இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரின் மனிதாவதார திருநிகழ்ச்சி மீது விசேஷ பக்தி

243. மரியாயிடமாய் சேசு கிறீஸ்துவின் அன்பின் அடிமைகளாயிருப்பவர்கள் தேவ வார்த்தை மனிதாவதார மான திருநிகழ்ச்சி மீது தனிப் பக்தி கொண்டிருக்க வேண்டும். மார்ச் மாதம் 25-ம் தேதி இப்பக்தி முயற் சிக்குக் குறிப்பிட்ட நாள். ஏனென்றால் இது கீழ்வரும் காரணங்களுக்காக பரிசுத்த ஆவியின் ஏவுதலால் ஏற்பாடு செய்யப்பட்டது : (1) தமது பிதாவின் மகிமைக்காகவும் நம் மீட்பிற்காகவும், சொல்லற்கரிய விதமாய் தேவ குமா ரன் மரியாயின் மீது கொண்டிருந்த சார்பினை மகிமைப் படுத்தவும் அதைக் கண்டு பாவிக்கவும் ஏதுவாக இத் தெய்வீகச் சார்பு இத் திரு நிகழ்ச்சியில் சிறப்பாக ஒளி வீசி நிற்கிறது. எவ்வாறெனில் இதிலே சேசு கிறீஸ்து நம் தேவ அன்னையின் உதரத்தில் ஒரு கைதியாக, அடிமை யாக உள்ளார் ; எல்லாக் காரியங்களுக்கும் மரியாயையே நம்பியிருக்கிறார்.

(2) கடவுள் மாதா மீது சொரிந்துள்ள ஒப்புவமை இல்லாத வரப்பிரசாதங்களுக்கும், இன்னும் சிறப்பாக, அவர்களைத் தமது மிகத் தகுதியுள்ள தாயாகத் தெரிந்து கொண்டமைக்கும் நன்றி கூறுவதற்காக இத்திரு நிகழ்ச் சியில்தான் அவர்கள தேவ அன்னையாகத் தெரிந்து கொள் ளப்பட்டார்கள். இவ்விரு காரியங்களுமே மரியாயிடமாய் சேசுவுக்கு நாம் அடிமையாவதின் இரு நோக்கங்களாகும்

244. இதைக் கவனியுங்கள் : பொதுவாக நான் இது பற்றிப் பேசும் போது சேசுவுக்கு மரியாயிடம் அடிமை, மரியாயிடம் சேசுவின் அடிமை என்று குறிப்பிடுகிறேன். மரியாயின் அடிமை என்றே நாம் கூறிவிடலாம். இவ் வாறு ஏற்கெனவே சிலர் கூறி யுள்ளனர் : "மரியாயின் அடிமை'."மரியாயின் அடிமைத்தனம்” என்று (எண். 159) ஆயினும் மரியாயிடம் சேசுவின் அடிமை'' என்பதே சிறந் தது என்று கருதுகிறேன். அர்ச். சல்பிஸ் சபைத் தலைவ ரான டிரான்டன் என்பவர் இவ்வாறு கூறும்படி ஆலோ சனை கூறியுள்ளார். இவர் அரிய விவேகமும், நிறைந்த பக்தியும் உடையவர். திருச்சபை ஊழியர் ஒருவர் அவரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

அதற்குரிய காரணங்கள் இதோ :

245. முதலாவது: அகங்காரம் நிரம்பிய காலத்தில் இப்போது நாம் வாழ்கிறோம். தற்பெருமை கொண்ட ஒரு பெரிய தொகையினரான அறிஞர்களும், தங்களில் தானே நம்பிக்கை கொண்டு குற்றங்காணும் மனமுடைய வர்களும், மிகவும் திடமாக நிறுவப்பட்ட பக்தி முயற்சி களையும் குறை கூறும் இக் காலத்தில், "மரியாயிடம் சேசு வின் அடிமைத் தனம்' என்பதே நல்லது. மரியாயின் அடிமை' என்பதை விட 'சேசு கிறீஸ்துவின் அடிமை'' என்று தன்னை அழைத்துக் கொள்வதே நல்லது. இங்ங னம் செய்வதால் குற்றஞ்சாட்டப்படுவதற்கு அநாவசிய மான சந்தர்ப்பம் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் இதனால் இப்பக்தி முயற்சியின் வழியும் கருவியுமாயிருக் கிற மரியாயின் பெயரை இதற்குச் சூட்டாமல் இப் பக்தியின் இறுதி முடிவாக இருக்கும் நமதாண்டவரின் பெயரையே சூட்டுகிறோம். இரு பெயர்களிலும் எதைக் கொண்டும் இப் பக்தி முயற்சியைக் குறிப்பிடலாம். எவ் வித சந்தேக முமில்லாமல் அப்படிச் செய்யலாம். நானே அவ்வாறு செய்கிறேன். உதாரணமாக திருச்சியிலிருந்து பூண்டி வழியாக வேளாங்கண்ணி செல்லும் ஒருவன் தான் பூண்டி செல்வதாகவும் கூறலாம். வேளாங்கண்ணிக்குப் போவதாகவும் சொல்லலாம் - ஒரு வேறுபாடுடன் - அதாவது அவன் வேளாங்கண்ணிக்குச் செல்வதற்கு பூண்டி செல் கிறான் - ஆனால் வேளாங்கண்ணி தான் அவன் அடைய வேண்டிய கடைசி எல்கையும் அவன் பயணத்தின் முடி வும். (அர்ச். லூயிஸ். ஆர்லியன்ஸ், அம்புவா, தூர்ஸ் என்று குறிப்பிடும் மூன்று இடங்களுக்குப் பதிலாக நம் மக்களுக்கு உடனே புரியும்படி திருச்சி, பூண்டி, வேளாங்கண்ணி என்று கூறப்பட்டுள்ளது).

246. இரண்டாவது: இந்தப் பக்தி முயற்சியில் மகி மைப்படுத்திக் கொண்டாடப்படும் முக்கிய திரு நிகழ்ச்சி கடவுளின் மனிதாவதாரமேயாகும் இதிலே நாம் மரியா யிடத்தில் தான் மரியாயின் உதரத்தில் தான் - மனிதாவதார மான சேசுவைக் காண்கிறோம். எனவே மரியாயிடம் “சேசுவின் அடிமைத்தனம்'' என்பதே அதிக பொருத்த மானது. மரியாயிடம் வாழ்ந்து மரியாயிடமே அரசாளும் சேசுவின் அடிமை என்பது அதிக பொருத்தமே. எத் தனையோ பெரியோர்கள் செபித்துள்ள அழகிய செபத் துக்கும் இது பொருத்தமாக உள்ளது:"மரியாயிடம் வாழும் சேசுவே! உம்முடைய புனிதத்தின் ஆவிக்குரிய தாக எங்களில் வந்து வாழ்வீராக...'' என்பன போன்ற செபங்கள்.

247, மூன்றாவது: இவ்வாறு கூறுவதில் சேசுவுக்கும் மரியாயிக்குமிடையே உள்ள நெருங்கிய ஐக்கியம் அதிகத் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகிறது. அவர்கள் எவ்வ ளவு நெருங்கிய ஐககியமாயிருக்கிறார்களென்றால் ஒருவர் மற்றவரிடம் முழுவதும் இருக்கிறார்கள். சேசு மரியாயிடம் முழுவதும் இருக்கிறார். மாதா சேசுவிடம் முழுவதுமாயிருக் கிறார்கள். சொல்லப் போனால், மாதா இல்லை, சேசு மட் டுமே அவர்களிடம் உள்ளார் சேசுவிடமிருந்து மரியா யைப் பிரிப்பதை விட சூரியனிடமிருந்து ஒளியைப் பிரித்து விடலாம். இதனால் நாம் நமதாண்டவரை "மரியாயின் சேசு'' என்றும் மரியாயை “சேசுவின் மரியா'' யென்றும் கூற முடியும்.

248. சேசு, மரியாயிடம் வாழ்ந்து ஆட்சி புரியும் மறைபொருளைப் பற்றியோ அல்லது தேவ வார்த்தை மனிதாவதாரமானதைப் பற்றியோ அவற்றின் உயர்வுகளை யும் சிறப்புகளையும் பற்றியோ விளக்கிக் கூற எனக்கு இங்கு அவகாசம் இல்லை. எனவே கீழ்வரும் சுருக்கமான குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறேன் :

கடவுளின் மனிதாவதாரமே சேசு கிறீஸ்துவின் முதல் திரு நிகழ்ச்சியாகும். அதுவே எல்லாவற்றையும் விட அதிகம் மறைக்கப்பட்டிருந்தது. அதிகம் உயர்வு பெற் றிருந்தது. மிகக் கொஞ்சமாக அறியப்பட்டிருந்தது. இத் திரு நிகழ்ச்சியில் தான் மரியாயின் சம்மதத்துடன், அவர் களின் திரு உதரத்தில் சேசு தாம் முன் குறித்தவர்களை யெல்லாம் தெரிந்தெடுத்தார். இதன் காரணமாக மரியா யின் உதரம் 'கடவுளின் திரு நிகழ்ச்சிகளின் இல்லம்" என அர்ச்சிஷ்டவர்களால் அழைக்கப்பட்டது. சேசு தம் வாழ்வின் மற்ற திரு நிகழ்ச்சிகளை யெல்லாம் இதிலேயே கொண்டு செயல்படுத்தினார். அவர் உலகத்தில் வரும் போது "சர்வேசுரா, உம் சித்தத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்” (எபி. 10, 5-9) என்றார். இதனால் எல்லா திரு நிகழ்ச்சிகளின் சுருக்கமாக இது உள்ளது. இதிலே அவற்றிலெல்லாம் வெளியான இறைவனின் சித்தமும் வரப்பிரசாதமும் அடங்கியுள்ளன. இறுதியாக, இரக்கத் தின் ஆசனமும் தயாளத்தின் இருப்பிடமும் கடவுளின் மகிமையுமாக இருப்பது இத்திரு நிகழ்ச்சியேயாகும். நம் மைப் பொறுத்த வரையிலும் இது இறைவனின் இரக்கத்தின் அரியாசனம். ஏனென்றால், நாம் மரியாயின் வழி யாகவே சேசுவை அடையக் கூடுமாயிருப்பதால், மரியா யின் தலையீடு இல்லாமல் சேசுவைக் காணவும் அவருடன் பேசவும் நம்மால் இயலாது. தன் நேச அன்னையின் மன்றாட்டுக்கு எப்போதும் செவிகொடுக்கும் அவர் இத் திரு நிகழ்ச்சியில் எந்நேரமும் அருளையும் இரக்கத்தையும் பாவிகளுக்கு அளிக்கிறார். " ஆதலால்...... அவருடைய கிருபை சிம்மாசனத்தை நம்பிக்கையோடு அணுகிச் செல் வோமாக'' (எபி. 4, 16), மாதாவுக்கு இது ஆண்டவரு டைய தாராளத்தின் ஆசனமாக இருக்கிறது. ஏனென் றால் உண்மையான இப்பூலோக மோட்சத்தில் புதிய ஆதாம் வசித்திருந்த காலத்தில் கடவுள் அதிலே எத்தனை எத்தனை மறைந்த அற்புதங்களை நிகழ்த்தினார். சம்மனசுக் களும் மனிதர்களும் அவற்றைப் பற்றி யாதொன்றையும் அறிந்தது கூட இல்லை. இதன் காரணமாக மரியாயை அர்ச்சிஷ்டவர்கள் "இறைவனின் மகிமையலங்காரம்" என்று அழைத்தார்கள். (எண். 6) மாதாவிடம் மட்டுமே கட வுள் மாட்சிமையடைந்துள்ளது போல் அவ்வாறு கூறியுள் ளார்கள் (இசை. 32, 21). மனுக்குலத்தின் மீது கோப முற்றிருந்த தம் பிதாவை மரியாயிடத்தில் தான் சேசு கிறீஸ்து நிறைந்த முறையில் சாந்தப்படுத்தினார். பாவத் தால் பிதாவிடமிருந்து பிடுங்கப்பட்ட மகிமையை உத் தமமான முறையில் திரும்பவும் மீட்டுக் கொடுத்தார் எனவே அவருடைய பிதாவுக்கு இத்திரு நிகழ்ச்சி தான் மகிமையின் சிம்மாசனமாயிருக்கிறது. சேசு கிறீஸ்து தம் சொந்த சுய சித்தத்தின்படி வி தம்மையே பலியாக்கியதால் பழைய ஏற்பாட்டின் எல்லாப் பலிகளையும் விட அதிக மான மகிமையை இறைவனுக்கு அளித்ததும் மரியா யிடத்திலே தான். பரமபிதா மனிதரிடமிருந்து என்றுமே அடைந்திராத அளவற்ற மகிமையையும் சேசு கிறீஸ்து தம் பிதாவுக்கு அளித்தது மாதாவிடத்திலேயே.