நான் மனுஷருடைய முகத்தாட்சிணியத்தைத் தேடுகிறேனோ? மனுஷரைப் பிரியப்படுத்தத் தேடுவேனாகில் கிறீஸ்து நாதருடைய ஊழியனாயிரேனே. (கலாத். 1; 10)
பிரியமான கிறிஸ்தவர்களே! அர்ச். சின்னப்பர் வசனித்த இவ் வார்த்தைகளைக் கேட் அ டவுடனே தானே மனுஷருக்குப் பிரியப்படத் தேடுவதும், யேசுநாதசுவாமிக்கு - ஊழியஞ் செய்வதும் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராயிருக்கிறதென்று தெற்றெனத் தெரியும். நம்மில் யார் கிறீஸ்துநாதருடைய ஊழி யன் அல்லாமல் இருக்க விரும்பக்கூடும்? ஒருவருமில் லை. இவ் உலகில் அவருடைய ஊழியராயிராதவர் கள், 'பரலோகத்தில் அவரோடு மோட்ச பாக்கியம் அடையக் காத்திருக்கலாமா ? காத்திருக்கல் ஆகாது. ஆகையால், நாம் 'எல்லோரும் அவருடைய ஊழிய ராய், நம்பிக்கையுள் ள ஊழியராய் இருக்கவே பிர யாசப்படவேண்டியது. அப்படி இருக்கவேண்டுமா னால், முகத்தாட்சிணியம் அல்லது மனிதருக்குப் பிரி யப்படத் தேடுதல் என்ற இந்தப் பொல்லாப்பை வில க்கிக்கொள்ளவே வேண்டும். மனுஷருக்குப் பிரியப்படத் தேடுகிறவர்கள் யேசு நாதருடைய ஊழியக்கார ராய் இருக்கக்கூடாது என்பது தவறாத வேதவாக்கி யமாமே. ' சென்ற கிழமை வேதாபிமானத்தைக் குறித்துக் கேட்டீர்கள். நமக்கு அறியவும் விசுவசிக்கவும் கிடைத் திருக்கிறதாகிய சத்திய வேதமே உலகத்திலே ஏக மெய்யான வேதம்; உலகத்திலே ஏக பரிசுத்தமான வேதம். ஆகையால், அதை நாம் எவருக்கும் அஞ்சா மல் எல்லாருக்கும் முன்பாக மகிமைப்படுத்தி, அ தின் போதகங்களை எம்மால் இயன்றள வு பூரணமாய் அனுசரித்து அதின்மட்டில் நமக்குள்ள இரட்டைக் கடமையைத் தீர்த்துக்கொண்டுவர வேண்டும். ஆனால்
இந்தப் பாரமான கடமையைத் தீர்ப்பதற்கு முகத்தாட்சிணியம் என்னும் துர்க்குணமே பெரும் எதிரிடையாக நிற்கிறது. மனித முகப்பயத்தினாலே தான் நாம் நமது திருவேதத்தை வெளியரங்கமாய் அறிக்கையிடாமல், நாம் வேதக்காரர் என்பது தோ ன் றவிடாமல் கூசிப் பதுங்கி நடக்கிறோம். இன்னும், முகத் தாட்சணியத்தினாலே தான் பலமுறையும் தவஞ் செய்யாமல், அடிக்கடி பாவசங்கீர்த்தனம்பண்ணா மல், கிறீஸ்துநாதருடைய சாயலான சீவியத்திலே வர்த்திப்பதற்கு உதவியாக அவரை அடிக்கடி சற்பிர சாதத்திலே வாங்கிக் கொள் ளத் துணியாமலிருக்கி றோம். '' சுத்தவாளருடைய முன் மாதிரிகையைப் பின் பற்றி நடக்க எனக்கு எவ்வளவோ பிரியம். ஆனால், உலகம் என்ன சொல்லும்? இவ்வளவு நாளும் அசட் டையுள்ள ஓர் கிறீஸ்தவனாய் நடந்த நான், இருந்தாற் போலப் பத்திமானாய் வரக்கண்டவர்கள் நகையார் களா? இனிமேல் என்னைக் காண்போர் எல்லாம் பகிடி பண்ணுவார்களே '' என்ற எண்ணத்தினாலல்லவோ எத்தனையோ பேர்---மேலான சாங்கோபாங்கத்துக்கு அழைக்கப்படுகிற எத்தனையோ பேர் புண்ணியத்தில் விருத்தியடையாமல் இருந்தபடியே இருக்கிறார்கள்..)
ஆகையால் நாம் இந்தப் பொல்லாங்கை எ துவி தத்திலும் தவிர்த்துவிட வேண்டும். முகத்தாட்சிணி யம் எனும் இந்தத் தர்க்குணத்தின் அருவருப்பைக் கண்டுகொண்டு அதை வெறுக்கவேண்டும். அது நம் மிடத்திலே நிலையா தபடி, அதை வேரோடு களையப் பிரயத்தனஞ் செய்யவேண்டும். இதற்காக நாம் முகத் தாட்சணிய மான து முதலாவது ஆத்துமத்தை மிகவும் தாழ்வாகத் தாழ்த்துகிற ஒரு அடிமைத் தனம் என்று காட்டுவோம். பிறகு முகத் தாட்சணியமான து மனிதன் கட்டிக்கொள்ளக் கூடிய மதியீனங்களுள் எல்லாம் பெரிய ஒரு மதியீ னம் என்று விளக்குவோம். கடைசியிலே, இது சரு வேசுரனுக்கு மகா அவமானம் என்று தெளிவிக்கச் சில வார்த்தைகள் சொல்லுவோம். இன் றைப் பிரசங் கம் இந்த மூன்று பிரிவுகளிலேயு மே அடங்கும். பிரியமான கிறீஸ்தவர்களே, தயவு செய்து இவைகளுக்கு அவதானமாய்ச் செவி தந்து கேட்பீர்களாக.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠