இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் விசுவாசத்தில் பங்கடைதல்

214. மாதா உலகத்திலிருக்கும் போது கொண்டிருந்த விசுவாசத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களின் அந்த விசுவாசம் எல்லாப் பிதாப் பிதாக்கள் தீர்க்கதரிசிகள் அப்போஸ்தலர்கள் அர்ச்சிஷ்டவர்களுடைய விசுவாசத்தையெல்லாம் விட பெரிதாயிருந்தது. மாதா இப்பொழுது மோட்சத்தில் இருப்பதால், யாவற் றையும் மகிமையின் ஓளியில் கடவுளிடத்தில் தெளிவாகக் காண்கிறார்கள். எனவே அந்த விசுவாசத்தை அவர்கள் இப்பொழுது கொண்டிருக்கவில்லை. ஆயினும் மோட்சம் சென்றதால் அவர்கள் அதை இழந்துவிட வேண்டுமென்று இறைவன் விரும்பவில்லை. மாறாக, போராடும் திருச்சபை யிலுள்ள தன் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களுக்கென அதைக் கொண்டிருக்கவேண்டும் என்றே அவர் விரும்பி யுள்ளார் (இவ்வாக்கியத்தைப் பலர் குறை கூறியுள்ளார்கள். ஆனால் அர்ச். லூயிஸின் முத்திபேறு பட்டத்தின் போது "எதிர் தரப்பில்'" இதற்கு எவ்வித மறுப்பும் கூறப்பட வில்லை. இங்கு அவர் கூறும் கருத்து என்னவெனில் இப் போது மரியாயிடம் நம் விசுவாசத்தைப் போல், அதா வது போராடும் திருச்சபையிலுள்ளவர்களிடம் உள்ள விசுவாசத்தைப் போல் ஒரு அவசியமான புண்ணியமாக அது இல்லைதான். ஆனால் சகல வரப்பிரசாதங்களையும் பகிர்ந்தளிக்கும் அலுவல் மாதாவுக்கு உள்ளதால் (எண் 25) இறைவனின் சித்தப்படி உலகிலுள்ள நமக்கு தன்னு டைய விசுவாசத்தின் நற்குணங்களைத் தருகிறார்கள். இதன் படி நம் விசுவாசம் தூயதாகவும், உயிருள்ள தாகவும், உறுதியாகவும், செயலாற்றல் உடையதாகவும் இருக்கும் படி செய்கிறார்கள்.) எனவே, மகத்துவமும் பிரமாணிக்கமுள்ள இந்தக் கன்னிகையின் நல்லுறவை நீ எவ்வளவுக்கதிகமாய் பெற்றுக் கொள்வாயோ அவ்வளவுக்கதிகமாக உன் நடத் தையில் தூய்மையான விசுவாசம் காணப்படும். உணர்ச் சிக்குட்பட்டதும் அசாதாரணமுமானவற்றைத் தேடாத சுத்தமான விசுவாசமாக அது இருக்கும். தூய அன்பின் நோக்கத்தோடு மட்டுமே உன் செயல்களைச் செய்யத் தூண்டக்கூடிய, அன்பால் உயிரூட்டப் பெற்ற விசுவாச மாக அது இருக்கும். புயல், பெரும் காற்றுகளின் நடுவே நீ உறுதியாகவும் திடமாகவும் நிற்கும்படிச் செய்யக் கூடிய ஆடாத, அசைக்கருடியாத பாறைபோன்ற விசுவாசம் அது, செயலாற்றலுள்ள, குத்திப் பிளக்கும் தன்மை பெற்ற இவ்விசுவாசம், எதையும் திறக்கக்கூடிய திறவு கோல் போன்று சேசுகிறீஸ்துவின் மறை பொருளையெல் லாம் உனக்கு எட்டும் படி செய்யும். மனிதனின் கடைசி கதியையும் ஏன் இறைவனின் இருதயத்தையுமே நீ சென்று அடையச் செய்யும். நீ தயக்கமின்றி பெரிய காரி யங்களைக் கடவுளுக்காகவும் ஆன்மாக்களின் மீட்புக்காக வும் ஆரம்பித்து நடத்தி முடிக்கச் செய்யும் தைரியமான விசுவாசமாக அது இருக்கும். இறுதியாய் இவ்விசுவாசம் உன்னுடைய எரியும் சுடர்ப்பந்தமாய், உன்னுடைய தெய்வீக உயிராய், தேவ ஞானத்தின் மறைந்த உன் திர வியமாய், இருளிலும் மரண நிழலிலும் நடப்போரை ஒளிர்விக்கவும், ஞான மந்தங் கொண்டு பொற்சுடர் அன்பால் எரிக்கப்பட வேண்டிய நிலையிலிருப்பவர்களை, பற்றி எரியச் செய்யவும், பாவத்தால் மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்கவும், கருங்கல் இருதயங்களையும் லீபா னின் கேதுரு மரங்களையும் மெல்லிய, இளக்கக்கூடிய வார்த்தையால் அசைத்து மனந்திருப்பவும், முடிவாக, பசாசையும் இரட்சண்யத்தின் எல்லாப் பகைவர்களையும் எதிர்த்து நிற்கவும், நீ உபயோகிக்கக் கூடிய எல்லா வலி மையும் பொருந்திய ஆயுதம் இந்த விசுவாசமேயாம்.