தனித் தீர்வை

சாவு முக்கியமானது. சாவுடன் சம்பந்தப்பட்ட இன்னொன்றுண்டு. சாவுக்குப் பின் தீர்வை. தீர்வையின் போது, ஒரு போதும் மாற்ற முடியாத தீர்ப்பு கூறப்படுகிறது. மோட்சத்துக்கு அல்லது நரகத்துக்கு தீர்ப்பளிக்கப்படும். கிறிஸ்துநாதரது நீதியாசனத்தின் முன் நான் போய் நிற்க வேண்டும்.

நான் செய்துள்ள நன்மை அல்லது தீமைக்கு ஏற்ற பிரகாரம் தீர்ப்புச் சொல்லப்படும். இயல்பிலேயே சாவு என்றால் எனக்குப் பயம். அதற்குப் பின் வரும் தீர்வையைப் பற்றி நான் அதிகமாய்ப் பயப்படவேண் டும். நான் சாகும் வினாடியில் அதே இடத்தில் தனித் தீர்வை நடைபெறும். அந்தத் தீர்வை நேரத்தில் என் ஆத்துமமானது அதன் கிரியைகளைப் பற்றி குற்றம் சாட்டப்படும். என் மேல் குற்றம் சாட்டுகிறவர்கள் மூவர்: பசாசு; என் காவற் சம்மனசு; என் மனச்சாட்சி. சர்வ பரிசுத்தரும், எல்லாம் அறிகிற வரும், அளவற்ற நீதியுள்ள வரும், சர்வ வல்லபருமான கடவுளே என் நடுவர். அவரது தீர்ப்புக்கு மேல் ஒன்றும் கிடையாது. "ஆசீர்வதிக்கப்பட்டவனே, வா" அல்லது “சபிக்கப்பட்டவனே போ'' என்பதே என் மேல் கூறப்படும் தீர்ப்பு. தீர்வையை முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஒப்பிடலாம் என்று புனித ஜெரோம் கூறுகிறார். கண்ணாடியின் முகம் அவலட்சணமாய்த் தோன்றினால் அது கண்ணாடியின் தவறல்ல. நல்வாழ்க்கை நடத்தி என் ஆத்துமத்தை நான் தூய்மையாயும், பரிசுத்தமாயும் வைத்திருக்க வேண்டும். அதில் பாவக்கறை பிடிக்குமானால், தேவதிரவிய அனுமானங்களை நான் விரைந்து போய்ப் பெற்று யேசுவின் திரு இரத்தத்தால் என் ஆத்துமத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். அப்படியானால் நான் அச்சமின்றி இருக்கலாம். யேசுக் கிறிஸ்து நாதரில் வாழ்பவர்களுக்கு ஆபத்தில்லை என்று புனித சின்னப்பர் கூறுகிறார்.

உலக முடிவில் இறந்தோர் யாவரும் உயிர்த்தெழுந்த பின் பொதுத் தீர்வை இருக்கும் என நான் அறிவேன். ஆனால் அது என் தனித் தீர்வையின் முடிவை மாற்றாது. அந்தத் தனித்தீர்வையின் முடிவும் கடவுளது நன்மைத்தனமும் ஞானமும் இரக்கமும் நீதியும் அகில உலகுக்கும் அப்பொழுது அறிவிக் கப்படும். கடவுளுக்கு மாத்திரமே நான் கணக்குக் கொடுக்க வேண்டும். என் புத்தி இவ்விதம் சொல் கிறது. நாம் எல்லோரும் ஒன்றாய்ச் சிருஷ்டிக்கப்பட வில்லை. நாம் எல்லோரும் ஒன்றாய்ச சாவதில்லை.

நான் செத்ததும், என்னைச் சுற்றிலும் நிற்பவர் கள் அதை அறிந்து கொள்வார்கள். எல்லாம் முடிந் தது' என அவர்கள் அறிவார்கள். என் அருகில் ஒரு வரும் இல்லாத நேரத்தில் நான் சாகலாம். சீக்கிரமோ பிந்தியோ, என் பிரேதத்தைக் கண்டு பிடிப்பார்கள். எப்படியிருந்தாலும் அவர்கள் மெதுவாக, அச்சத் துடன், தாழ்ந்த குரலில் தங்களுக்குள் பேசிக் கொள் வார்கள். ஏன் அவர்கள் அவ்விதம் பேசவேண்டும்? சத்தம் செய்யாதிருக்கும்படி பிறரிடம் ஏன் அவர்கள் சொல்கிறார்கள்? பிரேதத்தை சத்தமானது ஒன் றும் செய்யப் போகிறதில்லையே, ஆனால் மரணப் படுக்கையருகில் நாம் பார்க்க முடியாத பிறர் நிற்கிறார் கள். தீர்வை நடக்கிறது; அல்லது ஏற்கனவே முடிந்து விட்டது என அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே அவர்கள் அச்சத்துடன் பேசுகின்ற னர். அங்கு ஓர் ஆத்துமம் தன் தீர்ப்பைப் பெற்று விட்டது.

அடக்கத்திற்கு என் உடலைத் தயாரிப்பார்கள். பிரேதம் பெட்டியில் வைக்கப்படும். என் முகத்தை யும், மூடப்பட்ட கண்களையும் மக்கள் நோக்குவார் கள். நான் உறங்கிக் கொண்டிருப்பது போல் தோன்ற லாம். என் ஆத்துமம் எங்கே இருக்கும்? கடவுளது நீதி எனக்கு என்ன தீர்ப்பளிக்கும்? வாழ்நாளிலேயே இதைப்பற்றி நான் கவனித்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் கடவுளது இரக்கத்தின் காலம்

என் நண்பர்கள் என் பிரேதத்தைப் பற்றி மற்கை யில் நான் பிரேதப் பெட்டியில் எழும் கார்ந்து, ''கடவுளது நீதி தவரும் காப்பிறம் பான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்'' என்று சொல்வதாக வைத் துக்கொள்வோம். அவர்கள் தொடர்ந்து எனக்காக ஜெபிக்கிறார்கள். அப்பொழுது நான் அவர்களை நோக்கி, “நீதி தவறாத கடவுளால் நான் தீர்ப்பிடப் பட்டிருக்கிறேன்'' என்று சொல்கிறேன். எல்லோருக் கும் தீர்ப்புக் கூறப்படுமல்லவா என அவர்கள் நினைத்து இன்னும் எனக்காக ஜெபிக்கிறார்கள். பின் நான் அவர்களைப் பார்த்து ''நான் நரகத்துக்குத் தீர்ப் பிடப்பட்டிருக்கிறேன்'' என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். இது எவ்வளவு பயங்கரத்துக்குரியது!

அதைப்போன்ற நிகழ்ச்சி ஒன்று ஒரு முறை நடந் தது. பாரிஸ் நகர் மேற்றிராசனக் கோவிலில் ஒரு பிரேதத்தைக் கிடத்தியிருந்தனர். இறந்தவனுக்காக ஜெபங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திடீரென இறந்தவன் எழுந்திருந்து, தான் நரகத்தில் இருப்ப தாக தெரிவித்தான். ஜெபிப்பதை மக்கள் நிறுத்தி துயரத்துடன் தம் தம் இல்லங்களுக்குத் திரும்பினார் கள். இது எல்லோருக்குமே பயன்படக்கூடியது; தீர் வையை நினைத்து பயப்பட நமக்கு இது உதவியாயி ருக்கிறது. நல்லவனாக வாழ இது எனக்குத் தூண்டு கோலாயிருக்கும். என்வாழ்நாளின் நினைவு, வார்த்தை செய்கைகள் அனைத்தையும் பற்றி நான் கணக்குக் கொடுக்கவேண்டும். நான் பரிசுத்த வாழ்க்கை நடத் தினாலும், கடவுளுடைய நண்பனாயிருந்தாலும், கட வுள் எனக்கு அநேக வரப்பிரசாதங்களைக் கொடுத்து வந்தாலும் தீர்வையை நினைத்து நான் பயப்படவேண் டும். ஏனெனில் யாருக்கு அதிகம் கொடுக்கப்பட் டதோ அவனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் என்பதை நான் மறக்கக்கூடாது.

இவ்விதம் சிந்தித்தால் நான் அர்ச்சியசிஷ்டர்களை கண்டு பாவித்தவனாவேன். யேசுவுக்காக புனித சிப்பிரியான் என்பவரைக் கொல்லத் தீர்மானித்து. கொலைக் களத்துக்கு அழைத்துப் போனார்கள். அப்பொழுது "ஐயோ, நான் கிறிஸ்து நாதரது நீதித் தீர்ப் பாசனத்தின் முன் போகப் போகிறேனே " என அவர் கூறினார்.

புனித ஜெரோம் என்பவரது வரலாற்றையும் நான் வாசித்திருக்கிறேன். முப்பது ஆண்டுகளாக பெத்லகேமிலுள்ள ஒரு குகையில் அவர் வசித்து வந் தார். அவர் செய்துவந்த தபசு முயற்சிகளை நினைத் துப்பார்த்து நான் நடுங்குகிறேன். கல்லை எடுத்து தம் மார்பில் அடிப்பார். இரத்தம் சுவர் மேல் படும் வரை அடிப்பாராம். “எல்லோரும் தீர்வைக்கு வாருங் கள்'' என்று சம்மனசு சொல்லி, எல்லா மானிடரை யும் கிறிஸ்துநாதரது தீர்ப்பாசனத்துக்கு அழைப் பது அவர் செவிகளில் விழுமாம். அவர் கேட்டது பொதுத் தீர்வையின் அழைப்புக் குரல். தனித்தீர்வை யில் எல்லாம் தீர்ப்பாகி விடுகிறது.

அர்செனியுஸ் என்னும் பரிசுத்த மடாதிபதி ஒரு வர் இருந்தார். அவர் மரணத்தறுவாயிலிருக்கையில் அவரது உடல் நடுங்கியது. கட்டிலும், அந்த அறை யிலிருந்த பொருட்களும் முதலாய் அவருடன் சேர்ந்து நடுங்கின. ஏன் பயப்படுகிறீர்கள்? என அவரிடம் கேட்டார்கள். "கடவுளது தீர்ப்பை நினைத்து நான் எப்பொழுதும் பயந்து நடுங்கி வந்திருக்கிறேன். இது வரை எனது பயத்தை நான் மறைத்து வந்தேன். இப்பொழுது அதை மறைக்க முடியவில்லை'' என அவர் பதிலளித்தார். நான் பயந்தால் மாத்திரம் பய னில்லை. கடவுளை நான் நேசிக்கவேண்டும், அவரது இரக்கத்தில் நம்பிக்கைவைத்து, நல்வாழ்க்கை நடத்த வேண்டும். இந்தப் பரிசுத்த பயமானது கடவுளை நான் அதிகமாக நேசிக்கும்படி செய்ய வேண்டும். நான் அவரை நேசிப்பதால் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். தீர்வையை நினைத்துக்கொள். ஏனெனில் நீயும் தீர்ப்பிடப்படுவாய். “நேற்று எனக்கு, இன்று உனக்கு''. என வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது உண்மையே. இதை நான் மறக்க லாகாது.

ஓர் ஊரிலே வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் தன் தாய்க்கு ஒரே மகன். சந்நியாச மடத்திற் சேர்ந்து தன் வாழ்நாளைக் கடவுளுக்காக, கடவுளது சேவையில் செலவழிக்க அவன் விரும்பினான். அவ னுடைய தாய் அதற்கு அனுமதியளிக்கவில்லை. அவனை நம்பியே அவள் வாழ்ந்தாள். உலகில் வேறு ஆதரவு அவளுக்குக் கிடையாது. என்றாலும் இறுதி யில் அவள் பெரும் தியாகம் செய்து அனுமதியளித் தாள். அவளுடைய மகன் சந்நியாசியானார். தொடக் கத்தில் அவர் பக்தியுள்ளவராயிருந்தார். சில ஆண்டு களுக்குப்பின் பக்தி தளர்ந்தது. ஞானக் காரியங்களில் கவலையற்று வாழ்ந்தார். ஒருநாள் இரவு அவர் ஒரு கனவு கண்டார். அதில் அவருடைய தாய் தோன்றி அவரைக் கோபித்தாள். “மகனே, நான் பெரும் தியா கம் செய்து எதற்காக உன்னை சந்நியாச மடத்துக்கு அனுப்பிவைத்தேன்? நீ பரிசுத்தவானாக நடப்பாய்: கடவுளுக்கு அதிக மகிமை வருவிப்பாய்; உன் ஆத்தும இரட்சணியத்துக்காகவும், அதிகமாய் உழைப்பாய் என்றே நீ சந்நியாசியாக உத்தரவு கொடுத்தேன். இப்பொழுதோ என் எண்ணமெல்லாம் வீணாயிற்று.'' என அவள் தன் மகனைக் கடிந்து கொண்டாள். துயர் படர்ந்திருந்த அவளது முகமும் அவளது கடின மொழிகளும் அவர் மனதிற் பதிந்தன. அன்றிலி ருந்து அவர் தன் வாழ்க்கையைத் திருத்தியமைத் தார். இந்த மாற்றத்தைக் கண்டவர்கள் அதிசயித்து, காரணத்தை வினவினார்கள். , என் தாயின் கோபத்தை என்னால் பார்க்கச் சகிக்கமுடியவில்லை. ஒரு நாள் கிறிஸ்து நாதர் என்னைத் தீர்வையிடும் போது அவரது கோப முகத்தை நான் எப்படிப் பார்க்க முடியும்? அதை நினைத்து அஞ்சியே நல்லவனாக நடக்கத் தீர்மானித்தேன்'' என சந்நியாசியார் பதிலளித்தார்.

பின் வரும் சரித்திரத்தை புனித வின்சென்ட் பெரெர் என்பவர் சொல்கிறார்:-வாலிபன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் கனவு ஒன்று அவன் கண்டான். கடவுளது நீதியாசனத்தின் முன் தான் கொண்டு செல்லப்படுவதாக அவன் கண்டான். தீர்ப்புக் கூற வேண்டிய கடவுள் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் கோபக்குறிகள் காணப்பட்டன. அவர் கேட்ட கேள்விகள் அவனை அச்சத்தால் நிரப் பின. அவன் கொண்ட கலக்கத்தை நாவால் வருணிக்க முடியாது. பயத்தால் நடுங்கிக்கொண்டு வியர்த்து விறு விறுத்துக்கொண்டு அவன் எழுந்தான். நல்ல வேளை அது வெறுங்கனவு என அவன் அறிந்து தன் முழு இருதயத்தோடும் கடவுளுக்கு நன்றி செலுத்தி னான். “நான் இன்று கனவிற் கண்டது ஒரு நாள் உண்மையாக நடக்கும். அதினின்று நான் தப்பிக்க முடியாது. சீக்கிரம் அந்தத் தீர்வை நாள் வரலாம். இன்றே வரலாம்'' என அவன் சொல்லி, சாவான பாவம் செய்வதை விட சாகத் தீர்மானித்தான். உடனே நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நல்ல வாழ்க்கை நடத்தலானான். நல்லவர்கள் கவலையீனமாய் நடக்கத் தொடங்குகிறார்கள். உத்தம வாழ்க்கை நடத் தக் கடமைப்பட்டவர்கள் சில சமயங்களில் தங்கள் கடமைகளை மறக்கிறார்கள். இவர்கள் சாவுக்குப் பின் வர இருக்கும் தீர்வையைப் பற்றி நினைத்துப் பார்ப் பார்களாக.

கடவுளது நீதியாசனத்தில் கூறப்படும் தீர்ப்பை நினைத்து நான் பயப்படுகிறேன். அது சாபமாக மாறி விட்டால் என் செய்வது? ஒரு தாய்க்கு துஷ்டனான மகன் அல்லது நேசமற்ற மகள் ஒருத்தி இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் சாகுந்தறுவாயிலிருக்கிறாள். மகனைத் தன் படுக்கையருகே அழைக்கிறாள். மகன் முணுமுணுத்துக் கொண்டே வருகிறான். தாய் கோபத்துடன் தன் மகனை நோக்கி, "உன் தலை மீது சாபம் விழக்கடவது'' எனக் கூவிச் சாகிறாள். அந்தச் சாபத்தை மகன் மறக்க முடியுமா? அநேக முறைகளில் குருவானவர் என்னை ஆசீர்வதித் திருக்கிறார். கடவுளின் நாமத்தால் அவர் என்னைச சபிப்பது என் காதில் விழுந்தால் எனக்கு என்னமா யிருக்கும்? ஒரு மேற்றிராணியார் என்னைச் சபித்தால் எப்படியிருக்கும்? உலகில் கிறிஸ்துநாதருடைய பிரத்தியட்ச பிரதிநிதியான பாப்பானவர் என்னைச் சபிப்பாரானால் எப்படி இருக்கும்? சர்வ வல்லப கட வுள் என்னைச் சபிப்பாரானால் அதை என்னால் தாங்க முடியுமா? நான் அவருடைய விரோதியாக, அதாவது சாவான பாவத்துடன், சாவேனானால் அவர் என்னைப் பார்த்து ''நான் உன்னை அறியேன்: சபிக்கப்பட்ட வனே, என்னை விட்டு அகன்று பசாசுகளுக்கும் அதன் தூதர்களுக்குமெனத் தயாரிக்கப்பட்ட நித்திய நெருப்புக்குப் போ" என்பார். உலக இரட்சகரது திரு இரத்தத்தில் தோய்க்கப்பட்ட பேனாவினால் என் தீர்ப்பு எழுதப்பட்டாற்போல் இருக்கும். என் இரட் சணியத்துக்காக சிந்தப்பட்ட இரத்தம் என் நித்திய தீர்ப்பை எழுத பயன் படுத்தப்படுகிறது. “உனக்காக நான் பாடுபடவில்லையா? உயிர்விடவில்லையா? பதில் சொல்” என்பார் என் இரட்சகர்.

பதில் சொல் எனக்கடவுள் கேட்பார். இந்த வார்த்தைகளை நான் நினைவில் வைத்திருப்பேன். உறக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல் நான் சாவான பாவத்தில் அமிழ்ந்திருக்கலாம். திடீரென கடவுளிட மிருந்து அழைப்பு வரும். “ஆத்துமமே, உன்னுடன் தனியே பேசவிரும்புகிறேன் பதில் சொல்'' என்பார். என் கடவுள் என்னிடமிருந்து பெரிய பெரிய காரியங்களை எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தபடி நான் வாழவில்லை. அவர் எனக்குத் தந்த வரப்பிரசாதங் களை நான் சரிவர பயன்படுத்தவில்லை. அவர் எனக் குக் கொடுக்கக்கூடியவராயிருந்ததும் கொடாது போனது ஏதாவது உண்டா என அவர் அறிய விரும் புவார். கத்தோலிக்க மறையில் தேவதிரவிய அனு மானங்கள் வழியாக அவர் எனக்குச் செய்யாத உதவி ஏதாவது உண்டா? கொடாத பாதுகாப்பு உண்டா? "என் வரப்பிரசாதத்தை ஏன் இவ்வளவு தூரம் பழித் தாய்? நான் உனக்குத் தந்த திறமைகளையெல்லாம் எனக்கு விரோதமாய்ப் பயன்படுத்தினாய். கலியாண உடையின்றி என் முன் ஏன் வந்து நிற்கிறாய்? உனக்கு வர இருந்த ஆபத்தைப்பற்றி உன் மனச்சாட்சியின் வழியாய் உன்னை நான் பலமுறை எச்சரிக்கவில்லையா? அந்தப் பாவ நட்பை நீ விட்டுவிடும்படி நான் உன்னை எச்சரிக்கவில்லையா? உன் உள்ளத்திலிருந்து அந்தப் பகையை அகற்றும்படி நான் உன்னிடம் சொல்ல வில்லையா? தூக்கத்தை விட்டு எழும்பு, சுறுசுறுப்பு டன் நட என பிரசங்கங்களிலும், தியான காலத்தி லும் நான் சொன்னேனே, பதில் சொல்'' என்பார்.

கடவுளே எழுந்து தீர்ப்புக் கூறும்போது நான் என்ன சொல்லப்போகிறேன்? என்னால் என்ன சொல் லக்கூடும்? என்ன செய்வது என எனக்குத் தெரியும். அந்தத் தீர்ப்புக்கு நான் ஆளாகாதபடி இப்பொழுதே என் வாழ்க்கையை நான் திருத்தியமைத்துக்கொள் வேன். நடுவரான கடவுள் என்னை என் மரணத்தும் குப் பின் பரிசோதிப்பது போல் நான் உயிருடனிருக் கும் போதே என்னைப் பரிசோதிப்பேன். ஒவ்வொரு நாளும் என் ஆத்துமத்தைப் பரிசோதித்து, உத்தம் மன ஸ்தாப முயற்சி செய்து, பாவசங்கீர்த்தனம் என் னும் தேவத்திரவிய அனுமானத்தைப் பெற்றும் கொள்வேன். என் மேல் நான் அடிக்கடி தீர்ப்பும் வேனானால் கடவுள் எனக்குத் தீர்ப்புக் கூறமாட்டார்.

தாழ்ச்சியுடனும் கடவுளுடைய நன்மைத்தனத் தில் எல்லையற்ற நம்பிக்கையுடனும் என்னை மோட் சத்துக்காக உண்டாக்கிய கடவுளை, நான் அங்கு போய்ச் சேரவேண்டும் என்று விரும்பி எனக்காக மனுஷனாகி சிலுவையையில் உயிர் விட்ட தேவனை அணுகி. 

“அன்பும் இரக்கமும் மாறாத யேசுவே, 

அவனியில் நீர் வந் தவதி யுற, 

துன்புறும் பாவியே காரணமென்றப்போ

சூழ்ந்தென்னைத் தண்டியா தாண்டருளும்'' 

என்பேனாக.