இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அந்த அசுத்த இன்பத்திற்காகவும், திருப்திக்காகவும் ஓராயிரம் அரச மகுடங்களை இழக்கும் ஆபத்துக்கு உட்படுவாயா?

அந்த அசுத்த இன்பத்திற்காகவும், திருப்திக்காகவும் ஓராயிரம் அரச மகுடங்களை இழக்கும் ஆபத்துக்கு உட்படுவாயா? நான் இன்னும் சொல்கிறேன்: அந்தக் கணநேர இன்பத்திற்காக, பணம், வீடுகள், நிலச் சொத்துக்கள், சுதந்திரம், உயிர் ஆகிய எல்லாவற்றையும் விட்டு விடுவாயா? மாட்டாய். 

அப்படியிருக்க, அந்த இழிவான கண நேர இன்பத்திற்காக, ஆன்மாவையும், மோட்சத்தையும், கடவுளையும் இழந்து போகும் ஆபத்துக்கு ஏன் உட்படுகிறாய்? எனக்குச் சொல்: ஒரு மோட்சமும், ஒரு நரகமும் ஒரு நித்தியமும் இருக்கின்றன என்று விசுவாசத்தால் கற்பிக்கப்படும் இக்காரியங்கள் சத்தியங்கள்தானா, அல்லது அவை வெறும் கட்டுக் கதைகளா? நீ பாவத்தில் இருக்கும்போது, மரணத்தால் வெற்றி கொள்ளப்படுவாய் என்றால், நித்தியத்திற்கும் இழக்கப்பட்டு விடுவாய் என்பதை நீ விசுவசிக்கிறாயா? அப்படியானால், "நான் பிற்பாடு இதையெல்லாம் சரிசெய்து கொள்வேன்'' என்று சொல்லிக் கொண்டு, வேதனை மிகுந்த ஒரு நித்தியத்திற்கு உன்னையே நீ தீர்ப்பிட்டுக் கொள்வது எத்தகைய அசட்டுத் துணிச்சலும், எத்தகைய மடமையுமாக இருக்கிறது! "குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கையில் யாரும் நோயில் விழ விரும்புவதில்லை'' என்கிறார் அர்ச். அகுஸ்தீனார். ""பிறகு மாற்று மருந்து சாப்பிட்டு குணமடைவேன்'' என்று சொல்லிக் கொண்டு எவனும் விஷத்தை விழுங்குவதில்லை. ஆனால் நீயோ, ""ஒருவேளை நித்திய சாவினின்று என்னை நான் பிற்பாடு விடுவித்துக் கொள்வேன்'' என்று சொல்லிக் கொண்டு, அந்தச் சாவிற்கு உன்னைத் தீர்ப்பிட்டுக் கொள்கிறாய்! ஓ எத்தனையோ ஆன்மாக்களை நரகத்தினுள் வீழ்த்தியதும், இன்னும் வீழ்த்திக் கொண்டிருப்பதுமான மடமையே! ""உன் தீய குணத்தில் நம்பிக்கை வைத்தாய்... தின்மையானது உன் மேல் பாயும், சஞ்சலம் உன்மேல் பெருக்கெடுக்கும், அதை பரிகரிக்க உன்னால் இயலாது போகும்'' (இசை.47:10,11) என்ற ஆண்டவரின் அச்சுறுத்தும் வார்த்தைகளின்படி, தேவ இரக்கத்தில் அவசரத்தோடும், மிதமிஞ்சியும் நம்பிக்கை கொண்டு நீ பாவம் செய்தாய்; ஆகவே, தண்டனை எங்கிருந்து வருகிறது என்று நீ அறியாமலே அது உன்மீது திடீரென்று விழும்.

"ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை வைத்தேன். நான் வெட்கமடைய அனுமதியாதேயும்.'' ஆ, இல்லை! ஓ என் மீட்பரே, உமது வரப்பிரசாதமும், உமது அன்பும் விலக்கப்பட்ட நிலையில் என்னைக் காணும் அவமானமும், கலக்கமும் உள்ள நிலையை நான் மீண்டும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டேன் என்று நம்பியிருக்கிறேன். பரிசுத்த நிலைமை வரத்தை எனக்குத் தாரும்; எப்போதும், குறிப்பாக சோதிக்கப்படும்போதும், ""என் சேசுவே, எனக்கு உதவியாக வாரும், என் தாயாரான மாமரியே, எனக்கு உதவியருளும்'' என்று ஜெபித்து, இந்த வரத்தை உம்மிடமும், உமது பரிசுத்த மாதாவிடமும் மன்றாடிக் கேட்கவும், உதவிக்காக உமது திருப்பெயரைக் கூவியழைக்கவும் எனக்கு வரமருளும். ஆம், என் இராக்கினியே, ஏனெனில் நான் உம்மிடம் தஞ்சமடைந்திருக்கும் வரையிலும் நான் வெற்றிகொள்ளப்பட மாட்டேன். சோதனை தொடரும் என்றால், உமது திருப்பெயரைக் கூவியழைப்பதில் நிலையாயிருப்பதை நான் ஒருபோதும் நிறுத்தி விடாதிருக்கும் வரத்ç எனக்குப் பெற்றுத் தாருங்கள்.