தாயும் சேயும்

திரல் நாட்டு மக்களுக்கு 1808-ம் ஆண்டு உபத் திரவங்கள் நிறைந்த ஆண்டு. துஷ்டர்கள் நாட்டை ஆண்டார்கள். சுதந்திரத்தைப் பறித்து, நற்பழக்க வழக்கங்களைத் தொலைத்து, நாட்டின் பெயரையே கெடுத்து விட்டார்கள். வேதக்கடமைகளை எவரும் அனுசரிக்கக் கூடாது. புது சர்க்காரின் உத்தரவு களுக்குக் கீழ்ப்படியாத மேற்றிராணிமார் நாட்டை விட்டு அப்புறப்படுத்தப் பட்டனர்; சர்க்காரின் கையாளான ஒருவரை விக்கர் ஜெனரலாக (மேற்றி ராசனத்தின் அதி சிரேஷ்டராக) நியமித்து, அவரை ட்ரென்ட் நகரில் வைத்தார்கள். தங்கள் மேற்றிராணி மாருக்குப் பிரமாணிக்கமாயிருந்த குருக்களைத் துன் புறுத்தி சிறையிலிட்டதுடன், அவர்களுக்குப் பதி லாக சர்க்காருக்குக் கீழ்ப்படிந்தவர்கள் நியமிக்கப்பட் டார்கள். சர்க்காருடைய குருக்களிடமிருந்து தேவ திரவிய அனுமானங்களைப் பெறலாகாது; அவர்களது பிரசங்கங்களைக் கேட்கக்கூடாது, அவர்கள் செய்யும் பூசையைக் காணலாகாது; எவ்வித ஆத்தும உதவி யும் பெறக்கூடாது என மேற்றிராணிமார் கூறினார் கள். திருச்சபைக்குப் பிரமாணிக்கமாயிருந்த குருக் கள் நாள் தோறும் இருமுறை பூசை செய்யலாம்; சுரங்கங்களிலும் குகைகளிலும் காட்டிலும் நடுச் சாமத்திலும் பூசைப்பலியை நிறைவேற்றலாம்; கண்ணாடி அல்லது தகரப் பாத்திரங்களையும் பயன் படுத்தலாம் என அனுமதி இருந்தது. -

டிசம்பர் மாதம் 23-ம் நாள் திரல் நாட்டுக் கிழவி ஒருத்தி வெகு சிரமத்துடன் ஒரு மலைமீது ஏறிக் கொண்டிருந்தாள். மலையடிவாரத்திலிருந்த ஒரு சிறு கிராமத்தில் அவள் வசித்தவள். அவளுடைய ஒரே மகன் குருவாகி, நாத்தூர் ஊரில் துணைக் குருவாய் இருந்தார். அவரது பெயர் பிரான்சிஸ் சுவாமி. வேத கலகத்தினால் அவர் ஊரினின்று துரத்தப்பட்டார். அவர் எங்கிருக்கிறாரென அவளுக்குத் தெரியாது. அவரைப் பிடித்து இன்ஸ் பிரக் நகரச் சிறையில் வைத்திருப்பதாகச் செய்தி வந்தது. அவரைப் பார்த் துத் தேற்றுவதற்காக அவள் இன்ஸ்பிரக் நகர் நோக் கிப் புறப்பட்டு மலைமீதேறிக்கொண்டிருந்தாள்.

அவளால் நெடுநேரம் நடக்க முடியவில்லை. தங்கி இளைப்பாற பாதையோரத்தில் வீடு அகப்படுமா எனப் பார்த்தாள். ஒன்றும் இல்லை. கடைசியாக அவள் மேற்கொண்டு செல்ல முடியாமல் அப்படியே விழுந்தாள். அந்தப் பக்கமாய்ச் சென்ற சிலர் அவள் அறிவின்றி பனிக்கட்டியில் கிடப்பதைக் கண்டு ஒரு வீட்டுக்கு அவளை எடுத்துச் சென்றார்கள். அவளது முகமும் கைகால்களும் குளிர்ந்து போயிருந்தன. சூடுண்டாக்க அந்த வீட்டிலிருந்தவர்கள் வெகு பிரயாசைப்பட்டார்கள். நெடு நேரத்துக்குப் பின் னரே அவளது உறுப்புகளில் சிறிது உணர்ச்சி ஏற்பட்டது.

இரவு முழுவதும் கடுங் காய்ச்சல். மறுநாள் அந்தக் குடியானவனின் மனைவி, 'பாட்டி, உங்கள் வீடு எங்கிருக்கிறது?' எனக் கேட்டாள். "மீரானில் இருக்கிறது. என் மகனைப் போய்ப் பார்க்கப் புறப் பட்டேன், வேத விரோதிகள் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்; அவர் என் ஏக மகன். ஐயோ இந்த உலகில் அவரை நான் பார்க்கமாட்டேன்...! ஓ பிரான்சிஸ், என் மகனே பிரான்சிஸ்" எனக் கிழவி அழுகையுடன் கூறினாள்.

"பாட்டி, உடலில் நோவு இருக்கிறதோ!'' என அவள் கேட்டாள்.

"அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. என் மகனை ஒருமுறை பார்த்தால் போதும்" என்றாள் பாட்டி. அவளது நோவைக் குறைக்கும்படி தலையில் சூடான துணியைக் கட்டினார்கள்.

அன்று கர்த்தர் பிறந்தநாளுக்கு முந்தின நாள். ஓர் அறையில் கர்த்தர் குடிலைத் தயாரித்துக்கொண் டிருந்தார்கள். அதைக் கவனித்த பாட்டி, “இன்று சின்ன யேசு வருவார். எவ்வளவு நல்ல செய்தி! அவர் நிச்சயமாக வருவாரல்லவா?'' என்றனள். அவள் சொன்ன தன் பொருள் விளங்கிற்று. உடனே வீட்டுக் காரி, “பாட்டி, சமீபத்தில் குருவானவர் கிடையாது, ஆதலின் இங்கு பூசை இல்லை. வீட்டிலே பூசை மந் திரத்தை வாசிக்கவேண்டியது தான் " என்றாள்.

“என்ன கிறிஸ்துநாதர் பிறந்தநாள், கிறிஸ்து நாதர் வரமாட்டாரா...? நான் ஜெபிக்கப்போகிறேன், சின்ன யேசு எப்படியாவது வருவார்... நான் எவ்வளவு ஆவலோடு அவருக்காகக் காத்திருக்கிறேன்'' என்று கிழவி சொன்னாள்.

அன்று மாலையில் அவளது வேதனை குறைந்தது, ஆனால் மிகப் பலவீனமாயிருந்தாள். திடீரென அவள், “நான் இன்றிரவு சாகப்போகிறேன், என் மகன் பிரான் சிஸைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக் கிறேன். அவர் எப்படியிருக்கிறாரோ தெரியவில்லை. என் நேச பேசுவை உட்கொண்டு, என் மகனை இன் னொருமுறை பார்க்க முடியுமானால் மகிழ்ச்சியுடன் சாவேன்" என்றாள்.

திவ்விய நற்கருணை உட்கொள்ள அவளுக்கு இருந்த ஆவலைக்கண்ட அந்த வீட்டுக்காரர், "பாட்டி, சமீபத்திலாவது தூரத்திலாவது குருவானவர் கிடையாது. எனினும் நான் கோவிலுக்குப் போய் உபதேசியாரிடம் விசாரித்து வருகிறேன்'' என்று கூறினார். ஒருமணி நேரத்துக்குப்பின் அவர் திரும்பி வந்து, “ஒருவரும் கிடையாதாம். விரோதிகள் விழித் திருந்து காவல் செய்து வருகிறார்கள். ஆதலின் குரு வெளியே தலைகாட்டினால் ஆபத்து'' என்றார். -

இதைக் கேட்டதும் பாட்டி பெரும் கவலைக்குள் ளானாள். “ஐயோ, யேசுவை உட்கொள்ளாமலா நான் சாகவேண்டும்! ஓ என் மகனே...! கடைசி முறையாக யேசுவை உட்கொள்ள முடியாதா? கர்த்தர் பிறந்த இரவில் கர்த்தர் வரமாட்டாரா!" என நெடுநேரம் புலம்பினாள்.

இரவு உணவருந்தியபின் குடும்பத்தினர் யாவ ரும் ஒன்றாகக் கூடி குடிலுக்கு முன் ஜெபிக்கத் தொடங்கினர். மூன்று ஜெபமாலைகள் முடிந்தன. பின் குடும்பத் தலைவி புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை எடுத்து நடுச்சாம பூசையில் வாசிக்கப்பட வேண்டிய சுவிசேஷத்தை வாசித்தாள். “அக்காலத்தில் உலகத்து இனக்கணக்கு எழுதப்படும்படியாக செசார் அகுஸ்துஸ் என்பவனால் இடப்பட்ட ஒரு கட்டளை வெளிப்பட்டது எனப் படித்தாள். திடீ ரென வீட்டின் வெளி ஜன்னலை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. குடும்பத்தலைவர் வெளியே போனார். சற்று பின் ஓர் அந்நியருடன் அவர் திரும் பினார். “யேசுக்கிறிஸ்து ஸ்துதிக்கப்படுவாராக'' என அந்நியர் கூறியதும், “என்றென்றும் ஆமென்'' என யாவரும் பதிலளித்தார்கள். அந்நியர் தம்மை மூடி யிருந்த கனத்த போர்வையைக் கீழே போட்டார். அவர் குரு என உடனே அவர்கள் அறிந்து கொண் டார்கள். - “இந்த வீட்டில் ஒரு பாட்டி வியாதியாயிருப்பதா கக் கேள்விப்பட்டு வந்தேன்" என குருவானவர் கூறி யதும், "சுவாமி, அந்தப் பாட்டி மீரானிலிருந்து வருகிறாள். குருவாயிருக்கும் அவளுடைய ஏக மகனைப் பிடித்து இன்ஸ்பிரக் நகர்ச் சிறையில் வைத்திருக் கிறார்களாம். அவரைப் பார்ப்பதற்காக மலையேறி வந்தாள். அவள் குற்றுயிராய்க் கிடப்பதை வழிப் போக்கர் கண்டு இங்கு எடுத்துவந்தார்கள்'' என வீட்டுக்காரர் எடுத்துரைத்தார். காம

குரு அவள் இருந்த அறைக்குச் சென்றார். அவள் கொண்ட ஆனந்தத்தை அளவிட முடியாது. நடுங் கும் தன் கரங்களால் குருவின் வலது கரத்தை எடுத்து, பன்முறை முத்தமிட்டாள். “கடவுள் உங்க ளுக்கு ஆயிரமாயிரம் மடங்கு சன்மானம் அளிப்பா ராக; யேசுவை எனக்குக் கொடுப்பீர்களல்லவா?" எனக் கேட்டாள். “ஆம் பாட்டி. இந்த அறையி லேயே திவ்விய பூசை செய்வேன். பூசைக்கு வேண் டியதெல்லாம் இருக்கிறது. பூசைப்பாத்திரம் மாத்திரம் இல்லை" என குரு கூறி, நோயாளியின் பாவசங் கீர்த்தனத்தைக் கேட்டார்.

பின் பீடம் தயாரிக்கப்பட்டது. பீடத்தைச் சுற்றி குடும்பத்தினர் யாவரும் முழந்தாளிட்டனர். கர்த்தர் பிறந்த அன்று இடையர் சின்ன யேசுவைச் சுற்றி முழந்தாளிட்டது போல், தாங்களும் முழந் தாளிட்டிருப்பதாக அவ்வீட்டார் அனைவரும் உணர்ந் தார்கள். பரலோக அரசர் தங்கள் வீட்டில் வருவதை நினைத்து அவர்கள் மகிழ்ந்தனர். எழுந்தேற்ற நேரத் தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். “சகோதரி, நம் ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்துவின் சரீரத்தை உன் பிரயாணத்தின் உணவாக பெற்றுக் கொள். கொடிய சத்துருவிடமிருந்து அவர் உன்னைப் பாது காத்து நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்வார்'' எனக் குருவானவர் சொல்லி, பாட்டிக்கு திவ்விய நன்மை கொடுத்தார். “கடவுள் துதிக்கப்படுவாராக. கடவுள் துதிக்கப்படுவாராக. சின்ன யேசு இப் பொழுது என் உள்ளத்தில் இருக்கிறார்'' எனப்பாட்டி மெதுவாக மொழிந்தாள்.

பூசை முடிந்ததும் அவஸ்தை பூசுதல். அர்ச்சிய சிஷ்ட தைலத்தைப் பூசுவதற்காக அவளது தலையிலி ருந்த கட்டை அவிழ்த்தார்கள். அப்பொழுது தான் முதன் முறையாக குரு அவளது முகத்தை நன்றாக நோக்கினார். உடனே அவர் நடுங்க ஆரம்பித்தார். அவஸ்தைப் பூசுதல் கொடுத்து முடிந்ததும், அவர் எல்லோரையும் சற்று வெளியே போகச் சொல்லி. நோயாளியின் அருகில் அமர்ந்து, "உடல் எப்படி இருக்கிறது”? என்றார்.

"நன்றாயிருக்கிறேன் சுவாமி, நம் நேச ஆண்டவர் என்னிடம் வந்திருக்கிறாரல்லவா?... சுவாமி, உங்கள் குரல் எனக்குப் பழக்கமானது போல் இருக்கிறதே. முகத்தை நான் இதற்கு முன் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் உங்கள் குரலை நான் இதற்கு முன் எங்கோ கேட்டிருக்கிறேன்'' என்றனள் பாட்டி.

குரு தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "தாடி வளர்ந்ததும் முகம் வேறு தோற்றமளிப்பது இயல்புதான்'' என்றார். “ஓ அப்படியானால் மறைந்து வசிக்கும் குருக்களில் நீங்களும் ஒருவரா? அதனால் தாடி வளர்க்க நேரிட்டது போலும். என் ஒரே மக னும் குருவே. ஒரு வேளை நீங்கள் அவரை அறிந்தி ருக்கலாம். அவர் பெயர் பிரான்சிஸ். நாத்தூர் நகரில் அவர் துணைக்குருவாயிருந்தார். இப்பொழுது அவரை இன் ஸ்பிரக் என்னும் இடத்தில் சிறைப் படுத்தியிருக்கிறார்கள்'' என பாட்டி கூறியதும், "யார் அவ்விதம் சொன்னார்கள்?" எனக் குரு கேட்டார்.

''ஊரில் இருக்கையில் நான் கேள்விப்பட்டேன். அவரை விரோதிகள் கொன்று விடுவார்கள் எனப் பயந்து, அவரைப் பார்க்கும்படி புறப்பட்டேன்,'' என பாட்டி மொழிந்தாள்.

“மக்கள் சொன்னது உண்மையல்ல, உங்கள் மகன் சிறையில் இல்லை.''

“சிறையில் இல்லையா? அவரை நீங்கள் அறிவீர் களா? அவர் எப்படி இருக்கிறார்?"

“அவரை நன்றாகத் தெரியும். அவர் பூரண சுகத் துடனிருக்கிறார்."

"ஓ இனி நான் மகிழ்ச்சியுடன் உயிர் விடுவேன்... எனினும் இவ்வுலகில் அவரை நான் பார்க்க முடி யாது. நீங்கள் அவரைச் சந்திக்கையில் என் அன் பைத் தெரிவியுங்கள். கடைசி மூச்சு விடும்வரை நான் அவர் நினைவாயிருந்ததாகச் சொல்லுங்கள். உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து என்னைச்சீக்கிரம் விடு விக்கும்படி நான் அவரைக் கேட்டுக் கொண்டதாகத் தயவு செய்து அவரிடம் தெரிவியுங்கள்.''

அதற்குமேல் குருவானவரால் தாள முடியவில்லை பாட்டியை அன்புடன் அரவணைத்து, ''அம்மா, நான் யார் எனத் தெரியவில்லையா? நானே உங்கள் மகன் பிரான்சிஸ்'' என்றார். ஒரு வினாடி அவள் அவரை உற்று நோக்கினாள். அவள் முகத்தில் பரலோக ஜோதி வீசியது. “என் மகனே எனக்கு சின்ன யேசு வைக் கொண்டு வந்திருக்கிறார் ! கடவுள் துதிக்கப் படுவாராக'' என்றனள்.

திடீரென வந்த இந்த எதிர்பாராத மகிழ்ச்சி அவ ளிடம் எஞ்சியிருந்த பலத்தையும் குறைத்தது. மரண தூ தன் அவளருகில் நின்றார். குருவானவர் கதவைத் திறந்து வெளியே நின்றவர்களை உள்ளே வரச் சொன் னார். அவர் நோயாளிக்கு கடைசி பாவப்பொறுத்தல் ஆசீர்வாதம் அளிக்கையில் அவளது ஆத்துமம் மறு உலகெய்தியது. தன் மாதாவுக்குத்தான் கடைசித் தேவதிரவிய அனுமானங்களைக் கொடுத்ததாக குரு வானவர் அங்கிருந்தோரிடம் தெரிவித்தார்.

இரவு முழுவதும் குருவானவர் தம் தாயருகில் அமர்ந்து அவளது ஆத்தும இளைப்பாற்றிக்காக பிரார்த்தித்தார். அதிகாலையில் அவர் வெளியேற வேண்டும். அல்லாவிடில் ஆபத்து. துயரத்துடன் அவர் சென்றபோதிலும் அவர் உள்ளத்தில் பெரும் அமைதி நிலவியது. தம் தாயின் ஆத்துமத்தை யேசு பாலனின் கரத்தில் தாமே ஒப்படைத்தது பற்றி மகிழ்ந்தார். கடைசி நேரத்தில் தாயைத் தரிசிக்கும் பாக்கியத்தைத் தந்த கடவுளை வாழ்த்தி நன்றி செலுத் தினார். அன்றிலிருந்து மலைச்சரிவிலிருந்த அந்த வீடு அவருக்கு ஒரு புனித ஸ்தலமாயிற்று. ஏனெனில் அங்கு அவர் சின்ன யேசுவைத் தம் தாய்க்குக் கொடுத்து, அந்தத் தாயின் ஆத்துமத்தை சின்ன யேசுவின் கரங்களில் ஒப்படைத்தார்.