கர்த்தர் கற்பித்த மன்றாட்டு

கிறிஸ்துநாதர் மலை மேல் செய்த பிரசங்கத்தில் இந்த மன்றாட்டைக் கற்பித்தார். இது மற்றெல்லா மன்றாட்டுகளையும் விட உயர்ந்தது; ஏனெனில் கடவுளே இதைக் கற்பித்தார். ஜெபிக்கும் விதத்தை நமக்குப் படிப்பிக்கும்படி இதைச் சொல்லிக்கொடுத்தார்.

இந்த ஜெபத்தை ஜெபிக்கத் தொடங்குமுன் திரியேக கடவுளின் சமூகத்தில் நான் இருப்பதாக உரூபிகரித்துக்கொள்வேன். பரிசுத்த திரித்துவத்தின் ஒவ்வொரு ஆளை நோக்கியும் இந்த ஜெபத்தைச் சொல்லலாம். எனினும் இந்த ஜெபத்தைத் தக்க விதமாக சொல்லும்படி, இதில் அடங்கியுள்ள உண்மைகளையும் ஞானக் களஞ்சியங்களையும் நான் அறியும்படி, நான் கேட்கவேண்டுமென விரும்பும் காரியங்களையே நான் கேட்கும்படி அவரைப் போல் நான் ஜெபிக்கும் வண்ணம், ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்துநாதரது உதவியைக் கேட்டு மன்றாடுவேன்.

“ஆண்டவராகிய கிறிஸ்துநாதர் நமது குரு. ஆதலின் நமக்காக மன்றாடுகிறார். அவா பய தலைவர், நம் சிரசு, ஆதலின் நம்மில் மன்றாடுகிறார்' என புனித அகுஸ்தீன் கூறுகிறார். நாம் அவருடன் ஒன்றித்தும், அவர் நம்முடன் சேர்ந்து ஜெபிக்க வேண்டும். நாம் கேட்பவற்றைப் பெறவேண்டுமானால் நம் ஜெபம் அவரது ஜெபத்தின் பேறுபலன்களோடு ஒன்றிக்கப்படவேண்டும்.

இந்த ஜெபத்தை முதலில் கிறிஸ்துநாதர் பகிரங்கமாக மலைப் பிரசங்கத்தில் கற்பித்தார். ''ஆண்டவரே, அருளப்பர் தம் சீடர்களுக்குக் கற்பித்திருப்பதுபோல் மீரும் ஜெபிக்க எங்களுக்குக் கற்பித்தருளும் " என அவரது சீஷர்கள் கேட்டபோது இரண்டாம் முறையாக கற்பித்தார். ஆதலின் பொதுவிலும் தனியாகவும் இதை நாம் ஜெபிக்கவேண்டும். பூசை பொது ஜெபம். தனியே சொல்கையில் ஆற அமர வார்த்தை வார்த்தையாய் யோசித்துச் சொல்தல் நலம். 


பரலோகத்தில் இருக்கிற... 

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். எனினும் "பரலோகத்தில் இருக்கிறார்'' எனக் கிறிஸ்துநாதர் சொல்வானேன்?

1. கடவுள் பரலோகத்தின் கர்த்தர், அரசர். ஆதலின் இந்த உத்தம தந்தையை நான் வந்திக்க வேண்டும்.

2. இவ்வுலக காரியங்களினின்று என் உள்ளத்தை நான் அகற்றி பரலோக காரியங்கள் மீது அதை வைக்கவேண்டும். பூமியின் பொருட்களையெல்லாம் நான் வெறுத்து, என் நல்ல தந்தை வதியும் மோட்ச சுதந்தரத்தை ஆசையுடன் நாட வேண்டும்.

3. இவ்வுலக வாழ்க்கையை நான் ஒரு பிரயாணி போலவும், அன்னியன் போலவும் செலவழிக்க வேண்டும். மோட்சமே என் நிரந்தர இருப்பிடம் என நான் என் நடத்தையினால் அங்கீகரித்து, அங்கு நுழைவதற்குத் தடையாயிருப்பதையெல்லாம் அகற்றி, இருதயத் தூய்மையுள்ளவனாயிருக்க வேண்டும்.

4, மோட்சத்தை நோக்கி நான் மனதை எழுப்புவேன், அங்கிருந்து மாத்திரமே நான் கேட்கும் உதவியும் நல்ல காரியங்களும் வரும்.

5. கடவுள் தமது இஷ்டப்பிரசாதத்தால் வதியும் நீதிமான்களின் ஆத்துமங்களும் பரகதிகளே. இப்பேர்ப்பட்ட ஆத்துமங்களுக்கு விசேஷ விதமாக அவர் தந்தை, ஏனெனில் அவை அவரது பரகதிகளாகும். ஜெபிக்கிறவன் சகல பாவத்தினின்றும் உலக நாட்டத்தினின்றும் தன் இருதயத்தைச் சுத்திகரித்து, தன்னை கடவுள் வசிக்கக்கூடிய மோட்சமாக்க வேண்டும். தன் நினைவுகளை கடவுள் மேல் நிலைநிறுத்தி தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் தன் நல்ல தகப்பனுடன் பேசுவதாக நினைத்துக்கொள்ள வேண்டும்.

அவரை வாழ்த்துவது நம் கடமை. நம் தந்தையாக அவர் திருவுளமிரங்கியதற்காக அவரை மகிமைப்படுத்தவேண்டும். ஒரு பிள்ளை தகப்பனுக்கு சேவை செய்வது போல் நாம் கடவுளைச் சேவிக்க வேண்டும். நல்ல பிள்ளை நல்ல தகப்பனிடம் கேட்பதையே நம் மிகச்சிறந்த தந்தையாகிய கடவுளிடம் நாம் கேட்கவேண்டும். எங்கள் பிதாவே... என் பிதாவே என்றல்ல, ஆளு எங்கள் பிதாவே என்று நாம் சொல்கிறோம். கடவுளுக்கு சுபாவத்திலே ஒரே சுதன்; சுவீகார மக்கள் அநேகர், கடவுளுடைய பிள்ளை என்னும் மகிமையை அவர் மனிதருக்கும் சம்மனசுகளுக்கும் கொடுக்கிறார்.

அவர் எல்லோருக்கும் தந்தை. நாம் எல்லோரும் சகோதரர். ஆதலின் நம் அயலாரை நாம் நேசிக்க வேண்டும், எல்லோரும் கடவுளுடைய சுவீகாரப் புத்திரராகவேண்டும், யாரையும் நாம் நிந்திக்கலாகாது. (மலக். 2/10)

தனவந்தரும் ஏழைகளும் படித்தோரும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் எல்லோருமே இந்த பரலோக தந்தையின் மக்கள்.


பிதாவே ... 

1. சர்வ வல்லப கடவுள் நம் தந்தை! சகல மனிதருக்கும் அவர் தகப்பன். நம்மை அவர் உண்டாக்கியிருக்கிறார், தமது சாயலாக சிருஷ்டித்திருக்கிறார். அவர் நீதிமான்களின் தந்தை, ஏனெனில், அவர்களுக்கு வரப்பிரசாத வாழ்வைத் தந்து, அவர்களைத் தம் மக்களாகவும் மோட்ச சுதந்தர வாளிகளாகவும் எடுத்துக்கொள்கிறார். ஆயிரமாயிரம் முறை அவர், அவர்களுடைய தகப்பன், ஏனெனில் அவர்கள் பாவத்தால் வரப்பிரசாத வாழ்வை இழக்கும் போதெல்லாம் அதற்காக துயரப்படுவார்களானால் அந்த வாழ்வை அவர்களுக்குத் திருப்பிக்கொடுக்கத் தயாராயிருக்கிறார். இதேமாதிரி சகலருக்கும் தந்தையாயிருக்க அவர் விரும்புகிறார்; இது தம் நலனுக்காக அல்ல, நம் நலனுக்காகவே; நம் தகுதியைப் பார்த்தல்ல; ஆனால் அவரது இரக்கமும் அன்புமே காரணம். நம் தந்தையாகும்படி, நம்மை மக்களாக சுவீகரிக்கும்படி, நம்மை மோட்ச சுதந்திரவாளிகளாக்கும்படி கடவுளுடைய ஏக சுதன் சிலுவையில் கொடிய வேதனைப்பட்டார்.

2. தந்தையின் அலுவலை அவர் வெகு சிறந்த விதமாகச் செய்து வருகிறார். நம்மை உருக்கமாக நேசிக்கிறார்; நம்மைக் கண்காணித்து வருகிறார்; முன் யோசனையுடன் நம்மைப் பராமரிக்கிறார்; நமக்கு அவசியமானதை ஏராளமாகக் கொடுக்கிறார். நம் இரட்சணியத்துக்கு ஏற்ற நிலையில் நம்மை வைக்கிறார். அவர் செய்கிறதையும் இவ்வுலக தகப்பன்மார் செய்கிறதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இவ்வுலகத் தகப்பன்மார், தகப்பன் என்ற பேருக்கே அருகதையற்றவர் என்று சொல்லவேண்டும். அதனாலேயே கிறிஸ்துநாதர் “பூமியில் ஒருவரையும் எங்கள் பிதா என்று அழைக்க வேண்டாம்; ஏனெனில் பரமண்டலங்களில் இருக்கிற உங்கள் பிதாவைத் தவிர உங்களுக்கு வேறு பிதா இல்லை" என்கிறார்.

3. கடவுள் என் தந்தையாயிருக்கச் சித்தமிசைந்திருக்கிறார், ஆதலின் நான் அவருடைய மகன். மகன் தகப்பன் மட்டில் நடந்து கொள்வதுபோல் நான் நடந்துகொள்ள வேண்டும். அவரை நேசித்து மரியாதை செய்து கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவரது மகிமைக்காக உழைக்கவேண்டும்.

4. நாம் அவரை ஏன் தந்தையே என்றழைக்க வேண்டும்? தந்தைமீது பிள்ளைக்கு நேசம் உண்டு, நம்பிக்கை உண்டு. நாம் நேசத்துடனும் நம்பிக்கையுடனும் ஜெபித்தால், நாம் கேட்பதை அவர் தருவார்.


உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக... 

1. கடவுள் சகலராலும் அறியப்பட வேண்டும், வாழ்த்தப்பட வேண்டும், மகிமைப்படுத்தப்பட வேண்டும், அவருடைய நாமத்தை சகலரும் பரிசுத்தமானதாகக் கருத வேண்டும் என இந்த முதல் மன்றாட்டில் நாம் கேட்கிறோம். அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. தம் பரிசுத்ததனத்தில் கடவுள் மகிமையடைவது போல் வேறெதிலும் மகிமையடைவதில்லை. ஆதலின் நாம் அவரைப் பரிசுத்தராகக் கருதி, மிக பத்தி உருக்கத்துடன் சம்மனசுகளுடன் சேர்து, "இருந்தவரும், இருக்கின்றவரும், இனி வருபவருமாகிய சர்வஞ்ஞத்துவ தேவனான ஆண்டவர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என அடிக்கடி கூறவேண்டும்.

2. உம்முடைய மகத்துவம் அர்ச்சிக்கப்படுவதாக என்றோ அல்லது உமது வல்லமை அர்ச்சிக்கப்படுவதாக என்றோ சொல்லவில்லை, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக என்கிறார். ஏனெனில் கடவுளின் நாமத்தை நம் மத்தியில் கொண்டிருக்கும் யாவற்றையும் நாம் வந்தித்து மகிமைப்படுத்தி பரிசுத்தமானவையாகக் கருத வேண்டும்.

3. உம்முடைய என்னும் வார்த்தையைப் பற்றி நான் சிந்திக்கப்போகிறேன். என்னுடைய நாமமல்ல, ஆனால் உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்பட வேண்டும் என்கிறேன், ஏனெனில் நீரே பரிசுத்தர்; பரிசுத்தர் என்னும் பேருக்கு நீர் மாத்திரமே உரிமையுள்ளவர். எங்களுக்கல்ல, ஆண்டவரே, எங்களுக்கல்ல, ஆனால். உமது நாமத்துக்கே மகிமை கொடுப்பீராக', சங். 113. 

எங்கள் பேரல்ல, ஆனால் உமது மிக இனிய நாமம் மகிமைப்படுத்தப்படக்கடவது.' 'நித்தியமாய் ஜீவித்திருக்கிறவரும் கண்ணுக்குப் புலப்படாதவரும், சதா காலம் இராச்சியபாரம் செய்கிறவருமாகிய ஏக சர்வேசுரனுக்குத் தோத்திரமும் மகிமையும் அனவரத காலமும் உண்டாவதாக.''

என் பேர் அறிவிக்கப்பட வேண்டும், உலகெங்கும் பரவவேண்டும், எல்லா மனிதரும் அதை அறிந்து வந்திக்க வேண்டும் என நான் விரும்பியதற்காக வெட்கப்படுகிறேன். எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, மறக்கப்பட வேண்டிய நான் பெரும் அகங்காரியாகி, எல்லோரும் என்னை வாழ்த்த ஆசித்திருக்கிறேன். இனி உமது திருநாமத்தின் மகிமையையே தேடுவேன், உமது மகிமைக்காக என்னை நான் மறப்பேன்.

4. உம்முடைய நாமம் எங்களால் அர்ச்சிக்கப்படுவதாக என கிறிஸ்துநாதர் சொல்லவில்லை; கடவுளது மிகப் பரிசுத்த நாமம் சம்மனசுக்களாலும் மனிதர்களாலும்- இப்பொழுது இப்பூமியில் இருப்போரால் மாத்திரமல்ல, மோட்சத்தில் இருப்பவர்களாலும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்போராலும், இனிப் பிறக்க இருப்போராலும், அர்ச்சிக்கப்பட நாம் விரும்ப வேண்டும். காணக்கூடிய இந்த உலகத்தின் சகல சிருஷ்டிகளும் தங்கள் சக்திக்கு ஏற்றபடி இந்தப் பரிசுத்த நாமத்தை வாழ்த்தி மகிமைப்படுத்த நாம் ஆசிக்க வேண்டும். ஏனெனில் அது சகலராலும் புகழப்பட மிக்க உரிமை பெற்றது. யேசு என்னும் அந்தப் பெயரைக் கேட்கும் போது வானுலகத்திலும் பூவுலகத்திலும் நரகத்திலும் உள்ள சகலருமே முழங்காலிலிருந்து ஆராதிக்க வேண்டும்.

5. நான் அந்த நாமத்தை அர்ச்சிக்க வேண்டும் நான் நேசிக்கும் யாவரும் அதை அர்ச்சிக்க வேண்டும். கடவுள் வெளியிடுகிறதை சகலரும் விசுவசிப்பார்களானால், அவர் கொடுப்பதாக வாக்களிப்பதை சகலரும் நம்புவார்களானால், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவர் விரும்பும் வழியில் அவரை வணங்கி அவருக்குச் சேவை செய்வார்களானால், தங்கள் முழு இருதயத்தோடு அவரை நேசிப்பார்களானால், தங்களையும் தம் செய்கைகளையும் பார்க்கும் யாவரும் பரலோக பிதாவை மகிமைப்படுத்த ஏதுவாயிருக்கும் வண்ணம் வாழ்வார்களானால், கடவுளது நாமம் அர்ச்சிக்கப்படுகிறது. 


உம்முடைய இராச்சியம் வருக.... 

நாம் மன்றாடும் இராச்சியம் எது என நாம் இங்கு சிந்திப்போமாக.

1. நீதிமான்களின் ஆத்துமங்களில் கடவுள் வரப்பிரசாதத்தினால் அரசுபுரிகிறார். அந்த இராச்சியம் வர வேண்டும் என முதலில் நாம் மன்றாடுகிறோம். நாம் விசுவசிக்க வேண்டிய கடவுளது சட்டங்களும், நாம் பெற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ள தேவ திரவிய அனுமானங்களும், நாம் ஒப்புக் கொடுக்க பலியும், நம் அரசர் நம் உள்ளங்களில் நுழைந்து அரசுபுரிய நாம் விரும்பினால் அந்த அரசரது சேவையில் நாம் அனுசரிக்க வேண்டிய சகல புண்ணியங்களும், இந்த இராச்சியத்தில் அடங்கியிருக்கின்றன.

2. கடவுள் பரிசுத்தவான்களோடு அரசுபுரியும் மகிமையின் இராச்சியத்துக்காக இரண்டாவது நாம் மன்றாடுகிறோம். “உம்முடைய இராச்சியத்தினுள் எங்களை அழைத்துச் செல்லும் " என கிறிஸ்துநாதர் ஜெபிக்கச் சொல்லவில்லை. உம்முடைய இராச்சியம் வரும் என ஜெபிக்கும்படி சொல்கிறார்; ஏனெனில் வரப்பிரசாதத்தினால் கடவுளது இராச்சியம் நம்மிடம் வருமானால், அது மகிமையின் இராச்சியத்துக்கு நம்மை அழைத்துப் போவது நிச்சயம். கிறிஸ்துநாதரோடு பரகதியில் அரசுபுரிய எல்லோரும் விரும்பு கிருங்கள். ஏனெனில் இது எல்லோருக்கும் இனிமையானது ஆனால் இப்பூமியில் கிறிஸ்துநாதர் தங்களில் அரசுபுரிய எல்லோரும் விரும்புவதில்லை. ஏனெனில் இது வேதனை தரலாம்.

1. பொதுத் தீர்வை நாளில் இருப்பது போல் கடவுளது இராச்சியம் வர நான் மன்றாடுகிறேன். அப்பொழுது பூமியில் பசாசின் ஆட்சி முடிவடையும். கடவுள் நீதிமான்களின் ஆத்துமங்களையும் சரீரங்களையும் மகிமைப்படுத்தி அவர்களில் அரசு புரிவார்; அவர்கள் அனைவரிலும் கடவுளது இராச்சியம் பூரணமாகும். அந்த இராச்சியம் வந்து பாவத்துக்கு முடிவு கட்டி, அந்த இராச்சியத்தை எதிர்பார்த்திருக்கும் ஆத்துமங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாக.

4. உம்முடைய இராச்சியம் வருக என்று சொல்கிறோம். உம்முடைய இராச்சியம் வருவதாக; உம்முடையவையல்லாத சகல இராச்சியங்களையும் அழித்தருளும். பாவத்தின் ஆட்சியையும் பசாசின் அரசாட்சியையும் என்னிடம் அகற்றியருளும், செல்வத்திலும் மகிமையிலும் சிற்றின்பத்திலும் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வுலக இராச்சியம் எனக்கு வேண்டாம். உண்மையான புண்ணியங்களில் ஸ்தாபிக்கப்பட்ட உமது இராச்சியமே எனக்கு வேண்டும்.


உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

1. யாருடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்பதைப்பற்றி முதலில் நான் ஆராய்வேன். தேவ சித்தம், பத்துக் கட்டளைகளாலும் சுவிசேஷ போதனைகளாலும், பரிசுத்த ஆவியின் அந்தரங்க ஏவுதல்களாலும், திருச்சபையாலும் அதன் அதிகாரிகளாலும், நமக்கு அதிகாரிகளாய் கடவுளின் இடத்தில் இருப்பவர்களாலும் கற்பிக்கப்படுபவைகளாலும் அறிவிக்கப்படும் தேவ சித்தம் நிறைவேறவேண்டும். ஏனெனில் அவரே நம்மை உண்டாக்கியவர். சிருஷ்டிகள் சிருஷ்டிகரது சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

2. உம்முடைய சித்தம். என் சித்தமல்ல. என் உடலின் சித்தமல்ல, பசாசின் சித்தமல்ல, உலகின் சித்தமல்ல, ஆனால் உமது சித்தம் மாத்திரமே செய்யப்படுவதாக; அது மாத்திரமே நல்லது. உமது சித்தத்தையல்ல, ஆனால் பிதாவின் சித்தத்தையே நிறைவேற்ற வந்த ஓ இனிய யேசுவே, உமது வரப்பிரசாதத்தால் எனக்கு உதவி புரியும். நான் என் பிரியப்படி நடவாமல் உமது சித்தத்தின்படி நடக்க உதவி புரிந்தருளும்.

3. கடவுளின் சித்தம் எவ்விதம் செய்யப்பட வேண்டும் என்பதைப்பற்றி நான் சிந்திப்பேன். பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூலோகத்தில் செய்யப்பட வேண்டும். பரலோகத்தில் சம்மனசுக்களும் பரிசுத்தவான்களும் தேவ சித்தத்தை (1) நுணு நுணுக்கமாய் (2) கடவுளுக்கு மாத்திரமே பிரியப்படும் சுத்த கருத்துடன் (3) எவ்வித தாமதமும் முணுமுணுப்புமின்றி (4) திடனுடன் இறுதி வரை விடாமுயற்சியுடன் (5) சிநேக மிகுதியினால், இன்பத்துடன், அனுசரித்து வருகிறார்கள். 4. பரலோகத்திலுள்ள மனிதர்களும், பரலோக ஆதாமான நம் ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்துநாதரும் அந்தத் திருச்சித்தத்தை நிறைவேற்றியது போல் அதை நாம் நிறைவேற்ற வேண்டும்.


எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

1. இந்த மன்றாட்டில் எவ்விதமான உணவை நாம் கடவுளிடம் கேட்டு மன்றாடுகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்போமாக. பீடத்தின் மகா பரிசுத்த தேவதிரவிய அனுமான மாகிய திவ்விய நற்கருணையே மிகச் சிறந்த உணவு, ஆத்தும உணவு. அது நம்மைத் தேற்றுகிறது, திடப் படுத்துகிறது. அதை உட்கொள்ள நம்மைத் தகுதி யுள்ளவர்களாக்கும்படி கடவுளை மன்றாடுகிறோம். அந்த உணவால் நமக்குக் கிடைக்கக்கூடிய எண்ண முடியாத வரப்பிரசாதங்களை நாம் பெற்றுக்கொள்ள கடவுள் நம்மைத் தகுதியுள்ளவர்களாக்க வேண்டும்.

ஓ ஜீவிய அப்பமே, இந்த உலகுக்கு ஜீவனைத் தரும்படி நீர் பரலோகத்திலிருந்து இறங்கினீர். உம்மை எனக்குத் தாரும். நான் உம்மாலும் உம்மி லும் ஒன்றித்து நித்தியத்துக்கும் வாழும்படி உம்மை எனக்குத் தருவீராக. (அரு. 6/51. 52) "நானே பர மண்டலத்தினின்று இறங்கின ஜீவியமுள்ள அப்பமா யிருக்கிறேன். நான் கொடுக்கும் அப்பமோ, உலக சீவியத்துக்காக என் மாமிசமாமே.'' ஞான ஜீவன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் கடவுளது வரப் பிரசாதம் தேவை. அந்த வரப்பிரசாதங்களையும் நாம் கேட்டு மன்றாடுகிறோம். தேவதிரவிய அனு மானங்கள், பரிசுத்த ஆவியின் யோசனைகள், நல்ல ஏவுதல்கள் இவை போன்றவை நமக்குத் தேவை.

சரீர உயிர் பாதுகாக்கப்பட அவசியமான உண வையும் நாம் கேட்டுப் பிரார்த்திக்கிறோம். ஏனெனில் நாம் உயிருடனிருந்து கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும், அதற்கு உணவு தேவை. மிஞ்சிய கவலை யுடன் அதை நாம் தேடலாகாது, தேவ பராமரிக்கை யில் நம்பிக்கை வைத்து நாம் உழைக்கவேண்டும்; நாம் அவருடைய மக்கள், நாம் சிறு குழந்தைகள். நம் தந்தை கொடுக்கும் உணவை நம்பி நாம் வாழ்கி றோம். அவரது உதவி இல்லாவிட்டால் நம் சொந்த பலத்தால் அதை நாம் அடைய முடியாது.

2. எங்கள் அனுதின உணவை. இந்த உணவு உண்மையாகவே கடவுளுடையது, கடவுளிடமிருந்து வருகிறது. அவரே அதை தயாரித்து தம் மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார். எனினும் அதை எங்கள் உணவு என அழைக்க அனுமதிக்கிறார், ஏனெனில் அது நமது தேவைக்காக தயாரிக்கப்படுகிறது. நம் இரட்சகர் அதை நமக்காக கிரயத்துக்கு வாங்கினார்; அதற்கான உரிமையை நமக்குத் தந்தார். அந்த உரிமை நமக்குக் கிடைத்தது அவரது பேறு பலன்களாலேயே. அவரது பேறு பலன்களை முன்னிட்டே அந்த உணவைக் கேட்டு மன்றாட நாம் உரிமை பெறுகிறோம். அவர் தருவதாக வாக்களித்திருக்கிற படியால் ஏற்கனவே அது நம்முடையதாகிறது.

3. அனுதின உணவை. ஆண்டவரே, உம் உற்ற நண்பர்களுக்கு நீர் கொடுத்து வருபவற்றை உம்மிடம் நான் கேட்கவில்லை; ஏனெனில் இத்தனை பாக்கியத்தைப் பெற நான் தகுதியற்றவன். ஆனால் நான் கேட்பது சாதாரண அனுதின உணவையே. அதின்றி என் ஆத்துமம் ஞான வாழ்வு வாழ முடி பாது, முன்னேறிச் செல்ல முடியாது, என் உடல் உயிர் வாழ முடியாது. 

4. எங்களுக்கு அளித்தருளும். எனக்கு வேண் பய உணவை மாத்திரம் நான் கேட்பதில்லை. சகல மனிதருக்கும் வேண்டிய உணவை நான் கேட்டு மன்றாடுகிறேன், ஏனெனில் எல்லோரும் என் சகோதரர்கள்; அவர்கள் என்னை விரோதிப்பவர்களாயிருந்தாலும் என் சகோதரரே. இவ்விதம் அவர்களுக்காக நான் ஜெபிப்பதனால் “உங்களை உபத்திரப் படுத்து கிறவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்'' என்ற ஆண்டவரது உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன். என் விரோதி பசியாயிருப்பதைப் பார்த்தால், அவன் பண்ண நான் உணவளிக்க வேண்டும் என வேத புத்தகத்தில் எழுதியிருக்கிறது. (ரோ. 12/20; பழ. 25/21) 

5. இன்று அளித்தருளும். இன்றும் நாளைக்கும் தேவையான உணவைத் தாரும் என்று மன்றாடும்படி கிறிஸ்துநாதர் சொல்லவில்லை. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் என்று நாம் சொல்கிறோம். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நாம் உணவு கேட்டு மன்றாடவேண்டும், ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிக்க வேண்டும்,

ஒவ்வொரு நாளும் நாம் கடவுளை நம்பி வாழ்கிறவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். ஆதலின் நாளைய தினத்தைப் பற்றி நான் கவலைப்படலாகாது. நாளை நான் இருப்பது நிச்சயமல்ல. (லே.16/4.) "இதோ , நாம் உங்களுக்கு வானத்தினின்று அப்பங்களை வருஷிக்கப் பண்ணுவோம். ஜனங்கள் வெளியே போய் ஒவ்வொரு தினத்திற்குப் போதுமான ஆகா ரத்தை ஒவ்வொரு நாளிலும் சேர்க்கட்டும்'' என ஆண்டவர் மோயீசனை நோக்கிக் கூறினார்.


எங்களுக்குத் தின்மை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல் எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். 

நாங்கள் செய்துள்ள சாவான பாவங்களை யும் அற்பப் பாவங்களையும், அவைகளுக்காக நான் அனுபவிக்கக் கடமைப்பட்டுள்ள தண்டனையையும் பொறுத்தருளும். கடவுள் மாத்திரமே இவற்றைப் பொறுக்கக்கூடியவர். இவைகளைத் தீர்க்க அவர் நியமித்துள்ள வழிவகைகளால் அவர் இவைகளைப் பொறுக்கிறார்.

பரிசுத்தவான்களும் இந்த ஜெபத்தைச் சொல்லி எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் என மன்றாடுகிறார்கள். அவர்களிடம் கடவுளது வரப்பிர சாத அரசாட்சி ஏற்கெனவே வந்து விட்டது. அவரு டைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, தாங்களும் பூமியில் அதைச் செய்ய அவர்கள் முயற் சிக்கின்றனர். அவர்களும் அற்ப சொற்ப குற்றங்களுக்காளாகி, அவற்றிற்குரிய தண்டனைக்கும் ஆளாகின்றனர்.

பிறர் எனக்குச் செய்யும் குற்றங்களையும் வரவிருக் கும் பொல்லாப்புகளையும் நான் மன்னிக்க வேண்டும். எனக்கு குற்றம் செய்தவர்களை நான் பகைக்கலாகாது, பழிக்குப்பழி வாங்கக்கூடாது; வெறுப்பின் குறிகளை அகற்றி நட்பின் குறிகளைக் காண்பிக்க வேண்டும், ஏனெனில் தீமையை முழுவதும் மறந்து; தீமை செய்தவனை நேசித்து, அவனுக்கு உபகாரம் புரிகிறவனே சிறந்த விதமாக மன்னிக்கிறான். கடவுளும் வெகுதாராள குணத்துடன் இவனது குற்றங்களையும் அவற்றிற்குரிய தண்டனைகளையும் மன்னிப்பார்.

நாம் மன்னிக்கப்பட வேண்டுமானால் அதற்கான ஒரு நிபந்தனையைக் கடவுள் விதித்திருக்கிறார். நமக்குத் தீமை செய்தவர்களை நாம் மன்னிக்க வேண் டும். சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே நாம் மன்னித்துவிட வேண்டும். என் அயலானுக்கு நான் மன்னிப்புக் கொடா விட்டால், நானே எனக்குத் தீர்ப்புக் கூறிக் கொள்கிறேன். ஏனெனில் எனக்குத் தீமை செய்தவர்களை நான் மன்னித்தால் மாத்திரமே நீர் என்னை மன்னியும் என நான் சொல் கிறேன். நான் மன்னியாவிட்டால், ஆண்டவரே, நீரும் மன்னிக்க வேண்டாம் என நான் அறிவிக்கி றேன். 


எங்களை சோதனையில் விழவிடாதேயும்.... 

சோதனை வரவிடாதேயும், அல்லது சோதிப்பவன் எங்களைச் சோதிக்க அனுமதி அளியாதேயும் என நான் சொல்லும்படி ஆண்டவர் சொல்வதில்லை. சோதனை நமக்கு அவசியம், சோதனை நமக்கு வர நம் பரலோக பிதா அனுமதிக்கிறார், அதற்கு தக்க காரணங்கள் உண்டு: சோதனை வர அவர் அனுமதிப்பாரானால், அது ரீதியே; அது நமது நன்மைக்கே; நமது பலத்துக்குட்பட்ட சோதனையையே வரவிடுவார். ஆதலின் பசாசிடமிருந்தும், உலகில் வசிக்கும் அவனுடைய கையாட்களிடமிருந்தும், நம் சரீரத்திலிருந்தும் சோதனையை எதிர்பார்க்கலாம்.

சோதனையில் நாம் வீழ்ந்து விடலாகாது, பாவத்திற்குச் சம்மதித்து, சோதனைக்கு இணங்கலாகாது. இதை நாம் நம் பரலோக பிதாவிடம் கேட்க வேண்டும் என்று நம் இரட்சகர் விரும்புகிறார். நாம் தவறிப் போவோம் என அவர் முன்னறியும் சோதனைகளை, தவறக் கூடிய இடங்களில் நமக்கு அனுப்பாதபடி நாம் அவரை மன்றாடுகிறோம். 


தின்மையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்....

கடந்த காலம், நிகழ் காலம்: வருங்காலம் இவற் றின் தீமைகள், நித்திய தீமைகள் இவ்வுலக தீமை கள், ஆத்தும தீமைகள் சரீர தீமைகள் ஆகிய வற்றினின்று நம்மை விடுவிக்கும்படி நாம் கடவுளை மன்றாடுகிறோம். கடந்த காலத்தில் நாம் கட்டிக் கொண்ட பாவங்களினின்று கடவுள் தம் இரக்கப் பெருக்கில் நம்மை மன்னிக்கும்படியும், இப்பொழுது நம்மிடம் இருந்துவரும் அறியாமை, தவறுகள் ஆசா பாசங்கள், துன்ப உபத்திரவங்கள் இவற்றினின்று நம்மை விடுவிக்கவும்; இவற்றினின்றும், முக்கியமாக நித்திய கேட்டினின்றும் சாத்தானது வல்லமையி னின்றும் வருங்காலத்தில் நம்மைப் பாதுகாக்கவும் நாம் மன்றாடுகிறோம். இந்த உலகிலாவது மறு உலகிலாவது சாத்தான் நம் மேல் அதிகாரம் கொண் டிராதபடியும், நாம் ஒரு போதும் அவனுக்கு அடிமைகளாகாதபடியும், கடவுளை நாம் பிரார்த்திக் கிறோம்.

சகல தீமையினின்றும், பாவத்தினின்றும், உமது கோபத்தினின்றும், துர் இச்சைகளினின்றும், ஆங்காரத்தினின்றும் ... எங்களை இரட்சித்துக்கொள் ளும் சுவாமி.


கர்த்தர் கற்பித்த ஜெபத்தின் இறுதியில் ஆமென்: அப்படியே ஆகக்கடவது என்கிறோம். இதை உருக்கத்துடனும், நாம் கேட்பவற்றையெல் லாம் கடவுளிடமிருந்து பெறவேண்டும் என்னும் ஆசையுடனும் நாம் சொல்ல வேண்டும்; ஏனெனில் ஏழையின் ஆசைக்குக் கடவுள் செவி கொடுக்கிறார். நம் மன்றாட்டுக்குக் கடவுள் இரங்குவார் என்னும் முழு நம்பிக்கையுடன் இதைச் சொல்ல வேண்டும்; ஏனெனில் நாம் கேட்க வேண்டும் என நம் ஆண்ட வர் கற்பித்ததையே நாம் கேட்டு மன்றாடுகிறோம். (1 அரு.5/14.) ''அவருடைய சித்தத்துக்கேற்றபடி நாம் எதைத்தான் அவரை மன்றாடிக் கேட்டாலும் அவர் அதைக் கேட்டருளுவாரென்பதே, அவர் மட்டில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையாம்.''