பிள்ளைகளின் உயிர்

சிலர் முறைமைப்படி சமுசாரிகளாகுமுன் தகாத கூட்டுறவினால் துராசைகளுக்கிரையாய்ப் போகும்போது சுபாவமுறைக்கெதிராய் நடந்து குழந்தைகளின் உற் பத்தியைத் தடுத்துவிடுகிறார்கள். சமுசாரிகளிலும் ப லர் பிரசவ அபாயங்களுக்கு அஞ்சி அல்லது அநேக பிள்ளைகளை வளர்ப்பதிலுள்ள கஸ்தி, பிரயாசம், செலவு ஆதிய சுமைகளைத் தொலைக்கிறதற்காக இவ்வித பாத கம் செய்வதுண்டு. இது சுபாவமுறைக்கும் மனுக்குல் விருத்திக்கும் மாறான பெருந் துரோகம். இவ் அக்கிர மம் மிகுதியாயப்பரம்பிய ஊர்தேசங்களில் சந்தானவி ருத்தியும் சனத்தொகையுங் குறையத் தேவகோபாக்கினை பெருகிவருகின்றது. இப்படிச் செய்கிறவர்கள் கடவுளு டைய சிருட்டிக்கும் வல்லமையையும் மெய்விவாகத்தின் நோக்கத்தையும் எதிர்த்து நிற்பதுமன்றி மிருகங்களைப் பார்க்கிலும் கேடுகெட்டவர்களாய்ப் போகிறார்கள். இக் கொடுமைக்கெதிராய் மானிடரை எச்சரிக்கும்பொருட்டு உலகசிருட்டிகர் இயல்வேதகாலத்தில் இத்துரோகத் தைச்செய்த ஓனன் என்பவனைச் சபித்துச் சாகடித்தா ரென்று வேதாகமத்திற் காண்கிறோம். (ஆதியாகமம் 38.) சிசு உற்பத்தியைத் தடுப்பதாகிய பாவதுரோகம் ஐரோப்பிய பாஷைகளில் இவன் நாமத்தாலேயே அழைக் கப்படுகின்றது.

ஒன்றிகளான சில தூர்த்தர் வெட்கத்துக்குத்தப் பிக்கொள்ளுகிறதற்காகவும், சமுசாரிகள் கர்ப்பஸ்திரீ களை நோயில் நின்று குணப்படுத்துகிறதற்காகவும் அல் லது பிள்ளைகளை வளர்க்குந் தொல்லைகளை நீக்குவதற் காகவும் மருந்தினால் சிசுவைக் கர்ப்பத்தில் அழித்துவி டுகிறார்கள். இப்படிக் கொல்லப்படுங்குழந்தை ஞானஸ் நானமின்றிச் சாகிறபடியால் நித்திய மோட்சபாக்கியத் தை இழந்து போகின்றது. இவ்வித கொலை செய்கிற வர்கள் மாத்திரமல்ல, இதற்கு உதவி உடந்தையாயிருக் கும் அனைவரும் தேவசமுகத்தில் இந்தப் பழிபாதகத் துக்குப் பங்காளிகளாகவே இருக்கிறார்கள். ஆதியில் ஆ பேலைக் கொலை செய்த காயீ னுக்கு எதிராய்ப் பழிவாங்க ஆபேலின் உதிரம் வானமண்டலமட்டும் குரவையிட்ட துபோல இப்படி உயிரையும் பரகதியையும் இழக்குங் குழந்தையும் தன்னைக் கர்ப்பத்தில் அழித்தவர்களுக்கும் அதற்கு உதவியாயிருந்தவர்களுக்கும் எதிராய் எக்கால மும் அபயமிடுமென்பதற் கையமில்லை. கரு அழிக் குங்கொலைபாதகரே, அதற்கு உடந்தைக்காரரே, காயீ னைக்கடூரமாய்ச் சபித்து அலைந்து திரியச்செய்த முகம்பா ராத நீதியின் கடவுள் உங்களை இலேசாய்த் தப்பவிடு வாரென்று நினைக்கிறீர்களா? உங்கள் மேற் சுமரவிருக் கும் தேவகோபாக்கினை மகா பயங்கரமானதென்பதை மறவாதிருங்கள்.

பிரசவகாலத்தில் பிள்ளை பிறக்குமுன் தாய் இறக்க நேரிடில் அநேகர் பிள்ளையைப்பற்றிப்பறுவாய்பண்ணாமல் அது உயிரோடிருக்கிறதோ என்று அறியவும் முயலாமல் மோசம் போகவிடுகிறார்கள். ஆனால், மனுக்குழந்தையு டைய உயிரின் அருமையையும் மேன்மையையும் அறிந்து மதித்து நடக்கும் அறிவாளிகள் அவ்வுயிரை அபாயத்தில் நின்று நீக்கத் தங்களாலியன்ற பிரயாசப்படவும் வேண் டிய உபாயந்தேடவும் பின்னிடார்கள். இவ்வித ஆபத் துக்களில் நின்று குழந்தைகளை மீட்பது தேவன் தமக்கு எவ்வளவு இதமான செயலென்று நமக்குக் காண்பிக் கும்பொருட்டு இப்படிக் காப்பாற்றப்பட்ட சில குழந்தை களைப் பிற்காலம் பெரியதருமவான்களாக்கி அவர்களால் உலகத்துக்குப் பெரும் நன்மைகளை விளைவிக்கச்சித்தமா னார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் பெருந்தருமவா னாக விளங்கிய அர்ச். றேமோந்தப்பர் பிறக்குமுன் தாய் இறந்தபடியால் சத்திரவைத்தியர் பிரேதத்தைக் கீறிப் பிள்ளையைப்பத்திரமாய் உயிரோடெடுத்தார்கள். இக் குழந்தை வளர்ந்து பராயப்பட்டபின் தான் அருமை யாய் நேசித்துவந்த தேவதாயாரின் ஏவுதற்படி அடிமை களை மீட்குஞ் சபையிற்சேர்ந்து தருமந்தண்டி தன் செ னன தேசமாகிய ஸ்பானியாவைவிட்டு ஆபிரிக்காவுக்கு வந்து அங்கே அடிமைகளை மீட்கும் அலுவலில் அமர்ந் திருந்தார்.

இப்படிப் பெருந்திரளான சிறைகளைத் துலுக்கர் கையினின்று இரட்சித்தபின் கையிற் காசில்லாமற்போக ஒருதொகைப்பணத்துக்குத் தம்மைப்பிணையடிமையாக ஒப்புக்கொடுத்து இன்னும் சில சிறைகளுக்குச் சுயாதீ னங்கிடைக்கச் செய்தார். இவருடைய புத்திபோதனை யினாற் தொகையான துலுக்கர் மனந்திரும்பி கிறீஸ்தவர் களானதை மறு துலுக்கர் அறிந்து அவர்மீது மிகக்கோ பெங்கொண்டு அவர் வாய்க்கு ஒருவித பூட்டை மாட்டி ஒ டுங்கிய சிறைச்சாலையில் அடைத்துவிட்டார்கள். அங்கு இத்தருமசீலன் அனுபவித்த உபத்திரவங்களை அக்கா லமிருந்த பரிசுத்த பாப்பரசர் அறிந்தபோது அவரை மீட்டு ஐரோப்பாவுக்கு அழைத்துக்கொண்டதுமன்றி திருச்சபையின் பிரபுக்களாகிய கருதினால்மாருள் அவ ரையும் ஒருவராக நியமித்தார். அங்கும் பெரும்புண்ணி யங்களைச் செய்து காலஞ்சென்றபின் அவர் மூலமாய் நடந்த அநேக நவமான அற்புதங்களைக்கண்டு பரிசுத்த மாதா வாகிய திருச்சபை அவருக்கு அர்ச்சியசிஷ்டபட்டஞ் சூட்டியிருக்கிறது.

ரோமர் உலகத்தைக் கட்டி அரசாண்டகாலம் அவர் களுள் அதிசூர சேனாபதியாகவும் சர்வாதிகாரியாகவும் விளங்கி இற்றைக்கும் உலகெங்கும் மங்காப் பெயர்பெற் விலங்கும் யூலியுஸ் சேசார் என்பவரும் தாயுதரத்திலி ருந்து வைத்தியரால் எடுக்கப்பட்டாராம். இவ்வித வைத் தியம் இற்றைக்கும் இவர் நாமத்தாலேயே அழைக்கப்
படுகின்றது.

வடதேசத்தின் சில பாகங்களில் ஒர் கருப்பவதி பிள் ளையைப் பிரசவிக்குமுன் இறக்கச் சம்பவித்தால் அவள் உதரத்திலிருந்து பிள்ளையை எடாவிடில் மழை பெய்யா தென்ற ஒரு அபத்தமான கொள்கையுண்டாம். சவத்தை அடக்குமுன் அல்லது சுடுமுன் இவ்வலுவலை நடத்து வதும் ஓர் நாவிதனாம். தாய் மரித்தபின் அவள் உத ரத்திலிருக்கும் குழந்தை இன்னுஞ் சில மணித்தியாலம் உயிரோடிருக்குமென்று வைத்தியர் சொல்லுகிறார்கள். ஆகையால், தாமதமின்றி சத்திர அறிவற்ற நாவிதனுக் குப் பதிலாக ஓர் சத்திர வைத்தியனை அழைத்துப் பிள் ளையை உயிரோடு எடுக்க வழிபண்ணினால் எத்தனையோ பிள்ளைகள் தப்பிப் பிழைப்பார்களே என்று நூலாசிரியர் ஒருவர் கூறுகிறார். அனுபவமுள்ள சில சத்திர வைத் தியர் கருப்பவதிகள் பிரசவிக்கத் திராணியற்று உபத்தி ரவப்படும்போது சத்திரப் பிரயோகஞ்செய்து பிள்ளை யையும் பத்திரமாய் உயிரோடு எடுத்துத் தாயையும் பிழைப்பித்துவருகிறார்கள்.

சில குழந்தைகள் பிறக்கும்போது உயிரோடிருக்கிற அடையாளமொன்று மில்லாதபடியால் அறியாதவர்கள் அவைகளைச் செத்துப் பிறந்ததாக எண்ணி அடக் கம்பண்ணி விடுகிறார்கள். ஆனால், கெட்டித்தனமுள்ள சில வைத்தியர் அப்படியிருந்த அநேக குழந்தைகளை வைத்திய கிருத்தியங்களினாற் பிழைக்கப்பண்ணியிருக் கிறார்கள். சில காலத்துக்குமுன் மானிப்பாய் வைத்திய சாலைக்குத் தலைவராயிருந்த கனம். ஸ்கொட் ஐயர் அவ் வித சில குழந்தைகளைப் பிழைப்பித்ததை அவ்விடங்க ளிலுள்ள அநேகர் அறிவார்கள்.

சில கணவர் கடுங் கோபம், குடிவெறி, துராசை, முதலியவைகளுக்கு அடிமைகளா யிருப்பதினால் கர்ப்ப | வதிகளாயிருக்கும் தங்கள் மனைவிகளின் நொய்மையான ஸ்திதியைக் கவனியாமல் அவர்களை அடித்துதைத்து | அவர்களுக்குத் துக்கமும் மனக் கலக்கமும் உண்டு பண்ணி விடுவதால் பிரசவகாலத்தில் தாயும் பிள்ளையும் மோசம்போவது அரிதான சம்பவங்களல்ல.

கர்ப்பவதிகளுடையவும் அவர்களுதர த்திலிருக் கும் பிள்ளைகளுடையவும் உயிருக்கும் சுகத்துக்கும் பெரும் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய அநேக காரி யங்களுண்டு. ஏக்கம், மிகுதியான மனக்கவலை, பயம், துக்கம், கடுங் கோபம், சண்டை , பிரயாசமான வேலைகள் ளைச் செய்தல், நித்திரை விழித்தல், பட்டினி கிடத்தல், ஆதியவை பிரசவகாலத்தில் ஆபத்துக் கேதுவானவை யாம். பழந் தீனையும், அசீரணமான பண்டங்களையும், மட்டசனமின்றி நினைத்த நேரமெல்லாம் கைக்கெட் டிய யாவையும் வாயிற்போடுங் கெட்ட பழக்கத்தையும் சகலவித அசுத்தங்களையும் விலக்கி நடப்பது கர்ப்பவதி களுக்கு அகத்தியம். சிலர் இவைகளைச் சற்றும் பொ ருட்பண்ணா திருப்பதினாலன்றோ அநேக குழந்தைகள் நோய் பிடித்தவர்களாய்ப் பிறந்து சில நாளைக்குள் இறந்து போக நேர்கின்றது.

பூமியிலுள்ள சகல சீவசெந்துக்களுக்கும் மேலான படைப்பாகிய மனுஷன் பிறக்கும்போது மற்றச் சர்வ பிராணிகளிலும் அதி நொய்மையாயிருக்கிறான். கையி னாற் தொடுவது முதலாய் குழந்தைக்கு வருத்தமாயிருக் கிறபடியாலல்லவோ அது பிறந்த நேரந்தொட்டுச் சில காலமாக அதை மென்மையான துணியில் வளர்த்தி அதைக் கையிலெடுக்கும்போதெல்லாம் அத்துணியோ டெடுப்பார்கள். இன்னும் மறு சீவபிராணிகளைப்பார்க்க மனிதனே இளமையில் அதி நெடுங்காலமாய்த் தாய் தந்தையரின் அணைப்பிலும் ஆதரவிலும் தங்கியிருக்க வேண்டியிருக்கிறான். இப்பருவத்தில் பெற்றோரின் பராமரிப்புக் குறையும்போதெல்லாம் பிள்ளையின் உயி ரும் சுகமும் இடையூறுக்குள்ளாகும். இக் குறைவினா லன்றோ அநேக குழந்தைகள் தங்களைத் தாங்கள் காப் பாற்றக்கூடிய வய துவருமுன் மடிந்து போகிறார்கள். பொதுவாகப் பெற்றோர் தலைச்சன் இடைச்சன் பிள்ளை களிற் செலுத்துங் கவனம் பின் பிறக்கும் சகல பிள்ளை களி லுஞ் செலுத்துவார்களானால் அவர்கள் நடுத்தீர்வை நாளில் தங்கள் மக்களின் உயிரையும் சவுக்கியத்தையும் பற்றித் தேவ னுக்குக் கொடுக்கவேண்டிய கணக்கு மிக இலகுவாயிருக்கும்.

உலகிற் தாய் தந்தையரின் கவனக் குறைவால் நாள் தோறும் குழந்தைகளுக் கெய்துந் தன்மைகளைக் கணக்கிட யாரால் முடியும்? பெற்றோரின் அசட்டையால் நெருப்பில் அவிந்த குழந்தைகளெத்தனை? நீரிலமிழ்ந் தினவைக ளெத்தனை? மண்ணை, கல்லை வேறு அசீரணமான அல்லது நஞ்சான பண்டங்களை விழுங்கி மோசம் போன குழந்தைக ளெத்தனை? கட்டிலிலும், கதிரையிலும், பழுதான பிள்ளைத் தொட்டிலிலும், திண்ணையிலும் குந்திலுமிருந்து விழுந்து கால் கை யொடிந்தவைகளெத்தனை? நாய் கடித்தும், பூனை விறாண்டியும், கோழி கொத்தியும், ஆடு மாடு மிதித்தும், தேள், சர்ப்பம், பூச்சி, புழுத் தீண்டியும் காயம்பட்டவைகளும் இறந்தவைகளு மெத்தனை? தாய்மார் தங்கள் வசதிக்காக ஐந்து ஆறு வயதுப் பிள்ளைகளைப் பள்ளிக்குப் போகவிடாமல் பல நாளும் மறித்துக் கைக்குழந்தைகளை வைத்திருக்கும்படி செய்தவிடத்தில் அவர்கள் குழந்தைகளை இடுக்கித் திரியப் போதிய பெலனில்லாததினாலும், விளையாட்டுப் பராக்கினாலும் கை தவறிப் போட்டும், தடக்கிவிழுந் தும், அங்கபங்கப்பட்ட அல்லது உயிரிழந்தவைக ளெத் தனை? ஆயாளின் அசட்டைத்தனத்தாலும் குரூரத்தா லும் மோசம்போன குழந்தைக ளெத்தனை? குழந்தை களுள்ள வீடுகளில் கவனஈனமாய் அங்குமிங்கும் விடப் பட்ட ஆயுதங்களால் தங்களை மோசமாய்க் காயப்படுத் திக்கொண்ட பாலிய ரெத்தனை? வெயிலிலும் பனியிலுந் திரிந்து, நோயுற்றிருந்தவைகள் எத்தனை? குளிப்பு முழுக்குக் குறைவாலும், நேரவழிக்குக் கிரமமாய்ப் போசனம் கிடையாததினாலும் அநேக குழந்தைகள் நோய்வாய்ப்படுவதில்லையா? உண்ட உணவு சமிக்கு முன் குளித்ததினால் அல்லது முழுகின தினால் அநேகர் மோசம் போனார்களென்று முறைக்குமுறை கேள்விப்படு கிறோமல்லவா? விளையாடி அல்லது வேலை செய்து அல் - லது வெயிலில் திரிந்து இளைத்திருக்கும்போது களைதீ ருமுன் தாகந்தீரத் தண்ணீர் குடித்த தினால் அநேக பிள்ளைகளும் வளர்ந்தவர்களும் நோய்ப்பட்டதை நன் றாயறிவோம். வருத்தமுண்டுபட்ட தொடக்கத்தில் கவ ன மாய் மருந்து செய்விக்கத் தவறின தினாலும் பார்வைத் தாழ்ச்சியினாலும் குழந்தைகள் இறந்துபோவதில்லையா? இந்த வீட்டிற் தாய் தன் குழந்தையை உறங்கச்செய்து விட்டு அயல்வீட்டில் வழக்கம்போல் கதைக்கப்போய்த் திரும்பி வருகிறதற்கிடையில் பிள்ளை விழித்துக் கீழே தவறி விழுந்து சேதப்பட்டதாம். அந்த வீட்டிலே மாரிகாலத்தில் குழந்தை சாமத்தில் விழித்துத் தாய் பக்கத்தில் கூட தற்காய வைத்திருந்த நெருப்புச்சட்டியில் விழுந்து கால்கையை அவித்துக்கொண்டதாம்.

வேறொருவீட்டில் தாய் நித்திரையில் தன் குழந் தையைச் சாக நெரித்துவிட்டாளாம். கொல்லையில் தாய், தண்ணீரள்ளப் போகும்போதெல்லாங் கூடப் போய்க் கிணற்றடியில் விளையாடிவந்த சிறுபையன் ஒரு நாள் விளையாட்டுப்பராக்கில் கிணற்றில் விழுந்திறந்தானாம் என்றும், வேறொரு நாள் வீட்டுக்கு அருகி லிருந்த தெருக்கரையில் செக்கல் நேரம் பிள்ளைகள் விளையாடிக்கொண் டிருக்கையில் சவாரிவண்டிலேறிச் சிலரை நசித்துவிட்டதென்றும், இன்னுமொருநாள் தாய் தன் மகனுக்கு வெள்ளெனப் பசியாற்றிச் சீலை யுடுத்தி வழக்கம்போற் தனிமையாய்ப் பள்ளிக்கனுப்ப, இடைவழியிற் கள்வர் அவனை அணாப்பி அந்தரமான இடத்திற்கொண்டுபோய்க் கை காதிலுள்ளவற்றையும் உடையையுங் கையாடிக்கொண்டு, பையனையுங் கொன்று பிரேதத்தைப் புதைத்து மறைத்துவிட் டோடிவிட்டார் களாம் என்றும், இப்படி நா மிடையிடையே கேள்விப் படும் பரிதாபமான சம்பவங்கள் யாவையும் எப்போதும் தடுக்கமுடியாதாயினும், பெற்றோர் இயன்றளவு கவன மாயும் புத்தியாயும் மக்களைப் பராமரிப்பார்களாயின், அவர்களுடைய சீவனுக்கும் சவுக்கியத்துக்கும் நேரிடும் இப்படியான அநேக அபாயங்களை நிச்சயமாய் விலக்கி விடுவார்களென்பதற்குச் சந்தேகமேயில்லை. காட்டிலே திரியுங் கரடி, காண்டாமிருகம் சிங்கம் புலி முதலிய துஷ்ட மிருகங்கள் தங்கள் குட்டிகளுக்கு ஆபத்து நேரும்போது தங்கள் சொந்த உயிரையும் பொருட் பண்ணாமல் குட்டிகளைத் தப்புவிக்க எவ்வளவோ ஆச் சரியமான உபாயங்களைப்பண்ணுகின்றனவென்று சுபாவ நூலோர் சொல்லுகிறார்கள். அப்படியிருக்க அறிவுள்ள மனுஷர் தம் மக்களை அசட்டைத்தனத்தினால் மோசம் போகவிடுவது அவர்களைப் படைத்து இவர்களிடம் ஒப் புவித்த கடவுளுக் கேற்குமா?