இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயுடன்

260. நம் செயல்களையெல்லாம் மரியாயுடன் நாம் செய்ய வேண்டும். அதாவது, நம் எல்லாச் செயல்களிலும் மாதாவையே நோக்க வேண்டும். எல்லாப் புண்ணியங் களுக்கும் உத்தமதனத்திற்கும் மாதா தான் முழுமையான முன் மாதிரிகை என்றும், நம்முடைய குறைந்த சக்தியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாம் பின் பற்றும்படி ஒரு சிருஷ்டியை பரிசுத்த ஆவி இவ்வாறு உருவாக்கியுள்ளார் என்றும் கருத வேண்டும். எனவே, நாம் ஒவ்வொரு செயலைச் செய்யும் போது அதை நம் தேவ அன்னை எவ்வாறு செய்திருப்பார்கள், அவர்கள் நம் இடத்தில் இருந்தால் எப்படி அதைச் செய்வார்கள் என்று நினைக்கவேண்டும். இதற்கு, மாதா தன் வாழ்வில் பயிற்சி செய்த பெரிய புண்ணியங்களை ஆராய்ந்து பார்த்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக :

[1] நம் அன்னையின் உயிருள்ள விசுவாசம் - இந்த விசுவாசத்தால் அவர்கள் தூதனின் மங்கள வார்த்தையை தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் கல்வாரியில் சிலுவையடி வரையிலும் உண்மையுடனும் இடைவிடா மலும் விசுவசித்தார்கள்.

[2] மாதாவின் தாழ்ச்சி அவர்களை மறைந்திருக்கவும், மவுனமாயிருக்கவும் எல்லாவற்றிலும் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும், கடைசி இடத்தில் வைத்துக் கொள்ளவும் செய்தது. இதன்

[3] மரியாயின் தெய்வீகமான தூய்மைக்கு ஈடு இணை உலகில் எங்கும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை இவ்வாறே மரியாயின் மற்றப் புண்ணியங்களும்.

இதை நன்கு நினைவில் கொண்டிருங்கள் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் - மாதா தான் கடவுளின் மாபெரும் தனிச் சிறந்த அச்சாக இருக்கிறார்கள். தேவ சாயலில், எளிதில் துரிதத்தில் உயிருள்ள பிரதிகளைச் செய்ய தகுதி யாக்கப்பட்ட அச்சு மாதாவே. இந்த அச்சைக் கண்டு பிடித்து தன்னையே அதனுள் விட்டுக் கொடுத்து விடுகிற ஆன்மா வெகு துரிதமாக சேசு கிறீஸ்துவாக மாற்றப் படும். சேசு கிறீஸ்துவின் மறு பிரதியாக அந்த ஆன்மா இருக்கும்.