இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியில் உலகத்தின் இரட்சணியம்!

 ஜூலை 4, 1943

சேசு கூறுகிறார்:

திவ்விய நற்கருணை என் திரு இரத்தமும், என் திருச்சரீரமும் ஆகும். ஆனால் இந்த இரத்தமும், இந்த சரீரமும் மாமரியின் திரு இரத்தத்தாலும், தாயமுதாலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

பரலோகத்தைத் தன் திருவுதரத்திற்குள் ஏற்றுக் கொண்டு, பரிசுத்த ஆவியானவருடன் தனது தெய்வீகத் திருமணத்திற்குப் பிறகு, பிதாவின் வார்த்தையானவரை மாசற்ற வெண்மையுள்ள தன் மாம்சத் தைக் கொண்டு உடுத்தியவர்களாகிய மகா பரிசுத்த கன்னிகை, இரட்சகருக்குப் பிறப்பளித்ததோடு நின்று விடவில்லை. மாறாக அவர்கள் தனது தாய்ப்பாலைக் கொண்டு அவரைப் போஷித் தார்கள். என்னை உணவாக உட்கொள்ளும் மனிதர்களாகிய நீங்கள், என்னில் இரத்தமாக மாறிய மாமரியின் தாயமுதை அருந்தும் படியாக அவர்கள் என்னை இப்படிப் போஷித்தார்கள்.

கன்னிமையுள்ள தாய்ப்பால். அப்படியிருக்க, இந்த மாசற்ற தாயமுது என் இரத்தத்தோடு சேர்ந்து உங்களுக்குள் இறங்குகிறது என்றால், நீங்கள் எப்படி மிக அடிக்கடி மாம்சத்திற்கு அடிமைகளாகவே நிலைத்திருக் கிறீர்கள்? பரலோகப் பரிசுத்ததனத்தின் ஊற்று ஒன்று தனது அலைகளை உங்களுக்குள் பொழிந்தது போன்றது இது. அதனால் நீங்கள் சுத்திகரிக்கப்படவில்லையா? திவ்விய கன்னிகையின் தாய்ப்பாலும், உங்கள் இரட்சகரின் திரு இரத்தமும் உங்களுக்குள் பாய்கிறது என்றால், நீங்கள் எப்படித் தவற முடிகிறது? என் திருப்பந்தியை நீங்கள் அணுகி வருவது, என் திருமாதாவின் மகா கற்புள்ள மார்பில் நீங்கள் பாலருந்த வருவதற்கு சமமானது.

எங்களை மிக அதிகமான நேசிக்காத குழந்தைகளே, இதை சிந்தியுங்கள். நான் எங்கிருந்து எனக்குரிய உணவைப் பெற்றுக் கொண்டேனோ, அதே திருமார்பிலிருந்து நீங்களும் பாலருந்துவதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் தாயிடம் பாலருந்தும் குழந்தைகளைப் போல உங்களிலும் உயிர் வளர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நீங்கள் வளரவும் வலுப் பெறவும் வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு பாலூட்டும் தாதியின் பால் இலெளகீக உயிரோடு சேர்த்து, நல்லொழுக்க நாட்டங்களையும் ஊட்டுகிறது. அனைத்திலும் அதிக பரிசுத்தமான திருமார்பினால் போஷிக்கப்படும் நீங்கள் ஞான முறையில் மாமரியின் சாயலைப் பெறாதவர்களாக இருப்பது எப்படி? அவர்கள் தன் மார்போடு உங்களை அணைத்துக் கொள்கிறார்கள் - நீங்கள் நன்கு போஷிக்கப்படாத, நோயுற்ற, கழுவப்படாத குழந்தைகளாக இருப்பதால். அவர்கள் உங்களைக் கழுவி சுத்தம் செய்கிறார்கள், உங்களுக்கு உணவளிக் கிறார்கள், அதன்பின் தனது தலைப்பேறான திருமகனிடம் உங்களைத் தூக்கி வருகிறார்கள், ஏனெனில் நீங்கள் அவரை நேசிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.

மாமரி உங்கள் மீது அக்கறை கொண்டிராவிட்டால், அவர்கள் உங்களுக்காக ஜெபிக்காமல் இருந்திருந்தால், மனுக்குலம் எப்போதோ அழிந்து போயிருக்கும். நான் அதை ரத்துச் செய்திருப்பேன். ஏனெனில் நீங்கள் வாழும் முறை உண்மையாகவே தீமையின் அடியாழங்களைத் தொட்டு விட்டது. நீதி காயப்படுத்தப்படுகிறது, பொறுமை எல்லா வரம்புகளையும் கடந்து விட்டது, தண்டனை தயாராக இருக்கிறது. ஆனால் மாமரி அங்கே இருக்கிறார்கள், அவர்கள் உங்களுக்குத் தன் மேற்போர்வையின் கீழ் அடைக்கலம் தந்திருக்கிறார்கள். ஒரு சாதாரணப் பார்வையைக் கொண்டு, பரலோகம் முழுவதையும் முழந்தாளிடச் செய்யவும், நட்சத்திரங்களை நடுங்கச் செய்யவும் என்னால் முடியும், ஆனால் என் மாசற்ற தாய்க்கு எதிராக என்னால் எதுவும் செய்ய இயலாது.

நான் அவர்களுடைய கடவுள், ஆனாலும் நான் எப்போதும் அவர்களுடைய குழந்தையாகவே இருக்கிறேன். பச்சிளங்குழந்தை யாக என் முதல் உறக்கத்திலும், என் மரணத்தின் இறுதி உறக்கத் திலும் நான் அந்த மாசற்ற இருதயத்தின்மீதுதான் இளைப்பாறி னேன். அந்த இருதயத்தின் சகல இரகசியங்களையும் நான் அறிந் திருக்கிறேன். ஆகவே, உங்களைத் தண்டிப்பது என்பது, மனுக்குலத் தின் திருமாதாவுக்கு, அந்த உண்மையான தாயாருக்கு, கத்தியால் குத்தப்படுவதற்கு நிகரான வேதனையைத் தரும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில் உங்களைத் தன் திருமகனிடம் அழைத்து வர தன்னால் முடியும் என்று அவர்கள் எப்போதுமே நம்புகிறார்கள்.

நான் அவர்களுடைய கடவுள், ஆனால் அவர்களோ என் தாயாராக இருக்கிறார்கள். சகலத்திலும் உத்தமமானவராகிய நான் இதிலும், அதாவது என் தாய்க்குரிய நேசத்தை அவர்களுக்குத் தருவதிலும், உங்கள் குருவாக இருக்கிறேன். இன்னும் விசுவசிப்பவர் களாக உலகத்தில் இருப்பவர்களிடம், ""உலகத்தின் இரட்சணியம் மாமரியிடம் உள்ளது'' என்று நான் சொல்கிறேன்.

கடவுளைக் கொலை செய்பவர்களும், உங்கள் சகோதரரைக் கொலை செய்பவர்களும், திருச்சட்டத்தை உடைத்து நொறுக்குபவர்களும், முறைகெட்ட அசுத்த உறவு கொள்பவர்களும், விபச்சாரம் செய்பவர்களும், திருடர்களும், தீமையின் ஒரு குகையாக இருப்பவர்களுமாகிய நீங்கள் கட்டிக்கொள்ளும் குற்றங்களின் பேரலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டே வருவதால், உங்களை விட்டு விலகி, மோட்சத்தின் உள்ளாழங்களுக்குள் கடவுள் எப்படிப் பின்வாங்கிச் செல்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றால் - அச்சத்தால் நடுநடுங்கியிருப்பீர்கள். ஆனால் நீங்கள் மூடர்களாக மாறி விட்டீர்கள்.

முன்பு நானே உலகத்திற்கும், பரலோகத்திற்கும் இடையே பாலமாக இருந்தேன். ஆனால் உண்மையாகவே தீமையில் நீங்கள் பிடிவாதமாக நிலைத்திருப்பதைக் கண்டு, ""நேரம் இன்னும் வந்திருக்கவில்லை'' என்பதால், கிறீஸ்துநாதர் முன்பு ஜெருசலேமி லிருந்து விலகிச் சென்றது போல, இப்போது உங்களிடமிருந்து விலகிச் செல்கிறார். கிறீஸ்துநாதர் தம் நேரத்திற்காகக் காத்திருந்த படி, நீங்கள் தீமை செய்யும்படியாக, உங்கள் தீமைக்கே உங்களைக் கையளித்து விட்டு விலகிச் செல்கிறார்.

இனி, மாமரி மட்டுமே எஞ்சியுள்ள ஒரேயொரு பாலமாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களையும் வெறுத்துத் தள்ளு வீர்கள் என்றால், அப்போது நீங்கள் நசுக்கப்படுவீர்கள். சர்வேசுர னுடைய திருச்சுதனும், உலகத்தின் இரட்சகருமாகிய என்னைக் கருத் தாங்கும்படி யார்மீது இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருளி வந்தாரோ, அந்த மகா பரிசுத்த ஸ்திரீ இழிவுபடுத்தப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்.''


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...