இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுள் மனிதனின் காவியம் - முன்னுரை

Ave Maria Immaculata
"ஆண்டவர் தம் வழிகளின் துவக்கத்திலேயே என்னைச் சுதந்தரித்திருந்தார். '' பழ. 8:22.

அத்தியாயம் - 1

22 ஆகஸ்ட் 1944.

சேசு எனக்குக் கட்டளையிடுகிறார்: ''முழுவதும் புதிய எழுதும் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொள். ஆகஸ்ட் 16-ல் நான் கூறியதை முதல் பக்கத்தில் எழுது. இப்புத்தகம் அவர்களைப் பற்றிப் பேசும்.'' (அவர்களை என்பது பரிசுத்த கன்னி மரமரியை.) நான் கீழ்ப்படிகிறேன்; எழுதுகிறேன்.

16 ஆகஸ்ட் 1944. சேசு கூறுகிறார்:

இன்று இதை மட்டும் எழுது. பரிசுத்தத்தனம் எவ்வளவு விலையுள்ளதென்றால், கொள்ளப்பட முடியாதவரை ஒரு சிருஷ்டியின் உதரம் கொண்டிருக்க முடிந்தது. ஏனென்றால் கடவுளின் சிருஷ்டி ஒன்று பெற்றிருக்கக் கூடிய மிகப் பெரும் பரிசுத்ததனத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

பரிசுத்த தமதிரித்துவம் ஒரு சின்ன இடத்தில் தன் உத்தம் இலட்சணங்களோடு இறங்கி வந்தது; மூன்று ஆட்களோடும் அங்கு குடி கொண்டது; தன் அளவில்லாமையை ஒரு சின்ன இடத்தில் அடக்கிக் கொண்டது. ஆயினும் அப்படிச் செய்ததில் அது தன்னையே குறைவுபடுத்தவில்லை. ஏனெனில் அக்கன்னியின் அன்பும் கடவுளின் சித்தமும், அந்த இடம் ஒரு மோட்சமாகும் வரை அதை விசாலப்படுத்தின. மேலும் பரிசுத்த தம் திரித்துவம் தன் குணாதிசயங்களால் தன்னையே அறியப்படுத்தியது:

பரமபிதா சிருஷ்டிப்பின் ஆறாம் நாளில் நடந்தது போல் மீண்டும் சிருஷ்டிகராகி தமது உத்தம சாயலாக உருவாக்கப் பெற்ற ஒரு உண்மையான தகுதி பெற்ற குமாரத்தியை அடைந்தார். கடவுளின் அடையாளம் மரியா யின் மீது எவ்வளவு முழுமையாகவும், சரியாகவும் பதிக்கப் பட்டதென்றால், முதல் பேறானவரிடம் மட்டுமே அது கூடுதலாயிருந்தது. பரம பிதாவின் இரண்டாம் பேறு என்று மரியாயை அழைக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களால் காப்பாற்றப்பட்ட உத்தம தனத்தை முன்னிட்டும், கடவுளின் பத்தினி , தாய், பரலோக இராக்கினி என்ற மகத்துவத்தை முன்னிட்டும், அவர்கள் பிதாவின் சுதனுக்கு அடுத்த படியிலும், நித்தியத் திலிருந்தே அவர்கள் மீது மகிழ்ச்சியடைந்த பிதாவின் நினைவில் இரண்டாவது இடத்திலும் இருந்தார்கள்.

சுதன் மாதாவின் குமாரனாகவும் இருந்து, அவர் களுடைய உதரத்தில் கருவாக வளர்ந்த போதே, வரப்பிரசாத் திரு நிகழ்ச்சியால் தமது சத்தியத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்தார்.

பரிசுத்த ஆவியானவர் காலத்திற்கு முன்பே கொடுக்கப்பட்ட தம் நீடித்த வருகையாக மனிதர்கள் மத்தியில் காணப்பட்டார்; தாம் நேசித்த மாதாவுக்கு நேசமாகவும், அவர்களுடைய உதரத்தின் கனியின் நிமித்தம் மனிதர்களுக்கு ஆறுதலாகவும், புனிதமாயிருந்த அவர்களின் தாய்மையினிமித்தம் அர்ச்சிப்பாகவும் அவர் தோன்றினார்.

சர்வேசுரன், இரட்சிப்பின் யுகத்தைத் தொடங்கி வைக்கிற, புதியதும், முழுமையுமான வடிவில் தம்மை மனிதனுக்குக் காண்பிக்க, வான நட்சத்திரம் ஒன்றை தம் ஆசனமாகத் தெரிந்தெடுக்கவில்லை. வல்லமையுள்ள ஒரு மனிதனின் அரண்மனையையும் தெரிந்து கொள்ளவில்லை.

தம்முடைய பாதங்களுக்கு மனையாக சம்மனசுக்களின் இறக்கைகளையும் விரும்பவில்லை. ஒரு மாசற்ற உதரத்தையே அவர் விரும்பினார்.

ஏவாளும் மாசற்றவளாகவே சிருஷ்டிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவள் தன் சொந்த சுயாதீன விருப்பத்தால் கெட்டுப் போக விரும்பினாள். ஏவாள் பரிசுத்தமான உலகில் இருந்தாள். மாமரியோ கெட்டுப் போன உலகத்தில் இருந்தும், தன் பரிசுத்ததனத்தைப் பழுது படுத்த விரும்பவில்லை - பாவத்துடன் தூரத் தொடர்புள்ள ஒரு நினைவால் கூட அப்படிச் செய்யவில்லை. பாவம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். பாவத்தின் பல்வேறு கோர உருவங்களையும் அவற்றின் தாற்பரியங்களையும் அவர்கள் கண்டார்கள். அவற்றுள் மிகவும் கொடூரமான கடவுள் கொலை உட்பட, அனைத்தையும் பார்த்தார்கள் - ஆனால் அவைகளைப் பரிகரித்துத் துடைப்பதற்காக மட்டுமே. பாவிகளின் இரட்சண்யத்திற்காக மன்றாடுகிற , பாவிகள் மீது இரக்கம் கொள்ளும் மாதாவாக எப்போதும் இருப்பதற்காகவே அவைகளை அறிந்தார்கள்.

இந்தக் கருத்தானது, உன்னுடைய நன்மைக்காகவும், அநேக மக்களின் நலனுக்காகவும் நான் அருளும் மற்ற புனித காரியங்களுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும்.