கன்னியும் கத்தரீனும்

யுத்தத்தினாலும் யுத்தத்துக்குப் பின் ஏற்படும் கோர விளைவுகளாலும் 1830-ம் ஆண்டில் பிரான்ஸ் நாடு சோர்ந்து போய்க் கிடந்தது. எந்த நிமிடம் மறு யுத்தம் தொடங்குமோ என்னும் பயம் வேறு. பொது மக்கள் பஞ்சத்தால் வாடி வதங்கிக் கொண்டிருந்த அச் சமயத்தில் அமலோற்பவ கன்னி பாரீஸ் நகரில் பிறசிநேக புத்திரிகளின் சபையைச் சேர்ந்த ஒரு நவ கன்னிக்கு காட்சி கொடுத்தாள். 

அன்னையைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நவ கன்னியின் பெயர் கத்தரீன் லபூரே. (1947-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாளன்று இந்தக் கன்னிக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் அருளப்பட்டது.) ஜூலை 18-ம் நாளன்று தான் கண்டதைப் பற்றி கத்தரீன் பின்வருமாறு எழு துகிறாள். “அன்றிரவு பதினொன்றரை மணிக்கு, என் பேரைச் சொல்லி, யாரோ மும்முறை என்னைக் கூப்பிட்டதை நான் கேட்டேன். என் படுக்கையை மறைத்திருந்த திரையை நான் விலக்கி, கவனித்தேன், நான்கு அல்லது ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் என் முன் நின்றான். 'கோவிலுக்கு வா பரிசுத்த கன்னி உனக்காகக் காத்திருக்கிறாள் ' என அவன் கூறினான். 

அவசரம் அவசரமாய் உடுத்திக் கொண்டு நான் அவனைப் பின் தொடர்ந்து பீடத்தை அடைந் தேன். பீடத்தின் படிகள் வழியாக தேவ தாய் இறங்கி வந்து, எங்களைக் கண்காணித்து வந்த குருவானவர் உட்காரும் நாற்காலியில் அமர்ந்தாள். நான் ஓடிப்போய் பீடத்தின் படியில் முழந்தாளிட்டு, பரிசுத்த கன்னியின் முழந்தாளில் என் கரங்களை வைத்தேன். "மகளே, உனக்கு நான் ஒரு அலுவலைத் தரப்போகிறேன்'' எனத் தேவதாய் கூறினாள், அன்னையின் அருகில் நான் முழந்தாளிட்டு அவளது சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தது எவ்வளவு நேரமோ தெரி யாது.''

இரண்டாவது மூன்றாவது காட்சிகளும் ஏறக் குறைய இதைப்போலவே இருந்தன. முக்கிய காட்சி அருளப்பட்டது நவம்பர் 27-ம் நாளன்று. அந்த நாளே அற்புத சுரூபத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. கத்தரீனே அதைப் பற்றி வர்ணிக்கிறாள் :

“பீடத்தின் நிருபப் பக்கத்தில், வல்லமையுள்ள கன்னி பீடத்தின் அருகில், தேவதாய் தன்னைக் காண்பித்தாள். பூமி உருண்டை மீது அவள் நின்று கொண்டிருந்தாள். அவளது முகம் நாவால் வர் ணிக்க முடியாத அழகைக் கொண்டிருந்தது. அவ ளது விரல்களில் விலையேறப் பெற்ற ஆபரணங்கள். அந்த ஆபரணங்களின் பிரகாசம் என் கண்களைக் கூசப் பண்ணியது. 'இதோ பார்; வரப்பிரசாதங்க ளின் அடையாளம், வரப்பிரசாதங்களைக் கேட்பவர் களுக்கெல்லாம் நான் அவற்றைக் கொடுக்கிறேன், என்னும் குரல் கேட்டது. பின் பரிசுத்த கன்னி யைச் சுற்றி முட்டை வடிவமுள்ளதான வட்டம் ஒன்று அமைந்தது. அந்த வட்டத்தில் தங்க எழுத் துக்களால் “பாவமின்றி உற்பவித்த ஓ மரியாயே, உம்மைத் தேடி வருகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்'' என எழுதியிருந்தது. காட்சி பின் புற மாய்த் திரும்பியது. காட்சியின் பின் பக்கத்தில் M என்னும் எழுத்து. அந்த எழுத்தின் மேல் ஒரு சிலுவை. சிலுவையினடியில் ஓர் அடை. எல்லாவற்றிற்கும் கீழே முள் முடி சூட்டப்பட்ட யேசுவின் இருதயமும், வாளால் ஊடுருவப்பட்ட மரியாயின் இருதயமும். இந்தக் காட்சியில் நீ பார்ப்பது போன்று ஒரு சுரூபத்தைச் செய்வி, மந்திரிக்கப் பட்ட அந்தச் சுரூபத்தை அணிந்து கொள்பவர்கள், முக்கியமாக அவர்கள் அதைக் கழுத்தில் அணிந்து கொள்வார்களானால் பெரும் வரப்பிரசாதங்களைப் பெறுவார்கள்' என ஒரு குரல் கூறியது.

இரண்டாண்டுகளாக திருச்சபையின் அதிகாரி கள் கடும் விசாரணை நடத்தி, கத்தரீன் கண்டது கன வல்ல, உண்மைக் காட்சிகளே எனத் தீர்மானித்து, அமலோற்பவ அன்னையின் சுரூபத்தைச் செய்து அணிந்து கொள்ள மக்களுக்கு அனுமதியளித்தனர். சின்னாபின்னப்பட்டுக் கிடந்த பிரான்ஸ் நாட்டில் இந் தச் சுரூபம் காட்டுத் தீயைப் போல் பரவியது. வரப் பிரசாத நவங்களும் சுகமும், சமாதானமும், செழிப் பும் சுரூபத்தைப் பின் தொடர்ந்தன. ஆதலின் வெகு சீக்கிரம் மக்கள் யாவரும் அதை அற்புத சுரூபம் என் றழைக்க ஆரம்பித்தனர்.

தன் அமல உற்பவத்தின் முதல் விருதையும் முத் திரையையும் தேவதாப் உலகுக்குக் கொண்டு வந்த தன் வரலாறு இது வே. பெரும்பாலும் இந்தச் சுரூபத்தின் விளைவாகவே, தேவதாய் அமல உற்பவி என்பது வேதசத்தியம் என இருபத்து நான்கு ஆண் டுகளுக்குப் பின் பிரகடனம் செய்யப்பட்டது. அது பிரகடனம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின் லூர்து கெபியில் அன்னை காட்சி கொடுத்து, அந்தச் சத்தியத்தை இன்னும் அதிகமாகப் பிர பல்யப்படுத்தினாள்.

சுரூபத்தின் வழியாக கடவுள் புதுமைகள் செய் வது புதிதாயிருக்கிறதே என நினைக்கலாகாது. ஞானஸ்நானத்தில் ஜென்மப் பாவத்தை ஆத்துமத்தினின்று அகற்றுவதற்கு அவர் தண்ணீரைப் பயன் படுத்துவதில்லையா? உறுதிபூசுதலிலும் அவஸ்தை பூசு தலிலும் தம் வரப்பிரசாதங்களை வழங்க அவர் எண்ணெயைப் பயன்படுத்துவதில்லையா? அதே போல சுரூபத்தையும் ஒரு தேவதிரவிய அனுமான மாய் அல்ல, ஆனால் அற்புதங்களைச் செய்யும் ஒரு கரு வியாகப் பயன்படுத்துகிறார். பலவான்களைக் கலங் கடிக்கும்படி பூமியின் பலவீனமானவைகளைக் கட வுள் தேர்ந்தெடுக்கிறாரல்லவா?

சிறு பொருட்களும் பெரும் காரியங்களைச் செய் வதை நம் அனுதின வாழ்க்கையில் நாம் பார்க்கி றோம். ரெயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் அடையாளமான சிவப்புக் கண்ணாடி வெகு சொற்ப ஒளியையே தருகிறது. அந்தச் சிறு பொருள், வல் லமை வாய்ந்த ரெயிலை நிறுத்தி, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. அற்புத சுரூபம் தேவ தாயால் தரப்பட்டது. கடவுளால் அங்கீகரிக்கப்பட்டி ருக்கிறது. நம் பரலோக அன்னையின் உதவி நமக்குத் தேவை என்று காண்பித்த அந்த அன்னையே விரும் பும் சுரூபத்தை நாம் கழுத்தில் அணிந்திருக்கிறோம். அதைக் காணும் அன்னை நமக்கு உதவி செய்ய வருவ தாக வாக்களித்திருக்கிறாள். அந்த வாக்கின்படி நடந்து வருகிறாள்.

சுரூபத்தின் ஒரு பக்கம் தேவதாயை அவளது அமலோற்பவத்தின் மகிமையில் சித்தரிக்கிறது. மானிட சந்ததியின் அரசியாக, அன்னையாக, பூமி உருண்டை மீது அவள் நிற்கிறாள். பசாசும் அதன் தூதர்களும் அவள் முன் சக்தியற்றவை என்று அறி விக்க, அவள் தன் பாதங்களால் சர்ப்பத்தை நசுக்குகி றாள். விரிக்கப்பட்டிருக்கும் அவளது கரங்களிலிருந்து வரப்பிரசாதங்கள் பொழிகின்றன. கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த வரப்பிரசாதங்கள் கொடுக்கப்படுகின்றன. தேவதாயே தெரிந்தெடுத்த, “பாவமில்லாமல் உற்பவித்த ஓ மரியாயே, உம்மைத் தேடி வருகிற எங் களுக்காக வேண்டிக்கொள்ளும் " என்னும் வார்த்தை கள் சுற்றிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. -

சுரூபத்தின் மறுபக்கம் மரியாயின் வேதனையைக் குறிக்கிறது. இந்தப் பக்கத்தில் வார்த்தை எதுவும் இல்லை. ஏனெனில் தேவதாய் கத்தரீனுக்குத் தெரி வித்தது போல் M என்னும் எழுத்தும், இரு இரு தயங்களும் எல்லாவற்றையும் தெளிவாக்குகின்றன. அது உண்மையே. M என்னும் எழுத்து பிரெஞ்ச் மொழியில் ‘மரி' என்னும் நாமத்தின் முதல் எழுத்து. பிரெஞ்ச் மொழியில் தாய் என்னும் வார்த்தைக்கும் அதுவே முதல் எழுத்து, மரியம்மாள் நம் அரசி, நமக்காகப் பரிந்து பேசுகிறவள்; அத்துடன் அவள் வியாகுலத்தாய்; நம் இரட்சகரின் தாய், அவள் தன் மகனருகில் நின்றது போல் துன்புறும் தன் மக்களரு கில் எப்பொழுதும் இருக்கிறாள். மானிடர்மேற் கொண்ட அன்பால் அவரது இதயம் முள் முடியைத் தரித்திருக்கிறது. அதே அன்பால் அன்னையின் இத யம் ஊடுருவப்பட்டிருக்கிறது. சிலுவையின் கீழே M என்னும் எழுத்து. ஏனெனில் கடைசி வரை மரி யம்மாள் சிலுவையினடியில் நின்றாள்.

பன்னிரண்டு நட்சத்திரங்களும் கிறிஸ்துநாதரது இரட்சிப்பின் முதல் தூதர்களான அப்போஸ்தலர் களைக் குறிப்பிடுகின்றன: அல்லது புனித அருளப் பர் காட்சியில் கண்ட நட்சத்திரங்களைக் குறிக்கின் றன. "வானலோகத்தில் பெரியதொரு அதிசயம் காணப்பட்டது: ஒரு ஸ்திரீயானவள் சூரியனையடுத்து தன் பாதங்களின் கீழ் சந்திரனையும்; தன் சிரசில் பன்னிரு நட்சத்திரங்கள் அடங்கிய கிரீடத்தையும் தரித்திருந்தாள்'' (காட்சி 12/1)... பூமியின் துன்பதுய ரங்களின் வழியாக தன் பிள்ளைகளை மோட்ச பாக்கி யத்திற் சேர்க்க தேவதாய் விரும்புகிறாள். அங்கு பரலோக அரசியின் கிரீடத்தில் அவர்கள் நட்சத்திரங் களைப் போல் நித்தியத்துக்கும் பிரகாசிப்பார்கள்.