அர்ச். தோமையார் வரலாறு - காலடிச் சுவடு (சின்னமலை)

மலையைச் சுற்றிப் பொதுச்சாலையொன்று போகிறது. கீழ்ப்பக்கத்துச் சாலையின் ஓரத்தில் அங்குள்ள சுவருக்கு அருகாமையில் தாழ்ந்த இரண்டு சிறு கட்டடங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு கருங்கல் பாறை இருக்கின்றது. அதன் மேல் பாதம் பதிந்த அடையாளத்தைப் பார்க்கலாம். அந்த அடையாளம், அப்போஸ்தலர் பாதம் பட்டதால் உண்டானதென்பது மக்களுக்குள் வழங்கி வருகிற பாரம்பரை யாம்.