இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவின் அன்புள்ள திரு இருதயம்!

நாம் நம்மை நேசிப்பதை விட அதிகமாக சேசுவின் திரு இருதயம் நம்மை அளவற்ற விதமாக நேசிக்கிறது. சேசுநாதர் அதீதமாகவும் கூட நம்மை நேசித்திருக்கிறார். அவர் தமது சொந்த மகத்துவத்தை விட அதிகமாகவும், தமது இளைப்பாற்றியை விட அதிகமாகவும், தமது சொந்த உயிரை விடவும் அதிகமாகவும் நம்மை நேசித்திருக்கிறார். இந்த அதீத அன்பு பரலோகத் தூதர்களைப் பெரும் அதிசய உணர்வால் நிரப்பி அவர்களை மதிமயங்கசச் செய்யப் போதுமானதாக இல்லையா?

ஓ, சேசுவின் திரு இருதயத்தில் நமக்காகப் பற்றியெரியும் அன்பை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததென்றால்! அவர் எவ்வளவு அதிகமாக நம்மை நேசித்திருக்கிறார் என்றால், எல்லா மனிதர்களும், எல்லா சம்மனசுக்களும், எல்லாப் புனிதர்களும் தங்கள் ஆற்றல்கள் முழுவதையும் ஒன்றாக இணைத்தாலும் கூட, அவை சேசு நம்மீது கொண்டுள்ள அன்பில் ஆயிரத்தில் ஒரு பாகம் கூட வராது. நாம் நம்மை நேசிப்பதை விட அதிகமாக, அளவற்ற விதமாக அவர் நம்மை நேசிக்கிறார். அவர் அதீதம் என்னும் அளவுக்குக் கூட நம்மை நேசித்திருக்கிறார்: ""அவர்கள் ஜெருசலேமில் அவர் நிறைவேற்ற இருந்த அவரது மரணத்தை (அதீதத்தைப்) பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்'' (லூக்.9:31). கடவுள் தம் படைப்புகளுக்காக மரிப்பதை விட அதிகமான அன்பின் அதீத அளவு எங்கே இருக்க முடியும்? அவர் அனைத்திலும் அதிகமான அளவுக்கு நம்மை நேசித்திருக்கிறார். ""தம்முடையவர்களை அவர் சிநேகித்திருக்கையில், அவர்களை முடிவு பரியந்தம் சிநேகித்தார்'' (அரு.13:1). அவர் நித்தியத்தில் இருந்தே நம்மை நேசித்தார். ஏனெனில் நித்தியத்தில் கடவுள் நம்மைப் பற்றி நினைக்காததும், நம் ஒவ்வொருவரையும் நேசிக்காததுமான ஒரே ஒரு கணம் கூட ஒருபோதும் இருந்ததில்லை: ""ஒரு நித்திய நேசத்தால் நாம் உன்னை நேசித்திருக்கிறோம்'',--நம் நேசத்திற்காக அவர் மனிதனானார், நம் பொருட்டுத் துன்பங்கள் நிறைந்த ஒரு வாழ்வையும், சிலுவை மரணத்தையும் அவர் தேர்ந்து கொண்டார். ஆகவே, தமது மகத்துவத்தையும், தமது இளைப்பாற்றியையும், தமது உயிரையும் விட அதிகமாக அவர் நம்மை நேசித்திருக்கிறார்; ஏனெனில் நம்மீது தமக்குள்ள அன்பைக் காட்டுவதற்காக அவர் எல்லாவற்றையும் பரித்தியாகம் செய்தார். இது நித்தியத்திற்கும் பரலோக சம்மனசுக்களை அதிசயத்தில் ஆழ்த்தி, அவர்களை மதிமயங்கச் செய்யப் போதுமான அன்பின் அதீத நிலையாக இல்லையா? இந்த அன்பு, நேசத்தின் சிம்மாசனம் ஒன்றில் வீற்றிருப்பது போல, பீடத்தின் பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தங்கியிருக்கவும் அவரைத் தூண்டியிருக்கிறது. ஏனெனில் ஒரு சிறு அப்பத் துண்டின் தோற்றத்தின் கீழ், ஒரு நற்கருணைப் பாத்திரத்தில் அடைக்கப் பட்டவராக அவர் தங்கியிருக்கிறார். அங்கே அவர் எந்த அசைவுமின்றியும், தமது புலன்களின் பயன்பாடு இன்றியும் தமது மகத்துவத்தை முற்றிலும் அழித்து விட்டுத் தங்கியிருப்பவராகத் தோன்றுகிறார். இதன் காரணமாக, மனிதர்களை நேசிப்பதை விட வேறு எந்த அலுவலையும் அவர் செய்வதில்லை என்று தோன்றுகிறது. நேசமானது, நம்மால் நேசிக்கப்படும் பொருளின் இடையறாத பிரசன்னத்தில் நாம் ஆசை கொள்ளச் செய்கிறது. இந்த அன்பும், இந்த ஆசையும்தான் சேசுகிறீஸ்துநாதரை மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தங்கியிருக்கும்படி செய்கிறது.வேறு எந்த அலுவலையும் அவர் செய்வதில்லை என்று தோன்றுகிறது. நேசமானது, நம்மால் நேசிக்கப்படும் பொருளின் இடையறாத பிரசன்னத்தில் நாம் ஆசை கொள்ளச் செய்கிறது. இந்த அன்பும், இந்த ஆசையும்தான் சேசுகிறீஸ்துநாதரை மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தங்கியிருக்கும்படி செய்கிறது.

ஓ என் சேசுவின் ஆராதனைக்குரிய திரு இருதயமே, மனிதர் மீதுள்ள அன்பினால் பற்றியெரியும் திரு இருதயமே, அவர்களை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உண்டாக்கப்பட்ட திரு இருதயமே, நீர் வெறுத்துத் தள்ளப்படுவதும், உமது அன்புக்கு மிக மோசமான விதத்தில் பதிலன்பு காட்டப்படுவதும் எப்படி சாத்தியம்? ஓ, நான் எவ்வளவு நிர்ப்பாக்கியன், உம்மை நேசியாத நன்றியற்றவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். என் சேசுவே, மிகுந்த அன்புக்குரியவரும், உம்மை நேசிக்கச் செய்வதை விட அதிகமாக வேறு எதையும் செய்ய முடியாதவராக நீர் இருக்கும் அளவுக்கு என்னை நேசித்துள்ளவருமாகிய உம்மை நேசிக்காமல் இருந்த இந்தப் பெரும் பாவத்திற்காக என்னை மன்னியும். இது வரை நான் செய்து வந்தது போல, உமது அன்பைப் புறக்கணித்ததற்காக, உம்மை நேசிக்க இயலாதபடி நான் தண்டனைத் தீர்ப்பிடப்படத் தகுதியுள்ளவனாக இருக்கிறேன் என்று உணர்கிறேன். ஆனால், வேண்டாம் என் பிரியமுள்ள இரட்சகரே, எனக்கு எந்தத் தண்டனை வேண்டுமானாலும் தாரும், ஆனால் இந்தத் தண்டனையை மட்டும் என் மீது சுமத்தாதிரும். உம்மை நேசிக்கும் வரப்பிரசாதத்தை எனக்குத் தந்தருளும். அதன்பின் உமது பிரியப்படி எத்தகைய துன்பத்தையும் எனக்குத் தாரும். ஆயினும், என் ஆண்டவரும் என் தேவனுமாகிய உம்மை நேசிக்கும்படியாக எனக்கு இனிமையான, சுகமான கட்டளையை நீர் தொடர்ந்து தருகிறீர் என்று நான் உணர்வதால், இப்படிப்பட்ட ஒரு தண்டனைக்கு நான் எப்படி பயப்பட முடியும்? ""உன் தேவனாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடு நேசிப்பாயாக.''

பூமியில் முப்பத்து மூன்று ஆண்டுகள் மட்டும் மனிதர்களோடு இருந்திருப்பது இந்த நேசமுள்ள இரட்சகருக்கு மிகவும் குறுகிய காலமாகத் தோன்றியது. ஆகவே, இடைவிடாமல் எப்போதும் நம்மோடு இருக்கத் தமக்குள்ள ஆசையைக் காட்டும்படி, திவ்விய நற்கருணை ஸ்தாபகத்தில், புதுமைகளில் எல்லாம் மேலான புதுமையைண நிகழ்த்த அவர் எண்ணம் கொண்டார். ஆனால் இரட்சணிய வேலை ஏற்கெனவே நிறைவேறி விட்டது, மனிதர்கள் ஏற்கெனவே கடவுளோடு மீண்டும் ஒப்புறவாகி விட்டார்கள். அப்படியிருக்க, சேசுநாதர் பூமியின்மீது, இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் எதற்காகத் தங்கியிருக்கிறார்?

ஆ, நம்மில் தமது இன்பத்தைக் காண்பதாக அவரே சொல்லி யிருப்பதால், நம்மிடமிருந்து தம்மைப் பிரித்துக் கொள்வதை அவரால் தாங்க முடியாது என்பதால்தான் அவர் அங்கே தங்கியிருக்கிறார். மேலும், அவர் தம்மை நம்மோடு இணைத்துக் கொண்டு, தமது இருதயத்தையும், நம் இருதயத்தையும் ஒன்றாகச் செய்யும்படியாக, நம் ஆத்துமங்களின் உணவாகவும் ஆகும்படி இந்த அன்பு அவரைத் தூண்டியது: ""என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்'' (அரு.6:57). ஓ அதிசயமே! ஓ கற்பனைக்கெட்டாத தேவசிநேகமே! இது தேவ ஊழியர் ஒரவரால் சொல்லப்பட்டது: திவ்விய நற்கருணையில் எனக்குள்ள விசுவாசத்தை அசைக்க எதனாலாவது முடியும் என்றால், அது அப்பம் எப்படி மாம்சமாக முடியும், அல்லது சேசுநாதர் எப்படி ஒரே சமயணத்தில் பல இடங்களில் இருக்க முடியும், எப்படி இவ்வளவு சிறிய இடத்தில் அடைபட்டிருக்க முடியும் என்ற சந்தேகங்களால் அல்ல, ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்று இதற்கு நான் பதில் சொல்ல வேண்டும்; ஆனால் மனிதர்களின் உணவாகும் அளவுக்கு அவர்களை இவ்வளவு அதிகமாக நேசிக்க அவரால் எப்படி முடிந்தது என்று என்னிடம் கேட்கப்பட்டால், இது என் புத்திக்கெட்டாத விசுவாசத்தின் பரம இரகசியம் என்றும் சேசுநாதரின் அன்பை நம்மால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்றும் மட்டுமே என்னால் பதில் சொல்ல முடியும். ஓ சேசுவின் அன்பே, மனிதர்கள் உம்மை அறிந்து கொள்ளச் செய்யும், மனிதர்கள் உம்மை நேசிக்கச் செய்யும்.

ஆம், என் தேவனே, நீர் என்னால் நேசிக்கப்பட சித்தம் கொள்கிறீர். நானும் உம்மை நேசிப்பேன்; உண்மையில் வேறு யாரையுமன்றி, என்னை இவ்வளவு அதிகமாக நேசித்திருக்கிற உம்மை மட்டுமே நான் நேசிப்பேன். ஓ என் சேசுவின் அன்பே, நீயே என் அன்பாக இருக்கிறாய். ஓ என் சேசுவின் பற்றியெரியும் திரு இருதயமே, என் இருதயத்தையும் பற்றியெரியச் செய்தருளும். எதிர்காலத்தில், ஒரே ஒரு கணம் கூட, உமது அன்பு இல்லாமல் வாV என்னை அனுமதியாதிரும். அதை விட என்னைக் கொன்று விடும், என்னை அழித்து விடும்; உம்மால் மிக அதிகமாக நேசிக்கப் பட்டவனும், உம்மிடமிருந்து ஏராளமான உபகாரங்களையும் ஒளியையும் பெற்றுக் கொண்டவனுமாகிய நான் மீண்டும் உமது அன்பைப் புறக்கணித்து வாழத் தொடங்கும் பயங்கரமுள்ள நன்றியற்றதனத்தின் காட்சியை உலகம் காண அனுமதியாதிரும். இல்லை என் சேசுவே, இதை அனுமதியாதிரும். நீர் எனக்காக சிந்தியள திரு இரத்தத்தின் வழியாக, நான் எப்போதும் உம்மை நேசிப்பேன் என்றும், நீர் எப்போதும் என்னை நேசிப்பீர் என்றும் உமக்கும் எனக்கும் இடையிலுள்ள இந்த அன்பு நித்தியத்திற்கும் உடைபடாததாக இருக்கும் என்றும் நான் நம்பியிருக்கிறேன். மரியாயே, உத்தம தேவசிநேகத்தின் மாதாவே, சேசுநாதர் நேசிக்கப் படுவதைக் காண மிக அதிகமாக ஆசிப்பவர்களே, உங்கள் திருமகனோடு என்னைச் சேர்த்துக் கட்டுங்கள், அவரோடு என்னை ஒன்றியுங்கள்; ஆயினும் நாங்கள் இனி ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதபடி என்னை அவரோடு சேர்த்துக் கட்டுங்கள்.நாம் நம்மை நேசிப்பதை விட அதிகமாக சேசுவின் திரு இருதயம் நம்மை அளவற்ற விதமாக நேசிக்கிறது. சேசுநாதர் அதீதமாகவும் கூட நம்மை நேசித்திருக்கிறார். அவர் தமது சொந்த மகத்துவத்தை விட அதிகமாகவும், தமது இளைப்பாற்றியை விட அதிகமாகவும், தமது சொந்த உயிரை விடவும் அதிகமாகவும் நம்மை நேசித்திருக்கிறார். இந்த அதீத அன்பு பரலோகத் தூதர்களைப் பெரும் அதிசய உணர்வால் நிரப்பி அவர்களை மதிமயங்கசச் செய்யப் போதுமானதாக இல்லையா?

ஓ, சேசுவின் திரு இருதயத்தில் நமக்காகப் பற்றியெரியும் அன்பை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததென்றால்! அவர் எவ்வளவு அதிகமாக நம்மை நேசித்திருக்கிறார் என்றால், எல்லா மனிதர்களும், எல்லா சம்மனசுக்களும், எல்லாப் புனிதர்களும் தங்கள் ஆற்றல்கள் முழுவதையும் ஒன்றாக இணைத்தாலும் கூட, அவை சேசு நம்மீது கொண்டுள்ள அன்பில் ஆயிரத்தில் ஒரு பாகம் கூட வராது. நாம் நம்மை நேசிப்பதை விட அதிகமாக, அளவற்ற விதமாக அவர் நம்மை நேசிக்கிறார். அவர் அதீதம் என்னும் அளவுக்குக் கூட நம்மை நேசித்திருக்கிறார்: ""அவர்கள் ஜெருசலேமில் அவர் நிறைவேற்ற இருந்த அவரது மரணத்தை (அதீதத்தைப்) பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்'' (லூக்.9:31). கடவுள் தம் படைப்புகளுக்காக மரிப்பதை விட அதிகமான அன்பின் அதீத அளவு எங்கே இருக்க முடியும்? அவர் அனைத்திலும் அதிகமான அளவுக்கு நம்மை நேசித்திருக்கிறார். ""தம்முடையவர்களை அவர் சிநேகித்திருக்கையில், அவர்களை முடிவு பரியந்தம் சிநேகித்தார்'' (அரு.13:1). அவர் நித்தியத்தில் இருந்தே நம்மை நேசித்தார். ஏனெனில் நித்தியத்தில் கடவுள் நம்மைப் பற்றி நினைக்காததும், நம் ஒவ்வொருவரையும் நேசிக்காததுமான ஒரே ஒரு கணம் கூட ஒருபோதும் இருந்ததில்லை: ""ஒரு நித்திய நேசத்தால் நாம் உன்னை நேசித்திருக்கிறோம்'',--நம் நேசத்திற்காக அவர் மனிதனானார், நம் பொருட்டுத் துன்பங்கள் நிறைந்த ஒரு வாழ்வையும், சிலுவை மரணத்தையும் அவர் தேர்ந்து கொண்டார். ஆகவே, தமது மகத்துவத்தையும், தமது இளைப்பாற்றியையும், தமது உயிரையும் விட அதிகமாக அவர் நம்மை நேசித்திருக்கிறார்; ஏனெனில் நம்மீது தமக்குள்ள அன்பைக் காட்டுவதற்காக அவர் எல்லாவற்றையும் பரித்தியாகம் செய்தார். இது நித்தியத்திற்கும் பரலோக சம்மனசுக்களை அதிசயத்தில் ஆழ்த்தி, அவர்களை மதிமயங்கச் செய்யப் போதுமான அன்பின் அதீத நிலையாக இல்லையா? இந்த அன்பு, நேசத்தின் சிம்மாசனம் ஒன்றில் வீற்றிருப்பது போல, பீடத்தின் பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தங்கியிருக்கவும் அவரைத் தூண்டியிருக்கிறது. ஏனெனில் ஒரு சிறு அப்பத் துண்டின் தோற்றத்தின் கீழ், ஒரு நற்கருணைப் பாத்திரத்தில் அடைக்கப் பட்டவராக அவர் தங்கியிருக்கிறார். அங்கே அவர் எந்த அசைவுமின்றியும், தமது புலன்களின் பயன்பாடு இன்றியும் தமது மகத்துவத்தை முற்றிலும் அழித்து விட்டுத் தங்கியிருப்பவராகத் தோன்றுகிறார். இதன் காரணமாக, மனிதர்களை நேசிப்பதை விட வேறு எந்த அலுவலையும் அவர் செய்வதில்லை என்று தோன்றுகிறது. நேசமானது, நம்மால் நேசிக்கப்படும் பொருளின் இடையறாத பிரசன்னத்தில் நாம் ஆசை கொள்ளச் செய்கிறது. இந்த அன்பும், இந்த ஆசையும்தான் சேசுகிறீஸ்துநாதரை மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தங்கியிருக்கும்படி செய்கிறது.வேறு எந்த அலுவலையும் அவர் செய்வதில்லை என்று தோன்றுகிறது. நேசமானது, நம்மால் நேசிக்கப்படும் பொருளின் இடையறாத பிரசன்னத்தில் நாம் ஆசை கொள்ளச் செய்கிறது. இந்த அன்பும், இந்த ஆசையும்தான் சேசுகிறீஸ்துநாதரை மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தங்கியிருக்கும்படி செய்கிறது.

ஓ என் சேசுவின் ஆராதனைக்குரிய திரு இருதயமே, மனிதர் மீதுள்ள அன்பினால் பற்றியெரியும் திரு இருதயமே, அவர்களை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உண்டாக்கப்பட்ட திரு இருதயமே, நீர் வெறுத்துத் தள்ளப்படுவதும், உமது அன்புக்கு மிக மோசமான விதத்தில் பதிலன்பு காட்டப்படுவதும் எப்படி சாத்தியம்? ஓ, நான் எவ்வளவு நிர்ப்பாக்கியன், உம்மை நேசியாத நன்றியற்றவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். என் சேசுவே, மிகுந்த அன்புக்குரியவரும், உம்மை நேசிக்கச் செய்வதை விட அதிகமாக வேறு எதையும் செய்ய முடியாதவராக நீர் இருக்கும் அளவுக்கு என்னை நேசித்துள்ளவருமாகிய உம்மை நேசிக்காமல் இருந்த இந்தப் பெரும் பாவத்திற்காக என்னை மன்னியும். இது வரை நான் செய்து வந்தது போல, உமது அன்பைப் புறக்கணித்ததற்காக, உம்மை நேசிக்க இயலாதபடி நான் தண்டனைத் தீர்ப்பிடப்படத் தகுதியுள்ளவனாக இருக்கிறேன் என்று உணர்கிறேன். ஆனால், வேண்டாம் என் பிரியமுள்ள இரட்சகரே, எனக்கு எந்தத் தண்டனை வேண்டுமானாலும் தாரும், ஆனால் இந்தத் தண்டனையை மட்டும் என் மீது சுமத்தாதிரும். உம்மை நேசிக்கும் வரப்பிரசாதத்தை எனக்குத் தந்தருளும். அதன்பின் உமது பிரியப்படி எத்தகைய துன்பத்தையும் எனக்குத் தாரும். ஆயினும், என் ஆண்டவரும் என் தேவனுமாகிய உம்மை நேசிக்கும்படியாக எனக்கு இனிமையான, சுகமான கட்டளையை நீர் தொடர்ந்து தருகிறீர் என்று நான் உணர்வதால், இப்படிப்பட்ட ஒரு தண்டனைக்கு நான் எப்படி பயப்பட முடியும்? ""உன் தேவனாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடு நேசிப்பாயாக.''

பூமியில் முப்பத்து மூன்று ஆண்டுகள் மட்டும் மனிதர்களோடு இருந்திருப்பது இந்த நேசமுள்ள இரட்சகருக்கு மிகவும் குறுகிய காலமாகத் தோன்றியது. ஆகவே, இடைவிடாமல் எப்போதும் நம்மோடு இருக்கத் தமக்குள்ள ஆசையைக் காட்டும்படி, திவ்விய நற்கருணை ஸ்தாபகத்தில், புதுமைகளில் எல்லாம் மேலான புதுமையைண நிகழ்த்த அவர் எண்ணம் கொண்டார். ஆனால் இரட்சணிய வேலை ஏற்கெனவே நிறைவேறி விட்டது, மனிதர்கள் ஏற்கெனவே கடவுளோடு மீண்டும் ஒப்புறவாகி விட்டார்கள். அப்படியிருக்க, சேசுநாதர் பூமியின்மீது, இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் எதற்காகத் தங்கியிருக்கிறார்?

ஆ, நம்மில் தமது இன்பத்தைக் காண்பதாக அவரே சொல்லி யிருப்பதால், நம்மிடமிருந்து தம்மைப் பிரித்துக் கொள்வதை அவரால் தாங்க முடியாது என்பதால்தான் அவர் அங்கே தங்கியிருக்கிறார். மேலும், அவர் தம்மை நம்மோடு இணைத்துக் கொண்டு, தமது இருதயத்தையும், நம் இருதயத்தையும் ஒன்றாகச் செய்யும்படியாக, நம் ஆத்துமங்களின் உணவாகவும் ஆகும்படி இந்த அன்பு அவரைத் தூண்டியது: ""என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்'' (அரு.6:57). ஓ அதிசயமே! ஓ கற்பனைக்கெட்டாத தேவசிநேகமே! இது தேவ ஊழியர் ஒரவரால் சொல்லப்பட்டது: திவ்விய நற்கருணையில் எனக்குள்ள விசுவாசத்தை அசைக்க எதனாலாவது முடியும் என்றால், அது அப்பம் எப்படி மாம்சமாக முடியும், அல்லது சேசுநாதர் எப்படி ஒரே சமயணத்தில் பல இடங்களில் இருக்க முடியும், எப்படி இவ்வளவு சிறிய இடத்தில் அடைபட்டிருக்க முடியும் என்ற சந்தேகங்களால் அல்ல, ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்று இதற்கு நான் பதில் சொல்ல வேண்டும்; ஆனால் மனிதர்களின் உணவாகும் அளவுக்கு அவர்களை இவ்வளவு அதிகமாக நேசிக்க அவரால் எப்படி முடிந்தது என்று என்னிடம் கேட்கப்பட்டால், இது என் புத்திக்கெட்டாத விசுவாசத்தின் பரம இரகசியம் என்றும் சேசுநாதரின் அன்பை நம்மால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்றும் மட்டுமே என்னால் பதில் சொல்ல முடியும். ஓ சேசுவின் அன்பே, மனிதர்கள் உம்மை அறிந்து கொள்ளச் செய்யும், மனிதர்கள் உம்மை நேசிக்கச் செய்யும்.

ஆம், என் தேவனே, நீர் என்னால் நேசிக்கப்பட சித்தம் கொள்கிறீர். நானும் உம்மை நேசிப்பேன்; உண்மையில் வேறு யாரையுமன்றி, என்னை இவ்வளவு அதிகமாக நேசித்திருக்கிற உம்மை மட்டுமே நான் நேசிப்பேன். ஓ என் சேசுவின் அன்பே, நீயே என் அன்பாக இருக்கிறாய். ஓ என் சேசுவின் பற்றியெரியும் திரு இருதயமே, என் இருதயத்தையும் பற்றியெரியச் செய்தருளும். எதிர்காலத்தில், ஒரே ஒரு கணம் கூட, உமது அன்பு இல்லாமல் வாV என்னை அனுமதியாதிரும். அதை விட என்னைக் கொன்று விடும், என்னை அழித்து விடும்; உம்மால் மிக அதிகமாக நேசிக்கப் பட்டவனும், உம்மிடமிருந்து ஏராளமான உபகாரங்களையும் ஒளியையும் பெற்றுக் கொண்டவனுமாகிய நான் மீண்டும் உமது அன்பைப் புறக்கணித்து வாழத் தொடங்கும் பயங்கரமுள்ள நன்றியற்றதனத்தின் காட்சியை உலகம் காண அனுமதியாதிரும். இல்லை என் சேசுவே, இதை அனுமதியாதிரும். நீர் எனக்காக சிந்தியள திரு இரத்தத்தின் வழியாக, நான் எப்போதும் உம்மை நேசிப்பேன் என்றும், நீர் எப்போதும் என்னை நேசிப்பீர் என்றும் உமக்கும் எனக்கும் இடையிலுள்ள இந்த அன்பு நித்தியத்திற்கும் உடைபடாததாக இருக்கும் என்றும் நான் நம்பியிருக்கிறேன். மரியாயே, உத்தம தேவசிநேகத்தின் மாதாவே, சேசுநாதர் நேசிக்கப் படுவதைக் காண மிக அதிகமாக ஆசிப்பவர்களே, உங்கள் திருமகனோடு என்னைச் சேர்த்துக் கட்டுங்கள், அவரோடு என்னை ஒன்றியுங்கள்; ஆயினும் நாங்கள் இனி ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதபடி என்னை அவரோடு சேர்த்துக் கட்டுங்கள்.