இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - பேய் ஓட்டுதல்

ஒரு நாள் அப்போஸ்தலர் பட்டணத்திலிருந்து வெளியே போய்க் கொண்டிருக்கையில் ஒரு பெண்ணைக் கண்டார். அவளுக்குப் பேய் பிடித்திருந்தது. 

அதனிமித்தம் கீழே விழுந்து புரண்டு கொண்டு கிடக்கையில் அவளிடமிருந்த பேயானது, “கிறிஸ்துவின் அப்போஸ்தலரே! ஏன் எங்களை வாதிக்கின்றீர்? இப்போது எங்களைத் துரத்தி அடிக்க வந்திருக்கிறீரே'' என்று பரிதாபமாக ஒலமிட்டது. 

இதைக் கேட்ட தோமையார், "சாத்தானே! இப் பெண்ணின் உடலுக்கு யாதொரு தீங்கும் விளைவிக்காமல் அவளை விட்டு உடனே அகன்று போகும்படி எம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளை இடுகிறேன்'' என்றார். 

அதைக் கேட்ட பசாசு மன எரிச்சலுடன், "இந்தப் பெண்ணை விட்டுப்போகும்படி கட்டளையிட்டிருக்கின்றீர். ஆனால் இவளை விட உயர்ந்த நிலைமையிலுள்ள வேறொரு பெண்ணைப் பற்றிக்கொள்வேன்'' என்று கூறிக்கொண்டே ஓட்டம் பிடித்தது. 

அதற்குப்பின் அப்பெண் எழுந்து நின்றாள். தோமையார் தம் கரங்களை அவள் தலையின் மேல் வைத்து ஆசீர்வதித்து, "கடவுளது கருணை உனக்கு எப்போதும் இருக்கக்கடவது' என்று உரைத்தார். 

அவளோ அப்போஸ்தலர் பாதத்தில் தெண்டனிட்டு, ஞான தீட்சை கொடுக்கும்படி ஆவலுடன் அவரை மன்றாடினாள். 

தோமையார் உடனே ஒரு நீர் ஊற்றை ஆசீர்வதித்து, அவளுக்கும் வேறு சிலருக்கும் இந்நற்பலனை மனமுவந்து அளித்தார்.