இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மனிதனின் அதிமுக்கிய அலுவல்

மனிதனுடைய இவ்வுலக ஜீவியத்தின் நோக்கம் என்ன என்பதை நான் அறிவேன். அதை நான் நன்கு அறிந்தபோதிலும் அதைப்பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்த்தல் எனக்கு வெகு நன்மை பயக்கும். மனிதனுடைய வாழ்க்கையின் நோக்கத்தை அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் ஒருசில வார்த்தைகளில் எடுத்துக் கூறியிருக்கிறார் : சர்வேசுரனை ஸ்துதித்து அவருக்கு சங்கை செய்து அவரை சேவித்து இவ் விதம் தன் ஆத்துமத்தைக் காப்பாற்றவே மனிதன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்.

சற்றுநேரம் நான் என் சரீரக் கண்களை மூட வேண்டும். உலகத்திலுள்ள சகலத்தையும் மறக்க வேண்டும். மனக் கண்களைத் திறந்து அழியாத இரண்டு பொருட்களைப்பற்றி மாத்திரமே, அதாவது சர்வேசுரனையும், என் ஆத்துமத்தையும்பற்றி மாத்திரமே, நான் சிந்திக்கப்போகிறேன். இன்றிலிருந்து நூறு வருடங்களுக்குப் பின் என்னுடைய சரீரம் தூசியாயிருக்கும். இதைப்பற்றி சந்தேகம் கிடையாது. ஆனால் என் ஆத்துமம் ஜீவித்திருக்கும். சர்வேசுரனும் ஜீவிப்பார். இதைப்பற்றியும் சந்தேகம் கிடையாது. இதைப்பற்றி நான் சிந்திக்கப் போகிறேன்.

என்னைப்பற்றி நான் நினைத்துப்பார்க்கையில் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. நான் ஓர் சிருஷ்டிதான். எனினும் விசேஷ சிருஷ்டி. என் சரீரமானது அதன் புலன்கள் பாகங்கள் அலுவல்களுடன் ஓர் அதிசயமாயிருக்கிறது. கண், காது முதலிய ஐம்புலன் களைப்பற்றி யோசித்துப் பார்க்கிறேன். புத்தி நினைவு இருதயம் அழியாத ஆத்துமம் இவைகள் உண்மை யாகவே பெரிய அதிசயங்கள். ஆதலின் நான் ஓர் ஆச்சரியத்துக்குரிய சிருஷ்டி. உலகில் இருக்கும் மற் றெந்த சிருஷ்டியையும் விட உயர்ந்தவன் நான். சம் மனசுக்களை விட சற்று தாழ்ந்தவன். சிருஷ்டிகளின் உலகில் சம்மனசுக்கள் மாத்திரமே என்னை விட உயர்ந்தவர்கள். அவர்களுக்குமேல் வருபவர் சிருஷ் டிகராகிய சர்வேசுரன்.

சர்வேசுரனைப்பற்றி நான் சிந்திக்கையில் என் னைப்பற்றி நான் அறிகிறேன். என்னிலே நான் ஒன்றுமில்லாதவன். நான் சர்வேசுரனுடையவன்.

கடந்த சில வருடங்களாக மாத்திரமே நான் இருக்கிறேன். சர்வேசுரனோ நித்தியர். பூமியின் ஓர் சொற்ப இடத்தில் நான் இருக்கிறேன். சர்வேசுரனோ எங்கும் இருக்கிறார். நான் அற்ப மனிதன், பலவீனன், அறி வீனன். சர்வேசுரனோ மகா பெரியவர், சர்வ வல்லவர், சர்வ ஞானமுள்ளவர். என்னிடத்திலுள்ள யாவும் இந்த ஏக தேவனிடமிருந்து வருகிறது. ஜீவியரான சர்வேசுரன் தயைகூர்ந்து எனக்கு ஜீவன் கொடுத் திருக்கிறார். இந்த ஜீவனை அவர் காப்பாற்றுவார். இனிமேல் என்றும் அதை ஜீவிக்கச் செய்வார். அவ ராலன்றி ஒரு வினாடியும் நான் உயிர் வாழ முடியாது.

சர்வேசுரனைப்பற்றி நான் அடிக்கடி சிந்தித்து அவரைத் தொழ ஆசிக்கிறேன். அவர் அளவில்லாத வர், நித்தியர் என்பதை நான் அறிவேன். சிருஷ்டிக் கப்பட்ட வஸ்துக்களும் தங்களது சிருஷ்டிகரை எனக்கு எடுத்துக்கூறுகின்றன.

சர்வேசுரன் அளவில்லாதவர். அவராலன்றி அளவுள்ள வஸ்துக்கள் இருக்க முடியாது. அவரே எல்லாவற்றிற்கும் ஆதிகாரணம். அவர் மாற முடியா தவர். ஜீவியத்தின் கர்த்தா . இயற்கையில் காணப் படும் ஒற்றுமையின் காரண பூதர்.

அவர் தாமாயிருப்பவர். சர்வலோக கர்த்தர். தம்முடைய சட்டங்களை நம் இருதயங்களில் பதியச் செய்திருப்பவர். நாம் அவரைத் தொழுது அவருக் குக் கீழ்ப்படிய கடமைப்பட்டவர்கள். இவ்வுலக ஜீவி யம் முடிந்த பின் நம்மிடம் அவர் கணக்குக் கேட் பார்.

என் சர்வேசுரா, நான் உம்மை ஆராதிக்கிறேன். உமது திருக்குமாரனும் என்னுடைய இரட்சகரு மான யேசுக்கிறிஸ்துநாதர் வழியாக நீர் உம்மை எனக்கு வெளிப்படுத்தினதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். உமது உதவி இல்லாவிட்டால் நான் உம்மையும் உமது சுபாவத்தையும்பற்றி எவ்வளவு சொற்பமாய் அறிவேன்!

சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களை நான் சர்வேசுர னுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். சிருஷ்டிகள்யாவும் அளவுள்ளவை. அவர் அளவே இல்லா தவர். அளவில் லாத சகல நன்மை சொரூபி. நாவால் வர்ணிக்க முடி யாத விதமாய் எல்லா சிருஷ்டிகளையும் விட உயர்ந்த வர். இத்தகைய உன்னத சர்வேசுரன் ஒன்றுமில் லாமையிலிருந்து என்னை உண்டாக்கினார். என் சரீரத்தை என்னுடைய பெற்றோர்கள் முன்னோர்கள் மூலமாக எனக்குக் கொடுத்தவர் அவரே. என் ஆத் துமத்தை சில வருடங்களுக்கு முன் அவரே சிருஷ்டித்தார். ஆதலின் நான் என்னிலே ஒன்றுமில் லாதவன்.

சர்வேசுரன் என்மேல் கிருபை வைத்திராவிட் டால் நான் இன்று அற்பத் தூசியை விடக் கீழ்; ஒன்றுமில்லாமை. என் வாழ்நாளில் ஒவ்வொரு வினா டியும் நான் சர்வ வல்லப சர்வேசுரனுடைய வல்ல மையால் பாதுகாக்கப்பட்டு வருகிறேன். ஆதலின் நான் என்னுடையவனல்ல; அவருக்குச் சொந்த மானவன். அவர் தமது பிரியம்போல் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். முற்றிலும் அவரை நம்பி பிழைத்திருப்பவன் நான். அவர் என்னை ஒரு விநாடி முதலாய் மறப்பாரானால் நான் நாசமாவது நிச்சயம் என்ற உண்மையை நான் அடிக்கடி நினைத் துப் பார்த்தல் நன்மை பயக்கும்; அது என் ஆங்காரத்தைத் தணிக்கும் ஓர் மருந்தாகும்.

நான் சர்வேசுரனுக்குச் சொந்தமானவன். என் னிடத்திலுள்ளதெல்லாவற்றையும் அவர் இரவலாக எனக்குக் கொடுத்திருக்கிறார். மற்ற எல்லா சிருஷ்டி களையும் அவர் எனக்கு இரவலாகக் கொடுத்திருக் கிறார். எனக்காகவே அவைகள் இருக்கின்றன, நான் சர்வேசுரனுக்காக சிருஷ்டிக்கப்பட்டவன், அவரை அறிய, அவரை நேசிக்க, இவ்வுலகில் வாழும் நாளெல் லாம் அவருக்கு ஊழியம் செய்து மறுவுலகத்தில் என்றும் அவருடன் சந்தோஷமாயிருக்க நான் உண் டாக்கப் பட்டிருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் இது தான். நான் எனது கடைசிக் கதியை அடைவதில் எனக்கு உதவி செய்யும்படியாக மற்ற சிருஷ்டிகள் உண்டாக் கப்பட்டிருக்கின்றது. அந்தக் கடைசிக் கதியை நோக் கிப் போகும் பாதையிலிருந்து நான் விலகக்கூடாது. என் ஆத்துமத்தைச் சேதப்படுத்தக் கூடாது. சேதப் படுத்துவது ஒருக்காலும் திருத்த முடியாத ஓர் தப்பி தமாகும்.

நான் கத்தோலிக்கன். நான் செய்ய வேண்டியது என்னவென்று எனக்குத் தெரியும். நான் என்ன செய்ய வேண்டும் என்று சர்வேசுரன் எனக்குச் சொல்லியிருக்கிறார். அதை எவ்விதம் செய்ய வேண்டு மென்றும் அவர் கற்பித்திருக்கிறார். நான் அதைச் செய்து முடிக்க எனக்கு உதவி தரவும் தயாராயிருக் கிறார். நான் அதைச் செய்வதனால் சர்வேசுரனை மகிமைப்படுத்துகிறேன். என் ஆத்துமத்தைக் காப் பாற்றுகிறேன். என்னுடைய மனச்சாட்சி, சர்வேசு ரனுடைய கற்பனைகள் திருச்சபை கொடுத்துள்ள கட்டளைகள், தேவதிரவிய அனுமானங்கள், ஜெபம் இவை யாவும் என்னுடைய நலனுக்காகவே கொடுக் கப்பட்டிருக்கின்றன. சர்வேசுரன் கொடுத்திருக்கும் இந்த வழிகளை நான் சரிவர உபயோகிப்பேனானால் நான் காப்பாற்றப்படுவது நிச்சயம். என் ஆத் துமத்தை நான் மோட்சம் கொண்டு சேர்க்க வேண்டு மென்று நான் சீர்மானித்தேனானால் இப்பூமியில் இருக்கும் எவராலும் , நரகத்தாலும் முதலாய் என் னைத் தடுக்க முடியாது.

ஒரு ஊரில் மசதோனியுஸ் என்ற வாலிபன் ஒரு வன் இருந்தான். அவன் உலகமெல்லாம் ஆதாய மாக்கிக் கொண்டாலும் அவன் தன் ஆத்துமத்தை இழந்து போனால் அவனுக்கு என்ன பயன் என்ற நம் இரட்சகரின் வசனங்கள் ஒரு நாள் அவனுடைய காதில் விழுந்தன. இது நடந்த சில நாட்களுக்குப் பின் ஒரு தினம் திடீரென அவன் மறைந்தான். எங்கு போனான், எதற்காகப் போனான் என்று ஒருவருக் கும் தெரியாது. பல வருடங்களாகியும் அவன் திரும்பி வரவில்லை. அவன் இறந்து போனான் என்று யாவரும் நினைத்தார்கள்.

மசதோனியுஸ் மறைந்த பல வருடங்களுக்குப் பின்னால் ஒரு அரசன் வேட்டையாடும்படி காட்டுக் குப் போனான். பயங்கரமான மிருகங்கள் நிறைந்த காட்டில் அவன் வேட்டையாடிக் கொண்டிருக்கை யில் மசதோனியுஸைப் பார்த்தான்- தான் கட்டிய குடிசையில் மசதோனியுஸ் ஏகாந்த ஜெபத்திலும் தபசிலும் காலங்கழித்து வந்தான். இராஜாவைப் போலவே மசதோனியுசும் வேட்டையாடிக் கொண் டிருந்தான். இராஜா மிருக வேட்டையாடினார். மசதோனியுஸ் மோட்சத்தைத் தேடி வேட்டையாடி னான்.

மசதோளியுஸ் செய்தது போல் நான் காட்டுக்கு போய் ஏகாந்தவாசியாய் ஜீவிக்க முடியாது. நெடும் ஜெபமும், கடும் தபசும் செய்ய இயலாது. ஆனால் அவனைக் கண்டு பாவித்து, எனது ஆத்துமத்தைக் காப்பாற்றுவதை என்னுடைய ஜீவியத்தின் அதி முக்கிய அலுவலாக்கலாம். ஆத்துமத்தைக் காப் பாற்றுவது தான் ஒவ்வொரு மனிதனுடையவும் வாழ்வின் நோக்கம். இதை அநேகர் மறந்து போகிறார் கள். இவர்கள் அதிகமாக ஜெபிப்பதில்லை. தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருக்க அக்கரை கொள் வதில்லை. சர்வேசுரனுக்காக தங்கள் அலுவல்களை நிறைவேற்றுவதில்லை. மற்றெல்லாக் காரியங்களுக் காகவும் தினந்தோறும் பல மணி நேரம் செலவழிப் பார்கள். தங்கள் ஆத்துமத்துக்காக சில நிமிடங் கள் மாத்திரம் ஒதுக்கி வைக்கிறார்கள்.

ஒரு கிராமத்தில் ஒரு குருவானவர் இருந்தார். மாலை தோறும் அவர் உலாவப் போவது வழக்கம். அவர் போகும் பொழுதெல்லாம் ஓர் மனிதன் குதிரை யைத் தேய்த்துக் குளிப்பாட்டி தீனி போடுவதைக் கவனித்து வந்தார். ஒரு நாள் அவர் அந்த மனிதனை அணுகி, "இந்தக் குதிரைக்காக தினம் எவ்வளவு நேரம் செலவழிக்கிறாய்?'' என்று கேட்டார்.

''இரண்டு மணி நேரம் ” என்று அவன் பதில ளித்தான்

“உன்னுடைய ஆத்துமத்துக்காக நீ ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் செலவழிக்கிறாய்.''

“சில நிமிடங்கள்'' என்று அவன் சொன்னான்.

"அப்படியானால் நான் உனக்குச் சொந்தமான பொருளாயிருந்தால் உன்னுடைய குதிரையாயிருக்க விரும்புவேனேயொழிய, உன்னுடைய ஆத்துமாயி ருக்க ஒருக்காலும் விரும்பமாட்டேன்'' என்று அந்தக் குருவானவர் சொல்லிப் போனார். இதைப் பற்றி நாமும் சிந்தித்துப் பார்க்கிறது நலம்.

அக்னேஸ் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வசித்த பெண். அவளுக்குப் பன்னிரண்டு வயது நடக்கும் போது, அதாவது, கி. பி. 202ம் வருடத்தில் கிறிஸ் தவ வேதத்துக்காக அவள் பிடிபட்டாள். அவளது அழகைக் கண்டு மயங்கிய அதிபதி, அவளை பாவத் துக்கு இழுக்க முயன்றான். அவள் முடியாதென்று சாதித்து விட்டாள். கிறிஸ்தவ வேதத்தை மறுதலிக் காவிட்டால் நெருப்பில் வேகவேண்டும் என்று அதி காரி கட்டளையிட்டான்- கிறிஸ்துநாதருக்கு துரோகம் செய்வதை விட, அக்னேஸ் நெருப்பில் வெந்து, கொடிய மரணமடைவதே மேல் என்று துணிந்தாள் அஸ்பாஸியுஸ் என்பவன் அவளை நெருப்பில் தூக்கிப் போட்டான். நெருப்போ மத்தியில் இரண்டாகப் பிரிந்து அவளுக்கு வழி விட்டதுமன்றி சுற்றி நின்ற வர்களை எரித்தது: அக்னேஸைத் தொடவில்லை. பிறகு அவள் தன்னை மோட்சத்துக்கு எடுத்துக் கொள்ளும்படி சர்வேசுரனைப் பிரார்த்தித்தாள். அச் சமயம் ஓர் சேவகன் வாளால் அவளைக் குத்திக் கொன்றான். சர்வேசுரனும் அவர் தரவிருக்கும் மோட்ச சம்பாவனையுமே நம்முடைய ஏக நோக்கமா யிருக்க வேண்டுமென்று அக்னேஸ் அறிந்திருந்தாள்.

நிவார்து, பெர்நார்து என்பவரின் கடைசித்தம்பி, நிவார்தைத் தவிர மற்ற யாவரும் உலகத்தைத் துறந்து துறவறம் புகுந்தார்கள். கீ என்ற சகோ தரன் வீட்டை விட்டு, தன் அண்ணன் பெர்நார்து வசித்த மடத்தில் சேரப்புறப்பட்டான். போகுமுன் நிவார் திடம், "உன் அண்ணன்மார்களாகிய நாங்கள் யாவரும் சந்நியாசிகளாய்ப் போகிறோம். நீ ஒருவன் தான் வீட்டில் இருக்கிறாய். அப்பாவுடைய சொத்து சுதந்திரம் யாவும் இனி உன்னுடையதே'' என்றான். "ஆம், நன்றாயிருக்கிறது. நீங்கள் யாவரும் மோட்சத்தை உங்களுக்கு எடுத்துக்கொண்டு இந்தப் பூமியை எனக்குக் கொடுக்கிறீர்களாக்கும்'' என்று நிவார்து சொல்லி, அவனும் உலகத்தை விட்டு சந் நியாசம் புகுந்தான். தன் வாழ்நாளை தேவசேவைக்கு ஒப்புக் கொடுத்தான்.

இந்த சிறுவனைப் போல் நாமும் பரலோக காரி யங்களைத் தக்கபடி மதித்து ஒழுக வேண்டும். என் ஆத்துமத்தை நான் காப்பாற்ற வேண்டும். அதைக் காப்பாற்ற வேண்டுமானால், விசுவாசம் நம்பிக்கை தேவ நேசத்துடன் சர்வேசுரனைத் தொழுது வர வேண்டும்.

ஒரு பட்டணத்தில் பரிசுத்தவானான ஒரு மனிதன் இருந்தார். அவர் தூய வாழ்வு நடத்தினார். தமது சகல அலுவல்களுக்கும் முன் ஒவ்வொரு தடவையும் விசுவாசம், நம்பிக்கை தேவசிநேக முயற்சிகள் செய்து வந்தாலும், சாகிறதற்கு அவருக்குப் பயமாயி ருந்தது. அவர் சாகவேண்டிய நேரம் வந்த போது ஒரு சம்மனசு அவரிடம் வந்து அவரைத் தேற்றினார் "ஐயா, பயப்பட வேண்டாம். நீர் யாரிடம் விசுவாசம் கொண்டிருந்தீரோ, நீர் யாரில் நம்பிக்கை கொண்டீ ரோ, நீர் யாரை நேசித்தீரோ, அவர் இப்பொழுது உமது சம்பாவனையாயிருப்பார்'' என்று சம்மனசு மொழிந்தார்.

இதை நான் மறந்து போகக்கூடாது. நான் என் ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இறைவன் வெளிப்படுத்தியுள்ள யாவற்றையும் நான் விசுவ சிக்கவேண்டும். நான் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பும் அனைத்தையும் நான் செய்ய வேண்டும். அதாவது கடவுளது கட்டளைகளை நான் அனுசரிக்க வேண்டும். அவர் காண்பித்திருக்கும் வழிவகைகளைக் கையாள வேண்டும். நான் இறைவனுக்காக உண் டாக்கப்பட்டிருக்கிறேன். அவரை அறிந்து நேசித்து சேவிக்கும்படியாகவே நான் இந்த உலகில் இருக்கி றேன். புனித இஞ்ஞாசியார் சொல்வது போல, பூமி யிலுள்ள மற்ற எல்லாம் மனிதனுக்காகவே உண் டாக்கப்பட்டிருக்கின்றன.

பூமியிலுள்ள யாவும் எனக்காக சிருஷ்டிக்கப்பட் டிருக்கின்றன. இது எனக்கு எவ்வளவோ ஆறுதல் கொடுக்க வேண்டும். இறைவனை அடைவதில் எனக்கு உதவி செய்யும்படியாக அவைகள் யாவும் இப்பூமி யில் இருக்கின்றன. யாவும் என்று சொல்கையில் சசலமும், பாவத்தைத் தவிர மற்றெல்லாம் அதில் அடங்கியிருக்கின்றன. பொருட்கள், மனிதர்கள், மனிதர்களின் அலுவல்கள், புத்தகங்கள் சங்கம் படங்கள், இயந்திரங்கள், கட்டிடங்கள் எனது புலன்கள், என் ஆத்துமத்தின் தத்துவங்கள், என் குறைகள், குணங்கள் யாவும் அதில் அடங்கியிரும் கின்றன. இவைகளை நான் சரியான வழியில் பயன் படுத்தினால் இறைவனை அடைய இவை எனக்கு உதவி செய்யும்.

சரியான வழியில் என்றால் பொருள் என்ன? சரி யான வழி எது என்று நானே கண்டு பிடிக்கலாம், இறைவனுக்கு நான் ஊழியம் செய்ய எது எனக்கு உதவியாயிருக்குமோ, அதுவே சரியான வழி. எவ்வ ளவு தூரம் அது இந்த அலுவலில் எனக்கு உதவி செய்யுமோ, எவ்விதம் அது உதவியாயிருக்குமோ, அவ்வளவு மாத்திரமே நான் அதை பயன்படுத்து வேன். இறைவன் விரும்புவதை, அவர் விரும்புகிற படியால், அவர் விரும்பும் சமயத்தில், அவர் விரும் பும் வழியில் நான் செய்வேன்.

உணவாயிருந்தாலும் சரி, பணக்கஷ்டம், குடும்ப காரியங்கள், நோய், தொழில் முயற்சிகளில் அனுகூலங் கள், பிரதிகூலங்களாயிருந்தாலும் சரி, அல்லது அது என்னமாயிருந்தாலும் நான் தேவ சித்தத்தையே நோக்க வேண்டும். தேவ சித்தமே எனது பாக்கியம் என்றிருக்க வேண்டும். அனைத்திலும் இறைவனது, சித்தமே நிறைவேறக்கடவது எல்லாவற்றிலும் அவர் மகிமைப் படுத்தப்படக் கடவாராக. “ஆண்டவரே, உமது சித்தத்தை நிறைவேற்றும் வழியை எனக்குப் படிப்பியும். ஏனென்றால் நீரே என் இறைவன்.''

என் ஆத்தும இரட்சணியமே வாழ்வில் எனது அதி முக்கிய நோக்கமாயிருக்க வேண்டும். என்னு டைய ஆத்துமத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்படி இறைவன் என்னை அன்புடன் அழைக்கையில் நான் உடனே அவருடைய குரலுக்கு செவி சாய்க்க வேண் டும். இதில் என் மனதைத் திடப்படுத்தும்படி என் சுபாவ நாட்டங்களுக்கு விரோதமாக நடப்பேன். இவ் விதம் நடக்க நான் கடமைப்படாத சமயங்களிலும் நான் எனது சுபாவ நாட்டங்களை எதிர்த்து நிற்பேன்.

இறைவன் எலிசேயுஸ் என்பவரை தமது தீர்க்க தரிசியாகும்படி அழைத்தார். அந்தச் சமயத்தில் எலிசேயுஸ் நடந்துகொண்டது போல் நானும் நடக்க வேண்டும். ஆண்டவர் அவரை அழைத்தபோது எலிசேயுஸ் நிலத்தை உழுது கொண்டிருந்தார். உடனே வேலையை நிறுத்தினார். கலப்பையை உடைத் துத் துண்டு துண்டாக்கி எருதுகளையும் கொன்றார். நெருப்பு பற்ற வைத்து எல்லாவற்றையும் இறைவ னுக்குப் பலியிட்டார்.

கோர்ட்டெஸ் என்பவனையும் நான் கண்டு பாவிக்க வேண்டும். ஸ்பெயின் நாட்டு வீரர்களுடன் அவன் மெக்ஸிக்கோவிற்குப் புறப்பட்டான். மெக்ஸிக்கோ நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என் பது அவனுடைய நோக்கம். அந்தத் நாட்டில் கால் வைத்ததும், தானும் மற்ற வீரர்களும் ஏறி வந்த கப்பல்களை நெருப்புக் கிரையாக்கினான். கப்பல்கள் இருந்தால் திரும்பிப் போக சோதனை உண்டாகும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ஒன்றில் மெக் ஸிக்கோ நாட்டைக் கைப்பற்ற வேண்டும் அல்லது சாக வேண்டுமென்பதே அவனது கொள்கை.

வாழ்வு ஒரு பிரயாணமாகும். நான் எங்கு பிர யாணம் செய்கிறேனென்று நான் என்னை அடிக்கடி கேட்கவேண்டும். நல்ல பணம் சம்பாதி, பேர் கீர்த்தி சம்பாதி, சுகபோகம் அனுபவி என்று உலகம் சொல் லுகிறது. “உலகத்திலுள்ளவை எல்லாம் மாம்சத் தின் இச்சையும், கண்களின் ஆசையும் ஜீவனின் பெருமையும் " (1 அரு. 2. 15) என்றும், ''உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் நேசித்து மதிக்காதீர் கள்'' (1 அரு. 2. 15) என்றும் எனது விசுவாசம் சொல்கிறது.

உலகமானது தான் கொடுப்பதாக வாக்களிப் பதை ஒருக்காலும் கொடுப்பதில்லை. கொடுத்தாலும் அதன் இன்பங்கள் என்னைப் பாக்கியவானாக்க முடி யாது. சொற்பநேரம் அந்த இன்பங்கள் என்னுடன் இருந்தபோதிலும் அவை நீடிக்கமாட்டா என் னும் நினைவு என்னை நிர்ப்பாக்கியனாக்குகிறது!. நித்தியத்தைத் தவிர மற்றெல்லாம் ஒன்றுமில்லாமை; நித்தியத்தை நோக்கித்தான் நான் பிரயாணம் செய் கிறேன். இறைவனோடு பரகதியில் சதா இன்பம் அனுபவிப்பதே என் வாழ்வின் நோக்கம். இந்த உலகமானது என்னை ஒருக்காலும் திருப்திப்படுத்த முடியாது.

ஆம், வாழ்வு ஒரு பிரயாணம், நான் நித்தியத்தை நோக்கிப் பிரயாணம் செய்கிறேன். நித்திய வாழ்வு ஒன்று இருப்பது நிச்சயம். எனது விசுவாசம் எனக்கு இதைச் சொல்கிறது. நம் இரட்சகரும் சொல்லியிருக்கிறார். சகல மக்களும் இதை அறிவார் கள். மானிட இதயமும் அதை நாடுகிறது இறை வனது நீதிப்பிரகாரம் நித்தியம் இருக்க வேண்டும். அந்த நித்தியம் இரண்டு விதம். மோட்சம் அல்லது நரகம். என் ஆத்துமமே, நீ எதை நோக்கிப் போகி றாய்? நீ இப்பொழுது நடக்கிற பாதையில் நீ தொடர்ந்து செல்வாயானால் எங்கு போய்ச் சேர் வாய்? சந்தேகமின்றி மோட்சம் என்னும் நித்தி யத்தை நோக்கி நான் பிரயாணம் செய்கிறேன். அந்த பிரயாணத்துக்கான கால அட்டவணைகளும், வழி காட்டிகளும் உண்டு. அவை நற்செய்தி நூல்களும், ஞானோபதேசமும், இவைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பவைகளுமே.

வாழ்வில் நான் இருக்கும் நிலைக்குத் தக்கபடி நான் பிரயாணம் செய்ய வேண்டும். இறைவன் என்னை வைத்திருக்கும் நிலையில் இருந்து கொண்டு நான் பரிசுத்தவானாக முயற்சிக்க வேண்டும், எனது சாமான்களை, அதாவது நற்கிரியைகளை, என்னுடன் கொண்டு செல்லவேண்டும். அநாவசியமான சாமான் கள் ஒன்றும், அதாவது, இந்த உலகின் விழலான பொருட்களைப் போன்றவைகள் என்னுடன் இருக்கக் கூடாது. ஆபத்து விளைவிக்கக்கூடிய இடங்கள், பாவ சமயங்கள், இவற்றை நான் விலக வேண்டும். பிரயா ணத்தில் நல்ல துணைவர்களோடு போக வேண்டும். திவ்விய பூசை, கத்தோலிக்கரின் கூட்டங்கள், ஆரா தனைச் சடங்குகளை எனக்கு ஞாபகப்படுத்தக்கூடிய சத்திரங்களில் நான் தங்க வேண்டும்.

வழியில் காணப்படும் இடங்களிளெல்லாம் நான் தங்கிவிடக் கூடாது. ருஷியா நாட்டின் அரசி கட்டிய பனிக்கட்டி மாளிகை போன்ற, அழிந்துபோகும் மாளிகைகளை நான் கட்டக் கூடாது. அந்த மாளிகை பார்க்க அழகாயிருந்தது. ஆனால் இளகுகிற காலம் வந்ததும் எல்லாம் அடியோடு நாசமாயிற்று. அவ ளைப்போல் நானும் அழிந்து போகும் மாளிகைகள் கட்டுவேனானால், திடீரென்று இருக்க இடமின்றி தவிப்பேன். வெளியே துரத்தப்பட்டு திண்டாடு வேன்.

உண்ணவும் குடிக்கவும் மாம்ச இச்சைகளை பூர்த்தி செய்யவும் நான் உண்டாக்கப்படவில்லை. அதற்காக நான் இங்கு இருப்பதாக நான் நினைத்து ஒழுகுவேனானால், எனக்கும் பகுத்தறிவற்ற மிருகங் களுக்கும் யாதொரு வேற்றுமையும் கிடையாது.

உணவும், குடியும் சுகபோகமும் எனது கடை சிக்கதி ஆக முடியாது. புனித அக்குயினாஸ் தோமாஸ் என்ற பெரிய சாஸ்திரி சொல்வது போல, எது மனித னது ஆசைகளை சம்பூர்ணமாய்த் திருப்தி பண்ண முடியுமோ அது தான் மனிதனது கதி. இறை வன் மாத்திரமே என் ஆசைகளுக்கு சம்பூரண திருப்தி கொடுக்கக்கூடியவர். “நீர் எங்களை உமக் காகவே உண்டாக்கியிருக்கிறீர், இறைவா, எங்கள் இருதயங்கள் உம்மில் இளைப்பாற்றி கண்டடையும் வரை ஒருபோதும் இளைப்பாறமாட்டா'' என்று புனித அகுஸ்தீன் சொல்வது உண்மையிலும் உண்மை .

டொசிதேயுஸ் என்ற வாலிபனைப்போல் நான் உறுதியான தீர்மானங்கள் சில கொண்டிருக்க வேண் டும். அத் தீர்மானங்களை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவர மன உறுதியும் வேண்டும். அவனைப் பற்றி திருச்சபையின் தபோனதர்களின் வரலாற்று நூல்களில் வாசிக்கலாம்.

டொசிதேயுஸ் என்பவன் இளவயதினன். நல்ல திட சரீரி என்று சொல்ல முடியாது. மெலிந்துபோயி ருந்தான். சந்நியாசிகள் வசித்துவந்த ஒரு மடத்துக்கு அவன் ஒருமுறை போக நேர்ந்தது. அங்கு வசித்த சந்நியாசிகளின் வாழ்க்கையை அவன் கவனித்தான். அவர்களது நன்மாதிரிகை அவனையும் அந்த மடத் துக்கு இழுத்தது.

அந்த மடத்தின் அதிபதி டொரதேயுஸ் என்ப வர். அவரிடம் டோசிதேயுஸ் விரைந்து சென்றான். அவரது பாதத்தில் விழுந்து கண்ணீர் வடித்து அழு தான். "சுவாமி, என்னையும் உங்கள் மடத்தில் சந்நி யாசியாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் என் ஆத்துமத்தைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறேன்" என்று கெஞ்சிக் கேட்டான்.

அந்த மடாதிபதி, வாலிபனை ஏற இறங்கப் பார்த் தார். மடத்தின் கடின வாழ்வும், சட்டங்களும் பலவீனனான அவனுக்கு ஒத்துப்போகா என்று அவர் கண்டுகொண்டார். "தம்பி, உனது ஆசையைக் கண்டு மகிழ்கிறேன். எனினும் உன்னை எங்கள் மடத் தில் சேர்த்துக்கொள்ள முடியாது. எங்கள் மடத்தின் சட்டங்கள் எவ்வளவு கடினமானவை என்பதை நீ அறியமாட்டாய்போலும். நன்கு அறிந்திருந்தால், நீ இங்கு வர இத்தனை ஆசை காண்பிக்க மாட்டாய் " என்று கூறினார்.

டொசிதேயுஸ் மறுபடியும் விம்மி விம்மி அழத் தொடங்கினான். "சுவாமி, சட்டங்கள் எத்துணை கடினமாயிருந்தாலும் பரவாயில்லை. நான் என் ஆத் துமத்தைக் காப்பாற்ற வேண்டும். எப்படியாவது அதைக் காப்பாற்றத் தீர்மானித்திருக்கிறேன். அத னால் தான் உங்கள் மடத்தில் நான் சேரவேண்டு மென்று வற்புறுத்துகிறேன்'' என்றான்.

“ஆனால், நாம் தற்கொலை செய்து வாழ்நாளைக் குறைக்க வேண்டும் என்று இறைவன் ஆசிப்பதில் லையே" என்று டொரதேயுஸ் பதிலளித்தார்.

'நான் உயிரோடிருந்தாலும் சரி, செத்தாலும் சரி, எனக்கு கவலையில்லை, நான் என் ஆத்துமத்தைக் காப்பாற்றவேண்டும். அது தான் நான் விரும்புவது. அதற்காக நான் மடத்தில் சேரவேண்டும். என்னை மடத்தில் சேர்க்கா விட்டால் நான் இந்த இடத்தை விட்டு அகலப்போகிறதில்லை'' என்று சொல்லி அங் கேயே அந்த வாலிபன் உட்கார்ந்துவிட்டான்.

"அது உன் பிரியம். ஆனால் நான் உன்னை மடத் தில் சேர்த்துக்கொள்ள முடியாது. சேர்த்துக்கொள் ளவும் கூடாது'' என்று மடாதிபதி சொல்லிப் போய் விட்டார்.

டொசிதேயு சோ “நான் என் ஆத்துமத்தைக் காப் பாற்ற வேண்டும். என் ஆத்துமத்தைக் காப்பாற்ற வேண்டும்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். வாசல் அறையைக் காத்துவந்த சந்நியாசியார் அங்குவந்து அவனை வெளியே போகும்படி சொன்னார். அவனோ அங்கிருந்து அசைய மறுத் தான். அதற்குள் இருட்ட ஆரம்பித்தபடியால் அவனை அப்படியே தூக்கி மடத்துக்கு வெளியே வைத்தார் கள். இரவு முழுவதும் டொசிதேயுஸ் அந்த இடத்தில் இருந்து, அழுது கண்ணீர் வடித்து “நான் என் ஆத் துமத்தைக் காப்பாற்றவேண்டும்'' என்று கத்திக் கொண்டிருந்தான். ப

பொழுது விடிந்தது. அவனது பிடிவாதத்தைக் கண்ட மடாதிபதி அவனைத் தம் மடத்தில் சேர்த்துக் கொண்டார். ஐந்து ஆண்டுகள் டொசிதேயுஸ் அந்த மடத்தில் வாழ்ந்து புனிதராக இறந்தார். புனித டொசிதேயு சே, என் ஆத்துமத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசை என்னையும் ஆட்கொள்ளும் படி எனக்காக இறைவனை மன்றாடும்.

நான் என் ஆத்துமத்தைக் காப்பாற்றவேண்டும். என் ஆத்துமம் என்றால் என்ன? அது இறைவனின் சாயலாக உண்டாக்கப்பட்டது. அழியாதது. புத்தி, மனது என்ற தத்துவங்களைக் கொண்டது. இறைவன் அதை சிருஷ்டித்தார். என் ஆத்துமத்தை எற்றுக் கொண்ட சரீரத்தையும் இறைவனே சிருஷ்டித்தார். ஆனால் இதை அவர் நேரடியாக உண்டாக்கவில்லை. ஆத்துமத்தை இறைவனே சிருஷ்டித்தார். புனித யூக்கரிஸ்ட் என்பவர் சொல்லுமாப்போல, “தன் ஆத் துமத்தைக் காப்பாற்றுவதற்கான வழிகளில் கவலை யீனமாய் இருப்பதே ஒருவன் செய்யக்கூடிய பெரும் தவறு.'

அநேகர் உலகத்துக்காகவும் தங்கள் உடலுக்காக வும் செய்வதில் பாதி முதலாய் நான் இறைவனுக் காகவும் என் ஆத்துமத்துக்காகவும் செய்யாமலிருப் பது அறியாமை, தவறு; இறைவன் என்னை அன் புடன் அழைக்கையில், தமது வரப்பிரசாதங்களை எனக்கு கொடுக்க தயாராயிருக்கையில், நான் அவரது குரற் சத்தத்தைக் கேளா தவன் போல் இருந்து விடக் கூடாது. ஏனெனில், “பின்னர், இறைவன் இத் தகைய பலமுள்ள உதவி தருவார் என்று நிச்சயமாய்ச் சொல்லமுடியாது'' என்று புனித பெர்நார்து சொல் கிறார். என்னுடைய மனதானது திடமற்றது; கீழ்ப் படிய மறுக்கிறது; தீமையை நாடுகிறது: உலக சுக போகங்களைக் கண்டு மயங்கி, அவற்றையே தேடு கிறது. எந்த நிமிடத்திலும் இறைவனை விட்டு அது அகலக்கூடும்.

நான் பரகதியில் கடவுள் சமூகத்தில் இருக்க வேண்டும் என்று அவர் ஆசிக்கிறார். இது எனது பெரிய மகிமை. சர்வேசுரன் எனக்குச் செய்து வரும் உபகாரங்களை நினைத்துப் பார்ப்பதற்காக அவர் எனக்கு ஞாபக சக்தி கொடுத்திருக்கிறார். நன்மை கொடுப்பது எது என கண்டு பிடிப்பதற்காக எனக்கு அறிவு கொடுத்திருக்கிறார். நன்மையைப் பின்பற்று வதற்கான மனது கொடுத்திருக்கிறார். சுவிசேஷ சட் டத்தின் இனிய சுமையை சுமப்பதற்கான உடல் நலத் தையும், எனது வேதனைகளை சிலுவையில் அறைபட்ட இரட்சகர் அனுபவித்த வேதனைகளோடு ஒன்றித்து, அவருடன் சகித்து பலன் சம்பாதிக்கும்படியாக நோயை வரவிட்டிருக்கிறார். ஏழைகளுக்கு தர்மம் கொடுத்து நான் பெரும் திரவியவானாக வேண்டு மென்று பொருட்களையும், ஏழைபான யேசுவை அதிக சமீபமாய்ப் பின்பற்றும்படி தரித்திரத்தையும் தந்தி ருக்கிறார். இவ்விதம் கணக்கிட முடியாத அன்புக் கொடைகளை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கி றார். வேதனைகள், துன்பம், பிறரால் வரும் உபத்திர வங்கள், சரீர தீமைகள் இவை யாவும் ஆத்துமத்தின் நன்மைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. புனித தெரேசம்மாள் நாற்பது ஆண்டுகளாக ஒரு பயங்கரத் துக்குரிய நோயினால் துன்பப்பட்டாள். அப்படியிருந்தும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் இருப்பாள். எப்பொழுதும் அவள் அதிக பொறுமையுடனும் அமைதி குலையாமலும் இருப்பது எங்ஙனம் என்று சிலர் அவளிடம் கேட்ட போது, “இறைவனுக்காக இங்கு நான் எவ்வளவு அதிகமாக துன்பங்களை சகிக் கிறேனோ, அவ்வளவு அதிக மகிமை பாக்கியம் எனக்கு மோட்சத்தில் கிடைக்கும்'' என்று அவள் சொல்வாள்.

கடியாரத்தின் மணி அடிக்கும் பொழுதெல்லாம் அவள் மகிழ்வாள். “பரலோகத்தின் எனது பாக்கிய மான வீட்டை அடைவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் சமீபித்து விட்டது'' என்று சொல்லி அவள் ஆனந்திப்பாளாம் மகிழ்ச்சியுடன் வாழ இது சிறந்த வழி என்பதற்கு சந்தேகம் கிடையாது.

நானும் அதைப் போல வாழ வேண்டும். இறை வனை அறிவதிலும் நேசிப்பதிலும் என் வாழ்நாளைக் கழித்து அவருடன் நான் முடிவில்லாத பாக்கியம் அனுபவிக்க இருக்கும் அந்தப் பாக்கியமான நேரத்தை ஆவலுடன் எதிர் நோக்கி வாழ்வேனாக.