இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இந்தப் பக்தி முயற்சியின் ஆச்சரியமான விளைவுகள்

53. இப்பக்தி முயற்சியைப் பற்றி நான் சொல்லக் கூடியதைவிட அனுபவம் அதிகமாய் உனக்குக் கற்றுத் தரும். ஆனால் நான் உனக்குப் படிப்பித்துள்ள கொஞ்சக் காரியங்களுக்கு நீ பிரமாணிக்கமாயிருப்பாயானால், இதில் நீ எவ்வளவு செழிப்பான வரப்பிரசாதக் கனிகளைக் காண்பாயென்றால், நீ ஆச்சரியமடைந்து மகிழ்வால் நிரம்பி விடுவாய்.

54. ஆதலால் அன்புள்ள ஆன்மாவே, நாம் செயல்படத் தொடங்குவோம். இப்பக்தி முயற்சியை பிரமாணிக்கத்துடன் கைக்கொள்வதனால் அர்ச். அம்புறோஸ் கூறுவதுபோல், மரியாயின் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்தும்படி நம்மில் இருக்கவும், அவர்களின் உள்ளம் கடவுளிடம் மகிழ்ச்சியடையுமாறு நம்மிலிருக்கவும் தக்கதான வரப்பிரசாதத்தை அடைந்து கொள்வோமாக. கல்வியில் சிறந்த குவெரிக் என்ற மடாதிபதி கூறியுள்ளது போல், கடவுள் தம் அரியாசனத்தை ஸ்தாபித்துள்ள மரியாயின் மடியைவிட பரலோகமென்று அழைக்கப்படும் ஆபிரகாமின் மடியில் தங்கியிருப்பதில் அதிக மகிமையும், அதிக சந்தோஷமும் உண்டென்று நாம் நினைக்க வேண்டாம். 

இப்புனித அடிமைத்தனம் யாவற்றுக்கும் மேலாக மரியாயின் உயிரை ஆன்மாவில் ஏற்படுத்துகிறது. 

55. பிரமாணிக்கத்துடன் பயிற்சி செய்யப்படும் இப்பக்தி முயற்சி அநேக நற்பயன்களை ஆன்மாவில் விளைவிக்கிறது. அவற்றுள் மிகவும் முக்கியமானதென்ன வென்றால், இவ்வுலக வாழ்விலேயே அது மரியாயின் ஜீவனை ஆன்மாவில் ஏற்படுத்துகிறது. அதனால் இனி மேல் வாழ்வது ஆன்மா அல்ல, ஆனால் அதில் வாழ்கின்ற மரியாயே. ஏனெனில் மரியாயே அதன் உயிராக ஆகின் றார்கள். உரைக்க முடியாத, ஆயினும் உண்மையான ஒரு வரப்பிரசாதத்தினால் மாமரி ஓர் ஆன்மாவில் அரசியாக விளங்கும் போது அவர்கள் அங்கே என்ன அதிசயமெல் லாம் ஆற்றுகிறார்கள்! --விசேஷமாய் ஆன்மாவின் அந்தரங்கத்தில்! ஆனால் அவர்கள் அவற்றை இரகசிய மாய், நாம் அறியாத முறையில் செய்கிறார்கள். ஏனெனில் நாம் அறிந்தால், அது அவர்களின் வேலையின் அழகை அழித்துவிடக் கூடும்.

நாம் தொடர்ந்து சேசுவில் வாழவும் சேசு நம்மில் வாழவும் மாதா செய்கிறார்கள். 

56. எங்கும் வளமுள்ள கன்னிகையாய் மாமரி இருப்பதால் அவர்கள் வாசஞ் செய்யும் இடமாகிய ஆன்மாவின் உட்புறத்தில், இருதயத் தூய்மையையும், சரீர பரிசுத்ததனத்தையும், சுத்தக் கருத்தையும் நோக்கத்தையும், நற்கிரியைகளால் வளத்தையும் விளைவிக்கிறார்கள். அன்புள்ள ஆன்மாவே! தூய சிருஷ்டிகள் யாவரிலும் அதிமிக வளமுடைய மாமரி , கடவுளையே பெற்றெடுத்த இவ்வன்னை, பிரமாணிக்கமுள்ள ஒரு ஆத்துமத்தில் செயலற்று இருப்பார்கள் என்று நினையாதே. அவ்வான்மா வில் சேசு கிறீஸ்துவை அவர்கள் வாழச் செய்வார்கள். அந்த ஆன்மா எப்பொழுதும் சேசு கிறீஸ்துவின் ஐக்கியத் தில் வாழ வைப்பார்கள். " என் சிறு பிள்ளைகளே! கிறீஸ்து நாதர் உங்களில் உருவாகு மட்டும் நான் மறுபடியும் பிரசவ வேதனைப்படுகிறேன்" (கலா. 4:19). ஒவ்வொரு தனி ஆன்மாவிலும், பொதுவில் எல்லா ஆன்மாக்களிலும் மரியாயின் கனியாக சேசு கிறீஸ்து இருக்கிறாரென்றால், மாமரி வாசஞ்செய்யும் ஒரு ஆன்மாவில், அவர் அதிக சிறப்பாக மரியாயின் கனியாகவும் அவர்களின் தலைசிறந்த கைவேலையாகவும் இருக்கிறார்.

சேசுவின் ஊழியத்தில், ஆன்மாவிற்கு மாமரி சகலமுமாயிருக்கிறார்கள். 

57. இறுதியாக சேசுவின் ஊழியத்தில் மாமரி அவ்வான்மாவிற்கு சகலமுமாகி விடுகிறார்கள். மனம் மரியாயின் தூய ஒளியால் வெளிச்சமடைகிறது; மரியாயின் தாழ்ச்சியினால் இருதயம் தாழ்ச்சியடைகிறது; மரியாயின் சிநேகத்தினால் அது தாராள குணமுள்ள தாகிறது, ஆர்வமுடையதாகிறது ; மரியாயின் பரிசுத்த தனத்தினால் அது சுத்தமாகிறது; மாதாவின் தாய்மை யினால் உயர்ந்த தன்மையடைந்து பெரிதாகிறது. இதற்கு மேல் இதைப் பற்றிப் பேசுவானேன்? அனுபவம் ஒன்றே மாதா செய்யும் அற்புதங்களைக் காட்டும். அவ்வற்புதங் கள் எவ்வளவு பெரிதானவைகளாக இருக்குமென்றால் ஞானிகளும், அகந்தையுள்ளவர்களும், ஏன், பல பக்தி யுடைய மக்களும்கூட அவற்றை நம்பக் கூடாததாயிருக்கும்.