இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிள்ளைகளின் உயிரும் சவுக்கியமும்

தாய்தந்தையர் தேவகிருபையாற் புத்திரபாக்கியம் உள்ளோராய்ப் பெற்றோருக்குரிய மகிமையை அடையும்போது அந்தமகிமைக்குரிய கடமைகளையும் இயல் பாய்ச் சுமந்துகொள்ளுகிறார்கள். பிள்ளைகளுக்குச் சரீ ரமும் ஆத்துமமும் அவைகளுக்குரிய இகபர கதிகளு முண்டு. ஆகையாற் பிள்ளைகளின் சரீரத்தையும் அதற் குரிய இகலோகநன்மைகளையும், ஆத்துமத்தையும் அ தற்குரிய பரலோக நன்மைகளையும் பரிபாலிப்பது பெற் றோரின இன்றியமையாக் கடமையாம். இவ் இகபரம் நன்மைகளுக்கு உயிரும் சவுக்கியமுமே மூலாதாரமா னவை. உயிர் அல்லது சீவன் லெளகீக நன்மைகளில் எல்லாம் மேலானது, ஆனால், சவுக்கியமற்ற சீவியம் சாதாரணமாய் நிர்ப்பாக்கியமானதன்றிப் பாக்கியமான தல்லவென்று பிணியாளிகள் அனுபவத்தால் அறிவார் கள். ஆகையாலன்றோ சில நோயாளிகள் வருத்தத்தி னால் உபத்திரவப்படும்போது சவுக்கியமென்னும் பாக் கியத்தை அனுபவிக்க முடியாததினால் சாகவிரும்பி ஒன்றிற் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள் அல்லது வேறுபலவிதமாய்த் தங்கள் வாழ்நாளைக் குறுக்கிவிடுகி றார்கள். இதெல்லாம் பெரும்பாவமாயினும் இப்படிச் சிலசமயங்களிற் சம்பவிக்கிறதைக் கண்டுங் கேட்டும் வா ருகிறோம். '' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் '' என்பது ஆன்றோர் வாக்கு.

சில குழந்தைகள் செத்துப் பிறக்கிறார்கள். வேறு சிலர் பிறவிதொட்டு ஊமைகளாய் அல்லது குருடராய் அல்லது செவிடராய் அல்லது சப்பாணிகளாய் அல் லது நோயாளிகளாயிருக்க நேரிடுகின்றது. இதெப் போதும் பெற்றோரின் தீவினைப்பலனென்று தூற்று வது பெருந்தவறு. '' நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க் கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் '' (அர்ச். மத்தேயு 7.1) இப்படிப் பிறக்கும் பிள்ளைகளும் சருவேசுரனாற் பெற்றோரிடம் ஒப் படைக்கப்பட்டபடியால் இவர்களையும் தாய் தந்தை யர் குறையின்றி அருமையாய் நேசித்துக் காப்பாற்று - வது அவர்கள் மேற் கனமான கடமையாம். அன்றியும், இவ்வித அங்கவீனங்களுக்கும் பற்பல நோய்களுக்கும் சில சமயங்களில் பெற்றோரே காரணராயிருக்கிறார்கள் ளென்பதில் சந்தேகமில்லை. ஆகையால், பிதா மாதாக் கள் மக்களை நோயால் நிர்ப்பாக்கியப்பட விடாமலும் தாங்கள் தேவபழிக்கிரையாய்ப் போகாமலுந் தப்பிக் கொள்ளவேண்டுமாகில் பிள்ளைகளின் உயிரையும் சவுக் கியத்தையும் கண்மணிபோற் காத்துவரவேண்டியது. பிள்ளைகள் சுபாவமுறைப்படி பெற்றோரிலிருந்தே சவுக் கியத்தையும் பலத்தையும் அடைகிறார்கள். தேக சுக பெலங்கெட்ட பெற்றோரிலிருந்து பிள்ளைகள் நற்சுகம் பெலம் பெற இயலாது.

ஆகையால், முதலாவது தாய் தந்தையர் பெற்றோரா குமுன் இளமைதொட்டே தங்கள் சுகத்தையும் பலத் தையும் பேணிக் காத்துக்கொள்ளவேண்டுமென்றும், இ ரண்டாவது தங்கள் பிள்ளைகளின் உயிரையும் சுகத்தை யும் பரிபாலிப்பது எப்படியென்றுங் காட்டுவோம்.