இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மகிமைத் தேவ இரகசியங்கள்

11-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! வெற்றியோடு நீர் உயிர்த்தெழுந்ததின் மகிமைக்காக இந்த 1-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் உயிருள்ள விசுவாசத்தை எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

கிறிஸ்து உயிர்ப்பின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி நான் உண்மையான விசுவாசமுள்ளவனாகச் செய்யுமாக.

12-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! உமது மகிமையான மோட்ச ஆரோகணத்திற்கு மகிமையாக இந்த 12-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் திடமான நம்பிக்கையும் மோட்சத்தின் மீது பெரும் விருப்பத்தையும் எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

நமதாண்டவரின் மோட்ச ஆரோகணத் திருநிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி என்னை விண்ணுலகுக்குத் தயாரிப்பதாக,

13-ம் பத்து மணி: பரிசுத்த ஆவியான தேவனே! உமது வருகையின் மகிமைக்காக இந்த 13-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது உத்தம பத்தினியான கன்னி மரியாயின் வேண்டுதலாலும் நாங்கள் சத்தியத்தை அறிந்து அதை நேசித்து செயல்படுத்தவும் மற்றவர்களையும் அதில் பங்கு கொள்ளச் செய்யும்படியாகவும் உமது பரிசுத்த ஞானத்தை எங்களுக்குத் தரும்படி மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

பரிசுத்த ஆவி வருகையின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி இறைவன் முன்னிலையில் என்னை மெஞ்ஞானம் உள்ளவனாகச் செய்யுமாக.

14-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேகவே! உமது பரிசுத்த திரு அன்னையின் அமலோற்பவம், ஆன்ம சரீரத்துடன் விண்ணேற்பு இவற்றின் மகிமைக்காக இந்த 14-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இவ்விரு நிகழ்ச்சிகளாலும் அத்தாயின் வேண்டுதலாலும், அவர்கள் மீது உண்மைப் பக்தி கொள்ளவும் நாங்கள் புனிதராய் வாழ்ந்து மரிக்கவும் எங்களுக்கு உதவும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

மரியாயின் அமலோற்பவம், விண்ணேற்பு இவற்றின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி, நான் தேவ அன்னைக்கு உண்மையான பிரமாணிக்கம் உள்ளவனாகச் செய்யுமாக!

15-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேகவே! உமது திருத்தாய் மோட்சத்தில் மகுடம் சூட்டப்பட்டதன் மகிமைக்காக இந்த இறுதி 15-ம் பத்துமணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் அத்தாயின் வேண்டுதலாலும் எங்கள் இறுதி நேரம் வரை புண்ணியத்தில் நிலைத்து நிற்கவும் அதில் வளரவும், அதன்பின் எங்களுக்குத் தயாரிக்கப்பட்டுள்ள நித்திய கிரீடத்தை அடைந்து கொள்ளவும் எங்களுக்கு உதவும்படியாகவும் இதே வரத்தை நல்லவர்கள் எல்லாருக்கும் எங்கள் உபகாரிகள் அனைவருக்கும் கொடுக்கும்படியாகவும் உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

ஆண்டவராகிய சேசுவே உமது வாழ்வு பாடுகள், மரணம், மகிமை என்ற இப்பதினைந்து திருநிகழ்ச்சிகளாலும், உமது திரு மாதாவின் மகிமையாலும் பேறு பலன்களாலும் பாவிகளை மனந்திருப்பி, மரிக்கிறவர்களுக்கு உதவி புரிந்து உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு விடுதலை தந்து, நாங்கள் நன்கு வாழ்ந்து மரிக்க உமது அருளை ஈந்து உம்மை நாங்கள் நித்தியத்திலும் முகமுகமாய்க் காணும்படி உமது மகிமையின் ஒளியைத் தந்தருளுமாறு உம்மை மன்றாடுகிறோம். ஆமென். அப்படியே ஆகுக.

- இறைவனே எல்லாம் -