அன்னையின் துயரம்

எஸ்தெல் பாகெத் என்பவள் பிரான்ஸ் நாட்டினள். கன்னியாஸ்திரியாகி கடவுளுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்ய அவளுக்கு ஆசை. ஆனால் அவளை விட்டால் பெற்றோருக்கு வேறு வழியில்லை. வேலை செய்து சம்பாதித்து அவள் அவர்களைக் காப்பாற்ற வேண்டியிருந்தது,

அவள் ஒரு பொழுதும் நல்ல உடல் பலத்துடனிருந்ததில்லை. முப்பத்திரண்டு வயதினளான அவள் 1875-ம் ஆண்டில் கடின வியாதியாய் விழுந்தாள். அவளைக் குணப்படுத்த முடியாது, சிறிது சிறிதாய் வியாதி முற்றும், அவள் இறப்பாள் என வைத்தியர்கள் கூறினார்கள். தேவதாய்க்கு அவள் ஒரு கடிதம் எழுதி, அதை லூர்து மாதாவின் சுரூபத்தடியில் வைக்கக் கேட்டுக் கொண்டாள். தன்னை முழுதும் அவள் அந்த அன்னையிடம் கையளித்தாள். தன் குடும்பத்தைப் பாதுகாக்கும்படி அதில் மன்றாடினாள்.

எஸ்தெலை வேலைக்கு அமர்த்தியிருந்தவர்கள் நல்லவர்கள். அவளது சொந்த ஊராகிய பெல்வா சினுக்கு அவளை அனுப்பி வைத்தார்கள்; தன் தாய் தந்தையருடன் வசித்து அவள் சாவுக்கு தன்னைத் தயாரித்தாள்.

1876-ம் ஆண்டு பெப்ருவரி 13-ம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை தன் கருத்து நிறைவேற ஜெயமாதாக் கோவிலில் மாதாப் பீடத்துக்கு முன் ஒரு விளக்கும், யேசுசபைக் கோவிலில் லூர்து மாதாப் பீடத்தின் முன் இன்னொரு விளக்கும் எரிக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். மறுநாள் அவளது விருப்பப் படி செய்தனர். செவ்வாய்க்கிழமை காலையில் பங்கு சுவாமியார் அவளைப் பார்க்க வந்தார். முந்தின இரவில் தேவதாய் தன்னைத் தேற்றும்படி வந்ததாக அவள் தெரிவித்தாள். தான் இன்னொரு முறை தேவ தாயைப்பார்த்ததாகவும், அடுத்த சனிக்கிழமைதேவ தாய் தன்னைக் குணப்படுத்தப் போவதாகத் தெரிவித் தாள் என்றும் எஸ்தெல் மறுநாள் கூறினாள்.

வெள்ளிக்கிழமை இரவு அவள் கடும் வேதனைப் பட்டாள். கடைசி மரண அவஸ்தை போல் தோன் றிற்று. கடைசி தேவ திரவிய அனுமானங்களை அவள் பெற்றுக் கொள்ள வேண்டும் என குருவானவர் சொல்ல, "சுவாமி, நாளைவரை காத்திருப்போம், அதற்குள் எனக்கு சுகம் கிடைக்கும்'' என அவள் திண்ணமாய் மொழிந்தாள். உடல்நிலை மோசமானால் உடனே தமக்கு ஆளனுப்பும்படி எஸ்தெலின் பெற் றோரிடம் அவர் சொல்லிச் சென்றார். மறுநாட் காலை யில் அவர் எஸ்தெலைப் பார்க்கப் போனார். தான் சுக மடைந்திருப்பதாகவும், ஆனால் ஐந்தாறு நாட்களாக அசைவற்றிருந்த தன் வலது கரத்தை இன்னும் அசைக்க முடியவில்லையென்றும் அவள் தெரிவித் தாள். "நான் திவ்விய பூசை செய்யப் போகிறேன். பூசை முடிந்ததும் உனக்கு நன்மை கொண்டு வருகி றேன். தேவதாய் சர்வ வல்லமையுள்ளவள், இரக்கம் நிறைந்தவள், அவள் விரும்பினால், உன்னைக் குணப் படுத்த முடியும். நீ நன்மை உட்கொண்டதும், தேவ தாய் வந்து சொன்னது யாவும் உண்மையே எனக் காட்டும்படி, நீ உன் வலது கரத்தால் சிலுவை அடையாளம் வரைய முயல்வாயாக. இதில் நீ அனு கூலம் அடைந்தால், தேவதாய் உன்னைச் சுகப்படுத் தப் போகிறாள் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி யாகும்'' எனக் குருவானவர் மொழிந்தார்.

அவர் திவ்விய நற்கருணை கொண்டுவருகையில் ஏழெட்டுப்பேர் அவருடன் வந்தனர். நன்மை கொடுத்ததும், அவர் அங்கு முழந்தாளிட்டு, சிலுவை அடையாளம் வரையும்படி அவளிடம் சொன்னார். எவ்வித சிரமமுமின்றி அவள் சிலுவை வரைந்தாள். குருவானவருக்குக் கீழ்ப்படிந்து இரண்டாம் முறை பெரிய சிலுவை வரைந்து, “நான் சுகம்பெற்றுவிட் டேன், நிச்சயம்'' எனக் கூவினாள்.

இது நடந்தது 19--2-1876 சனிக்கிழமையன்று. பின்னர் அவளுக்கு அந்த நோய் வரவில்லை. மறு நாளே அவள் தேவதாய் தனக்குச் செய்த உபகாரங் களை, பெரியோர் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து எழுதத் தொடங்கினாள். "தேவதாய் தன் திருமகனிடமிருந்து எனக்குச் சுகம் பெற்றுக் கொடுத்தாள். காரணம் என் புண்ணியங்களல்ல, நம்மைப் பராமரித்து நமக் காகப் பரிந்து பேசும் நல்ல தாய் நமக்குண்டு, என அநேகர் அறியும்படியே அன்னை அவ்விதம் செய் தாள்'' என எஸ்தெல் எழுதி வைத்திருக்கிறாள்.

தேவதாய் அவளுக்கு பதினைந்து முறை தன்னைக் காண்பித்தாள், “தாயே, நான் உமக்கு அதிக சேவை செய்ய விரும்புகிறேன். ஆதலின் உலகத்தைத் துறந்து கன்னியாஸ்திரியாவது அவசியமா?" என ஐந்தாவது காட்சியில் எஸ்தெல் கேட்டாள். “எந்த நிலையிலும் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள லாம். நீ இப்பொழுது இருக்கும் நிலையிலிருந்து கொண்டே ஏராளமாக நன்மை செய்யலாம், என் மகிமையைப் பரப்பலாம். நான் இரக்கம் நிறைந் தவள். நான் கேட்பதை என் மகன் கொடுக்கிறார்... இரு காரியங்கள் எனக்கு மிகத் துயரத்தைத் தருகின் றன. திவ்விய நன்மை வாங்கியபின் சிலர் என் திரு மகனை மரியாதைக் குறைவாய் நடத்துகின்றனர். இரண்டாவது, ஜெபிக்கையில் அவர்கள் ஏனைய காரியங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்'' என அன்னை பதிலளித்தாள்.

"ஏழாம் முறை தேவதாய் என் முன் நின்றாள். அவளது கையிலிருந்து மழைத் துளிகள் விழுந்தன. அவளைச் சுற்றிலும் பிரகாசம். அன்னையின் பின் புறம் ரோஜா மலர் மாலை. 'நீ ஏற்கனவே என் மகி மையைப் பரப்பியிருக்கிறாய். தொடர்ந்து அவ்விதம் செய்துவா. சில ஆத்துமங்கள் என் மகன் மேல் மிகப் பற்றுக் கொண்டிருக்கின்றன. அவரது இதயம் என் இதயத்தை எவ்வளவு நேசிக்கிறதென்றால், நான் கேட்கிறதை அவர் இல்லையென்று சொல்லமாட்டார். என் வழியாக மிகக் கடின மனதையும் அவர் இளகச் செய்வார். பாவிகளின் மனந்திரும்புதலுக்காக நான் முக்கியமாக வந்திருக்கிறேன்' என தேவதாய் மொழிந்தாள்''.

செப்டம்பர் 9-ம் நாளன்று மாதா ஒன்பதாம் முறையாக தன்னைக் காண்பித்து, திரு இருதய உத்த ரீயத்தை எஸ்தெலுக்கு வெளிப்படுத்தினாள். பரலோக அன்னை அவளுக்கு இன்னும் காட்சியளிக்க வேண்டு மானால் அவள் உத்தம கீழ்ப்படிதலும் பணிவும் உள் ளவளாயிருக்கவேண்டும் என தேவதாய் தெரிவித்த துடன், “என் மகனின் களஞ்சியங்கள் நீண்ட கால மாக திறக்கப்பட்டிருக்கின் றன. மக்கள் ஜெபிப்பார் களாக'' எனச் சொல்லி, தன் மார்பில் தரித்திருந்த சிறு கம்பளித்துணித் துண்டு ஒன்றைத் தூக்கிக் காண்பித்தாள். “அதன் மத்தியில் ஒரு சிவப்பு இருதயம் தெளிவாகக் காணப்பட்டது. அது திரு இருதய உத்தரீயம் என உடனே நான் நினைத்தேன். தேவதாய் அதைத் தூக்கிக் காட்டி 'இந்தப் பக்தியை நான் நேசிக்கிறேன், இதில் நான் மகிமைப்படுத்தப் படுவேன்' என்றாள்", பின்னர் தேவதாய் எஸ்தெலுக் குக் காட்சியளித்தபோதெல்லாம் இந்த உத்தரீயத் தைத் தரித்திருந்தனள். அச்சமயங்களில் பலர் எஸ்தெலுடன் இருந்தனர்.

கடைசித் தடவையாக (பதினைந்தாம் முறை) தேவதாய் காட்சியளித்தபோது எஸ்தெலுக்கு ஆறு தலளித்துத் தேற்றி, அவளுக்கு வரவிருந்த துன்பங் களுக்கு அவளைத் தயாரித்து, திரு இருதய உத்தரீயப் பத்தியைப் பரப்ப அவளுக்குத் திடனளித்தாள். 'நீ என்னைப் பார்க்கமாட்டாய், எனினும் நான் உன் னருகில் இருப்பேன். நீ ஒன்றுக்கும் பயப்படவேண் டாம். என் மகிமையையும் இந்தப் பக்தியையும் பரப்ப உன்னை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். நீயே போய் மேற்றிராணியாரைப் பார். நீ செய்திருக்கும், மாதிரி உத்தரீயத்தை அவருக்குக் காண்பி, அவர் தம்மால் கூடிய அளவு உனக்கு உதவி செய்ய வேண் டும் என்றும், என் மக்கள் யாவரும் இதைத் தரித்தி ருக்க நான் விரும்புகிறேன் என்றும், தமது சிநேக தேவதிரவிய அனுமானத்தில் என் திருமகன் பெறும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்ய எல்லோரும் முயல வேண்டும் என்றும் அவரிடம் சொல். நம்பிக்கையுடன் இந்த உத்தரீயத்தைத் தரித்து, இதைப் பரப்ப உனக்கு உதவி செய்கிறவர்களுக்கு நான் வரப்பிர சாதங்களை வழங்குவேன்" எனக் கூறிக்கொண்டே தேவதாய் தன் கைகளை நீட்டினாள். அவற்றிலிருந்து மழை விழுந்தது. ஒவ்வொரு துளியிலும், பத்தி, இரட்சணியம், நம்பிக்கை, மனந்திரும்புதல், ஆரோக் கியம் இவைபோன்ற வார்த்தைகள் காணப்பட்டன. “இந்த வரங்கள் என் திரு மகனிடமிருந்து வருகின் றன, அவற்றை நான் அவரது இதயத்திலிருந்து எடுக்கிறேன். நான் கேட்கும் எதையும் அவர் இல்லை என்பதில்லை" என அன்னை கூறி, பிரியுமுன், உத்தரீ யத்தின் பின்புறம் தனக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றாள். அவளது கடைசிசொற்கள். “தைரியமாயிரு, ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம், நான் உனக்குத் துணைபுரிவேன் " என்பனவே.

எஸ்தெல் பதின்மூன்றாம் சிங்கராய பாப்பான வரைப் பலமுறை கண்டு பேசினாள். 1900-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் நாளன்று திரு இருதய உத்தரீயத்தை அவர் அங்கீகரித்தார்.