இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சந்தோஷ தேவ இரகசியங்கள்

முதல் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! உமது மனிதாவதாரத்தின் மகிமைக்காக இந்த முதல் பத்து பணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் ஆழ்ந்த தாழ்ச்சி எனும் புண்ணியத்தை எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

இறைவனின் மனிதவதார திரு நிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி, அதை உண்மையாகவே தாழ்ச்சியுள்ளதாகச் செய்யுமாக!

2-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! உமது திரு அன்னை தன் உறவினள் எலிசபெத்தை சென்று சந்தித்ததின் மகிமைக்காக இந்த 2-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் உத்தமமான பிறர் சிநேகத்தை எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

தேவ அன்னை எலிசபெத்தம்மாளைச் சந்தித்த திரு நிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி அதை உண்மையான அன்புள்ளதாகச் செய்யுமாக!

3ம் பத்து மணி : குழந்தையாகிய சேசுவே! உமது திவ்விய பிறப்பின் மகிமைக்காக இந்த மூன்றாம் பத்து மணி ஜெபத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் இவ்வுலக பொருள்களில் பற்றின்மையையும் வறுமை மீது விருப்பத்தையும் ஏழைகளின் மீது அன்டையும் எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

கர்த்தர் பிறந்த திரு நிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி என்னை உண்மையாகவே மனத்தரித்திரம் உள்ளவனாகச் செய்யுமாக!

4ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! நீர் தேவாலயத்தில் மரியாயின் கரங்களால் ஒப்புக் கொடுக்கப்பட்ட மகிமைக்காக இந்த நாலாம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் ஞானம், ஆன்ம சரீரத் தூய்மை என்னும் வரங்களை எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

பாலன் சேசு ஆலயத்தில் காணிக்கையாக்கப்பட்ட திரு நிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி அதை உண்மையிலேயே ஞானமுடையதும் தூயதுமாகச் செய்யுமாக

5ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! உம்மைக் காணாமல், பின் தேவாலயத்தில் சாஸ்திரிகள் நடுவில் தேவதாய் உம்மை கண்டு கொண்டதன் மகிமைக்காக இந்த 5-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும், எங்களை மனந்திருப்பி, நாங்கள் எங்கள் வாழ்வைத் திருத்தி அமைக்கவும், எல்லா பாவிகள், பதிதர், பிரிவினைக்காரர், விக்கிரக ஆராதனைக்காரர்களை மனந்திருப்பும் வரத்தை எங்களுக்குத் தரும்படியும் உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

சேசு தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திரு நிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி என்னை உண்மையாகவே மனந்திருப்புமாக!