இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா அவர்களைத் தற்காத்து பாதுகாக்கிறார்கள்

210. மாதா தன் பிள்ளைகளுக்கும் பிரமாணிக்கமுள்ள ஊழியருக்கும் செய்யும் நான்காவது அன்பின் உதவி என்ன வென்றால் அவர்களுடைய விரோதிகளிடமிருந்து அவர் களைத் தற்காத்து பாதுகாப்பு அளிக்கிறார்கள். ரபேக்காள் தன் கரிசனையாலும் முயற்சிகளாலும் யாக்கோபைச் சூழ்ந் திருந்த எல்லா ஆபத்துகளிலுமிருந்து விடுவித்தாள். குறிப் பாக அவன் ஏசாவின் கையால் இறப்பதைத் தடுத்துக் கொண்டாள். ----ஏசா யாக்கோபைக் கொன்றிருப்பான் என்றே தெரிகிறது. ஏனென்றால் காயின் தன் சகோதர னான ஆபேலைப் பகைத்தது போலவே ஏசா யாக்கோபைப் பகைத்தான் முன் குறிக்கப்பட்டவர்களின் அன்புக்குரிய அன்னையாகிய மாதா கோழி தன் குஞ்சுகளைக் காப்பது போல் தன் பிள்ளைகளைப் பாதுகாக்கும் சிறகின் கீழ் மறைத்துக் கொள்கிறார்கள். அவர்களுடன் பேசுகிறார்கள். தன்னையே அவர்களிடம் தாழ்த்தி அவர்களுடைய எல்லா பலவீனங்களுக்கும் தக்கபடி கீழே இறங்கி வருகிறார்கள். வல்லூறுகளிடமிருந்தும் கழுகுகளிடமிருந்தும் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் மேல் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அணி வகுத்து வரும் சேனையைப் போல் அவர்களுடன் செல்கிறார்கள். “போர் அணியாக வகுக்கப்பட்ட படையைப்போல் பயம் வருவிக்கத் தக்க வளாயிருக்கிறாய்'' (உந். சங். 6, 3). நூறாயிரம் பேரைக் கொண்ட, நன்கு அணிவகுக்கப்பட்ட ஒரு சேனை தன்னைச் சுற்றி இருக்கும் போது யாரும் பயப்பட அவசியமுண்டா ? அதை விட மரியாயின் பாதுகாப்பாலும் அரசிக்குரிய வல்லமையாலும் சூழப்பட்டிருக்கும் உண்மை ஊழியன் ஒருவன் அதிக திடமாயிருக்கலாம். இந்த நல்ல அன்னைஇந்த வலிமை மிகும் பரலோக இளவரசி-தன் பிரமாணிக் கமுள்ள ஊழியன் ஒருவன் தன்னை நம்பியிருந்தும், அவன் பகைவரின் எண்ணிக்கைக்கும் பலத்துக்கும் பலியானான் என்று சொல்லப்படுவதை விட அதிக விரைவாக லட்சக் கணக்கான தூதர்களை அவனுக்கு உதவியாக அனுப்பு வார்களே!