உழைப்புக்கும் ஒறுப்புக்கும் உரியமுறை

உழைப்பும் ஒறுப்பனவும் குடும்ப சீவியத்துக்குரிய புண்ணியங்களாயிருந்தும், அநேகர் இவைகளை முறை கேடாய்ச் செய்வதினால் பாவத்தைத் தேடிக்கொள்ளு கிறார்கள். அந்திசந்தி ஆசாரமாயும் தாராளமாயுந் தே வனைத் தொழுவது யாருக்குங் கடமை. ''ஓதுவதோ ழியேல்'' ''ஓதாமலொருநாளுமிருக்கவேண்டாம்'' என் பன முதியோர் மொழிகள். "ஓயாமல் செபம்பண்ணுங்கள் '' ''விழித்திருந்து செபம்பண்ணுங்கள்'' என் பன சுவிசேஷ திருவாக்கு. தேவ நேசமுள்ளவர்கள் சாக்குப்போக்கின்றி காலைமாலையில் தவறாமல் செபஞ் சொல்வதுடன், தேவாசீர்வாதத்தையும் பாவமன்னிப் பையும் பரலோக பாக்கியத்தையுந் தங்களுக்கு வேண் டிய மற்றும் நன்மைகளையு மிரந்துகேட்டு, தங்களையும் தங்களுக்குச் சேர்ந்தவர்களையும் தாங்கள் அன்றாடுசெய் யும் அலுவல்களையும் சருவேசுரனுக் கொப்புக் கொடுப் பார்கள். ஆனால், தேவபத்தியின்றி உலகவாஞ்சை நி றைந்தவர்கள் காலையில் விழித்தவுடன் வேலைக்குப் போ கவேண்டுமாகையால் செபம்பண்ண நேரமில்லையென்ற ஓர் போக்கை வைத்துக்கொண்டு, செபத்தை முற்றாய் விட்டுவிடுவார்கள்; அல்லது பயபத்தியின்றிப்பரபரப் பாய்ச் சிலசெபங்களை வாய்ப்பாடமாய் ஓதிவிட்டுப் போ வார்கள். மாலையிலும் மெத்த நேரஞ்சென்று போயிற்று அல்லது களைப்பாயிருக்கிறதென்று போக்குச் சொல்லிக் கொண்டு, செபத்தைச் சுருக்கவும் சில நாட்களில் முற் றாய் விட்டுவிடவும் பின்வாங்கார்கள். ஞாயிறு கடன் திருநாட்கள் வேலை விலக்கித் தேவதொண்டிற் செல்வ ழிக்கவேண்டிய ஓய்வுநாட்களாயிருந்தும், அவர்கள் இந் நாட்களிலும் உழைக்கவேண்டுமென்ற அவாவினால் பூ சைமுதலாய்க் காணாமல் உலக பாடுபறப்பிலே திரி வார்கள். ''அப்படிப்பட்டவர்கள் நமது ஆண்டவரா கிய யேசுக்கிறிஸ்துநாதருக்கல்ல தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்கிறார்கள்.'' (ரோமர் 16. 18) என்றும், '' அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தே வன் வயிறு, அவர்களுடைய மகிமை இலச்சையே, அ வர்கள் பூமிக்கடுத்தவைகளையே சிந்திக்கிறார்கள்'' (பி லிப்பியர் 3. 19 ) என்றும், அர்ச். சின்னப்பர் எழுதியி ருக்கிறார்.


இப்படிப் பலவிதத்தாலும் தங்களாத்தும் அலுவல் களை அசட்டைபண்ணி லெளகீக நன்மைகளில் மாத்தி ரம் கண் ணுங் கருத்துமாயிருந்து செய்யும் வேலை முறையற்றதும் புண்ணிய பேறுபலனில்லாததுமென்பதிற் சந்தேகமில்லை. ''முதல் தேவனுடைய இராச்சியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும் (அர்ச். மத்தேயு 6:33) என்ற தேவவாக்கியத்துக் கிணங்கச் சருவேசுரனைத் தேடிக்கொண்டு வேலை செய்து உழைப்ப தேமுறையும் புண்ணியமுமாம். ஆனால், மனச்சாட்சியின் குரலுக்குச் செவியடைத்துக் கொண்டு வேலை செய்தோ ருக்குக் கொடுக்கவேண்டிய கூலியைக் குறைத்தும், க டுவட்டி வாங்கியும், இப்படிப் பல அநியாயங்கள் செய்து பிறர் பொருளை அபகரித்துத் தன் சரீரத்தில் நோகாமல் பிறர் செலவிற் குடும்பத்தைத் தாபரிக்க முயல்வதினாலே தேவபழி சூழுமன்றி யாதொரு நன்மையுஞ்சித்திக்காது. * நம்முடைய தேசத்திலே அந்தரித்த ஏழைகளுக்கு அற்ப தொகை கடன் கொடுக்கிலும் முதற் பேசுவது வட்டி. ஐரோப்பா முதலான மறு சீமைகளில் வங்கி வர்த்தக சங்கம் ஆகிய பெரும் முயற்சிகளுக்கேயன்றி முட்டுப்பட்டவர்களுக்குக் கொடுக்கும் கைக்கடனுக்குப் பற்றுச் சீட்டல்லாது வட்டி வாங்குவது வழக்கமில்லை யாம். வேதாகமப்படி " நீ...வட்டியாவது பொலிசை யாவது வாங்காமல் உன் தேவனுக்குப் பயந்து உன் ச கோதரனை உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத் தைப் பொலிசைக்குங் கொடாதிருப்பாயாக'' (லேவி. 25. 36-37 ) நல்லவன் '' நாள்தோறும் மனமிரங்கிக் க டன் கொடுக்கிறான். அவன் சந்ததிக்கு ஆசீர்வாத முண்டு'' (சங்கீதம் 36. 26 ) நமது நாட்டிலே சிலவி டங்களில் ஒரு வெள்ளி ரூபாய் மாற்றுவிக்கமுதலாய் வட் டமிறுக்க ஆயத்தமாயிருக்கவேண்டும். நியாயமான வட் டிவாங்குவதிற் பாவமில்லாவிட்டாலும் ஏழைகளுக்கு இ ரங்கி இயன்ற உதவி செய்வதே பிறர் சிநேக முறை யாகும்.

சில பெண்கள் வீண்நேரம் போக்காமலும் குடும்ப நன்மைக்காகவும் வியாபாரம் பண்ணுவார்கள். இது நல்லவழக்கமாயினும் இம்முயற்சிக்கு இயல்பான அடாத்து அநியாயங்களை விலக்கி நடக்கச் சாக்கிரதையாயிருக்க வேண்டியது. மிதமிஞ்சிய இலாபம் வைப்பதும், பழுதான பண்டங்களை நல்லவைகளாகக் காட்டி விற்பதும், செல் லாக்காசைச் செலுத்துவதும், பால் அரிசி ஆகியவைகள் ளிற் தண்ணீர் சேர்ப்பதும், நிறையில் அல்லது அளவில் அகட விகடம்பண்ணுவதும், அபகரிப்பேயன்றி நீதி யான உழைப்பல்ல. ''உன் பையில் பெரிதுஞ் சிறிது மான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம். உன் வீட்டிற் பெரிதுஞ் சிறிதுமான மரக்கால்களை வைத் திருக்கவேண்டாம். குறையற்ற சுமுத்திரையான நிறை கல்லும் குறையற்ற சுமுத்திரையான மரக்காலும் உன் னிடத்திலிருக்க வேண்டும். ஏனெனில், இதற்கு மாறு செய்பவனெவனோ அவனைத் தேவனாகிய கர்த்தர் அரு வருக்கிறார். அநியாயமானது எதுவோ அவர் அதைத் துவேஷிக்கிறார். (உபாக. 25.13-15)

அநியாயமாய்த் தேடுவது, நிலைப்பதுமில்லை, அத னால் மெய்யான ஊதியம் . வருவதுமில்லை. யேசுநாத சுவாமி உரைத்த ஐசுவரியவானின் உவமையை மறவா திருப்பது உத்தமம். அவன் தன் தானியங்களைச் சேமித்துவைக்கக் களஞ்சியம் போதாதென்று கண்டு வீட்டை நீட்டிக்கட்டி தானியங்களைக் குவித்துக்கொண்டு தன் ஆத்துமாவை நோக்கி: என் ஆத்துமமே இதோ அதேக வருஷ காலத்துக்கு உனக்காக மிகுந்த சம்பத்துக்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. ஆகையாலிப்போது நீ இளைப்பாறிப் புசித்துக் குடித்து விருந்தாடுவாயாக வென்றான். ஆனால், தேவனோ அவனை நோக்கி மதிகேடனே இந்த இராத்திரியிற்தானே உன் ஆத்துமம் உன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும், அப்போது நீ சேகரித்தவைகளெல்லாம் யாருடையதாகுமென்று திருவாக்கருளினார். (அர்ச். லூக்கா 12. 19-20) ஐயையோ சருவேசுரனை நினையாமல் ஐசுவரியம் தேடிவைத்திருந்த எத்தனையோ பேரின் பிள்ளைகள் பிச்சையாற் சீவிக்கிறார்கள். அல்லது பிச்சைக்குத் திரியக் கூச்சப்பட்டுப் பசிபட்டினியால் வருந்துகிறார்கள். ஆனால், இதற்கெதிராய் நீதியாக நடந்து உழைத்தவர்களைக்குறித்து தீர்க்கதரிசியான தாவீதிராசா ''வாலிபனாயிருந்து வயோதிக னானேன்; நீதிமான் கைவிடப்பட்டதையும் அவன் சந்த தி பிச்சையெடுத்ததையும் நான் கண்டதேயில்லை '' (சங் கீதம் 36. 25) என்றெழுதினார்.

ஒறுப்பான நடை புண்ணிய பேறுபலனுள்ளதாயிருக்க வேண்டுமாயின் பிசினித்தனத்தைப் பிசாசைப் போலப் பகைப்பது அகத்தியம். தனவான்கள் தரித் திரரைத் தாபரிப்பது தேவ திருவுளமன்றோ . '' மகனே தரித்திரனுக்குப் பிச்சையிடுவதை விலக்காதே. எளி யவனை விட்டு உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே. பசியினால் வருந்துகிறவனை நிந்தியாதே, தரித்திரனை அவன் வறுமையிற் புறக்கணியாதே. ஏழையின் இரு தயத்தை வருத்தப்படுத்தாதே. வருந்துகிறவனுக்குக் கொடுப்பதைத் தாமதிக்காதே... மன நொந்து உன்னைச் சபிக்கிறவனுடைய வேண்டுதல் கேட்கப்படும். ஏனெனில், அவனை உண்டுபண்ணினவர் அவன் வேண்டுதலைக் கேட்பார் '' ( சர்வபிர. 4. 1-6) '' உங்களுக்குள்ளவைக ளில் பிச்சை கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும் '' ( அர்ச். லூக். 11. 41 ) '' கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப் படும் " (அர்ச். லூக். 6.38) நீங்கள் அளந்திருக்கும் அ ௗவால் உங்களுக்கு அளக்கப்படுவதன்றி அதிகமும் உங் களுக்குக் கொடுக்கப்படும் '' ( அர்ச். மாற்கு 4. 24) இ வைகள் திருவாசகம். '' அறஞ்செய விரும்பு '' '' இயல் வது கரவேல் '' '' ஐயமிட்டுண் '' ''தானமது விரும்பு' : என்பன ஒளவையாரின் உலக நீதிமொழிகள்.

உலகத்திலுள்ள ஊழியரனைவரிலும் உருக்க இரக் கங்கொண்டிருந்த பதின்மூன்றாம் சிங்கராய பாப்பரசர் வேலைகாரருக்கு நியாயமான சம்பளம் கொடுத்து அவர் களை அன்பாய் நடத்துங்களென்று விடுத்த சாதாரண நிருபத்தை அநேகர் வாசித்திருப்பார்கள். '' புத்திசா லியான ஊழியனை உன் ஆத்துமத்தைப்போல நேசிப் பாயாக, அவன் சுதந்தரத்தை அவனிடத்தினின்று ப நிக்காதே, அவனை வறுமையில் விட்டுவிடாதே'' ( சர்வ பிர. 7. 23) '' கூலிக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காமல் இருக்கவேண்டாம். அவன்வே லைசெய்த நாளிற்தானே சூரியன் அஸ்தமிக்குமுன் அ வன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடக்கடவாய்'' (உபாக. 24. 14.15) என்ற தேவவாக்கை மீறி நாளுக் குநாள் தவணை போட்டுக் கடத்துவதும், பல சாக்குப் போக்குச் சொல்லிக் கூலியைக் குட்டி வெட்டிக் குறைப் பதும், அநியாயமும் லோபித்தனத்தின் செயலுமேயன் P மட்டுத்திட்டமாய்ச் செலவழிக்கும் முறையல்ல. தாய் தந்தையர் முட்டுப்படும்போது பிள்ளைகள் அவர்களுக் குத் தங்களாலியன்ற உதவிபுரியாமல் மிச்சம் பிடிப்ப தும், புருஷன் தன்னிற் தங்கியிருக்கும் பெண்சாதி பிள்ளைகளுக்கு நேரத்துக்குநேரம் பற்றும்பற்றாதென்ற அளவாய்ப் படியளந்து செலவைச் சுருக்கித் தேட்டம் தேடப்பார்ப்பதும், லோபித்தனமேயன்றிச் செலவொடுக்க மென்னும் புண்ணியமல்ல.

மேலே காட்டியவண்ணம் பெற்றோரும் பிள்ளைக ளும் முறைமையாய் வேலை செய்து உழைப்பதை நியா யமாய்ச் செலவழித்து மிச்சம் பிடிக்கப் பழகுவார்களா னால் தற்காலம் எண்ணிறந்த குடும்பங்களிலுள்ள வறு மை எளிதாய் மறைந்து போகும். கிடைதலைகாலத் தில் அந்தரிக்கவும் தேவையில்லை. இவ்வித பெற்றோ ரும் பிள்ளைகளுமுள்ள குடும்பங்கள் தலைமுறை தலைமு றையாய்த் தளம்பாமல் தரித்திரப்படாமல் நிலை நிற்பது பிரயாசமல்ல. '' முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் '' என்னும் முது மொழியினுண்மை இக்குடும்பங்களிற் பி ரசித்தமாய் விளங்கும். ('உள்ளவனுக்கே கொடுக்கப் படும், இல்லா தவனிடத்திலோ உள்ள துமுதலாய்ப் ப றித்தெடுக்கப்படும் ( அர்ச். மாற்கு 4. 25) என்னும் வேதவாக்கியப்படி முறையாய்ப் பிரயாசப்படுகிறவனுக் குச் சருவேசுரன் இலகுவாய்ச் சித்தியின்மேற் சித்தி யையும் மனரம்மியத்தையும் அருளுவார். பிரயாசப் படாதவனோ தனக்குள்ளதையும் எளிதாய் இழந்துபோவான்.