முறைகேடான அன்பு

மேற்குறித்த குரூர செயல்களுக்கு நேரெதிராய்ப் பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யும் வேறோர்வித தின்மையுண்டு. அது யாதெனில், தம்மக்களுக்கு மிதமிஞ்சின செல்லங்காட்டுதல், அல்லது அவர்களை மட்டுக்கடந்து பேதமையாய்ச் சிநேகித்தலாம். இது கணக்கற்ற தீமைகளுக்குக் காரணமாயிருப்பதினாலன்றோ இப்படி மக்களை முறைகேடாய் நேசித்துக் கெட்டுப்போக விடும் பெற்றோரைப் பெற்றோரல்ல, சத்துருக்களேயென்று அர்ச். அகுஸ்தீனும், பிள்ளைகொல்லிகளென்று வேறோர் நூலாசிரியரும் அழைக்கிறார்கள்.

இதனாலேதான் ''உன்பிள்ளைகளுக்குப் பிதாவாயிரு; சிநேகங்காட்டி வினையஞ்செய்யும் சிநேக துரோகியாயிராதே'' என்று அர்ச். சிப்பிரியன் எச்சரிக்கிறார். '' அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்.'' முக்கியமாய் ஒரேபிள்ளையுள்ள குடும்பங்களில் இத்தவறு பெரும்பாலும் நடக்கிறது. செல்லங்காட்டும் பெற்றோர் செய்யும் தவறுகளும் அவைகளால் விளையுங் கேடுகளும் அநேகமானாலும் அவைகளிற் சிலவற் றைமாத்திரம் இங்குவிபரிப்போம்.

இது இதில் பிள்ளைகள் செய்யுந் தப்பிதங்களைக் கவனமாய்த்த டுத்துவிடுவதற்குப்பதிலாய், யோசனையற்றவர்கள் அவை களில் அகமகிழ்ச்சி கொண்டு, பிள்ளைகள் மீண்டும் மீண்டும் அப்படிச் செய்யும்படி ஏவிவிடுவார்கள். ஒரு பிள்ளை தகாத வார்த்தைகளைச் சொல்லவும், பெற்றோரை அல்லது பிறத் தியாரை அடிக்கவும், உதைக்கவும், பழிவாங்கவும், பரிகா சம்பண்ணவும் அல்லது அவர்கள் மேற்துப்பவும், அமையா மல் பிடிவாதமாயிருக்கவும் இவைமுதலிய வேறுபல குற்றங் களைச் செய்யவும் நேரிடும்போது, பெற்றோர் அகமகிழ்ச் சிகொள்வதும் அப்பிள்ளை வெகு விச்சுளியனாய் வருவானென்றெண்ணுவதும் சொல்லுவதும் பெரும்பிழை.

"குட்டிநாய்க்கும் குழந்தைப்பிள்ளைக்கும் இடங்கொடுப்ப தாகாது" என்பதில் உண்மை மெத்த உண்டு. சிறியோரின் சிறுகுற்றங்களைப் பறுவாய் பண்ணாதிருப்பதும் பெரும் பிழைகளைச் சிறிதாயெண்ணுவதும், தண்டிக்க அல்லது கண்டிக்கவேண்டிய சமயங்களில் பிள்ளைக்கு நோகும், பிள்ளையழும், கோபங்கொள்ளும், துக்கப்படும், முரண் டு பண்ணுமென்ற வீண்பயத்தினால் கண்டுசாய்ப்பாய் விடுவதும் பெருந் தவறாம்.

பிள்ளைகளின் பிழைகளைப்பற்றி யாராகுதல் முறை யிடும்போது பெற்றோர் அம்முறைப்பாட்டை விசாரித் துத் திருத்துவதற்குப் பதிலாய், பிள்ளைகள் பக்கமாய் நியாயம் பேசுவதும் இவர்கள் தீமையில் வளர வழியா கின்றது. உபாத்திமார் வேண்டிய தருணங்களில் மா ணாக்கரைத் தண்டிக்க நேரிட்டால், செல்லங்கொஞ்சும் பெற்றோர் தாங்கள் ஒருபோதும் அடியாமல் தொடாமல் செல்லமாய் வளர்க்கும் தம்மக்களை உபாத்திமார் எப்படி அடிக்கலாமென்று சீறிச்சினந்து முறையிடுவதும், அவர்க ளில் நெருங்கி அவர்களைத் தூஷணித்துக் கலாதிபண்ணு வதும் புத்திகெடன்றி உண்மையான அன்பின் அடையா ளமல்ல.

அநேக மாணாக்கர் தங்களைச் சீர்கெட்ட நேசத் தால் கெட்டுப்போகவிடும் பெற்றோரைப்பார்க்கிலும் தங்க ளைக் கண்டிப்பும் அன்புங்கலந்த முறையாய் நடத்தித் தங் களுக்குக் கல்விபயிற்றும் உபாத்திமாருக்கு அதிகமாய் அமைந்து நடந்து அவர்களை எக்காலமும் நேசித்துக் கனம்பண்ணிவருவதைக் கண்டுவருகிறோம். 40 பிள்ளைகளின் இகபரநன்மைகளைக் கவனியாமல், நன் மை தின்மையைப்பாராமல் அவர்கள் கேட்டதையெல் லாங் கொடுப்பதும், விரும்புவதையெல்லாஞ் செய்வதும் அவர்களைத் தங்கள் எண்ணப்படியெல்லாம் செய்யவிடு வதும் மட்டற்ற தீமைகளுக்கு வழியாகும்.

தாய்தந்தையர் தம்மக்களை விமரிசைப்படி நடப்பிப்ப தற்குப் பதிலாய், ஒரு தவறான அன்பினால், அவர்களின் எண்ணத்துக்கும் போக்குக்கும் இசைந்தும் அமைந்தும் நடப்பதினால் பிள்ளைகள் அமைச்சலென்னும் புண்ணியத் தை முற்றாய் அறியாதவர்களாய்ப்போகிறார்கள். இதி னால், தாங்கள் வளர்ந்த பின்னும், தங்கள் ஆராதூரித்தன மான விருப்பத்துக்கெல்லாம் பெற்றோர் அமையத்தவ றினால் கோபவெறிகொண்டு ''ஒருவனுக்குப் பகைஞர் அவன் வீட்டார் தாமே" (மத். 10;36) என்ற வேதவாக் கியப்படி தம் பெற்றோருக்குப் பகைஞராய்ப் போ கிறார்கள்.

பிதா மாதாக்களின் நெறிகேடான நேசத்தையும் இளக்காரத்தையும் அனுபவத்தால் அறிந்த மக்கள், தங்கள் எண்ணத்துக்கு அவர்களை இசைக்கப் பெரும்பா லும் உபயோகிக்கும் ஓர் தந்திரம் யாதெனில் சாப்பிடாமல் விஷமம்பண்ணுதலாம். நாம் நன்றாயறிந்த ஓர் கைம் பெண்ணுக்கு ஒரேயொரு புத்திரனிருந்தான். இவன் ஒருநாள் தன் உடன் மாணாக்கர் தாங்கள் இவ்வித தந்திரத்தாலடைந்த அற்ப அனுகூலங்களைப்பற்றி வீம்பாய்க் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட் டு, தானும் இப்படிச் செய்து பார்க்கவேண்டுமென்றெண் ணி அன்றிரவு தாயிடம் ஒரு காரியத்தைக் கேட்டான். அவள் அதை உடனே கொடாததினால் தனக்குத் தீனுந் தேவையில்லையென்று சாப்பிடாமலிருந்தான்.

மகனை அருமையாயும் புத்தியாயும் நேசித்துவந்த தாய் அவனைச் சாப்பிடும்படி கெஞ்சாமல் தடவாமல், மகனே! இந்த விளை யாட்டு என்னிற்பலியாது. இது வீண் செல்லங்காட்டிப் பிள்ளைகளைக் கெடுக்கும் பிதா மாதாக்களிடத்திலென்றாற் பலிக்குந்தான். உனக்கு வேண்டியது தக்க நேரத்திற் கிடைக்கும். இப்போது சாப்பிடவிருப்பமானாற் சாப்பிடு. விருப்பமில்லாவிடில் போய்ப்படுக்கலாம் என்று திடமா ய்ச் சொன்னாள். பையன் இதைக்கேட்டு மலைத்துத் தன் எடுப்பு வாய்க்காததையிட்டு வெட்கினாலும் தன் பிடிவாதத்தையும் விட மனதில்லாததினால், யாதொன் றும் பேசாமலும் சாப்பிடாமலும் படுத்துவிட்டான். ஆனால் திரும்ப ஒருபோதும் தன்னரியதாய்க்கு இவ்வித தந்திரம் விளையாடத்துணியவில்லை.

இப்படியே வேண் டிய தருணங்களிலெல்லாம் நேசத்தோடு கண்டனையுந் தண்டனையுங் கலந்து வளர்த்ததினால் தனக்குப் பிற்காலம் எய்திய நன்மைகளை நினைத்துப் பல சமயங்களிலும் அவ ளைப்பற்றி மிகப் புகழாய்ப் பேசிக்கொண்டுவருவான். மிக விவேகியான இவ்வரிய தாயைப்பற்றி வேறிடங்களி லும் பேசுவோம்.

தேவபயமும் பத்தியுமற்ற பெற்றோர், பிள்ளைகள் மேற் தாங்கள் கொண்ட பேதமையான அன்பினால் அவர் களின் சன்மார்க்க நடையைப்பற்றிச் சற்றும் பறுவாய் பண்ணாமல், அவர்கள் தேவசன்னிதியில் எவ்வளவு துஷ் டராயிருந்தாலும் லெளகீக நன்மை பெருமை சிலாக்கி யங்கள் மாத்திரம் உள்ளவர்களாயிருக்க ஆத்திரப்படுவார்கள்.

ஒருகாலம் றோமைநகரை அரசாண்ட பஞ்சமா பாதகனாகிய நீரோ என்பவன் சிறுவனாயிருக்கையில் குறிகாரர் இவன து தாயை நோக்கி இக்குழந்தை ஒருகா லம் சக்கிரவர்த்தியாகி உன்னையுங் கொலை செய்வான் என் றார்கள். குருட்டுத்தனமாய்த் தன்மகவை நேசித்த இவள் அதற்கு மறுமொழியாக, என் மகன் என்னைக் கொல்வதைப்பற்றிக் காரியமில்லை அதற்கு நான் சம்மதி காரியாயிருக்கிறேன். அவன் சிம்மாசனமேறி அரசாண் டால் அதுவே போதுமென்றாள். குறிகாரர் குருட்டு வாய்ப்பாய்ச்சொல்லியபடி அவன் தன் தாயைக்கொன் றேவிட்டானென்று சரித்திரம் கூறுகின்றது.

இதைப்பார்க்கிலும் பயங்கரமான ஒரு சம்பவம் சில காலத்துக்கு முன் நடந்தது. அது உண்மையானதாயி னும் அதை நம்பச் சிலர் சற்றுப் பின்வாங்குவார்கள். அதெப்படியெனில் மக்களை முறையாய் நேசிக்கத் தெரியா த ஓர் தந்தை, உலக நன்மையை விரும்பித் தன் பிள்ளைகள் வேத விசுவாசத்தை இழந்து கெட்டுப் போகக்கூடிய ஓர் துன்மார்க்க ஸ்திதியில் அவர்களை வைத்திருந்தான்.

இதை அறிந்த ஒரு குருவானவர் அவனை வீடுதேடிப் போய்க்கண்டு, சருவேசுரன் தனக்கொப்படைத்த பிள் ளைகளை இளமைதொட்டு அவருக்கேற்கத் தேவபத்தி விசுவாசமுள்ளவர்களாய் வளர்ப்பது அவனுக்கு எவ்வ ளவு பாரமான கடமையென்றும், அப்படிச் செய்யாமல் அவர்களைக் கெட்டுப்போகவிடுவது அவனுக்கும் அவன் சந்தானத்துக்கும் எவ்வளவு தேவபழியான காரியமென் றும் வேண்டிய புத்தி சொன்னார். அவன் இவற்றையெல் லாம் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்து சுருக்கமாய்ச் சொன்ன மறுமொழியாவது : சுவாமி என் பிள்ளைகள் உலகத்தில் உத்தியோகஸ்தராய் வந்தால் அது எனக்குப் போதும். அவர்களை உத்தியோகத்தில் வைக்கிறதற்காக நான் நரகத்தில் விழவும் ஆயத்தமாயிருக்கிறேன் என் றான்.

இவ்வளவு மதிகேடாய்ப் பிள்ளைகளை நேசித்துக் கெ டுக்கும் பெற்றார் உலகிற் பலருண்டானபடியாலன்றோ செனேக்கா என்னும் பிறசமய சாஸ்திரி "நாம் பிறக்கும் போதே பெற்றோரின் தீவினை நடுவிற் பிறக்கிறோம்'' என்றார்.

பிள்ளைகள் மேலுள்ள பிரமாண மற்ற பற்றுதலினால் அவர்களுக்காகச் சில பெற்றோர் களவாண்டும், அநியாய வட்டி வாங்கியும், வேறு பற்பலவிதமாகப் பொருள்பண் டங்களை அபகரித்தும் பணந்தேடுவார்கள். இதனால் தன் களுக்கும் அவர்களுக்கும் நித்தியகேட்டையே சூழுகிறார் கள். ஏனெனில் அநியாயமாய்ச் சம்பாதிக்கிறவர்கள் மாத்திரமல்ல அப்படிச் சம்பாதித்ததை ஆண்டு அனுபவிக் கிறவர்களும் அந்த அநியாயத்துக்குப் பங்காளிகளாய்ப் போவார்கள்.

பெற்றோர் அநியாயமாய்ச் சம்பாதித் ததைத் திரும்பச் சொந்தக்காரருக்கு இறுத்துவிட்டுத் தாங்கள் தரித்திரப்பட மனந்துணியும் பிள்ளைகள் யார்? அன்றியும் தாய் தந்தையர் நீதிநெறிகெட்டுப் பிள்ளைக ளைச் சன்மார்க்கராய் வளர்க்காமல் அவர்களுக்காக அநி யாயமாய் எவ்வளவு திரவிய சம்பத்தைத் தேடி வைக்கி றார்களோ அவ்வளவுக்கு அவர்கள் கருவங்கொண்டு உழைப்பாளிகளாகாமல் அழிப்பாளிகளாய்ப் போவதை யும் காண்கிறோம். அவர்கள் சம்பத்தும் வந்தது போலப் போகின்றதென்று, அதாவது, பெற்றோரால் அநியாய மாய்த்தேடப்பட்டது பிள்ளைகளால் அநியாயமாய் அழி க்கப்படுகின்றதென்று அயலார் தூற்றவும் நேரிடுகிறது.

பிள்ளை களுக்குப் பெருந்தொகையாய்ச் சம்பாதித் துவைப்பதைப்பார்க்கிலும் அவர்களை நீதியாய் உழைக்க ப்படிப்பிப்பதும் பழக்குவதுமே உண்மையான அன்பின் அறிகுறியாம். போசியோன் என்ற ஞானி தமது பிள் ளைகளை உருக்கமாயும் விமரிசையாயும் நேசித்து, அவர் கள் ஊதாரிகளாகாமல் உழைப்பாளிகளாகும்படி பயிற்றி வந்தார். இவரது பேராசையற்ற நடபடிகளை மகா அலெக்சாந்தர் என்னும் அரசன் கேட்டறிந்து மிகச் சந்தோஷப்பட்டு இவருக்கு விலை பெற்ற பல கொடைகளை அனுப்பினார்.

இவர் அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் அரசன் என்னைப்பற்றி அப்படி மேன்மையாய் எண்ணினால் இன்னும் நான் அவ்வித மேன்மைக்குப் பாத்திரனாயி ருக்க உத்தரவளிப்பாராக வென்றார். அதற்கு அரச தூதர் மறுமொழியாக இக்கொடைகள் உமக்குத் தேவையில்லாதிருப்பினும் உமது பிள்ளைகளுக்காக நீர் இவை களை ஏற்றுக்கொள்வது இராசாவின் சித்தமென்றார்கள். இவர் அதற்கு : என் பிள்ளைகள் என்னைக்கண்டுபாவிக்க வேண்டும். அவர்கள் என்சுகுணங்களைப் பின்பற்றினால் அவர்களுக்கும் இக்கொடைகள் தேவையாக வர மாட்டார். அவர்கள் என்சு குணங்களைப் பின்பற்றார்க ளென்றால் நான் அவர்களுக்காக லெளகீக நன்மைகளைச் சேகரித்துவைக்கவேமாட்டேனென்றார்.

பெற்றோர் தங் கள் பிள்ளைகள் பேராசை கொள்ளாமற் புண்ணியவழி யில் நடக்க அவர்களுக்கு முன்மாதிரி காட்டிப் பழக்கு வதே அவர்கள் மேல் வைக்கத்தகும் அன்புக்கு மெய்யா ன அறிகுறியும் அவர்களுக்குத் தேடிக் கொடுக்கத்தக்க அழியாத திரவியமுமாம். கடுஞ்சிநேகம் கண்ணைக் கெடுக்கும் என்றவாறே தாய் தந்தையர் தம் மக்களை மித மிஞ்சிக் குருட்டாட்டமாய்ச் சிநேகித்து, அவர்களைப் பிரியவீனப்படுத்தப் பயந்து, கண்டிப்பு தண்டனை கட் டுப்பாடு நல்லொழுக்கம் யாதொன்றுமின்றித் தங்க ளெண்ணப்படி நடக்கவிடும்போது அவர்கள் இயல் பாய்க் கெட்டழிந்து மூர்க்கருந் துஷ்டருமாய்ப் போகி றார்களன்றித் தங்கள் பெற்றோரை அவமானப்படுத்தித் துக்கசாகரத்தில் அமிழ்த்தியும் விடுகிறார்கள்.

இவ்வித தீமைகளையெல்லாம் விலக்க வேண்டுமாகில் பெற்றோர் பிள்ளைகளை நேசிக்கவேண்டிய முறையை அறிந்து அனுசரிக்கக்கடவார்கள்.