நித்திய ஞானமானவரின் காதல் கடிதம்!

65. எப்போதும் உன்னதமான முறையில் நேசிப்பவராக இருக்கும் இந்த நித்திய அழகானவர், மனிதனின் நட்பைப் பெறு வதில் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார் என்றால், இதே காரணத் திற்காக அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் அவர் தம் சொந்த மகத்துவ மேன்மை பற்றியும், மனிதனின் நட்பைப் பெற தமக்குள்ள ஆசையையும் விவரித்திருக்கிறார். இந்தப் புத்தகத்தின் நடை தன் அன்புக்குரியவளின் அன்பைப் பெற, ஒரு காதலன் எழுதும் கடிதத்தில் உள்ளதைப் போல் இருக்கிறது. ஏனெனில் அதில் அவர் மனிதனின் இருதயத்தைப் பெற எந்த அளவுக்கு தமது அளவுகடந்த ஏக்கமுள்ள ஆசைகளையும், கனிவுமிக்க ஏக்கங்களையும், நேசமிக்க அழைப்புகளையும், வாக்குறுதி களையும் எடுத்துரைக்கிறார் என்றால், தாம் மகிழ்ச்சியாயிருப் பதற்கு கேவலம், மனிதனுடைய நட்பு தேவைப்படுகிற அவர் பரலோக பூலோகத்தின் இராஜரீக ஆண்டவராக இருக்க வாய்ப் பில்லை என்று நீ ஒருவேளை சொல்லக்கூடும்! 

66. மனிதனைத் தேடிய படி அவர் நெடுஞ்சாலைகளில் விரைந்து செல்கிறார், அனைத்திலும் உயர்ந்த மலைச்சிகரங்களை அணுவணுவாக ஆராய்கிறார், பட்டணத்து மதில்களின் அருகில் காத்திருக்கிறார், அல்லது பொது மைதானங்களுக்கும், மக்கள் கூடியிருக்கும் இடங்களுக்கும் சென்று உரத்த சத்தமாக, 'ஓ மனுமக்களே, உங்களைத்தான் இன்னும் விடாப்பிடியாக நான் அழைத்துக் கொண்டிருக்கிறேன், உங்களிடம் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன், உங்களைத்தான் நான் ஆசித்துத் தேடு கிறேன்; உங்களையே உரிமை கொண்டாடுகிறேன். என் குரலைக் கேட்டு, என்னை அண்டி வாருங்கள், ஏனெனில் உங்களை மகிழ்ச்சியுள்ளவர்களாக்க நான் விரும்புகிறேன்" என்று அவர் அறிவிக்கிறார் (பழ. 8:4 காண்க).

இன்னும் அதிகமாக மனிதர்களைத் தம்மிடம் ஈர்க்கும்படி யாக, ஞானமானவர் அவர்களிடம் : "என் வழியாகவும், என் வரப்பிரசாதத்தின் வழியாகவுமே இராஜாக்கள் அரசாளு கிறார்கள், பிரபுக்கள் ஆட்சி செலுத்துகிறார்கள், அரசர்களும், சக்கரவர்த்திகளும் செங்கோலும், மகுடமும் சுமந்திருக்கிறார்கள். தங்கள் மக்களின் நன்மைக்காக நீதியுள்ள சட்டங்களைப் பிறப் பிக்கும் திறனைக் கொண்டு, சட்டமியற்றுபவர்களை நான் ஏவித் தூண்டுகிறேன். நியாயமாகவும், அச்சமின்றியும் நீதி வழங்கத் தேவையான தைரியத்தை நீதிபதிகளுக்கு நான் தருகிறேன்'' என்கிறார். 

67. "என்னை நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன், கவனமாக என்னைத் தேடுபவர்கள் என்னைக் கண்டைகிறார்கள் , " என்னைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் நற்காரியங்களை அபரிமிதமாகக் கண்டடைவார்கள். 'ஆஸ்தியும், மகிமையும், மேலான செல்வ மும், நீதியும் என்னோடிருக்கின்றன. ஏனெனில், என் கனி பொன் னையும், இரத்தினக் கல்லையும் விட அருமையானதும், என் துளிர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட வெள்ளியை விட அதிக நல்லவையாயுமிருக்கின்றன. நான் நீதியின் பாதைகளிலும், நியாய வழிகள் மத்தியிலும் உலாவுகிறேன். என்னை நேசிக்கிறவர்களைச் செல்வந்தர்களாக்கவும், அவர்களுடைய பொக்கிஷங்களை நிறைக்கும்படியாகவும் தான்" (காண். பழ. 8:15-21). ஆகவே, இதைப் பற்றி உறுதியாயிருங்கள், மனுமக்களுடன் உரையாடு வதும், அவர்களோடு தங்கியிருப்பதுமே என் மாபெரும் இன்ப மாகவும், அனைத்திலும் அதிக மாசற்ற ஆனந்தமாகவும் இருக்கிறது (காண்க. பழ. 8:31). 

68. 'ஆகையால் இப்போது என் மக்களே, எனக்குச் செவி கொடுங்கள்; என் வழிகளைக் காப்பவர்கள் எவர்களோ, அவர்கள் பாக்கியசாலிகள்; என் படிப்பினையைக் கேட்டு ஞானிகளா யிருங்கள்; அதை இகழ்ந்து தள்ளிவிடாதீர்கள். நான் சொல்வதைக் கேட்டு, நாள்தோறும் என் வாசலண்டையில் விழித்திருந்து, என் கதவு நிலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பவனே பாக்கியவான். என்னைக் கண்டு பிடித்திருப்பவன் எவனோ அவன் ஜீவியத்தைக் கண்டுபிடிப்பான். ஆண்டவரிடத்தில் இரட்சிப் பையும் பெற்றுக்கொள்வான். எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருப்பவனோ எனில் தன் ஆத்துமத்தைக் காயப்படுத்து வான்; என்னைப் பகைக்கின்ற அனைவரும் மரணத்தை நேசிக் கிறார்கள்" (பழ. 8:32-36). 

69. மனிதர்களின் நட்பைப் பெறும்படி நித்திய ஞானமானவர் இவ்வளவு கருணையோடும், உறுதிப்படுத்தும் விதமாகவும் பேசியிருந்தும், தமது மகிமையுள்ள நிலை மற்றும் இராஜ மகத்துவத்தைக் கண்டு அச்சத்தால் நிரப்பப்பட்டவர்களாக, தம்மை அணுகி வர அவர்கள் துணிய மாட்டார்கள் என்று அவர் இன்னும் பயப்படுகிறார். அதனால் தான் அவர் அவர்களிடம், தம்மை அவர்கள் எளிதாக அணுகி வரலாம் என்றும், தம்மை நேசிக்கிறவர்கள் எளிதாகத் தம்மைக் காண்பார்கள் என்றும், தம்மைத் தேடுபவர்கள் தம்மைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றும், தம்மை ஆசிப்பவர்களைச் சந்திக்கத் தாம் விரைந்து வருவதாகவும், தம்மைத் தேடும்படி அதிகாலமே எழுகிறவன் அதிகப் பிரயாசைப் பட அவசியமில்லை , ஏனெனில் தாம் அவனுக்காகக் காத்துக் கொண்டு அவனுடைய வாசலண்டையில் அமர்ந்திருப்பதை அவன் காண்பான் என்றும் கூறுகிறார் (காண்க. ஞான. 6:13-15).