யேசுவின் அடிச்சுவடுகளில்

யேசுவைப்பற்றி நாம் நினைக்கும்போது அவரது திரு இதயத்தைப்பற்றி நினைக்கிறோம். அவரது திரு இருதயத்தின் நினைவு வந்ததும் அந்த இதயம் நம் மேல் கொண்ட நேசத்தைப்பற்றி நாம் நினையாதிருக்க முடியாது. அவரது நேசம் மிகத் தெளிவாகப் புலப் படுவது திவ்விய சற்பிரசாதத்திலேயே. யேசுவின் நேசத்தை நாம் நன்கு அறிய வருவோமானால், அவ ரோடு இருக்க விரும்பி, மோட்சம் போகும்படி நாம் உடனே சாக ஆசிப்போம்.

அநேக ஆண்டுகளுக்குமுன் பக்தியுள்ள முனிவர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் வசித்த புண்ணிய ஸ்தலங்களுக்குத் திருயாத்திரையாய்ப் போக அவ ருக்கு ஆசை உண்டாயிற்று. காணக்கூடிய விதமாய் ஆண்டவர் இவ்வுலகில் வசிக்கையில் நடந்து சென்ற இடங்களில் தாமும் நடந்து செல்ல அவர் ஆசித்தார். ஆண்டவரது வாழ்க்கையாலும் மரணத்தாலும் புனிதப்படுத்தப்பட்ட இடங்களைச் சந்தித்து வந்திக்க அவர் ஆசைமேல் ஆசையாயிருந்தார்.

அவர் பலஸ்தீன் நாட்டுக்குப் போனார். ஒவ்வொரு இடமாய்ப் போய்த் தரிசித்து ஜெபித்து, கிறிஸ்து நாதரது வாழ்க்கையைப்பற்றி சிந்தித்தார். நசரேத் தூருக்குப் போனார். கபிரியேல் சம்மனசு கன்னிமரி யம்மாளுக்குத் தோன்றி, அவள் கடவுளுடைய தாயாக வேண்டும் என்றும், அவளுடைய குழந்தையின் பெயர் யேசு என்றும், அவர் தம் மக்களை பாவத்தி னின்று காப்பாற்றுவாரென்றும் அறிவித்தது அந்த ஊரிலேயே.

பின் அவர் பெத்லெகேமுக்குச் சென்றார். கர்த்தர் பிறந்த இரவில் மரியம்மாளும் சூசையப்பரும் தங்க அங்கு இடம் கிடைக்கவில்லை. எளிய மாட்டுத் தொழுவத்தில் யேசு பிறந்தார். அவரைக் கந்தைத் துணிகளால் போர்த்தினார்கள். இடையர்கள் அவரை ஆராதிக்கும்படி அங்கு சென்றார்கள். கீழ்த் திசை யிலிருந்து மூன்று அரசர்கள் போய் அவரை ஆரா தித்தனர்.

திரும்பவும் அவர் நசரேத்துக்குச் சென்று யேசு அங்கு நடத்திய வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தார். எஜிப்து நாட்டிலிருந்து திரும்பிய பின் யேசு அங்கு வந்தார். ஊர் ஊராய்ப் போய்ப் பிரசங்கிக்கத் தொடங்கும் வரை அங்கு அவர் வசித்தார். அங்கி ருந்து சமயா சமயங்களில் அவர் எருசலேம் தேவால யத்துக்கு போய் தம் பிதாவை நோக்கி ஜெபிப்பார்.

பின்னர் நம் திருயாத்திரி நசரேத்திலிருந்து யோர்தான் நதிக்கரைக்குச் சென்றார். அங்கு இரட் சகர் ஸ்நாபக அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றார். இரட்சகர் ஸ்தாபிக்க இருந்த பெரிய தேவ திரவிய அனுமானத்தின் அடையாளமாயிருந்தது ஸ்நாபக அருளப்பர் கொடுத்த ஞானஸ்நானம்.

இரட்சகர் நாற்பது பகலும், நாற்பது இரவும் உபவாசமாயிருந்த காட்டுக்கு பின் அவர் சென்றார். அந்தக் காலத்தை இரட்சகர் ஏகாந்தத்தில் செலவழித் தார். பசாசு அங்கு அவரைச் சோதித்தது; பின் சம்மனசுகள் அவருக்குச் சேவை செய்தார்கள்.

யேசு தம் சுவிசேஷத்தைப் போதித்து, நோயாளி களைக் குணமாக்கி, குருடருக்குப் பார்வையளித்து, சப்பாணிகளை நடக்கச் செய்து, செவிடர்களுக்குக் கேட்கும் சக்தியளித்து, ஊமையரைப் பேசச்செய்து, மரித்தோரை உயிர்ப்பித்த இடங்களையெல்லாம் அவர் போய் தரிசித்தார்.

பின்னர் அவர் தபோர் மலைக்குச் சென்றார். அங்கு ஆண்டவர் தம் மகிமையை இராயப்பர்; யாகப்பர், அருளப்பர் ஆகிய மூவருக்கும் காண்பித்தார். அங்கு அவரது முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது; உடை கள் வெண்பனிக்கட்டியைப் போல் இருந்தன.

யேசு மரிக்கிறதற்கு முந்தின இரவில் திவ்விய நற்கருணையை ஸ்தாபித்த இடத்தை தரிசிக்கும்படி அவர் எருசலேமுக்குப் போனார். அங்கிருந்து ஒலிவ மலைக்குச் சென்றார். பின் எருசலேம் நகரத் தெருக்கள் வழியாய் நடந்து கல்வாரி மலையை அடைந்தார். யேசு கொடிய அவஸ்தைப்பட்டு சிலுவையில் உயிர் விட்டது அங்கேயே.

ஆண்டவரை அடக்கம் செய்த இடம், உயிர்த்த பின் அவர் காட்சி கொடுத்த இடங்கள், பரலோகத் துக்குப் போகுமுன் அப்போஸ்தலர்களை கடைசி முறையாக ஆசீர்வதித்த இடம் இவற்றையும் அவர் தரிசித்தார்.

ஆண்டவரது வாழ்க்கையுடனும் மரணத்துட னும் சம்பந்தப்பட்ட இடங்களை யெல்லாம் அவர் பக்தி யுடன் தரிசித்தபின் அவர் வானத்தை நோக்கினார். அடைக்கப்பட்ட மோட்ச வாசலை மனிதருக்குத் திறந்து விடும்படி, பயங்கர உபாதைகளைப் பட்டு உயிர்விட்ட யேசுவின் அணைகடந்த அன்பை நினைத் துப் பார்த்ததும், அவரது இதயம் வெடிக்குமாப் போல் இருந்தது. "ஓ யேசுவே, யேசுவே, என் இதய தேவனே, நேசமிகு இரட்சகரே, இனி நான் பூமியில் உமது அடிச்சுவடுகளைப் பின்பற்றமுடியாது ஆதலின் மோட்சத்துக்கு உம்மிடம் என்னை அழைத் துக் கொள்வீராக. நாவால் வர்ணிக்கமுடியாத அளவு உம்மை நேசிக்கும் நான் உம்மை நேருக்கு நேர் பார்க் கும் வரத்தைத் தாரும்'' என அவர் மன்றாடினார்.

அவரது மன்றாட்டு கடவுளுக்குப் பிரியமாயிருந் தது. இந்த வார்த்தைகளை அவர் சொல்லி முடித்த தும் அவர் கீழே சாய்ந்து, அமைதியாய் தம் ஆத்து மத்தை கடவுளிடம் ஒப்படைத்தார். அவர் இறந்த பின் “யேசுவே, என் சிநேகமே " என அவருடைய நெஞ்சின்மீது எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

நாமும் இந்தப் பரிசுத்தவானைப் போல் யேசுவை நேசிக்கவேண்டும். இந்த நேசத்தைப் பெறவேண்டு மானால், அந்த நேசத்தைக் காப்பாற்றி அதிகரிக்கச் செய்ய வேண்டுமானால், சிநேக தேவதிரவிய அனுமா னமாகிய திவ்விய நற்கருணையை நாம் அடிக்கடி உட் கொள்ளவேண்டும்.