நரகத்தின் சித்திரம்

கப்பலொன்று விரைந்தோடிக் கொண்டிருந்தது. கப்பலின் ஒரு பகுதியில் பலர் கூடியிருந்தனர். “யேசு சபையாருடன் மோட்சத்தில் வாழ்வதைவிட, கோத் என்னும் கவிஞருடன் நரகத்தில் வாழ நான் விரும்பு வேன்” என அக்கூட்டத்திலிருந்த ஒருவன் பெருமை யுடன் சொல்லிக்கொண்டிருந்தான்.

மேலும் அவன் தொடர்ந்து பேசினான். “நரகத் தில் நாம் பெரிய மனிதர்களைப் பார்க்கலாம். யேசு சபையார் சொல்வது உண்மையானால், (அவர்கள் சொல்வது உண்மையாயிருக்க வேண்டும்) சக்கரவர்த் திகள், அரசர்கள், சேனைத்தலைவர்கள், நாட்டின் மந் திரிகள், கவிகள், தனவந்தர்கள், நடிகர்கள், நடிகைகள், அறிஞர்கள் முதலியோரை நாம் அங்கு பார்க்கலாம். நண்பர்களே, பார்த்தீர்களா? இவர்கள் கல்விமான்கள். ஆதலின் நரகத்தில் நாம் தனிமையை உணரமாட்டோம்” என்றான். அதற்குமேல் அவனாற் பேசமுடியவில்லை. ஏனெனில் “ஒரு கப்பல் அமிழ்ந்த இருக்கிறது'' என்னும் கூக்குரல் கப்பல் முழுதும் கேட்டது. பத்து நிமிடங்களுக்குப்பின் அந்தக் கப் பலைப் பிரயாணிகள் யாவரும் பார்த்தார்கள்.

அந்தக் கப்பலுக்குப் பாய்மரம் இல்லை. சுக்கான் இடையாது. கப்பல் வேலையாட்களும் கிடையாது. அலைகளால் அந்தக் கப்பல் அலைக்கழிக்கப்பட்டது. அது வருணிக்க முடியாத அளவு பரிதாபக் காட்சியா யிருந்தது. அது மிதக்கும் பிரேதப் பெட்டி. அதில் எவ்வளவு நிர்ப்பாக்கியம்! நெஞ்சைப் பிளக்கும் எத் தனைக் கோரம்! நாங்கள் அந்தக் கப்பலை அணுக அணுக நாங்கள் எல்லோருமே மிகத் துயரத்துக் குள்ளானோம். அது எங்களுக்கு மிகச் சமீபமாயிருந் தது. கத்தினோம். பதில் இல்லை. சாவு அதில் ஆட்சி புரிந்தாப்போலிருந்தது எங்கள் கப்பலிலிருந்து ஒரு படகை இறக்கினோம். எங்களில் பலர் அதிற் சென் றோம். நரகத்தைப் பற்றிப் பேசினவனும் எங்களு டன் இருந்தான். அமிழ்ந்த இருந்த கப்பலை நோக்கி எங்கள் படகைச் செலுத்தினோம். சீக்கிரம் அதில் ஏறிக்கொண்டோம். எங்களைக் கண்டதும் சில எலி கள் அங்குமிங்கும் ஓடின. கப்பலிலிருந்த யாவும் கள வாடிச் செல்லப்பட்டிருந்தன. அறைகளில் நுழைந்து பார்த்தோம். ஒரு மனிதனையும் காணோம். பயங்கரத் துக்குரிய ஒரு யுத்தம் அங்கு நடைபெற்றிருந்தது. அதன் குறிகளை நாங்கள் நடுக்கத்துடன் கண்ணுற் றோம். பெரிய ஒரு அறையினுள் நுழைந்தோம். எங் கும் கண்ணாடித் துண்டுகள்! குடிக்கும் பாத்திரங்கள் உடைக்கப்பட்டிருந்தன. உணவில் மீதி அங்கு சிதறிக் கிடந்தது. இரத்தத் துளிகளையும் பார்த்தோம். இவற்றிலிருந்து நடைபெற்ற எல்லாவற்றையும் நாங்கள் யூகித்துக்கொண்டோம். கப்பலில் இருந்தவர்கள் குழப்பம் செய்திருக்கவேண்டும். கப்பலைக் கொள்ளை யடித்து கப்பல் தலைவனை ஒன்றில் கடலில் எறிந் திருக்க வேண்டும் அல்லது வேறு விதமாக அவனைக் கொன்றிருக்க வேண்டும். பின் கொள்ளைப் பொருட் களுடன் அவர்கள் இன்னொரு பெரிய கப்பலேறித் தப்பித்தோடியிருக்கவேண்டும் என நாங்கள் யூகித் தோம்.

நாங்கள் கப்பலைச் சுற்றிப் பார்த்துக்கொண் டிருக்கையில் திடீரென ஒரு கூச்சல் கேட்டது. எங் களுடன் வந்த ஒருவர் ஓர் இடத்தைச் சுட்டிக் காட் டிக் கூச்சலிட்டார். அவர் காட்டிய இடத்தில் வயோ திபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடைய தாடி யும் தலை உரோமமும் நரைத்திருந்தது. ஆழ்ந்த நித் திரையிலிருப்பவரைப்போல் காணப்பட்டார். இரு கைகளையும் மேஜைமீது ஊன்றி முகத்தை மறைத் திருந்தார். அவரை எழுப்புவதற்காக நான் ஓடிப் போய் அவரைப்பிடித்துக் குலுக்கினேன். உயிர் இருப்பதன் குறியே இல்லை. அவரது தலையை உயர்த் தினேன். அது குளிர்ந்து போய் நேராய் நின்றது. எனக்கு அச்சம் உண்டாயிற்று. முகம் வெளுத்து மெலிந்திருந்தது. நாக்கு கறுத்து வாய்க்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது.

"அந்த மனிதனைப் பட்டினிபோட்டுக் கொன் றிருக்கிறார்கள். அவர் பயங்கர உபாதைப்பட்டிருக்க வேண்டும்'' என எங்களுடன் வந்த கப்பல் வைத்தியர் கூறினார்.

அந்த மனிதனைச் சுற்றிலும் இருந்த சாமான்களை நான் சுட்டிக் காண்பித்து 'பட்டினியால் சாக முடி யாது?'' என்றேன். ஏனெனில் பிஸ்கத்துகளும், நேர்த்தியான உணவுப் பொருட்களும் தரையிற் சிதறிக் கிடந்தன. அந்த மனிதனுக்கு சில அடி தூரத் திலிருந்த மேஜைமீது சுத்தமான நீரும், ஒரு போத்த லில் இரசமும் இருந்தன. இந்நிலையில் ஏன் பட்டினி யாய்ச் சாகவேண்டும்?

“ஆம், அந்த மனிதன் பட்டினியால் செத்திருக் கிறார். தாக அவஸ்தையினாலேயே அவரது நாக்கு இவ்விதம் உலர்ந்திருக்கிறது. வாலிபனான இவரது முகம் பட்டினியாலேயே இவ்வித கோர ரூபமடைந் திருக்கிறது. அடர்ந்த இவரது உரோமத்தை நரைக் கச் செய்தது பசிக் கொடுமையே'' என வைத்தியர் தொடர்ந்து மொழிந்தார்.

“இது எங்ஙனம் முடியும்?" என எல்லோருமே அதிசயித்தோம். அதன் காரணம் சீக்கிரம் வெளிப் படையாயிற்று. அவரது கரங்களில் இரும்புச் சங்கிலி கள் மாட்டப்பட்டிருந்ததைக் கவனித்தோம். சங்கிலி நீளமானதல்ல என்றாலும் உறுதியாய்ப் பிணைக்கப் பட்டு, மேஜையில் அறையப்பட்ட பலமான ஆணி யுடன் சேர்க்கப்பட்டிருந்தது.

அந்த மனிதரது பாதங்களைப் பார்க்கப் பரிதாப மாயிருந்தது. பாதங்களில் கனத்த இரும்பு அடித்து, அவற்றைத் தரையோடு சேர்த்திருந்தனர். பாதங் களிலிருந்த சதையை எலிகள் சாப்பிட்டிருந்தன. இந் தக் கொடிய அக்கிரமச்செயலின் குறிகள் அந்த இடத் தில் எங்கும் காணப்பட்டன. அங்கு வைக்கப்பட் டிருந்தவன் கப்பற் தலைவனே. அவரைச் சித்திரவதை செய்யத் தீர்மானித்த அக்கிரமிகள், எலிகளின் கவ னத்தைக் கவரும்படி அவரது பாதங்களில் பன்றிக் கறியைத் தடவி, உருக்கின பன்றிக் கொழுப்பைச் சுடச்சுட ஊற்றியிருந்தார்கள். அவர் உயிருடனிருக் கையிலேயே கட்டப்பட்டிருந்த அவரது பாதங்களை எலிகள் பிடுங்கித் தின்றன. 

அந்த மனிதனுடைய முகத்தை நான் ஒருநாளும் மறக்கமாட்டேன். வேதனையாலும், பசிக்கொடுமை யாலும் அது மிகமிகப் பயங்கரமாயிருந்தது. அவர் பட்ட மரண அவஸ்தை முகத்தில் அப்படியே பதிந் திருந்தது என்று சொல்லலாம். உதவி கேட்டு அந்த மனிதன் போட்ட கூச்சல்கள் எங்கள் செவிகளில் விழுந்ததாக நாங்கள் உரூபிகரித்துக்கொண்டோம்.

நரகத்திலிருந்து வந்த முகம்போலிருக்கிறது'' என எங்களில் ஒருவர் பயத்துடன் கூவினார். - "நரகத்துக்குத் தீர்ப்பிடப்பட்டவர்களை இது எனக்கு நினைப்பூட்டுகிறது'' என நான், நரகத்தைப் பரிகசித்துக் கூறியவனைப் பார்த்துக்கொண்டே, சொன்னேன். அவன் மெளனமாய் இருந்தான். முகம் செத்தவனுடைய முகத்தைப்போல் வெளுத் திருந்தது.

மேஜையோடு பிணைக்கப்பட்ட மனிதன் பசிக் கொடுமை தாங்கமாட்டாமல் மேஜையைக் கடித் திருந்ததுடன், தன் வாய் எட்டக் கூடிய தூரத் திலிருந்த மேஜையின் நுனியைச் சாப்பிட்டிருந்தான். தன் இடதுகையைப் பற்களால் கடித்த குறி இருந் தது. அடக்கமுடியாத தன் தாகத்தைத் தீர்க்கும்படி அவன் தன் இரத்தத்தையே குடிக்க முயன்றிருந் தான். அவனுடைய மணிக்கட்டுகள் கறுத்து வீங்கி யிருந்தன. அவன் விலங்கிடப்பட்டிருந்த போதிலும் அருகில் கிடந்த உணவுப்பொருட்களைச் சேரும்படி வெகு பிரயாசைப்பட்டிருக்க வேண்டும்.

"இந்த நிர்ப்பாக்கிய மனிதன் எத்தனை நாள் இவ் விதம் அவஸ்தைப்பட்டிருப்பான்?" என ஒருவர் கேட்டார்.

''எட்டு அல்லது பத்து நாட்கள் உபாதைப்பட்டி ருக்க வேண்டும். அதற்கு மேலாகவும் வேதனைப்பட் டிருக்கலாம்'' என வைத்தியர் மொழிந்தார்.

“நரகத்தில் எத்தனை நாள் வேதனை!" என வேறொ ருவர் வினவினார். “நித்தியத்துக்கும்!'' என எல்லோ ரும் ஒருமிக்கப் பதிலளித்தோம்.

அதற்குப் பின் எவராவது வாய் திறந்து பேச வில்லை. அமிழ்ந்திக் கொண்டிருந்த அந்தக் கப்பலை விட்டு அமைதியாக இறங்கினோம். அது மறையும் வரை தூரத்திலிருந்து நாங்கள் பார்த்துக் கொண்டி ருந்தோம். நித்தியத்துக்கும் அது எங்கள் பார்வை யை விட்டு மறைந்தது.

அந்தக் காட்சியை நான் பார்த்த பின் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். சோதனைகள், கன மான பாவச் சோதனைகள், அடிக்கடி என்னைத் தாக்கி யிருக்கின்றன. உடனே அந்தக் கப்பலின் காட்சிகள் கண்முன் வரும். நான் விழ இருக்கும் பாதாளத்தின் நினைவு வந்ததும் என் உடல் நடுங்கும். "சகல கிருத் தியங்களிலும் உன் கடைசி முடிவுகளை நினைத்துக் கொள். ஒரு போதும் பாவம் செய்யமாட்டாய்' (சர்வ ப் 7/40)

நரகத்தைப் பற்றி பரிகாசமாய்க் கூறியவனுக்கு என்ன நேரிட்டதோ அறியேன். ஆனால் அந்தக் கப்பலைப் பார்த்ததிலிருந்து அவன் வாய் திறக்க வில்லை .

அந்தப் புத்தகத்தில் நான் வாசித்த வரலாறு இது. அந்தச் சம்பவம் என் மனதில் பதிந்து விட் டது. நரகம் வெறும் கட்டுக்கதையல்ல. அது உண் மையாகவே இருக்கிறது. என் பாதங்களுக்குக் கீழே பயங்கரத்துக்குரிய சம்பவங்கள் நடக்கின்றன என் பதை மறந்தவன் போல் நடந்து கொள்கிறேன். நான் இங்கு உட்கார்ந்து இவற்றைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் முதலாய் நரக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அதன் சுவாலைகள் உயர எழும்புகின்றன. நரக நெருப்புக்குத் தீர்ப் பிடப்பட்டவர்கள் வேதனை தாங்கமாட்டாமல் அவ நம்பிக்கையுடன் அலறி சத்தமிடுகின்றனர். இன்று காலையிலிருந்து அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டி ருக்கிறார்கள்! என்னோடு வசித்தவர்கள், என்னோடு சிரித்து விளையாடியவர்கள், என்னோடு பாவம் செய்த வர்கள் முதலாய் ஒரு வேளை அங்கு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் என்னைவிட நல்லவர்களாய் இருந்த வர்கள் முதலாய் அங்கு இருக்கிறார்கள்.

நான் என்ன செய்யப் போகிறேன்? மாத்தீனியன் என்னும் வனவாசியைப் போல் கடும் பாவச்சோதனை வந்து என்னைப் பாவத்தில் விழத்தாட்ட முயற்சித் தால் நெருப்பை நோக்கி ஓடி வெறுங்காலுடன் அதிற் குதிப்பேனா? ஒரு சந்நியாச மடத்தில் சந்நியாசியார் ஒருவர் இருந்தார். அவர் தம் வாழ்நாளெல்லாம் அங்கு சமையற்காரராயிருந்தார். எங்கெங்கே நெருப் பைப் பார்த்தாலும் அவர் நரக நெருப்பை நினைப்பா ராம். இவ்விதம் நினைத்ததன் பயனாக அவர் பெரும் பரிசுத்தவானானார். அவரைப்போல நானும் இடை விடாமல் நினைத்து அழவேண்டும். புனித கிறிசோஸ் தோம் அருளப்பர் நரக சித்திரத்தை தம் அறையில் வைத்திருந்து பாவச் சோதனை வரும்போதெல்லாம் அதை நோக்குவார். அவரை உபாதித்த சோதனை ஒரு வினாடியில் அகன்று போகும். அவரைப்போல் நானும் செய்யப்போகிறேனா?

ஒரு காரியத்தை எப்படியாவது நான் செய்வ தென்று தீர்மானித்திருக்கிறேன். அச்சத்துடனும் நடுக்கத்துடனும் என் இரட்சணிய அலுவலை நான் செய்து முடிப்பேன். வரப்பிரசாதமும் இரக்கமும் கேட்டு ஆண்டவரை நோக்கி அடிக்கடி கூக்குரலிடு வேன். ''என் மேல் இரக்கமாயிரும் ". "ஓ சர்வேசுரா, உமது தயையின் விசாலத்துக்குத் தக்கபடி என் மேல் இரக்கமாயிரும்'' என அடிக்கடி மன்றாடுவேன். அதிகமாய் ஜெபிப்பேன். கூடுமான அளவு அடிக்கடி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து பக்தியுடன் திவ்விய நற் கருணை உட்கொள்வேன். இவ்விதம் செய்தால் மாத் திரமே, எப்பொழுதும் நான் தேவ இஷ்டப்பிரசாதத் துடன் வாழ்வேன். தேவ இஷ்டப்பிரசாதத்துடன் வாழ்ந்தால் மாத்திரமே நான் இரட்சிக்கப்படுவேன். என் வாழ்நாளெல்லாம் தபசு செய்வேன். கடவுள் எனக்கு வரவிடும் வேதனைகளையாவது நான் பொறு மையுடன் சகித்துக்கொள்வேன். அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளா யிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த மரியாயே, நாங்கள் நரக நெருப்பில் விழாதபடி எங்களைக் காப்பாற்றும்.