமங்களை யும் தேவ நேசத்தால் பற்றி எரியச் செய்யும் " என்று இந்த அர்ச்சியசிஷ்டர் கூறுகிறார்.