இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சர்வேசுரன் மீது முழு நம்பிக்கை என்னும் புண்ணியத்தின் பேரில்

முந்தின அதிகாரத்தில் குறித்துக் காட்டினது போல, தன்னை கம்பாமையென்னும் புண்ணியம் ஞான யுத்தத்தில் மிகவும் அவசிய மானதானாலும், அந்தப் புண்ணியத்திற்கு உதவியாய், வேறு புண் ணியங்கள் இல்லாவிட்டால், யுத்த சமயத்தில் பின்னடைய வேண்டி யதாயிருக்கும், அல்லது சத்துராதி உன் ஆயுதத்தைப் பறித்து உன்னை வென்று விடுவான்.

ஆனால், தன்னை நம்பாமையென்னும் புண்ணியத்துடன், சர்வேசுரன் மீது முழு நம்பிக்கையென்னும் புண்ணியத்தையுஞ் சேர்க்கக்கடவாய். ஏனெனில், சர்வேசுரன் ஒரு வரே சகல நன்மைக்கும் ஆதிகாரணர்; அவரிடத்தினின்றே உனக்கு உதவி வரவேண்டும்; உன்னால் ஒன்றுங் கூடாதது மெய்யா ன தால், நீ அடிக்கடி ஆபத்தான அவக்கோட்டில் அவலமாய் விழ வேண்டியவனாய் இருக்கிறாய்.

உன் பலத்தை நம்பாமலிருக்கச் சர்வ நியாயமும் இருப்பதால், நீ உன் பலவீனத்தை உள்ளபடி கண்டறி வாயானால், தேவ உதவியைக் கேட்டுத் தப்பாமல் வெகு அநுகூலத் துடன் உன் சத்துருவை வென்றடக்குவாய். ஏனெனில், தெய்வ உதவியை ஏராளமாய் அடைவதற்குச் சர்வேசுரன் பேரில் முழு நம் பிக்கை வைப்பதே மார்க்கமாம். இந்த மேலான புண்ணியத்தை அடைவதற்கு நாலு வழிபாடுகளுண்டு. அவையாவன:

1-வது. அந்தப் புண்ணியத்தைச் சர்வேசுரனிடத்தில் அத்தி யந்த தாழ்ச்சியுடன் கேட்பது.

2-வது. சர்வ நன்மைச் சுரூபியான சர்வேசுரனுடைய சர்வ வல்லபத்தையும், ஞானத்தையும் நினைத்து, ஏலாமை என்பதையும் பிரயாசை என்பதையும் அவர் அறிவார் ; அவருடைய தயாளத் திற்கு மட்டில்லை; அவர் நம்மீது அணைகடந்த நேசம் வைத் திருப்பதால் நாம் மெய்யான ஞான ஜீவியாகளாகவும், நம்மையே நாம் எதிர்த்து வெல்லவும் நமக்கு வேண்டிய உபகாரச் சகாயங்களையெல்லாங் கொடுக்க அவர் எந்நேரமும் எச்சமயமுங் காத்திருக்கிறார் . என்பதை அறிந்திருப்பது. ஏனெனில், அவர் நம்மிடத்தில் கேட்ப தெல்லாம், நாம் அவரை முழு நம்பிக்கையுடன் அண்டிப் போக வேண்டுமென்பதல்லாமல் வேறல்ல, இது இப்படியல்லவென்று எவனாகிலுஞ் சொல்வானாகில், சிதறிப்போன ஆட்டைத் தேடுவ தற்குத் திவ்விய சேசு முப்பத்து மூன்று வருஷம் முள் முரடான வழிகளெல்லாம் நடந்து, தமது இரத்தமெல்லாஞ் சிந்தித் தமது உயிரை முதலாய்க் கொடுத்தாரென்று நமக்குத் தெரியாதோ? இப் படியிருக்க சிதறின ஆடே! நீ எப்படியாவது மந்தையில் சேர வேண்டுமென்று முழு ஆசைப்பட்டு அந்த நல்ல ஆயனை அண்டி வருவாயானால், அவர் அதை துரத்தியடிப்பாரோ? இன்னும் அதற்குப் பல குறைகள் இருந்தாலும் மன்னியாதிருப்பாரோ? தமது கிருபை நிறைந்த கண்களை அதன்பேரில் திருப்பாதிருப் பாரோ? அதன் அபய சத்தத்திற்குச் செவிகொடாதிருப்பாரோ? அதைத் தமது தோளின்பேரில் சுமந்து மந்தையில் சேர்க்க அவருக்கு மனமில்லாமற் போகுமோ? இதில் அற்ப சந்தேகமுண் டா? சந்தேகமிருக்குமாகில், அது பசாசின் சர்ப்பனையென்று விலக் கக்கடவோம். ஏனெனில், சிதறின ஆடு மந்தைக்குத் திரும்புவதைக் கண்டு அவர் சொல்லிலடங்காத சந்தோஷப்படுகிறார்; அதைப்பற் றித் தம்மோடு ஆநந்தங் கூறவேண்டுமென்று சம்மனசுகளையும் அழைக்கிறார்.

பாவியின் உருவ அடையாளமான காணாமற்போன நாணயத் தைக் காணும் பரியந்தம் , அவர் விடாமுயற்சியுடன் தேடுகிறாரென்று நாம் சுவிசேஷத்தில் வாசிக்கிறோமே. அப்படியிருக்க தன் ஆயனைக் காணாததால் கலங்கி மந்தைக்குத் திரும்பி வரும் ஆட்டை அவர் துரத்தியடிப்பாரோ? இல்லை, இல்லை. அதற்கு விரோதமாய், அவர் நமது இருதயத்தின் கதவை இடைவிடாமல் தட்டுகிறார்; தாம் அத னுள் பிரவேசித்து வாசஞ்செய்யவேண்டும், தமது மனதை நமக்குத் திறந்து காட்ட வேண்டும், தமது வரப்பிரசாதங்களால் நம்மை நிரப்ப வேண்டுமென்று ஆசிக்கிறார். அப்பேர்க்கொத்த நமது ஆத்தும பத்தா வுக்கு நமது இருதயத்தைத் திறந்து, அதில் அவர் எழுந்தருளி வந்து வாசஞ் செய்ய வேண்டுமென்று நாம் ஆசிப்பதைக் கண்டால், நமது ஆசைக்கு அவர் இணங்கமாட்டாரென்று நினைக்க முதலாய் இட மில்லை .

3- வது.  கடவுளை நம்பினோர் கைவிடப்படாரென்று தேவ திருவுளமான வேதாகமங்கள் ஆயிரமிடத்தில் கூறும் வாக்கியங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது.

4-வது. தன்னை நம்பாமை, சர்வேசுரன்மட்டில் முழு நம் பிக்கை யென்னும் புண்ணியங்களை அடைவதற்கு நீ செய்ய வேண் டியதாவது: ஒரு நற்கிருத்தியஞ் செய்யவென்கிலும், ஒரு துா குணத்தை அடக்கவானாலும் உனக்கு ஆசை உண்டாகிற போதெல் லாம், எல்லாத்திற்கு முன் உன் பலவீனத்தையும், சர்வேசுரனுடைய சர்வ வல்லபம், ஞானம், தயாளத்தையும் யோசித்து, உன் பலவீனத் தை முன்னிட்டு உனக்கு உண்டாகிற அச்சத்தை சர்வேசுரன் உனக்குக் கொடுக்கிற பலத்தைக் கொண்டு மட்டுக்கட்டி, எந்த உபத் திரியமான யுத்தத்திற்குந் தைரியமாய் முற்படுவதாம். இந்த ஆயுதங்க ளுடன் ஜெபத்தையுஞ் சேர்ப்பாயானால், பின்வரும் அதிகாரங்களில் சொல்லுமாப்போல, மகத்தான எண்ணங்களை நிறைவேற்றி, மாட்சி மை பொருந்திய வெற்றியடைவாய் என்பதில் சந்தேகமேயில்லை.

இவ்வண்ணம் நீ நடவாமல், சர்வேசுரன் பேரில் பூரண நம் பிக்கை வைத்திருக்கிறாய் என்று உனக்குத் தோன்றினாலும், நீ முழு மோசம் போகிறாய். ஏனெனில், நாம் இயல்பாய் நம்மை மிதந்தப்பி மதிக்கிறோம்; நாம் சர்வேசுரன் மீது முழு நம்பிக்கை வைக்க ஏற்படுகிறபோது, நமது சுய பட்சமானது வஞ்சகமாய் வந்து, கலந்து நாம் சர்வேசுரன் மட்டில் ஸ்தாபிக்கவேண்டிய நம்பிக்கையை நமது பேரிலேயே வைக்கும்படி எத்தனஞ் செய்துவிடுகிறது. இந்த உபாய தந்திரத்தை அறிவதும் வெகு பிரயாசை. நமக்கு இயல்பான இந்தத் துர்க்குணத்தை விலக்கவும், இதற்கு எதிரான புண்ணியங்களாகிய நம்மை நம்பாமை, சர்வேசுரன் மட்டில் முழு நம்பிக்கை யென்னும் புண்ணியங்களை மென்மேலும் அடையவும் வேண்டுமானால் எந்தக் கிருத்தியத்தையுஞ் செய்யத் துவக்குகிறதற்கு முன் நமது நீசத்தனம் பலவீனத்தையும், சர்வேசுரனுடைய சர்வ வல்லபத்தையுஞ் சிந்தித் துத் துவக்க வேண்டும். நாம் செய்யக்கூடுமான கிருத்தியத்திற்கெல் லாம் இவ்விரண்டு புண்ணியங்களும் முன்னே நிற்பது அவசியம்.