இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நமதாண்டவருடன் ஐக்கியமாவதற்கு இப்பக்தி முயற்சி நம்மைக் கொண்டு செல்கின்றது

152. கிறீஸ்தவ உத்தமதனம் நமதாண்டவருடன் ஐக்கியமாவதில் அடங்கியுள்ளது. அதை அடையும் இலகுவான வழி, கிட்டத்துவழி, உத்தமவழி, பாதுகாப் பானவழி இப்பக்தி முயற்சியாகும்.

(1) இப்பக்தி முயற்சி ஒரு இலகுவான வழி.

இது ஒரு இலகுவான வழி, சேசு கிறீஸ்து நம்மிடம் வந்ததினால் அவர் திறந்து வைத்த பாதை இது. இவ் வழியாய் நாம் அவரை அடைய எவ்வித இடையூறுமில்லை. மற்ற வழிகளில் சென்றும் நாம் கடவுளுடன் ஐக்கியம் அடைய முடியும் என்பது முற்றும் உண்மையே. ஆனால் பலப் பல சிலுவைகளாலும், இனம் புரியாத மரணங் களாலும், நம்மால் எளிதில் வெல்ல முடியாத பல கஷ் டங்களாலும் மட்டுமே அது கைகூடும். இருண்ட இரவை நாம் கடக்க நேரிடும். புரியாத போராட்டங்களையும் அவஸ்தைகளையும் சந்திக்க நேரிடும், விளிம்பில் நடந்தாற் போன்று மலைகள் மீது நடக்க நேரிடும். வேதனையான முட்கள் நடுவிலும் பயங்கர பாலைவனங்களூடேயும் நடந்து செல்ல வேண்டிவரும். ஆனால் மாதா என்னும் பாதை வழியாக நாம் எளிதாகவும் அமைதியாகவும் நடந்து செல்கிறோம்.

உண்மைதான், இங்கு கடுமையான போராட்டங்கள் உள்ளன. மேற்கொள்ள வேண்டிய பெரிய கஷ்டங்களும் உள்ளன. ஆனால் இந்த அன்புத் தாய், இவ்வன்புத் தலைவி, தன் பிர மாணிக்கமுள்ள ஊழியர்களுடைய இருளை ஒளிர்விப்பதற்கும், கலக்கங்களில் அவர்களுக்குப் பிரகாசிப்பதற்கும், பயத்தில் அவர்களைத் திடப்படுத்து வதற்கும் போராட்டங்களிலும் கஷ்டங்களிலும் அவர்களை கை தூக்குவதற்கும், எவ்வளவு அருகாமையில் தன்னைக் கொணர்ந்து எவ்வளவு பக்கத்தில் பிரசன்னமளிக்கிறார் களென்றால் கிறீஸ்துவைத் தேடும் இக்கன்னிப் பாதை, மற் றவற்றுடன் ஒப்பிடும் போது உண்மையிலே ரோஜா மலர்ப்பாதை, தேன் போன்ற பாதை! சேசு கிறீஸ்துவிடம் செல்ல இவ்வினிய பாதையைத் தெரிந்து கொண்ட சில அர்ச்சிஷ்டவர்கள் உள்ளார்கள். அவர்கள் ஒரு சிலரே. அர்ச். எப்ரேம் அர்ச். தமாசின் அருளப்பர். அர்ச். பெர்னார்ட், அர்ச். பெர்னார்டின். அர்ச். பொனவெந்தூர், அர்ச். பிரான்சிஸ் சலேசியார் இன்னும் மற்றவர்கள். காரணம், மரியாயின் பிரமாணிக்கமுள்ள மணாளனாக பரிசுத்த ஆவி ஒரு தனி வரப்பிரசாதத்தால் இதை அவர் களுக்கு வெளிப்படுத்தினார். ஆனால் பெருந்தொகையின ரான மற்ற அர்ச்சிஷ்டவர்கள் நம் தேவ அன்னை மீது பக்தி பூண்டிருந்தாலும் இந்த வழியில் வரவில்லை. வந் தாலும் வெகு கொஞ்ச அளவே நுழைந்தார்கள். இதனா லேயே அவர்கள் அதிக கடினமான, அதிக ஆபத்துள்ள சோதனைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

153. ஆனால் இது எப்படி? - இந்நல்ல தாயின் பிர மாணிக்கமுள்ள ஊழியர்கள் எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியுள்ளதே! அன்னை மீது குறைந்த பக்தியுள்ளவர்களை விட அவர்கள் அதிக துன்பப்படவேண்டியுள்ளதே! என்று மரியாயின் ஊழியன் ஒருவன் கேட்கலாம். மாதா வின் பிரமாணிக்கமுள்ள ஊழியர்கள் எதிர்க்கப்படு கிறார்கள்; இம்சிக்கப்படுகிறார்கள்; பழி கூறப்படுகிறார்கள். அவர்களை யாரும் சகித்துக் கொள்வதில்லை. அல்லது. அவர்கள் பரலோக தண்பனி ஒரு துளி கூட இல்லாத ஞான வறட்சியிலும் அந்தரங்க இருட்டிலும் வாழ்கி றார்கள். மரியாயின், பக்தி சேசுவை அடையும் வழியை எளிதாக்குகிறதென்றால், இவர்கள் மட்டுமே மிக அதிக மாய்த் தாக்கப்படுவது ஏன்?

154. என்னுடைய பதில் இது : அதாவது மாதாவின் மிகப் பிரமாணிக்கமுள்ள ஊழியர்கள், இவ்வன்னைக்கு மிக வும் வேண்டியவர்களாயிருப்பதால் இத்தாயிடமிருந்து மிகப் பெரும் வரங்களையும் பரலோக கொடைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள் - சிலுவைகளே அவைகளாம்! ஆயினும் மாதாவின் இந்த ஊழியர்களோ சிலுவைகளை அதிக எளிதாக சுமக்கிறார்கள்; அதிக பலனுடன் அதிக மகிமை யுடனும் சுமக்கிறார்கள். என்றே நான் கூறுகிறேன். மற் றவர்களுடைய முன்னேற்றத்தை ஆயிரந்தடவை தடுக்கக் கூடிய காரியங்கள், இவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்வதில்லை. மாறாக அவை. இவர்கள் முன்னேறிச் செல்லச் செய்கின்றன. காரணம் என்னவென்றால், பரிசுத்த ஆவியின் வரப்பிரசாதத்தாலும் அன்புறுதியாலும் நிறை விக்கப்பட்ட இந்நல்ல தாய், தன் ஊழியர்க்கென தான் அமைத்துத் தரும் எல்லா சிலுவைகளையும், அவை தன் னிலே மிகக் கசப்புள்ளதாயினும், தன் தாய்க் குரிய இனிமை, தூய அன்பு ஆகிய தித்திப்பால் தோய்த்து, இனிப்புக் கலந்த பருப்புகளை மகிழ்ச்சியுடன் விழுங்குவது போல் அவற்றை உட்கொண்டு விடும்படி செய்கிறார்கள். பக்தியுடையவனாயிருந்து சேசு கிறீஸ்துவின் அன்பில் வாழ்வதற்காக, உபத்திரவங்களை அடையவும் தினமும் தன் சிலுவையைத் தூக்கிச் செல்லவும் விரும்பும் எவரும், மாதா மீது கனிந்த அன்பு கொண்டிருப்பார்களானால், பளுவான சிலுவைகளை அவர்கள் சுமப்பதில்லை; சுமந்து தாலும் மகிழ்ச்சியோடும் முடிவு வரையும் சுமப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஏன்? மாதா சிலுவையின் இனிமையாயிருக்கிறார்கள், விளையாத பருப்பு இனிப்பில் ஊறாவிட்டால் மிகுந்த சிரமமில்லாமல் அதைச் சாப்பிட முடியாதல்லவா? மிகுந்த முயற்சியுடன் சாப்பிடலாம்ஆனால் அம்முயற்சி நீடிக்காதே!