இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சியின் சிறப்பான நடைமுறைகள் - வெளி முயற்சிகள்

226. இப்பக்தி முயற்சி அடிப்படையிலே அந்தரங்கமானது (எண் 119). ஆயினும் அதற்குரிய வெளி நடைமுறைகளும் உள்ளன. அவற்றைப் புறக்கணிப்பது கூடாது. "இவைகளைச் செய்ய வேண்டியது, அவைகளையும். விட லாகாது'' (மத். 23, 23). இது ஏனென்றால், சரிவரச் செய் யப்படும் புற முயற்சிகள் அந்தரங்க முயற்சிகளுக்கு உத வியாக உள்ளன. இதன் காரணம், எப்போதும் புலன் களினால் நடத்தப்பட்டு வருகிற மனிதனுக்கு அவன் செய்கின்றவை அல்லது செய்யவேண்டியவை இவ்வித முயற்சிகளினால் ஞாபக மூட்டப் படுகின்றன. அவற்றைக் காண்கிறவர்களுக்கும் அவை நல்ல மாதிரிகையாக அமை கின்றன. அந்தரங்க முயற்சிகள் மட்டும் இருந்தால் இங் ஙனம் அமைய முடியாது. உண்மையான பக்தி உள்ளத் தில் தான் இருக்க வேண்டும் என்றோ , புற முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், அவை தற்பெருமையால் வரக் கூடும், பக்தி என்பது மறைவாகத்தான் இருக்கவேண்டும் என்றோ யாராவது உலக விரும்பிகள் அல்லது குறை காண முயல்கிறவர்கள் கூறி இதில் தலையிட வேண்டாம். என் தலைவருடன் நான் அவர்களுக்குப் பதில் உரைக்கி றேன் : மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பர லோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் ஒளிர்வதாக! (மத். 5; 16). அர்ச். கிரகோரியார் சுட்டிக் காட்டுவதுபோல் அவர்கள் மனிதரை மகிழ்ச்சிப் படுத்தவும் அவர்களுடைய புகழ்ச்சியைப் பெறவும் வெளி முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. அப்படிச் செய்வது தற் புகழ்ச் சியாகும். ஆனால் அத்தகைய காரியங்கள் சில சமயங் களில் மனிதரின் இகழ்ச்சி புகழ்ச்சிகளைப் பாராமல் கட வுளுக்குப் பிரியப்படும்படி மனிதர் முன்பாகச் செய்யப் படுகின்றன.

இங்கு சில வெளி பக்தி முயற்சிகளை சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். அவை வெளி முயற்சிகள் என்று அழைக் கப்படுவது, உட்கவனமின்றி செய்யப்படுவ தாலல்ல. ஆனால் அவற்றின் அந்தரங்க தன்மையுடன், குறிப்பிடக் கூடிய ஒரு புறத் தன்மையும் இருப்பதால் தான்.