உலக ஞானம்!

75. உலகஞானம் என்பது. "ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்" (1 கொரி.1:19, காண்க : இசை 29:14) என்ற வாக்கியத்தில் சொல்லப்படும் ஞானமாக, அதாவது. உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்படுவர்களின் ஞானமாக இருக்கிறது. "மாம்சத் துக்குரிய புத்தி (ஞானம்) சர்வேசுரனுக்குச் சத்துருவாயிருக் கின்றது" (உரோ.8:7). அது மேலிருந்து வருவதல்ல. அது உலகத் தன்மையானது, பசாசுக்குரியது மாம்சரீதியானது (யாக. 3:15).

இந்த உலக ஞானம் உலக விதிகளுக்கும், நாகரீக பாணி களுக்கும் முழுமையாக ஒத்துப் போவதில் அடங்கியுள்ளது. அது உலக ரீதியான உயர்வையும், மதிப்பு மரியாதையையும் நோக்கிய ஒரு தொடர்ச்சியான நாட்டம் ; இன்பம், சுய ஆர்வம் ஆகியவற் றிற்கான இரகசியமான, முடிவில்லாத தேடல்; இந்தத் தேடல் துர்மாதிரிகையான பாவத்தின் மூலம் அநாகரீகமான, வெட்கங் கெட்ட முறையில் நிகழ்வதல்ல, மாறாக, தந்திரமானதும், இரகசியமானதும், வஞ்சகமுள்ளதுமான முறையில் நிகழ்வது. இல்லாவிடில் உலகம் அதை மேற்கொண்டு ஞானம் என்று சொல்லாமல், மோக வெறிச்செயல் என்று முத்திரை குத்தி விடும். 

76. உலகக் கருத்துப்படி தன் தொழிலிலும், வியாபாரத்திலும் கண்ணும் கருத்துமாக இருப்பவனும், வெளியே வேறு விதமாகத் தோன்றினாலும், தந்திரமாக எல்லாக் காரியங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவனுமே ஞானி என்று அழைக்கப்படுகிறான். யாருக்கும் சந்தேகம் வராதபடி மிகத் தந்திரமாக ஏமாற்றும் கலையில் அவன் சிறந்து விளங்குகிறான். அவன் நினைப்பது ஒன்று வெளியே சொல்வது அல்லது செய்வது வேறொன்று. வரப்பிரசாதங்கள் மற்றும் உலக நாகரீகங்கள் தொடர்பான எதுவும் அவனுக்குத் தெரியாது. தன் சொந்த நோக்கத்தை அடைய ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்கிறான், அப்படிச் செய்யும் போது, கடவுளின் மகிமையையும், ஆவல்களையும் அவன் முற்றிலுமாக அலட்சியம் செய்து விடுகிறான். இரகசியமாகவும், ஆனால் ஆபத்தான முறையிலும் உண்மைக்கும் பொய்மைக்குமிடையேயும், சுவிசேஷத்திற்கும், உலகத்திற்குமிடையிலும், புண்ணியத்திற்கும் பாவத்திற்கும் இடையிலும், கிறீஸ்துநாதருக்கும் பெலியாலுக்கு மிடையிலும் ஓர் ஒப்புறவை ஏற்படுத்துவதில் எப்படியோ வெற்றி பெற்று விடுகிறான். பக்தியுள்ளவன் என்றல்ல, மாறாக, நேர்மை யுள்ள மனிதன் என்று மதிக்கப்படுவதையே விரும்புகிறான், தனிப்பட்ட முறையில் தான் ஏற்றுக்கொள்ளாத பக்தி முயற்சி களை எந்தத் தயக்கமுமின்றி நிந்திக்கிறான், உருக்குலைக்கிறான், கண்டனம் செய்கிறான். சுருங்கச் சொன்னால், உலக ஞானி என்பவன் தன் புலன்களையும், அறிவுவாதத்தையும் மட்டும் பின் செல்பவனும், ஒரு நல்ல கிறீஸ்தவனைப் போலவும், நேர்மை உள்ள மனிதனைப் போலவும் நடப்பவனும், ஆனால் கடவுளை மகிழ்விக்க அல்லது தவத்தின் மூலம் தான் கடவுளுக்கு எதிராகக் கட்டிக் கொண்ட பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய எந்த முயற்சியும் செய்யாதவனுமான உலகத்தன்மையான மனிதனே. 

77. உலகத் தன்மையான மனிதன் சுய மதிப்பையும், மனிதர்கள் என்ன சொல்வார்கள்?" என்பதையும், பெரும்பான்மையினரின் கருத்தையும், ஆடம்பர வாழ்வையும், சுய மரியாதையையும், சடங்கு ஆசாரங்களையும், திறமையான பேச்சையுமே தன் நடத்தை விதிகளாகக் கொள்கிறான். இந்த ஏழு கொள்கைகளும் அவனுக்கு கடிந்து கொள்ளப்பட முடியாத ஆதாரங்களாக இருக்கின்றன. ஒரு சமாதானம் நிறைந்த வாழ்வை அனுபவித்து மகிழ, இந்தக் கொள்கைகளைச் சார்ந்திருப்பதே போதும் என்று அவன் நம்புகிறான்.

தைரியம், நாகரீகமான நடத்தை, தந்திரமான செயல்பாடு, உலக விவேகம், வீரம், பணிவு, நல்ல நகைச்சுவை உணர்வு ஆகியவற்றிற்காக உலகம் அவனைப் புனிதன் என மதித்துப் போற்றும். உணர்ச்சியற்ற நிலை, மூடத்தனம், தரித்திரம், நாகரீக மற்ற நடத்தை, மத சகிப்பின்மை ஆகியவற்றைப் பெரும் குற்றங்களாக அது சிலுவையில் அறைகிறது. 

78. உலகம் தனக்குத் தரும் பின்வரும் கட்டளைகளுக்கு அவன் தன்னால் முடிந்த வரை பிரமாணிக்கமாகக் கீழ்ப்படிகிறான்:

உலகத்தோடு நல்ல பரிச்சயமுள்ளவனாயிருப்பாயாக. 

மரியாதைக்குரியவனாக இருப்பாயாக. 

வியாபாரத்தில் வெற்றியாளனாக இருப்பாயாக. 

உன்னுடையது எதையும் திடமாகப் பற்றிக் கொள்வாயாக 

உன் பின்புலத்திற்கு மேலாக எழுவாயாக. 

பலரை உனக்கு நண்பர்களாக்கிக் கொள்வாயாக. 

நாகரீகமுள்ள சமுதாயத்தை அடிக்கடி வந்து சந்திப்பாயாக.

நல்ல வாழ்வைத் தேடுவாயாக. 

மனச்சோர்வுள்ள, கவலை நிறைந்த மனிதனாயிராதே.

வினோதமான, நாகரீகமற்ற அல்லது அதீத பக்தியுள்ள மனிதனாயிராதே. 

79. உலகம் இப்போது இருப்பது போல ஒருபோதும் கெட்டுப் போயிருந்ததில்லை, ஏனெனில் அது இப்போது போல ஒரு போதும் இவ்வளவு தந்திரமும், தன் சொந்த வழியில் இவ்வளவு உலக ஞானமும் உள்ளதாக இருந்ததில்லை. உண்மையின்மையை வளர்க்க உண்மையையும், துர்க்குணத்தை வளர்க்க புண்ணியத் தையும், தனது சொந்த விதிகளைப் பேண கிறீஸ்துநாதரின் சட்டங்களையுமே கூட அது புத்திசாலித்தனமாகப் பயன்படுத்து கிறது. இதன் காரணமாக, கடவுளின் பார்வையில் மிகுந்த ஞானமுள்ளவர்களாக இருப்பவர்களும் கூட அடிக்கடி ஏமாற்றப் பட்டு விடுகிறார்கள்.

உலகின் பார்வையில் ஞானிகளாகவும், கடவுளின் கண்களில் மூடர்களாகவும் இருக்கும் இந்த மனிதர்களின் எண்ணிக்கை அளவற்றது (காண். சங்கப். 1:15) 

80. புனித யாகப்பர் பேசுகிற உலக ஞானம், இந்த உலகக் காரியங் களின் மீதான அன்பு ஆகும். உலகத்தன்மையான மனிதர்கள் உலக உடைமைகளின் மீது தங்கள் இருதயங்களை இருத்தி, செல்வந்தர் களாகப் பாடுபடும் போது, இந்த ஞானத்தை இரகசியமாக ஆதரிக் கிறார்கள். சொத்து சேர்க்கவும், அதை விட்டு விடாமல் பற்றிக் கொள்ளவும் அவர்கள் நீதிமன்றங்களை நாடுகிறார்கள், தேவை யற்ற சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான நேரம் அவர்கள் ஏதாவது ஒரு உலக உடைமை வாங்குவது பற்றி அல்லது பாதுகாப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், செயலாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் நித்திய இரட்சணியத்தைப் பற்றியோ, அல்லது பாவசங்கீர்த்தனம், திவ்விய நன்மை, ஜெபம் போன்ற தங்கள் ஆத்துமத்தை இரட்சிப் பதற்கான வழிகளைப் பற்றியோ அரிதாகவே நினைக்கிறார்கள், அல்லது அவற்றைப் பற்றி நினைப்பதேயில்லை, அல்லது எப்போ தாவது ஒரு முறை, பிறர் பார்க்கிறார்களே என்பதற்காக மட்டும், வாடிக்கைக்காக, தகுந்த ஆயத்தமின்றி இந்தத் திருவருட்சாதனங் களைப் பெறுகிறார்கள்.

மாம்சம் சார்ந்த ஞானம் என்பது உடலின்பத்தின் மீது கொள்ளும் பிரியமாகும். புலன்களின் திருப்தியை மட்டுமே தேடும் உலகத்தன்மையான மனிதர்களால் வெளிக்காட்டப்படும் ஞானம் இது. அவர்கள் உல்லாசமாகப் பொழுதுபோக்க விரும்பு கிறார்கள். சரீரத்திற்கு வேதனை தருகிற, அல்லது அதை ஒறுப்பதாக இருக்கிற ஒரு சந்தி, சுத்தபோசனம், மற்ற கடுமையான தவ முயற்சிகள் ஒவ்வொன்றையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். வழக்கமாக, சாப்பிடுவது, குடிப்பது, விளையாடுவது, சிரிப்பது. வாழ்க்கையை அனுபவிப்பது, உல்லாசமாகப் பொழுது போக்குவது ஆகியவற்றைப் பற்றி மட்டுமே அவர்கள் சிந்திக் கிறார்கள். எப்போதும் சொகுசாக இருக்க நினைக்கிறார்கள், பொழுதுபோக்கு அம்சங்களையும், மிகச் சிறந்த உணவையும், நல்ல தோழமையையும் பெரிதாக மதிக்கிறார்கள்.

மிக அற்பமான மனவுறுத்தலுமின்றி அவர்கள் இந்த இன்பங்கள் அனைத்தையும் கொண்டு தங்களை நிரப்பிக் கொள் கிறார்கள். இந்த இன்பங்களை உலகம் அங்கீகரிக்க மறுப் பதில்லை. இவற்றால் தங்கள் உடல் நலம் கெடுவதைப் பற்றிக் கூட அவர்கள் கவலைப்படுவதில்லை . அதன்பின் ஒரு பரந்த மனமுள்ள ஆன்ம குருவைத் (தங்கள் கடமையை அலட்சியம் செய்கிற கண்டிப்பில்லாத ஆன்ம குருக்களை அவர்கள் இப்படித் தான் அழைக்கிறார்கள்!) தேடிப்போய், தங்கள் மென்மையான, பெண்தன்மையுள்ள வாழ்வுக்கான எளிதான நிபந்தனைகள் உள்ள சமாதானமுள்ள அனுமதியையும், தங்கள் பாவங்களுக்கு வெகு தாராளமான 'மன்னிப்பையும்' பெற்றுக்கொள்கிறார்கள். "எளிதான நிபந்தனைகள் கொண்ட" என்று நான் சொல்வது ஏனென்றால், இந்த உலகத்தன்மையான மனிதர்கள் வழக்கமாகத் தங்கள் பாவங்களுக்குரிய பரிகாரமாக ஒரு சில ஜெபங்களை அல்லது ஏழைகளுக்குத் தரும் ஒரு சிறு தர்மத்தை மட்டுமே விரும்புகிறார்கள். உடல் ரீதியான அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய எதையும் அவர்கள் வெறுக்கிறார்கள். 

82. பேய்க்குரிய ஞானம் என்பது பட்டம், பதவிகளின் மீது காட்டும் பிரியமும், மதிப்புமாகும். இது உலகத்தன்மையான மனிதர்களின் ஞானமாகும். இவர்கள் இரகசியமாக பெருமை, கீர்த்தியையும், கௌரவங்களையும், உயர்ந்த பதவிகளையும் விரும்புகிறார்கள். தாங்கள் மனிதரால் காணப்படவும், மதிக்கப் படவும், புகழப்படவும், ஆர்ப்பரித்துப் போற்றப்படவும் பாடு படுகிறார்கள். தங்கள் கல்விகளிலும், வேலையிலும், மேற்கொள் ளும் காரியங்களிலும், தங்கள் வார்த்தைகளிலும், செயல்களிலும் இவர்கள் விரும்புவதெல்லாம் மனிதரின் மதிப்பும், புகழ்ச்சியும், பக்தியும், அறிவுமிக்க மனிதர்கள், பெரும் தலைவர்கள், பிரசித்தி பெற்ற வழக்கறிஞர்கள், மிகுந்த, தனிப்பட்ட தகுதியும், பெரிதாகப் பாராட்டப்பட உரிமையும் உள்ளவர்கள் என்ற நற்பெயரைப் பெறுவதும் மட்டுமே. அவமானத்தையோ, பிறர் தங்களைக் குற்றஞ்சாட்டுவதையோ இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே இவர்கள் தங்கள் குறைபாடுகளை மறைத்துக் கொண்டு, தங்கள் நல்ல பண்புகளை மனிதர்களின் காட்சிக்கு வைக்கிறார்கள். 

83. மெய்யான ஞானத்தைக் கொண்டிருக்க நாம் விரும்பினால், அவதரித்த ஞானமாகிய நமதாண்டவர் சேசுக்கிறீஸ்துநாதரைப் போல, இந்த மூன்று வகையான போலி ஞானத்தை நாம் வெறுத்துப் பகைத்து. அவற்றைக் கண்டனம் செய்ய வேண்டும். இந்த மெய்ஞ்ஞானம் தன்னலத்தைத் தேடாது. உலகிலோ, அல்லது சுக வாழ்வு நடத்துபவர்களின் இதயத்திலோ காணப் படாது. மனிதர்கள் பெரியவை, மேன்மை மிக்கவை என்று மதிக்கும் எல்லாவற்றையும் அது வெறுத்து ஒதுக்கும்.