மனுவுருவான ஞானமானவரின் வாழ்வு!

109. பூலோகத்தில் அவருடைய தெய்வீக வாழ்வின் சுருக்கம் இதோ :

1. தாம் திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டுப் பிறந்தவர் என்று உலகத்தால் கடிந்து கொள்ளப்படாதபடி உண்மையில் கன்னிகையாக இருந்தாலும், திருமணமான ஒரு பெண்ணிட மிருந்து பிறக்க அவர் விரும்பினார். வேறு சில முக்கியமான காரணங்களும் திருச்சபைத் தந்தையரால் தரப்படுகின்றன. நாம் சற்றுமுன் கூறியது போல, அவருடைய மனித உற்பவம் கபிரியேல் தூதரால் மகா பரிசுத்த கன்னிகைக்கு அறிவிக்கப்பட்டது. அவர் ஆதாமின் பாவத்தைச் சுதந்தரித்துக் கொள்ளாமலே அவனுடைய குழந்தை ஆனார். 

110. 2. அவருடைய மனித உற்பவம் மார்ச் 25, வெள்ளியன்று நிகழ்ந்தது. டிசம்பர் 25 அன்று உலக இரட்சகர் பெத்லகேமில் பிறந்து, ஒரு பரிதாபமான மாட்டுத் தொழுவத்தில், ஒரு முன்னிட்டியில் கிடத்தப்பட்டார். வயல்களில் தங்கள் ஆட்டுக் கிடைகளுக்குச் சாமக்காவல் காத்துக் கொண்டிருந்த இடையர் களுக்கு ஒரு சம்மனசானவர் இரட்சகரின் பிறப்புச் செய்தியை அறிவித்தார். பெத்லகேமுக்குப் போய்த் தங்கள் இரட்சகரை ஆராதிக்குமாறு அவர் அவர்களை அழைத்தார். அதே வேளை யில், பரலோக இசையை, "உன்னத ஸ்தலங்களிலே சர்வேசுர னுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோகத்திலே நல்ல மனதுள்ள மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது" (லூக் 2:14) என்று பாடும் தேவதூதர்களின் குரல்களை அவர்கள் கேட் டார்கள். 

111. 3. தாம் பிறந்த எட்டாம் நாளில், மோயீசனின் திருச் சட்டத்திற்குத் தாம் கட்டுப்பட்டவர் அல்லர் என்றாலும், அச்சட்டத்தின்படி அவருக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது. பரலோகத்திலிருந்து வந்த சேசு என்னும் திருப்பெயர் அவருக்கு இடப்பட்டது. கீழ்த்திசையிலிருந்து மூன்று ஞானிகள், ஓர் அசாதாரணமான நட்சத்திரம் தோன்றியதைக் கண்டு, இரட்சக ரின் பிறப்பை அறிந்து கொண்டு, அவரை ஆராதிக்க வந்தார்கள். அந்த நட்சத்திரம் பெத்லகேமுக்கு அவர்களை வழிநடத்தி வந்தது. இந்த நிகழ்ச்சி திருக்காட்சித் திருநாளாக, (மூன்று அரசர்கள் திருநாள்), அதாவது, கடவுளின் வெளிப்படுத்தலின் திருநாளாக ஜனவரி 6 அன்று கொண்டாடப்படுகிறது. 

112. 4. தாம் பிறந்து நாற்பது நாட்களான போது, தலைச்சன் பிள்ளையை மீட்டுக் கொள்வதற்காக மோயீசனின் திருச்சட்டத் தில் கூறப்பட்டிருந்த அனைத்தையும் அனுசரித்து, தாம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுவதை அவர் தேர்ந்து கொண்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, திவ்விய கன்னிகையின் கணவரான அர்ச். சூசையப்பருக்கு தேவதூதர் தோன்றி, ஏரோதரசனின் கடுஞ்சினத்திற்குத் தப்பித்துக் கொள்ளு மாறு, சேசு பாலனையும், அவரது திருமாதாவையும் எகிப்து நாட்டிற்குக் கூட்டிக் கொண்டு ஓடிப் போகுமாறு கூறினார். அவரும் அப்படியே செய்தார். நம் ஆண்டவர் எகிப்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார் என்று சில வேத ஆசிரியர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் மூன்று ஆண்டுகள் என்கிறார்கள். பரோனியஸ் போன்ற வேறு சிலர், அவர் எட்டு ஆண்டுகள் அங்கே இருந்தார் என்கிறார்கள். வரலாறு காட்டியுள்ளபடி அவர் பரிசுத்த வனவாசிகள் தங்கி வாழ ஏற்ற இடமாக இருக்கும் படியாக. அவர் தம் பிரசன்னத்தால் அந்நாடு முழுவதையும் அர்ச்சித்தார். சேசுபாலனின் அண்மை காரணமாக, பசாசுக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன் என்று யூசேபியஸ் கூறுகிறார். குழந்தையாயிருந்த உலக இரட்சகரின் பிரசன்னத்தின் காரணமாக, எகிப்திலிருந்த விக்கிரகங்கள் உடைந்து நொறுங்கின என்று அர்ச். அத்தனாசியார் கூறுகிறார். 

113. 5. பன்னிரண்டு வயதில், கடவுளின் திருச்சுதன் யூத வேத பாரகர்கள் நடுவில் வீற்றிருந்து, எத்தகைய ஞானத்தோடு அவர் களைவினவிக் கொண்டிருந்தார் என்றால், அவருடைய வார்த்தை களைக் கேட்டவர்கள் வியப்பாலும் பிரமிப்பாலும் நிரப்பப் பட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, முப்பது வயதில் அவர் ஞானஸ்நானம் பெறும் வரையில் அவரது வாழ்வின் நிகழ்வுகள் பற்றி சுவிசேஷங்கள் எதையும் குறிப்பிடவில்லை. தமது ஞான ஸ்நானத்திற்குப் பிறகு நம் ஆண்டவர் வனாந்தரத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் உணவும், பானமுமின்றி, கடுமையான தவத்திலும் உபவாசத்தில் நிலைத்திருந்தார். அங்கே அவர் பசாசோடு போராடி, அவன் மீது வெற்றி கொண்டார். 

114. 6. யூதேயாவில் அவர் போதிக்கத் தொடங்கிய பிறகு, தம் அப்போஸ்தலர்களைத் தேர்ந்து கொண்டு, சுவிசேஷங்களில் கூறப் பட்டுள்ள புதுமைகள் அனைத்தையும் நிகழ்த்தினார். தமது பொதுப் போதக ஜீவியத்தின் முன்றாம் ஆண்டில், தமது 33ம் வயதில் அவர் லாசரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார். மார்ச் 29 அன்று ஜெருசலேம் பட்டணத்திற்குள் வெற்றி வீரராய் நுழைந்தார். நிசான் மாதத்தின் பதினான்காம் நாளாகிய ஏப்ரல் 2ம் நாள், வியாழன் அன்று. அவர் தம் சீடர்களோடு பாஸ்காத் திருநாளைக் கொண்டாடினார். அப்போஸ்தலர்களின் பாதங் களைக் கழுவினார், அப்ப இரச குணங்களுக்குள் திவ்விய நற்கருணையாகிய தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார். 

115. 7. இதே நாள் முன்னிரவில் அவர், காட்டிக் கொடுத்தவ னாகிய யூதாஸின் தலைமையில் வந்த அவரது எதிரிகளால் கைது செய்யப்பட்டார். மறுநாள், ஏப்ரல் 3 அன்று, அது யூதர்களுக்கு ஒரு திருநாளாக இருந்த போதிலும், அவர் கசைகளால் அடிக்கப் பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, மகா அவமானமாக நடத்தப் பட்டபின், மரணத்திற்குத் தீர்வையிடப்பட்டார்.

அதே நாளில் அவர் கல்வாரிக்கு நடத்திச் செல்லப்பட்டு, ஒரு சிலுவையில் இரண்டு குற்றவாளிகளுக்கிடையே சிலுவையில் அறையப்பட்டார். பரிபூரண மாசற்றதனமுள்ளவராகிய சர்வேசுரன் இவ்வாறு சகல மரணங்களிலும் அதிக அவமானமுள்ள மரணத்தையும், பரபாஸ் என்னும் கொள்ளையன் அனுபவித் திருக்க வேண்டிய எல்லா வாதைகளுக்கும் உட்படுவதையும் தேர்ந்து கொண்டார். யூதர்கள் சேசுநாதருக்குப் பதிலாக, இந்தப் பரபாஸை விடுவிக்கும்படி பிலாத்துவிடம் கேட்டுக் கொண்டார்கள். பண்டைய திருச்சபைத் தந்தையர்கள் சேசுநாதர் நான்கு ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டார் என்றும், சிலுவையின் நடுப்பகுதியில் . அவருடைய திருச்சரீரத்தைத் தாங்கக்கூடிய ஒரு மர அமைப்பு இருந்தது என்றும் நம்பினார்கள். 

116. 8. மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி, வாக்குக் கெட்டாத கொடூர வாதைகளை அனுபவித்த பிறகு உலக இரட்சகர் தமது முப்பத்து மூன்று வயதில் சிலுவையில் மரித்தார். அரிமத்தேயாவூர் சூசை என்பவர் தைரியமாகப் பிலாத்துவிடம் சென்று சேசுநாதரின் சரீரத்தைக் கேட்டுப் பெற்று, அதைத் தாம் கட்டியிருந்த ஒரு புதுக் கல்லறையில் சேமித்தார். இயற்கை தன்னைச் சிருஷ்டித்தவர் மரிப்பதைக் காணும் தனது துக்கத்தை, அவரது மரணத்தின் போது நிகழ்ந்த பல அற்புத சம்பவங்களின் மூலம் காட்டியது என்பதை நாம் மறக்கலாகாது.

ஏப்ரல் 5ம் நாளன்று அவர் மரித்தோரிடமிருந்து உயிர்த் தெழுந்து, அடுத்து வந்த நாற்பது நாட்களில் பல முறை தம் திருத் தாயாருக்கும், தம் சீடர்களுக்கும் காட்சி தந்தார். மே 14 அன்று அவர் தம் சீடர்களை ஒலிவேத்து மலைக்கு அழைத்துக் கொண்டு போய், அங்கே அவர்கள் முன்னிலையில், பூமியின் மீது தமது திருப்பாதங்களின் பதிவை ஏற்படுத்தி விட்டுப் புறப்பட்டு, தமது சொந்த வல்லமையால் பரலோகத்திற்கு ஆரோகணமாகி, தமது பிதாவின் வலப்பக்கத்தில் மகிமையோடு வீற்றிருக்கிறார்.