வேண்டாத வாசல்

பணக்காரனான வியாபாரி ஒருவன் ஒரு நகரில் வாழ்ந்து வந்தான். அவன் அழகிய ஓர் வீடு கட்டத் தீர்மானித்தான். அது நகரின் மிக அழகு வாய்ந்த பகுதியில் கட்டப்பட வேண்டும் அதற்காக பெருந் தொகை கொடுத்து விசாலமான இடத்தை வாங்கினான். அதில் பெரியதோர் வீட்டை எழுப்பினான். விலை உயர்ந்த பொருட்கள் அந்த வீட்டில் வைக்கப்பட்டன. வெகுதொலைவிலிருந்து ஆட்களைக் கொண்டு வந்து வீட்டை அலங்கரித்து வைத்தான். வெப்பமோ குளிரோ தோன்றாவண்ணம் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

வேலை அனைத்தும் முடிந்தது. வீட்டிற்கு வேண் டிய சாமான்கள் யாவும் வாங்கி வைக்கப்பட்டன. தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரன் புது வீட்டில் விருந்து அளிக்கத் தீர் மானித்து அதற்கென ஒரு நாளைக் குறிப்பிட்டு, அவர் களை விருந்துக்கு அழைத்தான். அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டு அந்த செல்வந்தனைப் பாராட்டினார் கள். “இத்தகைய அழகிய வீட்டையும் பொருட்களை யும் நாங்கள் எங்குமே பார்த்ததில்லை என்று சொல் லிப் போனார்கள்.

அந்த அழகிய வீட்டைப் பார்க்க ஒவ்வொரு நாளும் மக்கள் வந்தனர். பணக்காரன் பெருமையுடன் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று காட்டினான். அவர்கள் யாவருமே அவனை வாழ்த்தி னார்கள். இது அவனுக்கு மிக மகிழ்ச்சியை அளித் தது. இவ்விதம் பல வாரங்களாக நடந்தது. இறுதி யாக அவன் அந்த வீட்டில் குடி புகுந்தான்.

பல மாதங்கள் கடந்தன. ஒரு நாள் சந்நியாசி ஒரு வர் அந்த வீட்டின் பக்கமாகச் செல்லநேரிட்டது. அழ கிய அந்த வீட்டையும் அதன் அருகில் இருந்த தோட் டத்தையும் கவனித்த அவர், செல்வந்தன் ஒருவன் அங்கு வாழ்ந்து வந்தான் என்று அறிந்தார். தோட் டத்தில் நுழைந்து காவற்காரனைக் கண்டு வீட்டின் சொந்தக்காரனைத் தான் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். செல்வந்தன் இறங்கி வந்து, சந்நியாசி யாரைத் தன் வீட்டினுள் அழைத்தான். ஒவ்வொரு இடமாய் அவருக்குக் காட்டினான். அவர் அனைத்தை யும் பார்த்தார். பின்னர் “இந்த வீட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என சந்நியாசியாரிடம் அவன் கேட்டான்.

''இந்த வீடு மிக மிக அழகு வாய்ந்தது. இது எனக்கு மிகப் பிடித்தமாயிருக்கிறது'' என அவர் சொன்னதும் பணக்காரன் மிக ஆனந்தம் கொண் டான். சந்நியாசியார் தமது அபிப்பிராயத்தைச் சொல்லி முடிக்கவில்லை. அவர் தொடர்ந்து பேசினார். “இந்த வீட்டில் ஒரே ஒரு குறை இருக்கிறது. வேண் டாத வாசல் ஒன்று இருக்கிறது. அது இருக்கக் கூடாது. அதை எப்படியாவது அடைத்து விடவேண் டும். நிறைவு று மகிழ்ச்சியுடன் நீர் இந்த வீட்டில் வாழவிரும்பினால் அந்தவாசலை அப்படியே அடைத்து விடவேண்டும். அப்படியானால் மாத்திரமே நீர் பூரண மகிழ்ச்சியுடன் இங்கு வாழ முடியும்” என்றார். -

பணக்காரன் திகைத்தான். " அந்த வாசல் எங்கே?'' என்று கேட்டான். சந்நியாசியார் அவனை உற்று நோக்கினார். ''அதை நான் சொல்லட்டுமா?'' என்றார். 'தயவுசெய்து தெரிவியுங்கள். அதை எப்படி யாவது அடைத்து விடுவதாக உறுதி கூறுகிறேன்'' என பணக்காரன் கெஞ்சிக் கேட்டான்.

நீ இறந்த பின் எந்த வாசல் வழியாக உன் உடலைத் தூக்கிக் கொண்டு போவார்களோ அந்த வாசலையே நான் குறிப்பிடுகிறேன். அந்த வாசல் திறந்திருக்கும் வரை நீ பூரண மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது, ஏனெனில் இந்த வீட்டில் நீ நெடுங்காலம் வாழ முடியாது. ஒரு நாள் இந்த வீடு வெறுமனாகும் என நீ அறிவாய்” என்று சந்நியாசியார் கூறினார்.

பள்ளிக் கூடத்தில் விளையாட்டுப் போட்டி நடக்க இருக்கிறது சாக்கு கட்டி ஓட ஆனந்தம் தன் பெய ரைக் கொடுத்திருக்கிறான். ஆனால் விளையாடும் நாள் வரும் வரை விளையாட்டைப் பற்றி அவன் நினைக்கவே இல்லை. சாக்கு கட்டி ஓடப்பழகவுமில்லை. என்ன நேரிடும்? அவன் என்ன செய்யவேண்டும்?

வசந்தம் வகுப்பில் பாடங்களைப்படிப்பதே கிடை யாது. பரீட்சையைப் பற்றி அவள் நினைப்பதே இல்லை. இவ்விதம் இருந்தால் அவளுக்கு என்ன நேரிடும்? அவள் என்ன செய்ய வேண்டும்?

நிரஞ்சனுடைய தந்தை ஒரு விமானத்தில் வேலை செய்து வருகிறார். விமானத்தை ஓட்டுகிறவர் அவரே. எனினும் விமானம் நீண்ட பிரயாணத்துக் காக விமான நிலையத்தை விட்டுப் புறப்படுமுன், எல்லாம் சரியாயிருக்கிறதா என்று அவர் பார்ப்ப தில்லை, எண்ணெய் போதுமா என்றும் அவர் கவ னிக்கமாட்டார். விமானத்துக்கும் அதில் இருப்பவர் களுக்கும் என்ன நேரிடும்? அவர் செய்ய வேண்டி யது என்ன?

“சாவைப்பற்றி நான் நினைப்பதே கிடையாது. ஏனெனில் அது பயங்கரமானது. நான் கிழவனை பின், எனக்கு நோய் வரும். கோயாயிருக்கும் போது சாவைப் பற்றி நினைக்க போதிய நேரம் இருக்கும். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்' என்று ஒருவன் உன்னிடம் சொல்கிறான். அவனிடம் என்ன சொல்வாய்? சாவு திடீரென வரும். சாவுக்கு எப் பொழுதும் தயாராயிருக்கவேண்டும் என்று எடுத்துக் கூறு.