ஆண்டவருடைய மனோ பீடைகள்

கர்த்தர் நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேற் சுமத்தினார். (இசை . 53; 6)

திரிபுவனங்களையும் படைத்து அளித்து அழிக்கிறவராகிய சருவலோக நாயகர், நீசப்படைப்புக்களாகிய மனுஷர்மேலே தாம் வைத்த அளவறுக்கப்படாத ஆச்சரியம் பொருந்திய நேசத்தை வானமும் பூமியும் அறியக்காட்டியருளிய ஆசீர்வதிக்கப்பட்ட நாளை இன்று கொண்டாடுகிறோம். இன்றைக்கு, நமது இருதயங்களிலே குடி கொண்டிருக்கத்தக்க சிந்தனை என்ன? மன் னுயிருக்காகத் தன்னுயிரை விட்ட அன்பின் சுரூபியாகிய ஆண்டவர் பேரிலே நேசமும், நன்றிகெட்ட. பாவிக ளாகிய நமது துரோகங்களைப்பற்றி மனஸ் தாபமும் கொள்ளுவதே சிந்தனையாகவேண்டும் அல்லவா? இன் றைக்கு நாம் நமக்காகப் பாடுபட்டவரின் திவ்விய நேசத்தை நமது இருதயங்களிலே மூட்டிக் கொள் ளுவோமானால் எவ்வளவு நன்மை! நமது பாவங்க ளின் கொடுமையை, நிஷ்டூரத்தை, பாரத்தை உணர். து அவைகளை முழுப்பெலத்தோடேயும் வெறுத்துத் தள்ளிவிடத் தொடங்குவோமானால் எவ்வளவு ஆறு தல்! இதற்கு உதவியாக, கிறீஸ்தவர்களே, மனஸ்தாபத்துக்கும் தேவ அன்புக்கும் ஊறணியாகிய ஆண் டவரின் திருப்பாடுகளை இன்று பத்தியோடு தியானி க்கக்கடவோம். நமது இரட்சணியமானவருடைய திருப்பாடுகளின் வரலாறுகளே இன் று முழுதும் உங்களுக்கு ஞான உண வா யிருக்கும். அவைகளை யெல்லாம் ஒருமிக்க எடுத்து இங்கே காட்ட முடி யாது. உங்களுள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பத்திக்குத் தக்கபடி அத் திருப்பாடுகளின் ஒவ்வொரு பகுதியைப் பிரித் துத் தியானித்துக்கொள்ளுவார்களாக, நாம் இப் போது நம் திவ்விய கர்த்தரின் மனோபீடைகளை, அதாவது அவர் தமது திரு ஆத்துமத்திலே சகித்த வியாகுலங்களை மாத்திரம் உங்கள் உருக்கமுள்ள தியானத்துக்கு விஷயமாக எடுத்துச்சொல்லப்போ கிறோம். அவர் தாம் படப்போகிற பாடுகளை நினைந்து பூங்கா வனத்திலே அடைந்த சொல்லொணாத்துயர மான து நம் து மனங்களை இளகச் செய்யாமலிராது, மனுஷன் ஒருபோதும் பட்டறியாத, ஒருபோதும் படமாட்டாத அவ்வளவு அத்தியந்த வியாகுலங் களை ஆண்டவர் நமக்காகப்படச் சித்தமானதைக்கா ணும்போது, கல்லான இருதயங்களும் அவரிலே அன்புகூரத் தொடங்காமலிரா. அத்தனை மனோ வாக்குக்கு எட்டாத சிந்தாகுலத்தை நம் மீட்பர் அனுபவிக்கலானதற்குக் காரணம் என்னவென்று நாம் விசாரிக்கும்போது, நமது நன்றி கெட்ட நெஞ் சுகள் பொடிப் பொடியாகி, இனியாவது பாவத்தை விட்டுத் தவஞ்செய்யத் தூண்டப்படும். பிரியமான கிறீஸ்தவர்களே, பத்தியுள்ள கா துகளோடு கேட்கக் கடவீர்கள்.

சகல உலகங்களிலும் அடங்காத வரான சருவே - சுரன், வானாதிவானங்களுக்கும் மேலாய் விளங்குகிற சோதிசுரூபன் --நம்முடைய இந்த ஈன உலகத்திலே நம்முள் ஒருவராய் வந்து முப்பத்து மூன்று வருஷம் நம்மோடு சீவிப்பவ ரானார். அந்த முப்பத்து மூன்று வருஷமும் நமக்காக அவர் பட்ட துக்கங் கள் எவ்வளவு! கஸ் தி கள் எவ்வளவு ! அவமானங் கள் எவ்வளவு! சிந் தின கண்ணீர்கள் எவ்வளவு ! வெ யர்த்த வெயர் வைகள் எவ் வள வு! . ஆனாலும், அவர் நமது மேல் வைத்த அதிசயமான நேசத்துக்கு இவைகள் போதாதென் றி ருந்தது. நமக்குச் சீவியத் தைக கொடுப்பதற்காகத் தாம் மரணிக்கவும் வேண்டு மென் று ஆசையாயிருந்தார். அந்த மரண முமோ எவராகிலும் வலுவந் தமாய் அவரை உட்படுத்தின ஒரு மரணமல்ல ; தாமா கவே தெரிந்து கொண்ட ஒரு மரணம். யாராவது என து ஆத்துமத்தை என்னி டம் பறிக்கக்கூடிய வர்கள ல்ல. நானாகவே அகைவிடுகி | றேன். அதை மறுபடியும் எடுத்துக் கொள் ளுவேன் (அருளப். '10; 17.) என்.று தாமே செப்பியருளினார் இப்படித தாமாக வே தமது மரணத்தைத் தெரிந்து கொள்ளத்தக்க வராயிருந்தும், மகா அவமானமுள்ள ஒரு மரணத்தை யே தெரிந்து கொள்ள லானார். ஆகையால், திவ்விய சற்பிரசாதத்தை ஏற்படுத்தியருளிய அந்தப் பெரிய வியாழக்கிழமையன்ற, நம்முடைய திவ்விய கர்த்தர், தமது சீஷர்களுக்குச் செய்யத் திருவுள மான அமிர்த போதகங்களையெல்லாஞ் செய்து முடித்தபின், தாம் மரிப்பதற்குக் குறித்த காலம் சமீபித்திருக்கிறதையும் துரோகிச் சீஷன் தம்மைக் காட்டிக்கொடுக்க உத்தியோகமாய்ப் போயிருக்கிறதையும் அறிந்து, ''கெத் சமனி '' என்னும் தைலத் தோப்புக்குப் பதினொருவ ரோடேயும் கூட எழுந்தருளினார். அங்கே, சீஷரை நோக்கி: நான் போய்ச் செபம்பண் ணு மள வும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று திருவுளம் பற்றி, தமக்கு, என்றும் அன்புள்ள வர்களாயிருந்த இராயப் பரையும் செபதே யின் இ நகுமாரரையும் மாத்திரம் அ ழைத்துக்கொண்டு போய், துயரமடையவுஞ் சஞ் சலமா யி ருக்கவும் - தொடங்கினார். அவ் வேளை ஆண் டவர் தமது சிந்தாகுலத்தை இனி மறைக்கமாட்டா மல் மூவரையும் நோக்கி: என் ஆத்துமமான து மர ணத்துக்கு ஏதுவான துயரங்கொண்டிருக்கிறது என் று சொல்லி, அவர்களை விட்டுச் சற்றுத் த ரம தரை யில் முகங் குப்புற விழுந்து மும்முறையாக ஒரே செபத்தை உச்சரித்துப் பரம பிதாவைப்பார்த்துப் பிரார்த்திக்கிறார். அவருடைய பயமும் ந நடுக்கமும் அதிகரிக்கிறது. சருவாங்கமும் படபடத்து நெக்கு வி. டு, இருதயத்தின் இரத்தத் தாரைகளெல்லாம் பெருக்கெடுத்து சரீரமுழு திலும் திடீரென் று பாய, ஆண்டவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட திருக்குருதி யானது, தேகத்தின் சகல மயிர்க்கண்களாலும் பொ சிந்து, திரு வஸ்திரத்தை நனைத் த', ஆறுகளாய் ஒழுகி அவர் முட்டிட்டிருந்த தரையெல்லாம் நனைந்து போ கிறது. ஓ! இரக்கமுள்ள ஆத்துமாக்களே, உங்கள் ஆண்டவர் தமது இரத்தத்திலே தானே முழுக்காட் டப்பட்டவராய், ஒலிவமரங்களின் அடியிலே. கற்பா றைகளின் மேல் குப்புறக் கிடக்கிற இந்த அற்புதக் காட்சியைப் பாருங்கள். அ இதென்ன அதிசயம்! என்ன விந்தை! சந்திர சூரி பர்களைத் தாங்கி நடத் துகிறவரின் திருமுகமண்டலம் தரையிற் படிந்திருக்கிறதே எ ழ ப் பு முதல் யானை ஈறான சகல மிருகராசி சளுக் கும், மகரம், புள்ளு முதலான நீந்தும் பறக்கும் சகல சீவர் சளு க்கும், மனுமக்களுக்கும் பெலமளிக்கிற வர் ஆயாச க தாற் சோர்ந்து விழுந்து கிடக்கிறாரே. ஆக் துமங் களுக் கெல்லாம் ஆறுதல் கொடுக்கிற வரும், மனோரூபிகள் பார்த்து அகமகிழும் சோதிப்பிரதாப முள்ள வருமான சருவேசுரன் வியாகுல சாகரத்தில் மூழ்கித் தவிக்கிறாரே. மனிதன் படக் கூடிய அதிக சஞ்சலமான துயரமான து அவனைச் சலஞ்சலமாய் வெயர்க்கப் பண் ணுமானால், தேவகுமாரனை உதிரம் உதிரமாய் வெயர் ககப்பண்ணிப இந்தத் துயரம் என் ன! இந்தச் சிந்தாகுலம் எப்படிப்பட்டது!

ஆ பிரியமானவர்களே , ஒரு அன்னியன் தானும் - வழி தெருவிலே தலைவிரிகோலனாய்த் துக்க சாகரத்தில் அமிழ்ந் தியவனாய்க் கிடக்கக்கண் டால், நீங்கள் அவனை அணுகி, அ வன டைய துயரத்தின் காரணத்தை விசா ரித்து அறிந்த, அ வனுக்கு ஆறுதல் சொல்லப் போகாமல் விடமாட்டீர்களே. அப்படி யிருக்க, உங்கள் ஆண் டவர் இன்று பூங்காவனத்திலே இரத்த வெயர்வை வெயர்த்து விழுந்துகிடக்கிறதைக்கண்டு, அவர் திருச் சமுகத்தில் முடுகிப்போய் அவருடைய இந்த மகா வியா குலத்தின் காரணத்தை விசாரியாமல் விடுவீர்க ளோ! ஆ! எங்கள நாதரே, அமிர்தயே சுவே', தேவ சீரைப் பீடித்திருக்கிற மகா வியாகுலத்தின் காரணத் தை எங்களுக்குத் திருவாய் மலர்ந்தருளும். அடி யோர் தேவரீருக்குத் தேற்றரவு பண்ண எங்களால் ஆனதெல்லாம் செய்ய ஆயத்தமா யிருக்கிறோம்.