மனித அவதாரம் நியமம் செய்யப்படுகிறது!

42. மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் இந்த நேசமுள்ள மூன்று இராஜரீக தேவ ஆட்களும் ஒன்று கூடுவதை நான் பார்ப்பதாகத் தோன்றுகிறது. ஒரு பேச்சு முறைக்கு, முன்பு தாம் சிருஷ்டித்த போது மனிதன் இருந்த நிலையில் அவனை மீண்டும் ஸ்தாபிக்கும் நோக்கத்தோடு அவர்கள் இரண்டாவது முறையாக ஒன்று கூடு கிறார்கள். இந்த தேவ ஆட்களின் உன்னதமான கூட்டத்தில் நித்திய ஞானமானவருக்கும், கடவுளின் நீதிக்குமிடையே ஒரு வகையான போட்டி நிலவுவதைக் கற்பனை செய்து பார்க்க நம்மால் முடிகிறது. 

43. மனிதனுக்கு ஆதரவாக வேண்டுகோள் விடுக்கும் நித்திய ஞானமானவர், பாவத்தால் மனிதனும், அவனது சந்ததியார் அனை வரும் தண்டனைத் தீர்ப்புப் பெறவும், கலகம் செய்த சம்மனசுக் களோடு நித்தியம் முழுதையும் கழிக்கவும் தகுதியானவர்களே என்பதை ஒப்புக்கொள்வதை நான் கேட்பதாகத் தோன்றுகிறது. என்றாலும், மனிதன் கெடுமதியால் அன்றி, தன் அறியாமை யாலும், பலவீனத்தினாலுமே பாவம் செய்தான் என்பதால் அவனுக்கு இரக்கம் காட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறு கிறார். ஒரே ஒரு மனிதனின் பாவத்தால், இத்தகைய மிக உத்தம மான, அதியற்புதப்படைப்பு என்றென்றும் பசாசின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதும், அந்த ஒரே பாவத்தின் காரணமாக, கோடான கோடிக்கணக்கான மனிதர்கள் நித்தியத்திற்கும் இழக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு மிகப் பரிதாபத்திற்குரிய காரியமாகவே இருக்கும் என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். மேலும், தங்கள் விசுவாசத்தை மறுதலித்த கலகக்கார சம்மனசுக் களின் வீழ்ச்சியால் வெறுமையாக விடப்பட்ட பரலோக ஆசனங் களையும் அவர் மற்ற தேவ ஆட்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். இந்த இடங்கள் நிரப்பப்படுவது தகுதியானதாக இருக் காதா? மனிதன் மீட்டு இரட்சிக்கப்பட்டால், காலத்திலும், நித்தியத்திலும் கடவுள் அதிகமான மகிமையைப் பெற்றுக் கொள்ள மாட்டாரா? 

44. மரணத் தீர்வையும், நித்திய சாபமும் மனிதனுக்கும், அவனது சந்ததிக்கும் எதிராக உச்சரிக்கப்பட்டு விட்டன என்றும், லூசிபருக்கும், அவனைப் பின்சென்றவர்களுக்கும் நடந்தது போலவே, மன்னிப்போ இரக்கமோ இன்றி இந்த மரணத் தீர்வையும், நித்திய சாபமும் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதியின் சர்வேசுரன் பதிலளிப்பதை நான் கேட்பதாக எனக்குத் தோன்றுகிறது. மனிதன் தான் பெற்றுக் கொண்ட கொடைகளுக்குத் தான் நன்றி கெட்டவன் என்பதைக் காட்டி விட்டான், அவன் ஆங்காரத்திலும், கீழ்ப்படியாமையிலும் பசாசைப் பின் சென்றிருக்கிறான், ஆகவே தண்டனையிலும் அவன் பசாசைப் பின் செல்ல வேண்டும், ஏனெனில் பாவம் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். 

45. மனிதனின் பாவத்தைப் பூமியின் மீதுள்ள எதனாலும் பரிகரிக்க முடியாது என்றும், தேவநீதியைத் தணிக்கவோ, கடவுளின் கோபத்தை சாந்தப்படுத்தவோ முடியாது என்பதை நித்திய ஞான மானவர் காண்கிறார், ஆனால் இன்னமும் கூட, தாம் அளவற்ற விதமாக நேசிக்கிற பரிதாபத்திற்குரிய மனிதனை இரட்சிக்க விரும்புகிற அவர், அதைச் செய்து முடிக்க, கற்பனைக்கும் எட்டாத ஓர் அதிசயமான வழியைக் கண்டுபிடிக்கிறார்.

ஆ! அதிசயங்களில்ெலாம் பேரதிசயமே! மட்டற்றதும், விளங்கிக் கொள்ள முடியாததுமான நேசத்தோடு, இந்தக் கனிவும் கருணையும் நிறைந்த ஆண்டவர், தமது நீதிக்கு இணங்கி, தேவ கோபத்தை சாந்தப்படுத்தவும், பசாசின் அடிமைத்தனத்தில் இருந்தும், நித்திய அக்கினிச் சுவாலைகளிலிருந்தும் நம்மை விடுவிக்கவும், நித்தியப் பேரின்பத்தை நமக்குப் பெற்றுத் தரவும் தம்மையே கையளிக்க முன்வருகிறார்! 

46. அவரது விருப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு முடிவு எட்டப்படுகிறது, தீர்மானிக்கப்படுகிறது. சர்வேசுரனுடைய திருச் சுதனாகிய நித்திய ஞானமானவர் பொருத்தமான நேரத்திலும், தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் மனிதனாக அவதரிப்பார். உலக சிருஷ்டிப்பு மற்றும் ஆதாமின் பாவம் தொடங்கி, தேவ ஞானமானவரின் மனித அவதாரம் வரை, சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக, ஆதாமும், அவருடைய சந்ததியாரும், கடவுள் நியமம் செய்திருந்தபடியே மரணத்திற்கு உட்பட்டிருந்தார்கள். ஆயினும் காலத்தில் நிறைவேற இருந்த தேவசுதனின் மனிதாவ தாரத்தை முன்னிட்டு, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், தங்கள் சொந்த மீறுதல்களுக்கு உரிய முறையில் தபசு செய்யவும் தங்களுக்குத் தேவையான வரப்பிரசாதங்களை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். தேவ இஷ்டப்பிரசாத நிலையிலும், கடவுளுட னான நட்பிலும் அவர்கள் இறந்தார்கள் என்றால், தங்களுக்காக மோட்சத்தின் கதவுகளைத் திறக்க இருந்த தங்கள் இரட்சகரும், விடுவிப்பவருமானவரின் வருகைக்காகக் காத்திருக்கும்படி அவர்களது ஆத்துமங்கள் லிம்போவுக்குச் சென்றன.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...